Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

       அன்னையின் அன்பராக நான் 1995 முதல் இருந்து வருகிறேன். அன்னையின் அருளால் என் வீட்டின் முதல் மாடியைப் பல தடைகளுக்குப் பின்னர் கட்டி முடித்தேன். எனக்கு ஏற்படும் மனச்சங்கடங்களின்போது அன்னையை நினைத்து தியானம் செய்தால் பெரிய சங்கடங்கள் எல்லாம் எனக்குச் சிறியதாகவே தோன்றும்.

       அன்னையின் அருளால் என் பெரிய மகன் தன்னுடைய B.Tech படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். சேர்ந்த கம்பனியின் மூலமாகவே எங்களுக்கு எந்தவிதச் செலவும் இல்லாமல் அமெரிக்காவுக்குப் பயிற்சி பெறச் சென்றுள்ளான். இவை எல்லாம் அன்னையின் அருள் என்றே நான் நம்புகிறேன்.

       என்னுடைய சிறிய பையனும் B.Arch.5ஆம் வருடம் படிக்கின்றான். அவன் சாதாரணமாகப் படிக்கும் மாணவன்தான். நான் அன்னையிடம் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்பேன். அன்னையின் அருளால் அவன் இப்பொழுது மேல்படிப்புக்காகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருக்கிறான். அன்னையின் அருளால் அவனுக்கு அனைத்தும் நல்லபடி நடக்கும் என்று நான் நம்புகிறேன். நான் இப்பொழுது எல்லாம் எதற்கும் கவலைப்படுவதில்லை. அன்னை அனைத்தையும் எனக்குப் பக்கபலமாக இருந்து நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

****

 



book | by Dr. Radut