Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/32. எண்ணம் சூட்சும லோகத்தில்தான் சமர்ப்பணமாகும்

  • இந்தச் சமர்ப்பணம் வாழ்வுக்குரியதல்ல, யோகத்திற்குரியது.
  • அன்பர்கள் இதுபோன்ற கருத்துகளை அறிவது நல்லது.
    ஹட யோகி இதயத்தை நிறுத்துகிறார் என்பது நாம் கேள்விப்படலாம். அது நம் போன்றவர் செய்யக்கூடிய காரியமில்லை.
  • சிறப்பாகப் பாடுவதைக் கேட்கலாம், விளையாடுவதைப் பார்க்கலாம். நமக்குரியதல்ல அவை.
  • ஒருவர் முயன்று பெற விரும்பினால் முடியாததில்லை.
  • டார்சியை எலிசபெத் மறுத்தபின், அவன் கடிதம் எழுதினான்.
    அதைப் படித்து விக்காம் தறுதலை என அறிந்து அவனை மறந்தாள்.
    ஆனால் டார்சி அவளுக்கு உடனேயோ, கொஞ்ச நாட்கள் கழித்தோ நினைவு வரவில்லை. பெரிய அந்தஸ்துள்ளவன்.
    திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆச்சரியம்.
    கடுமையாக எதிர்த்து மறுத்து விட்டாள். அதன் பிறகு டார்சிக்கு அவள் வாழ்வில் இடமில்லை.
  • டார்சி நிலையும் அதுவே. இனி தன்னை அவள் மணப்பாள் என அவன் நினைக்கவில்லை. ஆனால் அவள் கூறியதின் உண்மையை ஏற்றான்.
    அது விஷயத்தில் மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்தான், மாறினான்.
    அவள் தன்னை ஏற்பாளா என்ற கேள்வி அவனுக்கு எழவில்லை.
    • அவன் மனம் மாறியது.
    • சந்தர்ப்பம் மாறியது.
    • அவள் மன நிலையும் மாறியது.
    • அவர்கள் சந்தித்தார்கள். அது புது உலகம்.
  • டார்சி திருமணம் கேட்டது உலக வாழ்வில்.
  • அவன் மனம் மாறியது சூட்சும உலகில்.
  • அவன் மனம் மாறியது “சூட்சும உலகில் எண்ணம் சமர்ப்பணமானது போல்.”
  • கோபப்பட வேண்டாம் என்ற எண்ணம் சமர்ப்பணமாக வேண்டும் எனில் முதலில் கோபம் தணிய வேண்டும். கோபம் வேண்டாம் என்ற எண்ணம் தெளிவாக எழ வேண்டும். மனம் அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வது உண்மையாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால், எண்ணம் அமைதியாகி, அடங்கும். அடங்கிய பிறகு சமர்ப்பணம் செய்ய முயன்றால், எண்ணம் சூட்சும உலகை அடைந்து மறையும்.
    நடைமுறையில் கோபம் அடங்காது. சில சமயம் அதிகமாகும்
  • சமர்ப்பணம் அதேநிலையில் தடைபடும்
  • தொடர்ந்து வருஷக்கணக்காக முயல்பவருக்குப் பலன் உண்டு.
  • சூட்சும உலகில் மட்டும் நடப்பதை நாம் நம் உலகில் நடத்திக் கொள்ள முயல்வது நம் இயல்பு.
  • தலைப்பில் உள்ள செய்தி கூறுவது : நெடுநாளில் நடக்க வேண்டியது சமர்ப்பணத்தால் உடனே நடக்கும்.
  • எந்தப் பெரிய காரியமும் நெடுநாளாகத் தயாராகி மேலே வரும்.
  • ஒரு ஊர் முனிசிபல் சேர்மனாக அவர் பொது வாழ்வில் பல நாட்களிருந்து மக்கள் மனதில் அவருக்கு இடம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
  • வெளியூர் பிரமுகர் உள்ளூருக்கு வந்தால், அவர் நேரடியாக சேர்மேனாகலாம்.
  • உள்ளூர் மனிதன், பொது வாழ்விலில்லாதவர் சமர்ப்பணத்தால் இன்று சேர்மேனாகலாம் என்பது இச்செய்தி கூறுவது.
    சேர்மேனாவது இலட்சியமில்லை.
    எண்ணம் சமர்ப்பணமானால் சேர்மேனாக முடியும் என்று அறிவது நோக்கம்.
  • சமர்ப்பணம் என்றால் செய்யும் வேலை முழுவதும் அன்னைக்கு அர்ப்பணமாக வேண்டும்.
  • ஒரு அன்பருக்குச் சமர்ப்பண வாழ்வு முறையானால், அவர் அவ்வூரில் எளிய குடிமகனானால் அவருடைய சமர்ப்பணம் இவ்விஷயத்தில் பலிக்கும் என்பது தத்துவம்.
    அந்த எண்ணம் நம் மனத்தில், ஜட மனத்தில் சமர்ப்பணமாகாது.
    எண்ணம் சூட்சுமம் போனால் அங்கு சமர்ப்பணமாகும்.
    அப்படிச் சமர்ப்பணமான பின் அவர் சேர்மேனாவார்.
  • சமர்ப்பணத்தின் திறனை, எண்ணம் சூட்சுமமானபின் அதன் திறனை அறியும் வழி இது.
  • சூட்சுமத்துள் நுழைவது எளிதல்ல. அது யோகநிலை, சித்தியில்லாவிட்டாலும் யோகத்திற்குரிய நிலை.
  • சமர்ப்பணமே வாழ்க்கையான அன்பர் சமர்ப்பணத்தின் எல்லா நிலைகளையும் அறியும் பொழுது செய்யக்கூடியது மேற்சொல்லியது.
    எண்ணம் சூட்சும லோகத்தில்தான் சமர்ப்பணமாகும்.
  • எண்ணம் மனதில் எழுகிறது. பேச்சு வாய்க்குரியது. எண்ணம், சூட்சுமம். பேச்சு, ஜடம்.
  • மனம் பேசும், அதற்கு முழு சூட்சுமமில்லை, அது ஜடம். ஆனால் சூட்சுமத் தொடர்புள்ளது.
