Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • முன்னுக்கு வரும் ஆர்வம்
    (Aspiration to rise in the society)
    • பணம் எனில் பிணமும் வாய் திறக்கும், பணம் பாதாளம் வரை பாயும் என்பவை, பணம் சமூகத்தில் சக்தி வாய்ந்தது என்று காட்டுகிறது.
      உலகில் பணத்தால் செய்ய முடியாதது இல்லை.
      போரை வெல்லவும், அரசனை அணுகவும், எவரிடம் எதையும் சாதிக்கவும், அன்பைப் பெறவும் பணத்தால் முடியும்.
      மனிதன் உயிரைவிட்டுப் பெறமுயல்வது அன்பு. அதைக் காதல்பரிசு என்கிறான்.
      அதையும் பணத்தால் பெற முடியும்என்று கண்டால், பணம் பிரதானமாகிறது.
      • நாலுபேர் சேர்த்துக்கொண்டால் வாழ்வு, இல்லையேல் இல்லை.
        "செல்லாது அவன் வாயிற் சொல்",
        "இல்லாளும் வேண்டாள்”.
        பணம் அன்பைப் பெறுகிறது. பணம் உள்ளவர் மீது "அன்பு” இயல்பாக எழுவதைக் காணும்பொழுது அன்பை நாடுபவனுக்கும் பணத்தின் மதிப்புத் தெரிகிறது.
      • பணத்தால் பெற்ற அன்பு, அன்பில்லை என்று அறிய அதிக நாளாகிறது.
      • பணமும் தோற்றபின் நெஞ்சு விம்மும் நிறைவின் அதிசயம் மனிதகுல இலட்சியமாக நிற்கிறது. அது காதல் எனப்படும்.
      • வாழை, குலை தள்ளுவதைப் போல் நெஞ்சு ஒரு முறையே திறக்கும்.
        இரண்டாம் முறை வாழை குலை தள்ளுவதில்லை.
      • பாசம் (passion) என்பது உடலின் வேகம்.
        காதல் என்பதும் உணர்வின் வேகமாகும்.
        அது புனிதமானாலும் க்ஷணத்தில் அழிவது - ரோமியோ, ஜூலியட் (Romeo and Juliet).
        அன்றிலிருந்து இன்றுவரை உலகம் நாடும் ஒரே இலட்சியம் காதல்.
        பியாட்ரிஸ்க்கு (Beatrice) 9 குழந்தைகள் பிறந்த பின்னும் டாண்டே (Dante) அவன் காதலை (epic poetry) பெருங்காவியமாக எழுதினான்.
        காதல் உடலால் பூர்த்தியாகாது, பாசத்தால் (passion) பூர்த்தியாகாது.
        காதலின் இலட்சியம் சரணாகதி.
        சரணாகதியில் பூரணம்பெற சிறுஇலட்சியங்கள் (finite goals) இடம் தாராது.
        அனந்தமான பிரம்மம் மட்டுமே சரணாகதியை ஏற்க முடியும்.
        காதலை அனுமதிக்க சிறுகுடும்பம் இடம் தாராது.
        காதல் எனும் கப்பல் கடலில் தன்னைச் செலுத்தும்.
        ஏரி பெரியதானாலும் கப்பலுக்கு அங்கு இடமில்லை.
  • மனிதசுபாவம் தானே மாறாது
    • மனிதசுபாவம் மாறும்என எதிர்பார்ப்பவர் இலவு காத்த கிளியாவர்.
    • சிறிய மனிதன் பிடியை விட்டுக்கொடுக்கமாட்டான்.
