Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

109. ஏமாற்றுபவனும் மோட்சத்தில் ஏராளமாகப் பலன் பெறுவான்.

  • சந்தன மரம் அதை வெட்டும் கோடரிக்கும் சந்தன மணம் தரும் எனத் தாகூர் கூறுகிறார்.
  • ஆன்மீக உயர்வுக்கு அடையாளம் இரண்டு.
    1. தொடர்பால் துலங்க வேண்டும்.
    2. எதிர்ப்பால் அழிய வேண்டும்.
  • Snob என்பவனை கயவன் என்றால் சரி, ஆனால் மிகப் பொருத்தமாகாது.
  • மட்டமான உள்ளம் உள்ளவன் அதிகப்படியாக அடங்கியிருப்பான். அவனைச் சமமாக நடத்தினால் அவரை மட்டமாக நடத்துவான். அம்மனம் உள்ளவனைத் தெளிவாக விளக்கும் சொல் ண்ணணிஞ, தமிழில் தவறான, மட்டமான குணமுள்ளவன் என்றுதான் கூறலாம்.
  • 1960-இல் நிரந்தரமாக சர்க்கார் வேலையில் ரூபாய் 150 சம்பாதிப்பவன், தன் பால்ய நண்பன் டாக்டர் மகனுடன் நெருங்கிய நண்பன். தன் நண்பனுக்காக உயிரையும் விட வேண்டும் என ‘உள்ளபடி’ நினைப்பவன். உள்ளபடி எனில் இவன் அறிவுக்கெட்டிய அளவில் உள்ள உண்மைக்குரிய உணர்ச்சி அது, infatuation எனப்படும். அர்த்தமற்ற ஆர்வம் எனலாம். நட்புக்குரிய உயர்ந்த மனப்பான்மையின்றி, டாக்டர் மகன் என்பதால் அவனைப் பணக்காரன் எனக் கருதி (பணக்காரன் என்பது உண்மையில்லை) அவனுக்காக உயிரை விடும் மனப்பான்மையுடையவன். வேலையை இராஜினாமா செய்து நண்பன் ஆரம்பித்த தொழிலில் (ரூபாய் 2,000 முதலீட்டுடன் ஆரம்பித்த தொழிலில்) 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து ஓராண்டில் தொழிலில் ஏமாற்றும் வழிகளால் 17,000 ரூபாய் இலாபம் சம்பாதித்தான். டாக்டர் மகன் சுயநலமி, துரோகி. இலாபம் அதிகமாக வந்ததால் உயிரை விடுபவனுக்கு துரோகம் செய்து வேலையினின்று விலக்கி விட்டான். நடுத்தெருவில் நிற்கிறான். நண்பன் நடுத்தெருவிலிருப்பது தனக்கு ஆபத்தென அன்பரை ஓர் தொழிலாரம்பித்து உதவ விரும்பி, அன்பர் அதை ஏற்றவுடன் அவரைப் பொய்யாகத் தூற்றி துரோகம் செய்ததாகக் கூறினான்.
  • நடுத்தெருவில் நின்றவன் அன்பரின் 12,000 ரூபாய் முதலால் இரண்டரை ஆண்டில் 22,000 சம்பாதித்து அன்பருக்கு எதையும் கொடுக்காமல் ஏமாற்றி முதலைத் திருப்பித் தந்து விட்டான் கயவன்.
  • டாக்டர் மகனால் துரோகம் செய்யப்பட்ட கயவன் அன்பருக்கு முழுத்துரோகம் செய்து முழு லாபம் 22,000-த்தையும் தானே எடுத்துக் கொண்டு புதுத் தொழிலாரம்பித்தான். 22,000 ரூபாயும் சொற்ப நாளில் மறைந்து விட்டது. கயவன் துரோகம் செய்த டாக்டர் மகனிடம் திரும்பிப் போய் விட்டான்.
  • அன்பர் என்பதால் கயவனும் ஆரம்பத்தில் சுபீட்சம் பெற்றான்.
    முடிவில் முழுமையாக துரோகப் பலனாக அழிந்தான்.
  • அன்னை அருள் திருடனுக்கும், கயவனுக்கும், துரோகிக்கும் சுபீட்சம் பெறத் தவறாது.
  • அது எந்த அன்பருக்கு நடக்கிறதோ அந்த அன்பருக்கு யோகம் பலிக்கும்.
    அது பூரண யோக வாயில்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பூரணயோகம் என்பதை ஆன்மா வளரும் யோகம் என்று பகவான் கூறுவதன் அர்த்தம், பிறவி எடுத்தது ஆன்ம மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஆகும்; அது பலிப்பதே பிறவிப்பயன் அடைதல் என்று நாம் அறிய வேண்டும்.

*********

 



book | by Dr. Radut