Skip to Content

05.சாவித்ரி

சாவித்ரி”

P. 20. A piston brain pumps out shapes of thought.

            பலரூப எண்ணங்களை மெஷின் போல எழுப்பும் மூளை.

       உலகம் ஜீவனற்றது. இறைவன் ஜீவனுக்கு ஜீவன் அளிப்பவன். மூளையே யந்திரமாக வேலை செய்தால் மனிதனுக்கு என்ன இருக்கும்? சாவித்திரியில் பிரபலமான வரி இப்பக்கத்தில் வருகிறது. உலகமும், மனிதனும், இயற்கையும் ஜீவனற்றவை என்பது உண்மை. அப்படிப்பட்ட இடத்தில் ஒரு பிரார்த்தனை, ஒரு தீரச்செயல், ஓர் அற்புதமான எண்ணம் உதயமானால், அது இறைவனை எட்டும்பொழுது அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சியாகின்றன என்பது அந்த வரி.

       சாவித்திரி உலகுக்குக் கொண்டு வந்த வரத்தின் கருவை தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தவர்கள் அவை. ஜீவனில்லாத உலகுக்கு ஜீவனளிப்பது ஆர்வம், சக்தி, உற்சாகம். ஆனால் பிரார்த்தனை, வீரம், அற்புதமான கருத்து மனிதனையும், தெய்வத்தையும் இணைத்து அற்புதம் நிகழ்த்துவதுடன், அதை நிரந்தரமாக்கும் தரமுடையதாகும்.:

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:

மாறாத சட்டங்கள் தழலான ஆத்மாவை எதிர்கொண்டன.

பிரபஞ்சத்தின் யந்திரங்கள் அவள் முன் நின்றன.

அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சியாகின்றன.

இறைவனின் அடி கொல்லும் பொழுது காப்பாற்றுகிறது.

தனித்த எண்ணம் உலகை ஆள்கிறது.

உறுதியான பழக்கம் சட்டமாக வருகிறது.

யந்திரங்களில் அவனும் ஓர் யந்திரமானான்.

ஜடமான உணர்வு சக்தியாகி ஆன்மாவைப் புனைகிறது.

அர்த்தமற்ற செயல்கள் அலங்கோலமாக வருகின்றன. அறிவு அதன் மாயையை இங்கு உணர்கிறது.

வாழ்வின் முயற்சி தானே தேடுகிறது.

மனத்தின் மடமை பிரம்மாண்டமான வேலையைச் செய்கிறது.

விவேகம் உருவாகிறது; திருஷ்டி பிறக்கிறது.

இயற்கையின்  நிர்வாகம் அவனை அரியாசனத்திலிருத்துகிறது.

தன்னை சாட்சியாகவும், விழிப்பான சக்தியாகவும் கண்டான்.

ஆன்மா அடங்கி ஆத்ம ஜோதியைக் காணும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அறியாமையால் குழந்தை மாசு படாமலிருக்கிறது. அறிவோடு மனிதன் தன் அறிவை விட்டகன்றால், அது பூரணத் தூய்மையாகும். தெளிந்த மனத்துடன் அறிவை விட்டகல்வதாகும்.

மனங்கடந்த மாசற்ற நிலை.

 



book | by Dr. Radut