Skip to Content

05. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XIX. Life
 
The problem of Life in matter was recently
experimented upon.
Page No.178
Para No.10
It throws an intense light on the problem.
If those conclusions are accepted, it is so.
It was done by a great Indian scientist.
It was on response to stimulus.
He points it out as an infallible sign of existence of life.
This phenomenon has many subtle functionings.
His data illumined the functionings.
It is a phenomenon of plant life.
Vitality is the essential point.
Its positive state is life.
Its negative state is death.
The same proof in metals has been given.
It is the same as in the plant.
An identical organisation of life in metal as well as plant could still be there.
Not indeed with the same abundance.
19. வாழ்வு
 
ஜடத்தில் உயிருள்ளது என்பதை சமீபத்தில் சோதனை செய்தனர்.
சோதனை விஷயத்தை மிகத்தெளிவு செய்கிறது.
இதன் முடிவை ஏற்றால், அப்படியே கூற முடியும்.
இதை ஒரு பிரபல விஞ்ஞானி செய்தார்.
புறத் தூண்டுதலுக்கு உரிய உணர்ச்சியைச் சோதனை செய்தார்.
இது உயிருள்ளதுஎன்பதை மறுக்க முடியாதபடி காட்டுகிறது என்கிறார்.
இந்த விஷயத்தில் பல சூட்சுமங்கள் உள.
அவர் விஷயங்கள் செயலை விளக்குகின்றன.
இது தாவரத்தின் உயிர்.
உயிர் முக்கியம்.
உயிர் வாழ்வின் உயர்ந்த நிலை.
மரணம் அதன் தாழ்ந்த நிலை.
இதே சோதனையை உலோகத்தில் செய்யலாம்.
உலோகமும் தாவரமும் ஒன்றே.
இரண்டிலும் உயிர் ஒன்றுபோல இருக்கும்.
தாவரத்திலுள்ள அளவுக்கு இருக்காது.
 