  • பேப்பரில் வரும் செய்தி நடந்ததைக் கூறுவது. அதனால் நடக்கப் போவதைக் கூற முடியாது. நடந்ததை மாற்ற முடியாது. பேச்சு, பேப்பர் நியூஸ் போல. மனம் உச்சரிக்காத எண்ணம் சூட்சுமமானது. நடப்பதை நிர்ணயிக்கும், நடந்ததை மாற்றும்.
  • திருமணமானபின் கணவன் பொறுப்பற்றவன், சொல்லைக் காப்பாற்றாதவன் எனில் இனி செய்ய என்ன இருக்கிறது?
  • திருமணத்திற்கு முன்பே இது தெரியும். ஆனால் அதை அலட்சியம் செய்தோம் எனவும் தெரியும்.
  • தெரிந்து அலட்சியம் செய்த மனநிலை நம்முடையது. அது இன்றும் நம்முள் உள்ளது. நாம் மாற விரும்பினால், அது மாறும். அது விஷயத்தை மாற்றும். அது சூட்சும லோகச் செயல்.
  • நம் முடிவை மேல்மனத்தில் எடுத்தால், அது பலன் தராது.
  • நம் மனம் சூட்சும லோகம் போய், திருமணத்திற்கு முன் நாமெடுத்த முடிவை நினைவு கூர்ந்தால் அது பசுமையாக மனதில் எழும். அதை மாற்ற இன்று மனம் வராது. அந்த பொறுப்பற்ற நிலை, வார்த்தையைக் காப்பாற்றாத நிலையே நம் மாறுதலுக்கு உதவும். அதனால் அது நமக்குத் தேவை. நம் மனம் இன்று மாறினால் மாற ஆசைப்பட்டால், மாறக்கூடாது என ஆழத்தில் கூறாவிட்டால், மனம் ஜடத்தை விட்டுச் சூட்சுமமாகும், மாறும். நாம் மாறாமல் எதிரி மாற நினைப்பது சுபாவம். மாற முன்வருவது திருவுருமாற்றம், மாற்றம் சூட்சுமத்தில் எழும். ஜடமான சொல் நீடிக்காது. ஜடத்தில் சொல் சமர்ப்பணமாகாது. அது பெட்ரோல் இல்லாத கார்.
  • பகவான் யோகம் மேல்மனத்திலிருந்து உள்ளே சூட்சும லோகம் போய் செய்ய வேண்டியது.
  • சமர்ப்பணத்தை நெடுநாள் தீவிரமாகச் செய்பவர்கள் இந்த வித்தியாசத்தை - ஜடமான மேல்மனச்சொல்லுக்கும் சூட்சுமமான உள்மனச் சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை - அறிவார்
  • சொல் மேல்மனத்தில் சமர்ப்பணமாகாது. சூட்சும உள்மனத்தில் சமர்ப்பணமாகும்
  • சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என நாம் கைவிட்ட நேரம் சொல் மேல்மனத்திலிருந்து சூட்சும உள்மனம் போவதைக் காணலாம்.
  • சமர்ப்பணம் நினைவு வராதவர் Mother என்பார்கள்.
  • அதற்குச் சமர்ப்பணத்தின் ஒரு பகுதியான பலனிருக்கும்.
  • Mother நினைவு வராதவருக்கு மனைவி நினைவு வரும்.
  • மனைவி ‘அது வேண்டாம்’ என்பவராக இருந்தால் சொல் பலிக்கும் திறனை இழக்கும்.
  • மனைவி நினைவு வராதவருக்கு “நான்” நினைவு வரும்.
  • “நான்” பேசும்: Mother சமர்ப்பணம் எல்லாம் தேவையில்லை எனக் கூறும்.
  • 650 சம்பாதிப்பவர் 1000 நினைத்தார், 2000 வந்து 1300 ஆகி டாக்டர் அதை ரத்து செய்தார். வந்த வேலை போய் விட்டது. 8 ஆண்டுகளாக அதைக் கேட்கத் தோன்றவில்லை. இன்றும் கேட்டால் வழி பிறக்கும். இனி நடக்காது என்று நம்புபவர் அன்னைக்குச் சக்தியில்லை எனக் கூறுபவர். அல்லது அதைப் பெறும் திறன் எனக்கில்லை என்பவர். திறனிருக்கிறது, நான் இதுவரை அறியவில்லை என்பது விழிப்பு. விழிப்புக்குப் பலன் உண்டு.
  • உலகம் முன்னேறும்பொழுது பல நாடுகள் பின் தங்குகின்றன. பின்தங்கிய நாடு அமெரிக்கா போல் முன்வந்தால் உலகை ஆளும். அவ்வுண்மையை உலகம் கண்டும் ஏற்காது. அதுவே முழு உண்மையில்லை. இந்தியாவும் அதன்பின் பாரசீகம், கிரீஸ், ரோம், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்காவும் வரிசைக்கிரமமாக முன்னெழுந்து வந்தனர்.
    கிரீஸ் அறிவையும், பாரசீகம் பண்பையும், ரோம் சட்டத்தையும், பிரான்ஸ் அறிவின் கூர்மையையும், இங்கிலாந்து சாம்ராஜ்ய பண்பையும், அமெரிக்கா வர்த்தகச் செல்வத்தையும் முன்வைத்தது. எதுவும் ஆன்மிக அடிப்படையில் செயல்படவில்லை. இந்தியாவுக்கு ஆன்மிகம் உண்டு. கிரீஸ் முதல் இங்கிலாந்து வரை ஒரு காலம் செல்வாக்கு பெற்று இழந்தன. ஏனெனில் அவை மேலெழுந்தவாரியான cultures பண்புகள்.
  • ஆன்மிகம் தலையெடுத்து பண்பு, அறிவு, சட்டம், இராஜ்ஜியம், சாம்ராஜ்ஜியம், செல்வம் மூலம் வெளிப்பட்டால் எதுவும் தன் ஆட்சியை இழக்காது. எல்லாம் அவரவர் நிலையில் முன்னுக்கு வருவார்கள். முன்னுக்கு வருதல் எனில் தன் திறமையை ஆழப்படுத்திக் கொள்ளுதல். ஆன்மிகம் அதிக ஆழத்தில் உள்ளது.
  • எல்லா நாடுகளும் ஒரேசமயத்தில் முன்னுக்கு வர உதவுவது சத்திய ஜீவியம்.