    • பெருமைக்காகப் பொய் சொல்பவர் உயிர் உள்ளவரை மாறமாட்டார்.
    • தமக்கு, தம் குடும்பத்திற்கு, தம் ஜாதிக்கு, தம் ஊருக்கு, தம் படிப்புக்கு இல்லாத பெருமையை இருப்பதாக நினைப்பவர், பேசுபவர் கடைசி வரை மாறி உண்மையைப் பேசமாட்டார்.
    • நிலைமை மாறினால் மாறுபவன் மனிதனில்லை.
    • சாப்பாட்டில் விஷமம் செய்பவர் சமையலறையில் உள்ளவரை விஷமத்தை நிறுத்தமாட்டார்.
    • பொறுப்பற்று பிறர் பொருளை அழித்து மகிழ்பவர், அழிப்பதை நிறுத்தமாட்டார்.
    • பணக்காரனைக் கண்டு உடலெல்லாம் சுருங்கி குழைபவராலும் அப்பழக்கத்தை விடமுடியாது.
    • தீங்கு செய்து ஆனந்தப்படுபவர் தீங்கு செய்வதால் உள்ளனவெல்லாம் போகும்எனத் தெரிந்தாலும், அவரால் தீங்கு செய்யாமலிருக்க முடியாது.
    • பிறரைக் குறைவாகப் பேசி இன்பம் காண்பவர், பெரு நன்மையைப் பெற்ற நேரத்திலும் அதை விடமுடியாது.
    • கயவன் கடவுளிடமும் கயமையை நிறுத்தமாட்டான்.
    • துரோகம் செய்பவன் உற்ற நண்பனுக்கும் துரோகம் செய்வதை நிறுத்தமாட்டான்.
    • கிராக்கி செய்பவர் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதாகச் சரித்திரம் இல்லை.
    • புரளியை பாதிக்கப்பட்டவரிடமே நேரடியாகப்பேச புரளி பேசுபவர் தயங்கமாட்டார்.
    • முயலுக்கு மூன்று கால்என்ற கதை தமிழ்நாட்டில் பிரபலம். அனைவரும் அறிந்தது. என்றாலும் அக்கதையை இன்னும் ஒரு முறை சொன்னால் மிகையாகாது.
    • பயந்தவன் I.G. பதவி வந்த பிறகும் பயப்படுவான்.
    • மனைவிக்கு அடங்கியவன் மானம்போகும் நேரத்திலும் அவளுக்கு அடங்குவான்.
    • பெரிய இடத்தில் போய் பிழைக்க விருப்பப்பட்டவன் சின்ன புத்தியுள்ளவன், திறமைசாலி. தாய்மாமன் அழைத்துப்போய் 1 மாதம் கழித்து அனுப்பிவிட்டார். 51 பஸ் வைத்திருந்த முதலாளி அழைத்துப்போய் அடுத்த மாதம் அனுப்பிவிட்டார். அன்பர் அழைத்து வந்தார். முன் இரண்டு இடங்களிலும் செய்த அட்டூழியத்தை இங்கும் செய்யத் தவறவில்லை. 12 ஆண்டு தவறாமல் அழிச்சாட்டியம் செய்து பிறகு தானே விலகினான்.
    • ஒருவர் பொருளை அடுத்தவரிடம் எவரும் தருவதில்லை. கிடைத்தால் ஆர்வமாக அழிப்பவர் சிலர். அப்படிப்பட்டவரிடம் அன்பர் கொடுத்த கம்பனியை அழித்து, 1/3 பாகமாக்கி, அதனால் தாம் முழுவதும் அழிந்தபின், அப்பழக்கத்தை அவரால் விடமுடியவில்லை.
    • கடன் வாங்கித் தாராதவன், எவ்வளவு பணம் வந்தாலும் தானே கடனைத் திருப்பித்தர முன்வரமாட்டான்.

