Skip to Content

01. Genius (மேதை)

Genius (மேதை)

ஆத்மா அனைவருக்கும் உண்டு என்பதால் அனைவரும் ஆத்மா அளவில் சமம். அதே போல் எல்லோருக்கும் மேதாவிலாசம் உண்டு. தெரிவதில்லை என்பது ஒரு கருத்து. பள்ளிக்கூடமே போகாத 10 வயது பையன். நீக்ரோ. வீட்டில் சாப்பாடுண்டு. தங்க அனுமதியில்லை. பல்கலைக்கழக விஞ்ஞான லாபரட்டரிக்கு வந்தான். உள்ளே போக முயன்றான். அனுமதியில்லை. கட்டடத்தைச் சுற்றி வந்தான். கிழிசல் உடையில் ஒரு நீக்ரோ பையனை விசாரித்தார். வெள்ளைக் கோழியை எப்படிக் கருப்புக் கோழியாக்குவது என அறியும் ஆவலைத் தெரிவித்தான். அவரைப் பார்த்தால் பிச்சைக்காரர் போன்ற தோற்றம். அவர் பையனை வாயிலுக்கு அழைத்து வந்தார். உள்ளே அழைத்துப் போனார். ஒரு biology புரொபசரிடம் அறிமுகப்படுத்தினார். நெடுநாள் வேலை செய்தான். படித்தான். அதைக் கண்டுபிடித்து உலகப் பிரசித்தி பெற்றான்.

அவனை உள்ளே கொண்டு போனவர் நீக்ரோ.

அவர் biology புரொபசர். விஞ்ஞானி.

நோபல் பரிசு பெற்றவர்.

பையனிடம் மேதாவிலாசமிருப்பதைக் கண்டு வியந்தார்.

தன் அந்தஸ்த்தின் செல்வாக்கு முழுவதும் கொடுத்தார்.

பையன் பிரபல மேதையானான்.

மேதாவிலாசம் அனைவருக்கும் உண்டு. அது வெளியில் தெரிவதில்லை.

அவனுக்கே தெரிவதில்லை. தெரியும் நேரமும் சந்தர்ப்பமும் வந்தால் அது பலிக்கும்.

இன்டர்நெட் அந்த வாய்ப்பை அனைவருக்கும் தருகிறது.

*********



book | by Dr. Radut