Skip to Content

05. சாவித்ரி

"சாவித்ரி"

P.101 Into its forms the Child is ever born

அதன் ரூபத்துள் பிறந்த சிருஷ்டியெனும் குழவி

  • கடவுளின் பெருவெளியில் நிரந்தரமாகக் குடியிருக்கும்,
  • மெதுவான ஒரு தலைகீழ் மாற்றம் நடைபெற்றது.
  • தெரியாத அனலினின்று வாயு வாந்தியாக வந்தது.
  • அவ்விருண்ட சுருளினின்று கோடிக்கணக்கான நட்சத்திரம் எழுந்தது.
  • பூமாதேவி புவியாய் மலர்ந்த நேரம் ஆண்டவனின் அடிச்சுவடு ஒத்தது.
  • புவியின் அஞ்ஞானப் புகை மண்டலத்தில்,
  • மனம் பிறந்து, அதன் பார்வையுள் ரூபத்தைக் கொணர்ந்தது.
  • காரிருளுள் ஞான வித்தை தேடியது.
  • குருட்டுப் பிடியுள் பாறையென தன் திட்டத்தைத் தீட்டியது.
  • பிரம்மாண்டமான உலக யந்திரத்தை உறக்கத்துள் உற்பத்தி செய்தது.
  • விழிப்பான அதன் ஆத்மாவினுள் ஜடம் ஜீவன்பெற முயன்றது.
  • வாழ்வெனும் செவித்தாயென செயல்பட்டது.
  • அனைத்தையும் உட்கொண்ட சூன்யம் பிறந்தது.
  • பூமியின் பிளவில் காலத்தைக் கடந்தவன் பார்வை விழுந்தது.
  • தூய்மையான அன்பின் பிரகாசமான தெளிவு;
  • அப்பாற்பட்டதின் நிழல் அதனுள் பட்டது.
  • ஜடமான இருளின் அளவற்ற உறக்கம் அதில் பிரதிபலித்தது.
  • சிருஷ்டி தேடும் பிரம்மம் அசைந்தது.
  • பிரபஞ்சச் சூறாவளியில் ஆத்மா கண்ட கனவு,
  • வாழ்வின் ஜீவனில் மனமெனும் சக்தி ஓடிற்று.
  • இறைவனின் இஷ்டம் ஜடத்திடம் உண்ட பால்,
  • பிரம்மம் அதிசயமாய் ஜனித்தது.
  • அனந்தமான அகண்டம், கண்டமான ஆத்மாவாயிற்று.
  • கடல் சுருங்கி, விளங்கும் காலத்தைக் கண்ட துளி.
  • காலத்தால் எழுந்த உடல், அளவற்றதின் அரண்மனையில் வந்தது,
  • இப்புதிருக்கு விடைபெற வந்த நம் ஆத்மாக்கள்.
  • சிருஷ்டியின் திட்டத்தையறியும் அகத்துள் உள்ள ஞானி,
  • க்ஷணமான அடியின்பின் மறைந்துள்ளது.
  • பார்வையைக் கடந்த உச்சியைப் பார்க்கும் எழுச்சி,
  • பிறவி வாழ்வினுள் துள்ளி விழும் ஆழ்ந்த படுகுழி.
  • காலத்துள் நகரும் பயணியை அழைப்பு எட்டியது,
  • ஆழங்காணாத தனிமையுள் ஒதுங்கி நின்றது,
  • வாய் மூடி ஊமையாகத் தனித்து உறுதியாகப் பயணம் செய்தான்.
  • உலகத்தின் ஆசையை தாங்கி நின்றான்.

*****

P.102 A formless Stillness called, a nameless Light

ரூபமற்ற அமைதியின் அழைப்பு, இனம் தெரியாத ஜோதி

  • சலனமற்ற வெண்மையான கதிர் மேலேயிருந்தது,
  • பிரம்ம மௌனம் அவனைச் சூழ்ந்தது.
  • மலையேறும் பெருமுயற்சிக்கு முடிவென்பதில்லை.
  • அதன் காவல் அணி விலகி லோகங்கள் வெளிவந்தன.
  • இருந்தும் புலனறியாத காந்தம் ஆத்மாவைக் கவர்ந்தது.
  • இயற்கையெனும் இமயமலைப் படியில் எழுந்த தனியுருவம்,
  • விளங்காத முடிவை விபரமாக எட்டினான்.
  • அது சிருஷ்டியின் சிறப்பான சிகரம்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கடந்தகாலக் குறைகளைக் களைதல், எதிர்கால முன்னேற்றத்திற்கு அவசியம். இன்று மனம் உண்மையால் உயர்ந்தால், சட்டத்தை மீறி, களையாத குறைகளைப் புறக்கணித்து, எதிர்கால முன்னேற்றத்தைத் தரும்.
 
உண்மையின் உயர்வு சட்டத்தை மீறி குறையை நிறைவாக்கும்.

 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பற்றற்ற யோகியின் தீவிர தியானமும், உலகை மறந்த நிலையில் தன் நலத்தை மட்டுமே கருதும் சுயநலமியின் சுயநலமும் ஒரு வகையில் ஒன்று மற்றதைப் போலாகும். இருவர் தீவிரமும் ஒன்றே. ஒருவர் நாடுவது பரம்பொருள், அடுத்தவர் தேடுவது சுயலாபம்.
 
சுயநலமிக்கும் யோகிக்கும் ஒன்றே.

 

*****



book | by Dr. Radut