      நிலைமை மாறினால் இவரனைவரும் நிமிஷத்தில் மாறுவார்கள்.

  • நம் மாடு நம் பயிரை மேயும்
    • இது மாட்டின் குணம்.
    • இந்த குணமுள்ள மனிதருண்டு.
    • அவர்கட்கு வெட்கம் இருப்பதில்லை.
    • தடுப்பாரில்லை எனில் தாராளமாகச் செயல்படுவார்கள்.
    • நாள் வருஷமானாலும், தம் பழக்கத்தை மாற்றமாட்டார்கள்.
    • எத்தனை வருஷமாகத் தினசரி ஹோட்டலில் சாப்பிடும் நண்பர்களில் ஒருவர் மட்டும் பில் கொடுக்காவிட்டாலும், அடுத்த முறையும் அவருக்கு அந்த பில்லைக் கொடுக்கத் தோன்றாது; வெட்கம் இருக்காது.
    • "நீங்கள்" என்று பேசுவதற்குப் பதிலாக "நீ" எனப் பேசுபவருக்கு அனைவரும் மரியாதையாகப் பேசும் ஊருக்குப் போனாலும் "நீ"தான் வரும், "நீங்கள்" வாராது.
    • "என்னிடம் கொடுத்த பணத்தை வாங்கிவிடுவாயா?" எனச் சவால் விடுபவன் கயவனிலும் மட்டமானவன் என்று அறியாதவருண்டு.
    • தன் கையில் பிடி வந்தபின் "அந்தப் பிடியை விடும்அளவுக்கு எனக்குப் பெரிய மனமில்லை" என்று கூறி, பிடியை விடமாட்டான்.
    • 50 பைசா செலவு செய்தால் அடுத்தவர் தமக்காக 1½ மைல் நடக்க வேண்டாம்எனத் தெரிந்து, செலவு செய்யாதவர் மனிதரில்லை. அதை 6 மாதமாகவும் ஒருவர் செய்தார்.
    • தம் ஸ்தாபனம் ஆரம்பிக்கும் திட்டங்களைத் தாமே எதிர்க்கக்கூடாது என்று தெரியாமல், 30 வருஷம் 30 திட்டத்தை எதிர்த்தவருண்டு.
    • கடமையில்லாமல் 10 வருஷமாக மாதாமாதம் பெருந்தொகை கொடுத்து உதவுபவரைக் காரணமில்லாமல் திட்டினால் நடுத்தெருவில் நிற்க வேண்டும்என்று தெரிந்தாலும், வீறாப்பு அடங்காது, திட்டும்.
    • 50 ரூ. வருமானமில்லாதவர்க்கு 5000 ரூ. வருமானம் பெற உதவியவரிடம் தன் "பெரிய மனிதத்தன்மை"யைக் காட்டக் கூடாதுஎன 70 வயது வீர சைவ பிரம்மச்சாரிக்குத் தெரியவில்லை.
    • இவர்கள் நாகரீகமற்றவர், அநாகரீகமானவர், இவர்களிடம் பழகக்கூடாது. சில ஊர்களே முழுவதும் இப்படியிருக்கும். அங்கு வாழும் சந்தர்ப்பம் மனிதனுக்கு வரக்கூடாது. அது பாவம்.

      நிலைமை மாறியவுடன் இவர்கள் குரல் மாறும், முகம் மலரும், உடல் குழையும், உள்ளம் நெகிழும், வெட்கம் எழாது.

      இப்படிப்பட்டவர் கணவராக அமைவது அன்பருக்குத் திருவுருமாறும் வாய்ப்பு. அவர்கள் மாறமாட்டார்கள், நாம் திருவுருமாற கட்டாயம் அவர்கள் உதவுவார்கள்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆன்மீகம் மத வழிபாட்டுக்கு அடுத்த "தலைமுறை"யாகும்.

 

******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உயிராகத் தேடும் பொருளைக் கிடைக்கும் நேரத்தில் "மறுக்கும" குணம் மனுதனுக்குண்டு. பிறருடன் தானும் ஒன்றே என்ற இயல்பான உணர்வும், கிராக்கி மனப்பான்மையும் முரண்படுவதால் ஏற்படும் விளைவு இது.
 
உயிர் போன்றதை மறுக்கும் மனித இயல்பு.
நாடும் பரமாத்மா, மறுக்கும் ஜீவாத்மா.
 
*******

 

 



book | by Dr. Radut