Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/9. அணுவைக் கொண்டு அனந்தமான அகண்டத்தைச் செய்வது ஆன்மாவின் செயல்படும் திறன்

உள்ளத்தால் உலகை உருவாக்கியது ஆன்மீகம்

  • கணவன் மனைவியை திருமணத்தால் ஏற்பது சடங்கு, சம்பிரதாயம்.
  • உள்ளத்தால் அவளைத் தனக்குடையவள் என்று ஏற்று நிறைவடைவது மனம் செய்யும் ஆன்மீகத் திருமணம்.
  • கு.பா.ரா.வின் ‘யார் பிசகு’ என்ற சிறுகதையில் மனைவி கணவனைக் கேட்கும் கேள்வியிது.
  • ஊர், குடும்பம், தொழில், விவசாயம், வியாபாரம் ஆகியவை ஸ்தாபனம்.
  • இவற்றிற்குரிய முறையுண்டு. முறை பலன் தரும்.
  • இவற்றுள் சிறந்தது குடும்பம். முறையால் ஏற்படுவது அன்று. உள்ளத்தின் உறவால் ஏற்படுவது. அவ்வுறவு முறையானால் குடும்பம் உயர்வை இழந்து முறையான குடும்பமாகும். அங்கு தவறு எழாது. பண்பின் உயர்ந்த மணம் வீசாது.
  • கட்சி, கிளப், ஸ்தாபனங்கள் சிறந்த நிலையில் இது ஒரு குடும்பம் எனக் கூறுவர்.
  • குடும்பம் அகத்தில் ஏற்பட்டு, புறத்தில் செயல்படுகிறது.
  • நட்பு, குரு சிஷ்ய உறவு, திருமணம் இவ்வுயர்வுக்குரியது.
  • நட்பின் இவ்வுயர்வை திருவள்ளுவர் ‘கேளிழக்கம் கேளார்’ என்றார்.
  • குரு சிஷ்ய உறவில் ஆன்மீகக் கர்மம் செயல்படும் ஆழத்தைக் காட்டுவது, குரு சிஷ்யனைக் கொலை செய்வதால் குருவுக்கு பிரம்மஹத்தி வந்து விடக்கூடாது என சிஷ்யன் தப்பிக்க முயல்வது.
  • கணவனை நண்பனாகவும், குருவாகவும் கொண்ட பெண் உத்தமி எனப் பெயர் பெற்றவள்.
  • மனைவியை உள்ளத்தால் ஆன்மீக குருவாக ஏற்க முடியும், ஏற்க வேண்டும் என்ற நம் பரம்பரை இலட்சியம் நடைமுறையில் பெரும்பாலோர் அறிந்ததில்லை.
  • இலட்சியம் இலட்சியமாகவே இருந்தாலும் அதற்கு ஆன்மீக ஜீவன் உண்டு.
  • குரு என்றால் அவர் கூறும் சொல் அவர் ஆன்மீக சித்தியைத் தாங்கி வரும் மந்திரம். அதை அப்படியே அக்ஷரச் சுத்தமாக ஏற்பது முறை, முழு ஆன்மீகப் பலன் தரும் என்பது விளக்கம்.
  • மகாத்மா காந்தியை அரசியல் தலைவராக இல்லாமல், ஆன்மீக குருவாக கட்சி ஏற்றதால் நாட்டில் பெரும் சுதந்திர இயக்கம் ஏற்பட்டது.
  • 1943-லும், 1947-லும் நேரு, பட்டேலால் காந்திஜியின் சொல்லை ஏற்க முடியவில்லை. மௌண்ட்பேட்டன் கூறுவதை ஏற்றனர்.
  • கணவன் மனைவியை ஆன்மீக குருவாக ஏற்பதென்பது என்ன?
    அவள் மனம் கூறும் உண்மையை அவள் பின்பற்றும் நேரம் சொல்லைத் தவிர்த்து அவ்வுண்மையை கணவன் பாராட்டுவது மனைவி கணவனுக்குக் குருவாவது.
  • அது காலத்தைக் கட்டுப்படுத்தும் கற்பின் திறனைக் கடந்த ஆன்மீக சத்தியம்.
  • அதன்முன் திருமூர்த்திகளின் தில்லுமுல்லு செல்லாது.
  • அனுசுயா என்ற படத்தில் அன்னை திருமூர்த்திகள் குழந்தைகளானதைக் கண்டு “It is lovely, lovely” என்றார்.
  • உண்மைக்கு உரிய பீடங்கள் பல. மனச்சாட்சி உயர்ந்ததெனினும் இந்தப் பீடமாக மாற அதற்குத் திறனில்லை.
    ஏனெனில் அது மனத்தின் சாட்சி.

இது மனம் பெறாத திறன். ஆத்மா பெற்ற திறன்.

********



book | by Dr. Radut