Not indeed to show the exact identity.
Instruments could be invented.
It could be the right nature.
It could be sufficiently delicate.
More points of similarity between metal and plant can be shown.
It may be proved not to be so.
What does this mean?
It means the same organisation is absent.
But the beginnings of vitality could still be there.
The symptoms may be rudimentary.
They are symptoms of life.
If it exists in the metal, something must be admitted.
Some material existences are perhaps involved.
They are akin to the metal.
Maybe they are involved.
Maybe they are elementary or elemental in the earth.
This must be admitted.
We can pause and inquire further.
We are not obliged to stop short.
Our immediate means may fail us.
We enjoy an unvarying experience of Nature.
From that we may be sure.
Investigation thus pursued will in the end prove to us that there is no break.
There is no rigid line of demarcation between the earth and the metal formed in it.
Or a line between the metal and the plant is there.
There is none between the elements and the atoms.
It will be clear pursuing the synthesis further.
இரண்டும் ஒன்றே என்று தெளிவாகக் காட்டாது.
புதிய கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அவை பொருத்தமாக இருக்க வேண்டும்.
அவை துல்லியமாக இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால், தாவரத்திற்கும் உலோகத்திற்கும் அதிக ஒற்றுமை காட்ட முடியும்.
காட்ட முடியாமற் போகலாம்.
இதன் பொருள் என்ன?
இரண்டிலும் இருப்பது ஒன்றேயில்லைஎன ஆகும்.
எனினும் உயிரின் ஆரம்பம் இருக்கும்.
அடையாளம் கொஞ்சமாக இருக்கலாம்.
ஆனாலும் அவை உயிருக்குள்ள அடையாளம்.
அதுவே உலோகத்திலிருந்தால், நாம் ஒன்றை ஏற்க வேண்டும்.
ஜடவாழ்வு ஒருவேளையிருக்கலாம், மறந்திருக்கலாம்.
அது உலோகத்தில் உள்ளது போலிருக்கும்.
அவை மறைந்திருக்கலாம்.
அடிப்படையானதாக இருக்கலாம்.
இதை ஏற்க வேண்டும்.
சற்றுப் பொறுத்து விசாரிக்கலாம்.
இங்கே நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நம் சோதனைகள் பலிக்காமற்போகலாம்.
நாம் இயற்கையை நிதானமாக அனுபவிக்கிறோம்.
அது நமக்குத் தெளிவுபடுத்தும்.
ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் முடிவில் இடைவெளியில்லை என்பது தெரியும்.
மண்ணுக்கும், அதிலிருந்து வரும் உலோகத்திற்கும் இடையே எல்லை என்பதில்லை எனத் தெரியும்.
தாவரத்திற்கும் உலோகத்திற்குமிடையேயும் எல்லையில்லை எனத் தெரியும்.
அணுக்களுக்கும் பஞ்சபூதங்கட்குமிடையேயுமில்லை.
ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் அது தெளிவாக இருக்கும்.
There is no demarcation between the elements and the atoms that
constitute the earth,
And the metal or the earth they constitute.
Each is a step of a graded existence.
Each prepares the next.
Each holds in itself the substance of the next.
It appears in that which follows it.
Life is everywhere.
It is secret or manifest.
It is organised or elemental.
It is involved or evolved.
It is universal, all-pervading.
It is imperishable.
Only its forms and organisings differ.
There is a physical response to stimulus.
Page No.179
Para No.11
It is only an outward sign of life.
It is so with our breathing and locomotion.
An exceptional stimulus is applied by the experimenter.
Vivid responses are given to it.
It can at once be recognised as indices of vitality.
It is the object of our experiment.
The plant is responding all its existence.
The response is constant.
It responds to a constant mass of stimulation.
The stimulation is from its environment.
It can be explained in other words.
There is a constantly maintained force in it.
It is capable of responding.
இவற்றிடையே பேதமில்லை.
உலோகமும், மண்ணும் அணுவாலும் பூதங்களாலும் ஆனவை.
படிப்படியான வாழ்வில் ஒவ்வொன்றும் ஒரு படி.
ஒவ்வொன்றும் அடுத்ததைத் தயார் செய்யும்.
அடுத்ததின் கரு முந்தையதில் உள்ளது.
வருவதில் அது தெரியும்.
வாழ்வு எங்கும் உள்ளது.
அது வெளிப்படையாகவோ, இரகஸ்யமாகவோ இருக்கும்.
அது உருவம் பெற்றிருக்கும், பெறாமலிருக்கும்.
அது மறைந்திருக்கும் அல்லது வெளிப்படையாக இருக்கும்.
அது பிரபஞ்சத்திற்குரியது, அனைத்தையும் ஊடுருவக்கூடியது.
அது அழிவற்றது.
அதன் ரூபமும் உருவகமும் மாறலாம்.
 
