Skip to Content

12.நாய் குரைக்கிறது

நாய் குரைக்கிறது

       நமது சுற்றுப்புற நிகழ்ச்சிகள் நமக்குக் கட்டுப்பட்டவை என்பதை அன்பர்கள் ஆயிரம் முறை கண்டுள்ளனர். எத்தனை முறை அவை பலித்தாலும் நிலையாகச் சொல்ல முடியாது என்றும் காண்கிறோம். பஸ்ஸைத் தவறவிட்டு விட்டால், பிரார்த்தனை போக வழி செய்கிறது. காணாத பொருளைத் தேடி அன்னையை அழைத்தால் கிடைக்கிறது. மழைக்காகப் பிரார்த்தனை செய்தால் அன்றே மழை பெய்கிறது. இன்டர்வியூவுக்குத் தெற்றுவாய் ஆபத்து என்றால், இன்டர்வியூவில் தெற்றவில்லை, என்பனவெல்லாம் உண்மை என்றாலும், இவை நமக்கு நிரந்தரமானவை அல்ல என்பதும் உண்மை.

       எப்பொழுதும் punctual ஆக இருப்பது, பொருள்களைக் கவனமாக வைத்திருப்பது, தண்ணீரை அன்னையாகப் பாவிப்பது, போன்ற குணம் உள்ளவர்க்கு ஒரு முறை தவறினால் பலிக்கும். அவருக்குத் தவறாது. அவரை மீறி தவறினால் பிரார்த்தனை தவறாது பக்கும். மற்றவர்கட்கு பல முறை பலிக்கும். நிச்சயமாகப் பலிக்கும் என்று கூற முடியாது.

       யார் பேசும் பொழுதும் குறுக்கே பேசத் தோன்றுபவர் ஓர் அன்பர். தன் மனம் தன்னை மீறி எண்ண ஓட்டத்தில் ஈடுபடும்பொழுது, வெளியில் நாய்கள் அளவுகடந்து நெடுநேரம் குரைப்பதையும், தன் மனம் அடங்கிய பொழுது குரைப்பது நிற்பதையும் கண்டவர் ஓர் அன்பர். இவர் ஓயாமல் பேசுவார். எதிரேயுள்ளவர் எழுந்து போனதும் தெரியாமல் தொடர்ந்து பேசுபவர்.

       இரவு 2 மணி, தூக்கம் வரவில்லை. நாய் குரைப்பது தூக்கத்திற்குத் தடை. அன்னையை அழைத்தால் குரைப்பது நிற்கிறது. அழைப்பதை நிறுத்தினால் நாய் குரைக்க ஆரம்பிக்கிறது. இது சில நாள் தொடர்ந்தது. பிறகு ஒரு நாள் இதேபோல் குரைப்பது கேட்டவுடன் அன்னையை அழைத்தார். குரைப்பது நிற்கவில்லை. மனம் ஓடுவதை நிறுத்த முடிவு செய்தால், அவரை மீறி மனம் ஓடினாலும் குரைப்பது குறையும், நிற்கும். இந்த அன்பருக்கு அது தோன்றவில்லை. அதுதான் சரி. அவருக்கு வேறொன்று தோன்றியது.

நாயின் வாயினுள் அன்னை ஒளி புகுவதாக நினைத்தார்.

குரைப்பது நின்றுவிட்டது.

 



book | by Dr. Radut