Skip to Content

02.லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்                                                                                                                                                கர்மயோகி

 

X. Conscious Force                         

Page No.86, Para No.15

10. சித் - சக்தி

We may go farther

மேலும் ஆராய்வோம்.

We speak of subconscious mind.

நாம் ஆழ்மனத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

It is not different from our mentality.

அது நம் மனத்திலிருந்து வேறுபட்டதில்லை.

Only it is acting below the surface.

அது கீழே செயல்படுகிறது.

It is unknown to the waking man.

விழிப்பில் அது தெரியாது.

It has a deeper plunge.

அதற்கு ஆழமுண்டு.

And it has a vaster scope.

அது பரந்தது.

Subliminal is a different phenomenon.

அடிமனம் வேறுபட்டது.

It far exceeds the limits of this definition.

இந்த விளக்கங்களையெல்லாம் கடந்தது.

Its capacity is immensely superior.

அதன் திறமை பெரியது. வலிமையுள்ளது.

It is quite different in kind.

அதன் போக்கே வேறு.

It is different from our mentality.

நம் மனப்பான்மையிலிருந்து வேறுபட்டது.

Our mentality is in our waking self.

மனப்பான்மை விழிப்புக்குரியது.

If a subconscious is there, there must be a superconscious.

ஆழ்மனமிருந்தால், அதற்கு எதிரானதிருக்க வேண்டும். (அது பரமாத்மா)

That is, the conscious faculties have a range.

அதாவது ஜீவியம் பல நிலைகளிலுள்ளது.

There is organisation of consciousness.

ஜீவியம் திறனாக முறைப்படுத்தப்பட்டுள்ளது.

It rises high above the psychological stratum.

மனம் என்ற நிலையை அதிகம் கடந்தது.

We call that mentality.

அதை மனப்பான்மை என்கிறோம்.

That subliminal rises to the superconscious.

அடிமனம் உயர்ந்து பரமாத்மாவை எட்டும்.

So, it can sink into the subconscious.

அடிமனம் ஆழ்ந்து ஆழ்மனத்தைத் தொடும்.

Are there forms of consciousness that are submental?

ஜீவியத்திற்குப் பல உருவங்களுள்ளதுபோல், அதற்கு உபநிலைகளுண்டு.

We call them vital and physical consciousness.

அவற்றைப் பிராணன், உடல் என்கிறோம்.

Consciousness is confined by us to man and animal.

ஜீவியம் மனிதனுக்கும், விலங்குகட்கும் மட்டும் உண்டு என நினைக்கிறோம்.

We may suppose a force in the plant and metal.

தாவரத்திலும், உலோகத்திலும் சக்தியிருப்பதாகக் கொள்ளலாம்.

We can call that force too consciousness.

அது ஜீவிய சக்தி - சித் - சக்தி - எனவும் கூறலாம்.

Page No.87, Para No.16

 

This is probable.

இப்படியிருக்கலாம்..

Let us dispassionately consider it.

நிதானமாக ஆலோசனை செய்வோம்.

It is certain.

அது நிச்சயம்.

In us there is a vital consciousness.

நம்முள் பிராணனுண்டு. .

It acts in the cells of the body.

அது உடலின் செல்களில் செயல்படுகிறது

The automatic vital functions are by them.

தன்னிச்சையான செயல்கள் அவற்றால் இயங்குகின்றன.

Thus we go through purposeful movements.

அதன் செயல்கட்குக் காரணம் உண்டு.

Thus attractions and repulsions are obeyed.

எனவே விருப்பு வெறுப்புக்கேற்ற செயல் உண்டு.

Our minds are strangers to them.

நாம் அவற்றிற்கு விலக்கு.

It is more important in the animals.

விலங்குகளில் இதை அதிகம் காணலாம்.

In plants, it is intuitively evident.

மரம் செடி கொடிகளில் இது இயல்பாக இருப்பதைக் காணலாம்.

The movements of the plant are not mentality.

தாவரத்தின் அசைவுகள் மனப்பான்மையாகாது.

Plants seek or shrink.

தாவரம் சுருங்கும் அல்லது வளைந்து நீளும்.

They have pleasure and pain.

அவற்றிற்கு இன்ப துன்பம் உண்டு.

They sleep and are awake.

விழிப்பும் துயிலும் உண்டு.

They have all that strange life.

வினோதமாக அவ்வாழ்வுண்டு.

An Indian scientist demonstrated this.

இந்திய விஞ்ஞானி ஒருவர் இதை விளக்கினார்.

All these are movements of consciousness.

இவை ஜீவியத்தின் செயல்கள்.

But they are not of mentality.

அவை மனப்பான்மையில்லை.

Then, there is a submental vital consciousness.

பிராணனில் மனத்தின் பகுதியுண்டு.

It is precisely like the mental.

அது மனம் போலவேயிருக்கும்.

But it is different.

ஆனால் மாறுபட்டது.

Different in constitution of self-experience.

தன்னையறிந்து அனுபவம் பெறுவதில் அது மாறுபடும்.

The suprconscient also so differs.

(பரமாத்மா) நம்மினும் உயர்ந்ததும் மாறுபடும்.

It too differs in constitution and self-experience

அவை அமைப்பிலும், சுய அனுபவத்திலும் மாறுபடும்.

...contd.

...தொடரும்

****

****



book | by Dr. Radut