Skip to Content

09. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

இதுவரை நடந்த கதை

தத்தாத்ரேயனுக்கு மதுமதியோடு நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அவனைக் காதலித்து பின் மணக்க மறுத்த அவனது மாமா பெண் தரங்கிணி தான் இழந்ததைப் பெறுவது எப்படி என ஏங்கி நிற்கிறாள்.

தத்தாவின் அம்மா மங்களம், குடும்ப நண்பர்களான வாயாவி மாமா, பகுத்தறிவு சார், அபிராமி பித்தர், நண்பர்களான வம்சி, கரிகாலன், பவித்ரன், வாத்சல்யா மற்றும் பத்மினி, பிசிபேளா பிரசாதப்பா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒரு வகையான சிக்கல்.

தன் கடந்த கால வாழ்வை ஆராய்ந்து தன்னை மாற்ற முயன்றால் நிம்மதி கிடைக்கும் என்று ஒரு சிறுவன் மூலம் தரங்கிணி அறிந்து கொண்டு அதற்கான முயற்சியை மேற்கொள்கிறாள்.

இக்கருத்தைப் பற்றி பவித்ரனோடு தரங்கிணி பேசிக் கொண்டிருக்கும் போது அது எதிர்பாராமல் ஒலிபெருக்கி மூலம் அனைவரது செவிகளையும், செவிகள் மூலம் இதயங்களையும் அடைகிறது. மண்டபத்தில் இருப்பவர்களில் பலர் தங்கள் கடந்த காலத்தைப் பற்றிய நினைவோடையில் நீந்தத் தொடங்குகின்றனர்.

*******



book | by Dr. Radut