தொடு உணர்ச்சிக்குப் பதிலுண்டு.
இது உயிரிருப்பதற்கு வெளிப்படையான அறிகுறி.
நாம் நடப்பதும், மூச்சு விடுவதும் அப்படிப்பட்டதே.
ஆராய்ச்சியாளர் ஒரு சிறந்த உணர்ச்சியைக் கிளப்புகிறார்.
தெளிவான பதில் தெரிகிறது.
உடனே அது உயிரின் அடையாளம்எனத் தெரியும்.
அதுவே நம் சோதனையின் நோக்கம்.
செடி வாழ்நாள் முழுவதும் உஷாராக இருக்கிறது.
தொடர்ந்து செயல்படுகிறது.
ஏராளமான உணர்ச்சிகள் அதைத் தொட்டபடியிருக்கின்றன. அது பதிலிறுக்கிறது.
சூழலினின்று உணர்ச்சி எழுகிறது.
இதை வேறு வகையாகக் கூறலாம்.
செடியில் எப்பொழுதும் சக்தி நிறைந்துள்ளது.
இதற்கு, பதில் கூற முடியும்.
It responds to the application of force.
The force is from its surroundings.
There is another opinion.
They say the experiments are destructive.
These experiments destroy the idea of a vital force in the plant.
It is true of any other living being or organism.
A stimulus is an energised force.
It is a force in dynamic movement.
It has been directed on that object.
A response is from an energised force.
It is a force in a dynamic movement.
It is also of sensitive vibration.
It answers to the shock.
There is a vibrant reception and reply.
There is also a will to grow and be.
It is indicative of sub mental organisation.
It is a vital-physical consciousness-force.
It is hidden in the form of being.
There is a fact.
It is there as a constant dynamic energy.
It is in movement in the universe.
It takes various material forms.
They are more or less subtle or gross.
It is in each physical body or object.
It is in plant or animal or metal.
There is stored dynamic energy.
It is active.
It is the same force.
There is a certain interchange.
It is between these two.
செடியைத் தொட்டால் அது பதிலளிக்கும்.
அதைத் தொடும் சக்திகள் சூழலினின்று எழுகின்றன.
மாற்றுக் கருத்தும் உண்டு.
இந்த சோதனைகள் உணர்வை அழிப்பதாகக் கூறுகின்றனர்.
செடியின் உயிரோட்டத்தை சோதனை அழிக்கிறதுஎன்கின்றனர்.
உயிருள்ள எதற்கும் இச்சட்டம் பொருந்தும்.
தொடுவது தீவிர சக்தி.
தீவிரமாக அசையும் சக்தி அது.
அது செடியை நோக்கிச் செல்கிறது.
தீவிரமான சக்தி பதில் கூறுகிறது.
தீவிரமான சலனத்தின் சக்தியது.
அது உணர்ச்சியுள்ள கதிர்.
அதிர்ச்சிக்கு அது பதிலிறுக்கும்.
ஆழ்ந்த அதிர்வால் பெற்றுப் பதில் கூறும்.
தன்னை வெளிப்படுத்தும் உறுதியுண்டு. வாழும் வளம் உண்டு.
மனத்திற்குக் கீழ்ப்பட்ட அமைப்பை அது சுட்டிக்காட்டுகிறது.
இது உயிர்-உடலின் சித்-சக்தி.
இது ஜீவனில் மறைந்துள்ளது.
இது உண்மை.
தொடர்ந்த தீவிர சக்தியாக இது இருக்கிறது.
அது பிரபஞ்சத்தில் நடமாடுகிறது.
அது பல்வேறு ஜட உருவங்களை ஏற்கிறது.
அவை ஜடமாகவோ, சூட்சுமமாகவோ இருக்கும்.
ஒவ்வோர் உடலிலும், பொருளிலும் அது உண்டு.
அது செடி, விலங்கு, உலோகத்திலுண்டு.
இத்தீவிர சக்தி சேமிப்பாக இங்குள்ளது.
இது சுறுசுறுப்பாக இருக்கிறது.
அதே சக்திதான் அது.
அவை பரிமாறிக்கொள்கின்றன.
அவையிரண்டு.
It gives us a phenomenon.
We associate it with the idea of life.
It is an action.
We recognise this as action of Life-Energy.
It is the Life-Force that energies it.
There is one World-Force.
It expresses as three energises.
They are Mind-Energy, Life-Energy, material-Energy.
 
 
 
 
Contd...
 
 
*****
இது நமக்கு ஒன்றைக் காட்டுகிறது.
நாம் இதை வாழ்வு என்கிறோம்.
இது ஒரு செயல்.
இதை வாழ்வின் சக்தியின் செயல்என அறிகிறோம்.
வாழ்வின் சக்தி இதைச் செய்கிறது.
ஓர் உலக சக்தியுண்டு.
அது மூவகைகளில் வெளிப்படும்.
மனோசக்தி, பிராணசக்தி, ஜடசக்திஎனப்படும் அவை.
 
தொடரும்....
 
 
*****
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தலைவன், தொண்டன், இருவர் செய்யும் வேலையின் கரு ஒன்றேஎன்பதை அவர்களுடன் உடன் இருப்பவர்கள் அறிவார்கள். ஆனால் தொண்டன் தலைவனானால் அதற்குரிய வலிமையில்லாத காலத்து அவன் தோல்வியடைகிறான்.
 
தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன்.
 
 
******
 
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அகந்தையிலிருந்து சைத்தியப்புருஷனுக்கு மாறுவது, தன்னை நினைக்கும் சுயநலம் பிரபஞ்சத்தை நாடும் பரநலமாவது, ஜீவாத்மாவை நாடுவதற்குப் பதிலாக பிரபஞ்சத்தின் ஆத்மாவை நாடுவது, ஆழ்ந்துபோய் எண்ணமற்ற அறிவை நாடுவது, மனத்தில் அக்னியை எழுப்புவது ஆகியவை ஒன்றுபோன்றவை. ஒரே மாதிரி பலன் தரக்கூடியவை. அத்துடன் யோக முதற்படி.
 
முதற்படிகள் பல.
 
******



book | by Dr. Radut