Skip to Content

01. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. நாள் செய்வதை நல்லவர் செய்யமாட்டார்.
    • சமர்ப்பணம் சாதிப்பதை நல்ல சுபமுகூர்த்தம் சாதிக்காது.
  2. பெண்ணென்று பிறந்துவிட்டால் பெரும்பீழை இருக்கிறது.
    • அன்னை என்று வந்துவிட்டால் பேர் அருளிருக்கிறது.
  3. சூதும் வாதும் வேதனை செய்யும்.
    • பக்தியும் நம்பிக்கையும் பரமனை வெல்லும்.
  4. உடையது விளம்பேல்.
    • உள்ளது உலகை வெல்லும்.
  5. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
    • பழக்கம் பலன் தாராது.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு காரியத்தை முடிக்க அதைப் பூர்த்தி செய்யும் முழு அறிவு பயன்படுவதைவிட, அதைக் கெடுக்கக்கூடிய சக்திகளை அடக்கி, விரட்டும் திறன் பயன்படும்.
 
பூர்த்தி செய்வதைவிட, காப்பாற்றுவது முக்கியம்.

*****



book | by Dr. Radut