Skip to Content

02. மூன்று நாள் அழைப்பு

மூன்று நாள் அழைப்பு

3 நாள் அழைப்பை மேற்கொண்டவர் பலர். அதன் பலன் மிகப் பெரியது. அது தீர்க்காத பிரச்சினையில்லை. அழைப்பை பிரச்சினைக்காக மேற்கொள்வதற்குப் பதிலாக அன்னையை நெருங்க மேற்கொள்வது நல்லது. அன்னையை நெருங்குவது யோகம். இதுவரை பல முறை மூன்று நாள் பிரார்த்தனை செய்தவர் இன்று அன்னையை நெருங்க அதை மேற்கொண்டால் அது சிரமமானது, முடியாது, முடியவே முடியாது எனப் புரியும். தீவிர அன்பர்கள், யோகம் செய்ய விரும்புகிறவர்கட்கு உரிய முறை அது.

அழைப்பு அதிகபட்ச ஆழத்திலிருந்து எழ வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக அழைப்பின் ஆழம் அதிகப்பட வேண்டும்.

அதுவே யோகத்திற்குரிய அழைப்பு. ஒருமுறை அதுபோல் அழைப்பதும் பெரிய சாதனை. ஒருமுறை அதுபோல் அழைத்துவிட்டால் அழைப்பின் மீது வெறுப்பு வரும்.

அழைப்பு மறந்து போகும், நெடுநாள் மறந்து விடும்.

மறந்தது நினைவு வருவது ஆர்வம், நம்பிக்கை, பக்தி. 3 நாள் பிரார்த்தனையை 3 நாள் அழைப்பாக மாற்றியவர் ஒரு முறைக்குமேல் செய்வதை நான் அறியேன். எனக்கு உடையவர்கள், எனக்கு வேண்டியவர்கள், எவரும் அழைப்பை மேற்கொள்வதில்லை. ஒரு அன்பர் மட்டும் 3 நாளில்லை, வேலை முடியும் வரைஎனக்காக அழைப்பை மேற்கொண்டார். 30 நாள் அவரை அழைக்கச் சொன்னேன். அது பெரிய காரியம். 14-ஆம் நாள் காரியம் முடிந்தது. அந்த ஒரு அன்பர் தவிர அழைப்பை அது போல் ஏற்றவரை நானறியேன்.

அழைப்பு உடனடியாக அன்னை தரிசனம் தரும். அது சூட்சும தரிசனம்.
ரோடில் நடப்பது போல் மலை ஏற முடியாது.
ஒவ்வொரு அடியும் அதிக சிரமம் தரும், தொடர முடியாது.

அழைப்பு அறிவால் செய்வதில்லை. ஆத்மாவால் செய்ய முடியாது. ஆத்மா ஜீவனின் பகுதி. ஆத்மா அழைத்தால் மோட்சம் கிடைக்கும். ஜீவன் முழுமையானது. அழைப்பு ஜீவனுக்குரியது. ஜீவனும் மோட்சத்தை நாடினால் மோட்சம் கிடைக்கும்.

ஜீவன் அன்னையின் திருவுள்ளம் நிறைவேற அழைப்பது அழைப்பு.
அது ஒவ்வொரு அழைப்பும் முந்தையதைவிட ஆழ்ந்திருப்பது யோகம்.
அன்பன் சாதகனாகும் அழைப்பு அது.
அதை ஜீவனின் முழுமையான அழைப்பு எனலாம்.

*********



book | by Dr. Radut