Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.107 Till even earth's mud grows rich and warm with the skies

பூமியின் மண் வானத்தால் செறிந்தடையும் சிறப்பு

  • ஆத்மா அழியும்பொழுதும் பெருமை பொலிவு பெறுகிறது
  • தவறு ஆரம்பிக்குமிடத்தில் ஞானம் உற்பத்தியாகிறது
  • மண்மூடியின் விகாரம் அதன் அழகான அலங்காரம்
  • கொடுமையின் கதையே கவியின் இலக்கியம்
  • சிருஷ்டிக்கும் சத்தியம் குவிந்த மோட்சம்
  • பிரபஞ்ச சுமுகத்தின் கனவுகளினூடே
  • கரையும் ரூபங்கள் கலைத்தெழும் குழப்பம்
  • ஜட இருளின் அஸ்திவாரத்துள் மூழ்கி தன்னையிழந்தது
  • ஜடம் பிறந்த வரலாறு இலட்சியம் அழிந்த பாதை
  • இறைவன் இருளில் மூழ்கி இழந்த அதிசயம்
  • அவலமான இவ்வுலகம் ஆத்மாவுக்குரிய தாலாட்டு
  • மறைந்த மகிமை உறைந்த புனிதம்
  • அர்த்தமற்ற சூன்யத்தில் பிறந்த புருஷன்
  • உலகைச் சூழ்ந்த காரிருள் வாழ்வாக எழுந்தது
  • மனமழிந்த உறக்கம் மருண்டெழுந்த ஜீவியம்
  • உயிரற்ற உறுதி ஆட்டுவிக்கும் ஆட்டம்
  • இழிந்த ஜடம், இருளான வெறுப்பு, செறிந்த செத்த உணர்வு
  • ஜீவனற்ற உறக்க மயக்கத்தில் ஆழ்ந்தொளிந்து
  • சிருஷ்டிக்கும் பூமியின் வலிமையிழந்த தூக்கம்
  • ஆழ்ந்த மனம் ஏங்கி நினைவு கூர்ந்தது
  • பிறப்பதன்முன் இறந்த மகிழ்ச்சி நின்றது
  • சொரணையற்ற நெஞ்சில் சொக்கி நிற்கும் சொர்க்கம்
  • சகதியில் விளையும் ரோஜாவும் மலர்களும்
  • பார்வையற்ற பாத்திரத்தினின்று ஜனிக்கும் லாவண்யம்
  • பிறந்த அழகு பெரிய இடத்திற்குரியது
  • இது அது பிதிராஜ்யமாகப் பெற்ற விதிக்கப்பட்ட சட்டம்
  • கொலை செய்யப்பட்ட கடவுளின் பொன்னான கொடையென
  • சிறைப்பட்ட ஆத்மாவின் பார்வையிழந்த சக்தி
  • அழியாத கடவுளின் அழியும் பாகங்கள்
  • இழந்த பகுதிகளின் தொகுப்பில் எழவேண்டும்
  • எங்கோ செல்லும் பத்திரத்தை எடுத்து எழுதி
  • இறைவனின் உரிமைக்கு, சொந்தத்தின் ஐயம்
  • மிச்சம் அவளது சொச்சம்
  • அவள் மண்குவியல் மறைத்துள்ள மலையான பொருள்கள்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மேலே போகும்பொழுது அனுபவம் நின்றால், அறிவு ஆரம்பிக்கும்.
கீழே வரும்பொழுது அனுபவம் பூர்த்தியானால், கல்வி பூர்த்தியாகும்.

******



book | by Dr. Radut