Skip to Content

08. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:

ஸ்ரீ அன்னையே நம:

இப்போது துபாயில் நல்ல வேலையில் குடும்பத்துடன் நன்றாக இருக்கிறேன்.

MSS புத்தகங்களின் வாயிலாகவும் மற்றும் மாம்பலம் தியான மையத்தில் சேவை செய்ததின் பலனாலும், ஸ்ரீ அன்னையின் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை தங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

என் நண்பர் மற்றும் மாம்பலம் தியான மையம் மூலம் 1998ஆம் ஆண்டு ஸ்ரீ அன்னை, பகவான் ஸ்ரீ அரவிந்தரை அறிந்து, அங்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்தது.

1999ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஸ்ரீ அன்னை எங்களை எல்லா வசதிகளும் உள்ள பெரிய flatல் (முன் இருந்த சிறிய வீட்டைவிட இரு மடங்கு) வாடகைக்கு எங்களைக் குடியமர்த்தினார். அப்போது என் வருமானம் ரூ.6,000/- மற்றும் குடும்ப வருமானம் ரூ.15,000/- மட்டுமே.

1999ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி எனக்குத் திருமணம் நடந்து, 2000ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மகளும் பிறந்தாள். இந்த இரண்டு வருடத்தில் என் வருமானமும் இரண்டு மடங்காக உயர்ந்தது. ஸ்ரீ அன்னை, நான் சிறு வயதிலிருந்து கண்ட கனவை, ஆசையை 2003இல் நிறைவேற்றினார். ஆம், 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில் எங்களிடம் எந்தவித சேமிப்பும் இல்லாத நிலையில் பேங்க் லோன் மூலமாக இரண்டு சிங்கிள் பெட்ரூம் flat சென்னையில் சொந்தமாக வாங்கிக் கொடுத்தார். அந்த லோன் தொகையை சுலபமாக repay செய்ய ஸ்ரீ அன்னை அடுத்த மாதமே குவைத்தில், வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையை வாங்கிக் கொடுத்தார். வெளிநாட்டில் கார் டிரைவிங் லைசென்ஸ் கிடைப்பது மிக கஷ்டம். ஆனால் ஸ்ரீ அன்னை எனக்கு மிகச் சுலபமாக வாங்கி கொடுத்து, 6 மாதத்தில் பிரமோஷன் தந்து, உடனே துபாய்க்கு டிரான்ஸ்பர் செய்தார்.

அப்போது துபாயில் என் சம்பளத்திற்கு பேமிலி ஸ்டேட்டஸ் கிடையாது. ஆனால் ஸ்ரீ அன்னை என் கம்பெனி மூலமே அதையும் வாங்கினார். அது மட்டும் இல்லாமல் என் மனைவி வரும்போதே துபாயில் வேலையும் வாங்கி கொடுத்தார்.

இவற்றை எல்லாம் ஒவ்வொரு நாளும் நினைக்கும் போதும் வியப்பாக உள்ளது. இவை எல்லாம் ஸ்ரீ அன்னையால் மட்டுமே சாத்தியம். இப்போது என் மனைவி வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ.வும் முடிக்க உள்ளார்.

இப்போது என் வருமானம் ரூ.72,000/-. குடும்ப வருமானம் ரூ.1,45,000/-. அதேபோல் என் இரண்டு flat லோனை 15 வருடத்தில் இருந்து 10 வருடமாக முடித்தும் ஸ்ரீ அன்னை தந்துள்ளார்.

இவை எல்லாம் அன்னையின் ஆசீர்வாதம் மற்றும் மாம்பலம் தியான மையத்தில் சேவை செய்யும் பாக்கியத்தால் மட்டுமே. என்றும் ஸ்ரீ அன்னை, பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும், ஸ்ரீ அன்னை அன்பர்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் வழங்குமாறு ஸ்ரீ அன்னையிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி, நன்றி, நன்றி,........

- ரமேஷ், சென்னை.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூக வாழ்வு மலர்வதை உணர்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதை தம் வாழ்வு வெளிப்படுத்தும் வகையில் வாழ்பவருக்கு, அது முடியும்.
 
சமூக வாழ்வை, தன் வாழ்வாக்கியவருக்கு அது முடியும்.

*****



book | by Dr. Radut