Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 187: Left quivering the subtle body’s frame.

சூட்சும உடலின் சடலம் ஆடி அதிர்ந்து

  • அவர் கோபம் தாவிக்குதித்து மிருகமாகத் தாக்கியது
  • ஆட்டங்கண்ட அரங்கில் குதிரைமேல் வந்து தாக்கி
  • ஒருவர் வருத்தம் அடுத்தவர் நெஞ்சை ஆக்ரமிக்கும்
  • மற்றவர் சந்தோஷம் நம் ரத்தத்தில் கொப்பளித்து
  • நெஞ்சத்திற்கு நேரமில்லை, தூரமில்லை, எக்குரலும் கேட்கும்
  • தூரத்து கடலலைகள் காதிலும் நெஞ்சிலும் ஒலிக்கும்
  • இதயம் இணைந்து துடிக்கும் இசை எழுகிறது
  • காத தூரத்து ஜீவன் ஸ்பரிசமறிந்து
  • ஜீவியம் ஜீவியத்துடன் கலந்து உறவாடி
  • உறவும் உரையும் ஜீவனில் ஒருமையைக் காண இயலவில்லை
  • ஆத்மா ஆத்மாவிலிருந்து பிரிந்தே நின்றது
  • அகம் ஆன்மிக மௌனச் சுவரால் சூழப்பட்டது
  • ஆயுதமான வலிமை பாதுகாத்துக் காப்பாற்றியது
  • ஜீவன் தனித்து ஓதுங்கி மறைந்திருந்தது
  • பிரம்மத்துள் புகுந்து தனித்து வாழ இயலும்
  • இணைவதின் அமைதி இன்னும் ஐக்கியம் தரவில்லை
  • அரைகுறை ஞானம், அரைகுறைச் செயல், அனைத்திலும் குறை
  • ஜடம் இருளான அற்புதத்தைக் கடந்து விட்டோம்
  • பரமாத்மா அற்புதம் இனியும்
  • தெரியவில்லை, தெரிய முடியவில்லை, உணர முடியவில்லை, தன்னுள் மறைந்துள்ளது
  • அதனின்று எழுந்த அனைத்தையும் குனிந்து பார்த்தது
  • ரூபமற்ற அனந்தனின் ரூபங்களாய் அவை வந்தன
  • பெயரற்ற அனந்தத்தில் வாழும் பெயருடைய பொருட்கள்
  • ஆரம்பமும், முடிவும் அங்குப் பார்வையறியாத சூட்சுமம்
  • விளக்கத்தராத வேகமாக செயல் இடைப்பட்டது
  • சொல்லற்ற சத்தியத்தை விளிக்கும் சொற்பெரும் கூட்டம்
  • முடிவற்ற தொகையை நாடும் முடிவில்லாத எண்கள்
  • எவரும் உலகையறியார், தன்னையுமறியார்
  • சத்தியம் அங்குக் கோயிலில் கொலு வீற்றிருந்தது
  • மனம் எதை எடுத்து எப்படிச் செப்பனிடும் என அறிந்து
  • இரகஸ்ய சத்திய ஜீவியத்தின் பெரும் சேமிப்பிலிருந்து
  • அடியில் ஆழ்ந்த இருளும், மேலே சூன்யமான பிரகாசமும்
  • மலையேறும் கட்டத்தின் நிலையற்ற வாழ்வு
  • புதிர் மூலம் அவர் விளக்கிய பெரும் புதிரின் மூலம்
  • விடுதலையான புதிருக்கு விபரமற்ற பதில்

*********

ஜீவிய மணி

மணிக்கொருமுறை சமர்ப்பணம் நிலையாக ஜீவியத்தை உயர்த்தவல்லது.

*********



book | by Dr. Radut