Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன்-கருத்து

எடுத்த காரியம் சிரமமாக இருப்பதால் அதைக் கைவிட முயன்றால் பிறகு அது தீவிர வேகத்துடன் தன்னை வற்புறுத்தும் (Page 4 - The Life Divine) என்பது இந்த அத்தியாயத்தின் முக்கிய கருத்து

எந்த நல்ல காரியத்தையும் இடையில் கைவிடக் கூடாது என்று இதைக் கூறலாம்.

இதே கருத்தை அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நாத்திகம் எவ்வளவு நாள் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், முடிவில் ஆத்திகம் வேகமாகத் திரும்பி வரும் என்று கூறுகிறார்.

இந்தியாவில் ஜாதியும், ஐரோப்பாவில் (class) வகுப்பும் பல ஆயிரம் ஆண்டு ஆட்சி செலுத்தின. எத்தனை காலம் அவை வெற்றி பெற்றாலும் அதற்கு முடிவுண்டு. 1947க்குப் பின் தாழ்ந்த ஜாதிக்கு சலுகை உரிமையாக வந்தது. இன்று IAS ஆபீசர்களில் கால் பங்கு 1000த்திற்கு மேற்பட்டவர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். 1947க்கு முன் ஓரிருவர் இருந்தனரா எனவும் தெரியாது.

ஐரோப்பாவில் பிரபுக்கள் ஆட்சி செலுத்தினர். மற்ற எவருக்கும் வாழ்வில்லை. விவசாயக் கூலி பரம்பரை பரம்பரையாகக் கூலியாகப் பிறந்து கூலியாக இறந்தான். 1500இல் கொலம்பஸ் அமெரிக்கா என்ற சொர்க்க வாயிலைத் திறந்தார். இக்கூலிகள் ஆயிரக்கணக்காக, இலட்சக்கணக்காக அமெரிக்கா சென்றனர். அங்கு 10 மடங்கு அதிகக் கூலி பெற்றனர். 2 மாட்டுடன், வீடு, நிலத்துடன் மனிதனாக வாழ ஆரம்பித்தனர். நொண்டி, முடமும் 1½ வருஷத்திற்குள் நிலையை உயர்த்திக் கொண்டனர். தலைக்கு 640 ஏக்கர் (1 சதுர மைல்) நிலம் இனாமாகக் கிடைத்தது. மேலும் மேலும் மக்கள் தொகை அதிகரிக்கும்பொழுது 640 ஏக்கரை 160 ஏக்கராகக் குறைத்தனர். ஐரோப்பாவில் நிலத்தையே அறியாத கூலி அமெரிக்காவில் 100 அல்லது 200 ஏக்கர் நிலம் இனாமாகப் பெற்று மிராசுதார், ஜமீன்தாராகிறான். நாள் செல்லச் செல்ல இனாம் நின்றது. ஏக்கர் 1 டாலர் விலைக்குக் கிடைத்தது. 1850இல் அமெரிக்கா உலகில் பெரிய பணக்கார நாடாயிற்று. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உலகையாளும் பெரிய நாடுகள். அவர்கள் உலக உற்பத்தியில் 7%, 6%, 5% உற்பத்தி செய்யும் பொழுது அமெரிக்கா 34% உற்பத்தி செய்தது.

  • பணம் புழுதியாய் பெருகுகிறது என்றார் சரித்திர ஆசிரியர்.
  • இங்கிலாந்தில் (duchess) பெருங்குடி பெண்மணிகளைவிட அதிக வசதியுடன் அமெரிக்க பன்றிகள் வளர்ந்தன. 

1950இல் அமெரிக்கா உலகத்தின் தலைவனாகியது. எத்தனை ஆயிரமாண்டு மக்கள் உரிமையை மறுத்தாலும், ஒரு நாள் அவர்கள் எழுவார்கள். எழுந்தவரைத் தடுக்க இயலாது.

இன்று இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் உயர்நிலைக்கு வந்தபடியிருக்கின்றனர்.

பெரும்பணம் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலோர் அவர்கள்.

அரசியல் தலைமை அவர்களை நாடுகிறது.

அன்று இவர்களைப் புறக்கணித்தவர் இருக்குமிடம் தெரியவில்லை.

அன்று உயர் ஜாதிக்காரர்கள் செய்த அட்டகாசம் பெரியது.

எவரும் கேட்கவில்லை.

இன்று தாழ்ந்தவர் எல்லாச் சட்டத்தையும் மீறி அட்டகாசம் செய்வதைத் தட்டிக் கேட்க எவரும் நினைக்கவில்லை.

******



book | by Dr. Radut