Skip to Content

05. அஜெண்டா - சாஸ்வதம்

அஜெண்டா

சாஸ்வதம் (eternity)

Volume 9, page 30

  • அனந்தம் என்பது (infinity) முடிவற்றது. அந்தம் என்றால் முடிவு. அனந்தம் முடிவில்லாதது.
  • ஒரு கோடு போடலாம். அதற்கு இரு முனைகள் உண்டு.
  • ஒரு முனையை நீட்டலாம், நீளும், அடுத்த முனையை நீட்டலாம் அதுவும் நீளும். அப்படி முடிவற்று நீளும் தன்மை அனந்தம்.
  • அனந்தம் இடத்திற்குரியது.
  • சாஸ்வதம் காலம் முடிவில்லாமல் கடந்ததிலும் எதிர்காலத்திலும் நீள்வதைக் காலத்தில் முடிவற்றதாக அறிகிறோம்.
    அது காலத்தைக் கடந்தது. சாஸ்வதமானது.
  • ஆத்மாவின் புற வெளிப்பாடு அனந்தமான இடம்.
    ஆத்மாவின் அக வெளிப்பாடு சாஸ்வதமான காலம்.
  • Infinity என்பது உலகம் அறிந்த கருத்து.
    மரபு அதைக் கூறுகிறது. அதுவே மேலே கூறியது.
  • பகவான் அனந்தம் (Infinity) என்ற கருத்தை அளவுகடந்து விரிவுபடுத்தி விளக்குகிறார்.
  • கல்வி என்றால் படிப்பு. பள்ளியில் கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது. புத்தகம் படித்து அப்படிப்பு விரிவடைவதைப் போல் மரபு கூறும் அனந்தம்.
  • படிப்பு, கல்வி என்ற கருத்தை விரிவுபடுத்தினால் நாம் கற்பதெல்லாம் கல்வி.
    சமையல் கல்வி, விளையாட்டுக் கல்வி, தொழிற்கல்வி.
    இது கல்விக்குப் பரந்த பொருள் தருவதாகும்.
    அக்கல்வி பெறுபவன் (genius) மேதையாவான்.
  • பகவான் அக்கருத்தை அட்சய பாத்திரம், காமதேனு, கற்பக விருட்சம் என்றவற்றிற்கும் விரிவுபடுத்துகிறார்.
  • மரபு மலை போன்றது. பகவான் தரும் ஞானம் மலையைக் குன்றாக மாற்றும்.
  • உடலில் சாஸ்வதம் மரணம் அழிவது — காயகல்பம் எனப்படும்.
  • ஆத்மாவுக்கு சாஸ்வதம் என்பது சூட்சும உலகில் அழியாமலிருப்பதாகும்.
  • காலமும் இடமும் ஆத்மாவிற்குரியது.
    காலத்தைக் கடந்தவன் மனத்தைக் கடந்தவன்.
    மனம் சிந்தனையாலானது.
    மனத்தைக் கடக்க சிந்தனையழிய வேண்டும்.
    சிந்தனையழிய மனம் சொல்லையிழக்க வேண்டும்.
    சொல்லிழந்த மௌனம், சொல்லழிந்த லயமாகும்.
  • உலகம் ஆத்ம வெளிப்பாடு.
  • ஆத்மாவை அடைவது மோட்சம்.
  • ஆத்ம வாழ்வை ஏற்பது பூரண யோக வாழ்வு.
  • ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, பராத்பரா, பராபுருஷா, பரமேஸ்வரா என்பவை ஆத்மாவின் அடுத்தடுத்த உயர்ந்த நிலைகள்.

*******

ஜீவிய மணி
சுயநலத்திற்கு செய்யும் சேவை பொறாமையின் கொடுமை தன்னைப் பூர்த்தி செய்ய உதவும்.



book | by Dr. Radut