Skip to Content

04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. மழை பெய்து வளராதது, பனி பெய்து வளருமா?
    • வாழ்வின் மழையில் வளராத பயிர் அருளின் பனியில் வளரும்.
  2. தன் முதுகு தனக்குத் தெரியாது.
    • மனம் முழுமையை அறியாது.
  3. போகாத ஊருக்கு வழி கேட்கிறான்.
    • போகாத ஊருக்கெல்லாம் வழி தெரியும் ஞானம்.
  4. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.
    • தட்டிக் கேட்பதால் வளரும் சண்டப் பிரசண்டம்.
  5. ஐந்துக்கு இரண்டு பழுதில்லை.
    • ஐந்தில் ஐந்தும் பழுதற்றவை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு நிலையிலுள்ள குறை, அடுத்த கீழ்நிலையில் வேறொரு நிறைவால் சரி செய்யப்படும்.
 
மேலேயுள்ள குறை கீழேயுள்ள நிறைவால் சரியாகும்.

*****



book | by Dr. Radut