Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

102. கபாலம் விரிவது Mental Consciousness மனஜீவியம் வளர்வது.

  • சூட்சுமம் நிறைந்த அன்பர் பதினான்கு வருடம் என்னுடனிருந்தார்.
  • மனிதர்களைக் காணும்பொழுது அவர்களுடைய சூட்சும அம்சங்கள் அவருக்கு ஓரளவு தெரியும்.
  • முதல் நிலையில் ஒருவர் எண்ணம் உணர்வாகி வெளிப்படும்.
  • முடிவான நிலையில் அவர் பூர்வஜென்ம வாழ்வு தெரியும்.
    அன்னை ஒருவரைக் காணும்பொழுது முன்பிறப்பின் உருவம் தெரிவதுண்டு.
    பகவான் எழுத்தாளர் வ.ராவைப் பார்த்தபொழுது ஓராண்டிற்குப் பின் அவருருவம் தெரிந்தது.
  • அறிவு பெரிதானால் அவர் தலை சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு பெரியதாகத் தெரியும்.
  • ஆசைக்கு வாசனையுண்டு. அளவுகடந்த ஆசையின் மணம் மலத்தின் வாடை.
  • மனிதத் திறமைகள் அறிவு, உணர்ச்சி, சொரணை, கற்பனை, சூட்சுமம், நுணுக்கம், ஆன்மீகம், உள்ளுணர்வு என உலகிலுள்ள அனைத்தையும் அறியும் அம்சங்கள்.
  • இவை இரண்டு இணைந்தால், உதாரணமாக அறிவும் சூட்சுமமும் சேர்ந்தால் அது எளிய மனிதனுக்கு இல்லாத நூற்றுக்கணக்கான வாயில்களைத் திறக்கும்.
  • இரண்டு, மூன்று, பல, அனைத்துமாக சேர முடியும்.
  • தாகூர் ‘பெண்ணின் முந்தானையின் அசைவுக்கு அவள் காதலுணர்வு கருத்தாகி அதன் அழகை சூட்சுமமாக வீசுகிறது’ என்கிறார்.
  • காதற்பருவத்தில் எழும் திறமைக்கு காதலியின் நடையில் அது தென்படும். ஓராண்டு கழித்து இருக்காது. அவளை அவன் மணந்தால், அவள் உள்ளிருந்து குரோதம் எழும் வேகத்தை அறிந்தபின் அதே அசைவு குரோதத்தை விளக்கும்.
  • ஷேக்ஸ்பியர் நீக்ரோ பெண்மணியின் தடித்த உதட்டில் காதலன் காணும் பவித்திரமான புனிதம் அவனுக்கு மட்டும் உரியது என்கிறார்.
  • வாழ்வில் மணம் வேகமும், தீவிரமும் உண்டு எனக் கூறும்.
  • வாழ்வில் ஆசை அன்பைச் சுமந்து வரும் அழகு காதற்பருவம் எளிதில் கண்டு கொள்வது.
  • அன்பு தெய்வீகமானது. அது விகாரத்தில் அழகாக மிளிரும்.
  • எந்த அன்பருக்கும் தெய்வீக ஜீவியம் மனத்தை நிரப்பி, அதன் சாரம் பொருளை நிரப்ப முயல்வது, யோகம் ஜீவனில் வளர்வது.
    கபாலம் எலும்பால் ஆனது.
    கபாலம் விரிவது, ஜீவியம் ஆன்மீக ஜீவியமாகி, பொருளும் ஆன்மீக ஜீவியத்தால் நிரம்பி, வழிந்தோடுவதாகும்
    விரியும் ஜீவியம் பிரபஞ்சத்தில் உலவும் ஜீவியத்தைத் தொடும்.
    அதனால் அது தொடுமிடமெல்லாம் நம் மனம் சொந்த உணர்வு போல் அறியும்.

*******

ஜீவிய மணி
 
சுயநலத்தைக் கடந்த நல்லது எதுவும் மனித உறவில் உற்பத்தியாகவில்லை.
 



book | by Dr. Radut