*********

ஜீவிய மணி

நாட்டு நிலை நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுகிறது, வளம் வளர்கிறது. ஆர்வமுள்ள இளைஞர்களை ஆதரிக்கிறது. நேர்மையான உழைப்பாளி அரிது. சென்னையில் மாதம் ரூபாய் 96,000 பெறும் உத்தியோகஸ்தர் நடத்திய கருத்தரங்குக்குக் கேரளாவிலிருந்து வந்தவர் தான் கண்டதை தன் அதிகாரியிடம் கூறினார். அவர் பம்பாயில் கருத்தரங்கில் கலந்து கொண்ட பொழுது டைரக்டரிடம் சென்னை செய்தியைக் கூறினார். உடனே அவர் சென்னைக்குப் போன் செய்து அவருக்கு 12 இலட்சம் மாத சம்பளம் தருவதாகக் கூறினார். நாட்டில் திறமை குறைவு, நேர்மையில்லை எனலாம். நேர்மையான திறமை முழு முயற்சியுடன் உழைக்க முன்வந்தால் Sky is the limit வானத்தையும் எட்டலாம் என்பது பரவி வளரும் தொழில் மார்க்கெட். கங்கைக் கரையிலுள்ளவர் தண்ணீர்ப் பஞ்சமென்பது சரியாகாது.

******



book | by Dr. Radut