Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 162: Mid an obscure occult machinery

இருண்ட சூட்சுமமான யந்திரத்தினிடையே

  • புதிரான மார்ஸின் நிதானமான நடனம்
  • பிரபஞ்ச சக்தியின் சூத்திரங்களைத் தருகிறது
  • காது அகத்தில் விழித்துக் கேட்கும் சிறு குரல்
  • ஆழ்மனக் குகைகளின் மந்தமான எதிரொலி
  • எண்ணம் எழுகிறது, பேச்சு அதிர்கிறது, இதயம் ஒலி எழுப்புகிறது
  • உள்ளம் உள்ள பதிலைக் கூறி உடலையும் உயிரையும் பணிய வைக்கிறது
  • இச்சூட்சும நுணுக்கங்களை நம் வாழ்வு ஏற்று ஏந்துகிறது
  • இரகஸ்ய சக்தியின் இனிய வியாபாரத்தின் பேரம்
  • வாழ்வின் மனம் சிந்தனையின் அடிமை
  • ஆவி உலகின் அதிசயம் அதன் விருப்பம்
  • அவற்றின் பிறப்பு, முடிவு, காரணம் நீ அறியாதது
  • அவை சேவை செய்யும் பெருவழியை கனவிலும் காணவில்லை
  • வறண்ட வண்ணம், தாழ்ந்த மந்த எண்ணம்
  • சிறு தீவிர கூறான செயல்களால் நிறைந்தது
  • விழிப்பான பொம்மை விபரீதமாக ஆடுகிறது
  • யாரென அறியாமல் கையை உணர்ந்து நகரும்
  • கேலியான முகமூடி நாடகம் எவரும் காண இயலாதது
  • அவருக்கு நம் உருவமெல்லாம் பொம்மலாட்டம்
  • அறியாமல் நடக்கும் நம் செயலெல்லாம் அவர் பிடியுள்
  • தீவிரமான நம் சச்சரவு ஒரு பொழுதுபோக்கு நாடகம்
  • தம் ஊற்றான வலிமையை உணர முடியாத அவர்கள்
  • பிரம்மத்தின் அகண்டத்தில் பங்கு கொள்ளும் சிறு பகுதி
  • இருளின் கருவிகள் ஒளியாய் நடிக்கும்
  • இருண்ட ஆன்மா அசைக்கும் இருளான உலகம்
  • பிரியமில்லாமல் சேவை செய்யும் பெரும் சக்தி
  • அசத்தின் யந்திரங்கள் தற்செயலை அமைத்து
  • பெருநெறியின் குதர்க்கப் பாதைகள்
  • அறியமுடியாததின் கருவிகள் நம்மைக் கருவியாக்கும்
  • இயற்கையின் அடியில் சக்தியை நிரப்பி
  • மனித செயலை இயக்கும் உயர்நிலை, தன் செயலெனத் தணியும்
  • விதியின் தாறுமாறான போக்கை வீட்டிற்குள் கொணர்ந்து
  • கேலிக்கூத்தான ஆர்ப்பாட்டத்தை நம் தலைவிதியெனக் கொண்டு கைமாறும் மனித வாழ்வு
  • அர்த்தமற்ற கோணல் அற்புதமான விளையாட்டு
  • உயர்ந்த சத்தியத்தை உத்வேகமாக எதிர்க்கும்

***********

ஜீவிய மணி
 
பக்தி ஆர்வம் தன்னைப் பூர்த்தி செய்யும்பொழுது ஆசையையும் நல்ல முறையில் பூர்த்தி செய்யும். ஆசை தானழிவதுடன் ஆர்வத்தையும் தடை செய்யும்.



book | by Dr. Radut