Skip to Content

13.தாயறியாத சூலில்லை

தாயறியாத சூலில்லை

       50 ஆண்டுகட்கு முன் கல்லூரிகளில் காப்பியடித்து தள்ளிவைக்கப்பட்டது என்பது இல்லை. நான் கல்லூரியில் படித்த 7 ஆண்டுகளில் ஒருவர்தான் அப்படித் தண்டிக்கப்பட்டார் என்று 1956இல் பட்டம் பெற்றவர் சொன்னார்.

       மார்க் போட்டு பாஸ் செய்வது என்பது அன்று இல்லாமலில்லை. அது அத்தி பூத்தாற்போன்ற செயல். Physics பரீட்சை B.A.யில் எழுதிவிட்டு மாணவன் தன் கணித ஆசிரியரிடம் வந்து தன் புரொபசரிடம் சொல்லி பாஸ் போடும்படிக் கேட்டுக் கொண்டான். அவர் அவனுக்கு II கிளாஸ் பாஸ் போட்டார். அதனால் அவன் M.A. சேர்ந்தான். M.Sc. படித்தான். Ph.D.யும் முடித்தான்.

       புரொபசர் செய்த வேலை அவருடைய மற்றொரு மாணவருக்குப் பிடிக்கவில்லை. புரொபசர் லட்சியவாதி. யார் செய்தாலும் இந்தக் காரியம் தவறு. இலட்சியவாதி செய்யக் கூடாதல்லவா? இந்த மாணவனுக்கு அந்த Ph.D.யைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனம் கசங்கும். 10 ஆண்டுகட்குப்பின் இம்மாணவன் புரொபசரைப் பார்க்க வந்திருந்தான். அப்பொழுது அந்தப் Ph.D.ம் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக அறியாதவர்கள்.

       அந்த Ph.D. இந்தப் பட்டதாரியை என் வீட்டிற்குப் போய் ஒரு புத்தகம் எடுத்து வர வேண்டும் என்றான். இந்தப் பட்டதாரி தன்னூரிலும், தான் பயின்ற இடங்களிலும் தலைமை மாணவராகப் பிரபலமாகி இருந்தவர். அவருக்கு இதுபோன்ற அனுபவமில்லை. அன்னையை அறிந்து கட்டுப்பாட்டை ஏற்ற நேரம். தம் சுபாவப்படி அந்த வேண்டுகோளுக்குப் பதிலாக அறை விழும். புரொபசருக்காகவும், disciplineக்காகவும் வேண்டுகோளைப் பூர்த்தி செய்தார். நெடுநாள் கழித்து அந்த நிகழ்ச்சிக்கு என்ன காரணமிருக்கலாம் என்று நினைத்தபொழுது 

        “அந்த Ph.D. செய்த தவறான காரியத்திற்காக அவனை மட்டமாக நினைப்பதால் அந்த நினைப்புக்குப் பிரதிபலிப்பாக அவன் வேலையிட்டான்” என்று மனம் கூறியது.

ஒருவர் செய்த தவற்றைக் கண்டிக்கும் உரிமையை ஆண்டவன் அடுத்தவருக்குத் தரவில்லை.

 



book | by Dr. Radut