Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

127. செய்யும் வேலையில் சிறப்பு பொதுவாழ்வை நம்மை நோக்கி நகர்த்துவது

  • இதன் தத்துவம்: அணுவின் சிறப்பு அனந்தத்தின் முழுமையைத் தட்டி எழுப்புவது.
  • அனைத்தும் இணைந்த ஒருமையுடையதானால் (Integration) ஒன்றின் சிறப்பு அனைத்தையும் நகர்த்தும்.
  • ஒரு சொல்லின் உச்சஸ்தாயி அனைத்து சபையும் அதிருமாறு செய்யவல்லது.
  • ஒரு கிராமத்தில் பாங்க் கொடுத்த பணம் முழுவதும் வசூல் செய்யாமல் தானே வசூலானதால் அது இந்தியா முழுவதும் விவசாயக் கடன் பரவும் வித்தாயிற்று.
  • ஒரு வகுப்பில் மாணவன் உயர்ந்த ஆங்கிலம் எழுதியதால், ஆங்கில நர்சரி பள்ளிகள் எங்கும் எழுந்ததன.
  • T. V.-யில் முள் சென்னையைத் தொட்டால் சென்னை ஒலிபரப்பு முழுவதும் கேட்கும்.
  • சர்ச்சிலின் வீரம் துள்ளி எழுந்ததால் பிரிட்டிஷ் மக்கள் முழுத்தியாகம் செய்ய முன்வந்தனர்.
  • பிரம்மம் மனத்தையும் ஆத்மாவையும் கடந்தது. மனிதன் பிரம்மத்தை க்ஷணம் ஸ்பரிசித்தாலும் பிரம்மம் உலகம் முழுவதும் அசைந்து செயல்படுவது சிருஷ்டி - பரிணாமமாகும்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஜாதகம் சற்று பிழையுடன் ஜோஸ்யரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் பிழையைத் திருத்திய பொழுது, ஜோஸ்யர் “இரும்பு பொன்னாயிற்று” என்றார்.
  • முதலில் கொடுத்த நேரம் சற்று பிழையானது. எளிய மனிதன் வாழ்வைக் குறித்தது.
  • பிறந்த நேரம் பிழையின்றி சரியான பொழுது ஜாதகம் “பரம்பொருளே புவியில் பிறந்து அந்நிய மொழியில்” உலகின் எதிர்காலத்தைக் கூறும் நூல் எழுதும் ஜாதகமாக மாறியது.
  • பகவான் உயிர் மூச்சு சுதந்திரம். சுதந்திரத்திற்காக யோகத்தை மேற்கொண்டார். புதுமதம் ஸ்தாபனம் செய்யும் நோக்கம் அவருக்கில்லை. அவர் ஸ்தாபிக்கப்போவது புதுமதமில்லை. புது ஆன்மிகம் - ஒரு மனிதனுடைய விடுதலை உலகத்தின் திருவுருமாற்றமாக பேரின்பத்தை, யோகம் செய்தவர் செய்யாதவர் அனைவருக்கும் தருவது - செய்தார் - மரித்தது ‘நிலை இல்.’
  • பூரண யோகத்தில் வேலையின் சிறப்பைச் செம்மையாகக் கூறலாம்.
    • செய்த வேலை பூரணப்பலன் தரும்.
    • செய்யாத வேலை பெரும்பலன் அனைவருக்கும் தரும்.
    • பூரண யோகம் வேலை, நினைவைக் கடந்த பூரணமுள்ளது.
    • வம்பனும், வழக்கனும் மருமகனாக வந்து உயிரை எடுக்கும் பொழுது பூரண யோகம் உண்மையைக் கண்டு வம்பன் சீரிய சாதகன் எனக் காட்டும். வம்பும் வழக்கும் உள்ளது நம் மனத்தில், அவன் செயலிலில்லை என அறிவுறுத்தும்.
    • க்ஷணத்தில் கதவு திறப்பது மனம் சத்தியத்தை நாடுவது.
    • துள்ளிக் குதிக்கும் தலைவர் சோம்பி மறையும் கோழிக்குஞ்சாவார்.
    • உலகை ஏமாற்றும் பெரும் பொய், உழைப்பாக வெளிப்படும் மெய்யாகும்.
    • அடிமட்டம் அசைந்தாடி அவலப்படுத்துவது உயர்மட்டம் கொண்டாடுவதாகும்.
    • “எழுதியது பரம்பொருள்” என நாடி ஜோஸ்யம் கூறும்.
    • இன்றைய காலம் மனித ஆயுளை நீட்டிக்கிறது. அன்னை நீடிப்பதை நிரந்தரமாக்குகிறார். “லிமிட்”டைத் தேடுபவர் கர்மத்தை வலியுறுத்துகிறார்.
    • கட்டித் தங்கமும் மூடிய கண்கட்குத் தெரியாது. பகவான் தருவது தங்கத்தால் கட்டிய உள்ளத்திருக்கோயில்.

*************

ஜீவிய மணி

திறமையும் நாணயமுமிருந்தால் மனிதனை உலகம் தெய்வமாகக் கருதும். இன்ஜினீயரிங் கல்லூரியில் ஒரு ஆசிரியர் தன் மைத்துனன் படிப்பதால் அவனைப் பார்க்கச் சென்றார். அந்த நாளில் தமிழ்நாட்டில் மூன்று இன்ஜினீயரிங் கல்லூரிகளே இருந்தன. இவர் பள்ளி ஆசிரியர். சென்னையில் மைத்துனனைக் காணச் சென்றார். அங்கு இவரிடம் படித்த மாணவர் பலரிருந்தனர். செய்தி பரவி அனைவரும் வந்து அவரைக் கண்டனர். அவர்களுள் ஒரு மாணவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்தவன். பிறகு லயோலா காலேஜில் படித்தவன். அவன், “சார், உங்களிடம் படித்த பிறகு நான் பல பெரிய கணித ஆசிரியர்கள் வகுப்பிலிருந்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் கல்லூரியில் பேர் போனவர்கள். ஆனால் பள்ளியில் நீங்கள் போர்டில் கணக்குப் போட்டது, எங்களுக்குப் பாடம் நடத்தியது ஒரு பெரிய மறக்க முடியாத அனுபவம். அதுபோல் இதுவரை இந்த 5 வருஷமாக எனக்கு ஓர் அனுபவம் கிடைக்கவில்லை” என்றான். கல்வி சரஸ்வதி, வெள்ளைத் தாமரை பூவிலிருப்பவள். அவளைத் துதிப்பது அகில உலக பிரம்மத்தை மனதில் ஏற்று மகிழ்வது. பிரம்மம் தெளிந்தால் உலகம் தெரியும் என்பது உபநிஷதம்.

எந்த ஒரு கலையையும் அல்லது இடத்தையும் அல்லது மனிதரையும் பண்போடு பக்தியுடன் பாராட்டினால், உலகத்தின் பாராட்டுக்கு உரியவராவோம்.

*********



book | by Dr. Radut