Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

வலி அஞ்ஞானத்தின் ஆன்மீக முத்திரை.

Volume III, Page 151

  • பொங்கி வரும் சந்தோஷம் புத்துணர்ச்சியைக் குறிக்கும்.
  • வெண்கலமாக உடலிருந்தால் உள்ளம் துள்ளி எழும்.
  • வாழ்வில் விழையும்முன் தேவை பூர்த்தியானால் உலகமே சந்தோஷமாகத் தெரியும்.
  • அன்பான குடும்பம் வளமாக வாழும் பண்பான ஊரில் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பான்.
  • உடல், உயிர், வாழ்வு, குடும்பம், ஊர் நெறியானால் சந்தோஷத்திற்குக் குறைவிருக்காது.
  • ஆத்மா இவற்றைக் கடந்தது.
  • ஆத்ம விழிப்பு அனைத்தின் விழிப்பாகும்.
  • ஆத்மா சந்தோஷமானால், உலகில் வலியில்லை எனத் தோன்றும்.
  • உடலின் ஆத்மா விழித்தால் வலி தீண்டினால் இன்பமாக இருக்கும்.
  • உயிரின் ஆத்மா விழிப்படைந்தால் எலிசபெத் திட்டுவது டார்சிக்கு இனிப்பது போல் இனிக்கும்.
  • அறிவில் ஆத்ம விழிப்பிருந்தால், எந்தப் பிரச்சினையும் சந்தோஷத்தை உற்பத்தி செய்வதாகத் தோன்றும். அப்படியே புரியும்.
  • உலகில் ஆனந்தம் மட்டுமிருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது.
  • ஆனந்தம் மேல்மனத்தில் சந்தோஷம், பராமுகம், வலியாகப் பிரிகிறது.
  • மனம் பாஸிட்டிவானால் எது சந்தோஷம் தருகிறதோ அதுவே மனம் நெகட்டிவாக இருக்கும் பொழுது வலி தரும்.
  • வலியும் சந்தோஷமும் மனத்தைப் பொறுத்தது, விஷயத்தைப் பொறுத்ததில்லை.
  • அஞ்ஞானம் என்றால் என்ன?
  • நல்லதைக் கெட்டதாக அறியும் மனம் உண்டு.
    எளிய பிரச்சினையை பயங்கரமான பிரச்சினையாக அறியும் பயம் உண்டு.
    இல்லாததை இருப்பதாக அறியும் அனுபவம் உண்டு.
    அனைவரும் சொல்வதால் உண்மை எனக் கொள்ளும் மனப்பான்மையுண்டு.
    பெற்றோர் நல்லவர் என்பது நினைவு.
    நண்பன் நல்லவன் எனக் கொள்ளும் மனப்பான்மையுண்டு.
    நல்லது செய்தால் நல்லது வரும் என்ற சட்டத்தை மனம் ஏற்கும்.
    சுடும்வரை நெருப்பு எனத் தெரியாததுண்டு.
    உதவி செய்வது நல்ல காரியம் என்பது மனப்பான்மை.
    ருசியான பண்டம் உடலுக்கு நல்லது என நினைக்கிறோம்.
    இனிய சொல், நல்ல உள்ளம் எனக் கொள்வது சரியாகாது.
    நடத்தையை நம்புவது நம் பழக்கம்.
    கண்ணுக்கு மறைவாக நடப்பது எப்படித் தெரியும்.
    பிறர் குறை மட்டும் தெரிவதுண்டு.
    இலாபம் இலட்சியம் என அந்தரங்கக் குரல் எழும்.
    குரு உயர்ந்தவர் என உலகம் கூறுவதை மனம் ஏற்கும்.
    இவையனைத்தும் அஞ்ஞானத்தை அனுமதிக்கும் அனுபவம், வலி எழும் வழி.

*********

ஜீவிய மணி

பிறவிப்பயன் அன்னையை அறிவது என்றால் ஆன்மாவுக்கு அது அதிர்ஷ்டம்.

********



book | by Dr. Radut