Skip to Content

09. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

கர்மயோகி

மனித சுபாவம், வாழ்வின் அம்சங்கள் யோகத்தைச் சந்திக்கும் பொழுது எழும் சிறப்பான நிகழ்ச்சிகள் - உலகம் புதியதாய்க் கருதும் நிலைகள்

  • தண்ணீரும் துணியும் சந்தித்தால் நமக்கு ஆச்சரியமாக எதுவும் நிகழ்வதில்லை.
  • மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் சிவந்த நிறம் எழுவது ஆச்சரியம்.
  • வாழ்வில் இதை ரசாயன மாறுதல் என்போம்.
  • மனித சுபாவம் எல்லையற்று எண்ணற்ற திசைகளில் உள் மனதில் விரிகின்றது.
    வாழ்வின் அம்சங்களான காலம், இடம், சக்தி, குணம் ஆகியவை அதே போல் அனந்தமாக, அளவின்றி கண்ணுக்குத் தெரியாத லோகங்களில் விரிந்து பரவுகிறது.
  • யோகத்தின் அம்சங்களான சமர்ப்பணம், திருவுருமாற்றம், தலைகீழ் மாற்றம், பரிணாமம், இணையும் லோகங்கள் (reconciliation), சிருஷ்டி, ஒரு லோகம் அடுத்த லோகமாக மாறுவது, - ஜீவன் பிரபஞ்சமாவது - இரண்டாகப் பிரிந்து எதிராவது போன்ற நிகழ்ச்சிகள் மனித சுபாவத்தின் அம்சங்கள். வாழ்வின் அம்சங்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டால் கற்பனைக் கெட்டாத அற்புதங்கள் எழும். அவற்றை நான் Life Response என்று விவரிக்கிறேன்.
    (உ-ம்)
    • எலிசபெத்திற்கு டார்சிமீது வெறுப்பு. டார்சிக்கு அவள்- மீது காதல்.
    • அவளுக்குப் பெம்பர்லிமீது ஆசை. இவை மனித சுபாவம்.
    • அவள் பெம்பர்லிக்கு வந்த பொழுது அவள் வெறுப்பை மீறி பெம்பர்லிமீது ஆசை எழுகிறது.
    • மணப் பேச்சை அவள் நிராகரித்தபின், அவள் விரும்பும்படி அவன் தன் சுபாவத்தை மாற்ற முயல்கிறான். இது யோக அம்சமான திருவுருமாற்றம்.
    • அவள் பெம்பர்லிக்கு வந்ததால் காலம், இடம், குணம், திருவுருமாற்றம் சந்திக்கின்றன.
    • இதன் விளைவாக அவனுக்கும், அவளுக்கும் மனமாற்றம் என்ற ஆச்சரியம் நிகழ்ந்து இருவரும் வெறுப்பை மறந்து, பிரியத்தை வெளியிடுவதால் £50 வருமானமுள்ள எலிசபெத் £10,000 வருமானமுள்ள பெம்பர்லிக்குத் தலைவியாகும் வாய்ப்பு எழுகிறது.

இந்த மாற்றம் வாழ்வில் இயல்பானதில்லை. இவை சந்திக்கும் லோகம் ஆத்மா உறையும் அடிமனம்.

சக்தி வாய்ந்த அம்சங்கள் பல சந்தித்து அற்புதமான ஆச்சரியமான பலன் எழுகிறது.

லிடியா ஓடிப் போனதையும் இது போல் விவரிக்கலாம். சட்டப்படி எல்லா நிகழ்ச்சிகளையும் இப்படி விளக்கலாம். எல்லா நிகழ்ச்சிகளும் இப்படியே ஏற்படுகின்றன.

நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை இப்படி அறிவது யோகக் கண்ணோட்டம் எனப்படும்.

  • யோகத்திற்கு முதல் சட்டம் சமர்ப்பணம்.
    அதற்கு உடனடியான பலன் காரியம் பல மடங்கு பெருகி கூடி வருவது.
    அதுவே நோக்கமானால் வாழ்வு பெருகும், யோகம் அதே கட்டத்தில் நின்று விடும்.
  • நமக்குப் பல்வேறு குணங்கள் உள்ளன. பொறுமை, அவசரம் போன்றவை அவை.
  • நமக்குச் சந்தர்ப்பங்கள் பல. உ-ம் ஆபீஸ், கடை, வீடு போன்றவை.
    நமக்குத் தொடர்புள்ள மனிதர்கள் பல்வேறு மனிதர்கள்.
    செயல் நடக்கும் நேரம் வேறுபடும். இளம் வயது, முதிய வயது, காலை, மாலை, மதியம் போன்றவை.
      எந்த நேரம் எந்த இடத்தில் எவரிடம் எந்தக் குணம், எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன பலன் கொடுத்தது என நாம் அறியலாம்.
    1. அவை பெரிய நல்லதாக இருக்கும் அல்லது
    2. பெரிய கெட்டதாக இருக்கும்
    3. ஏற்பட்ட நல்லது, கெட்டது நமக்காகவோ, பிறருக்காகவோ இருக்கும்.
    4. பலன் உடனே இருக்கலாம் சற்று பொறுத்தோ வெகு நாட்கள் கழித்தோ இருக்கலாம்.

நோக்கம் வாழ்க்கைப் பலனில்லாமல் யோகமானால்,

  • நாம் யோக சட்டங்களை, யோக நிலைகளை, யோக ஞானத்தைப் பெற உதவும் முறை Life Response.
  • முழுவதும் இவ்வம்சங்களை நாம் அறிந்தால் எந்தப்பலனை எந்த வகையாக ஏற்படுத்துவது என அறிய முடியும். (Make Life Respond)
  • சட்டங்கள், அம்சங்கள், நிலைகள், பலன்கள், தொடர்புகள் பூரணமாகப் புரிந்த நிலையில் 10 ஆண்டிற்குப்பின் நிகழ இருப்பதை இப்பொழுது நடக்க வைக்க முடியும்.
  • நமக்கு நோக்கம் பலனில்லாமல், வாழ்வில்லாமல், யோகம், சரணாகதியாக இருப்பது நல்லது.

 

(தொடரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம்மால் நாற்காலியில் உட்கார்ந்து தியானம் செய்ய முடிவதில்லை.

முடிந்தால், தியானம் ஆழ்ந்த நேரம் நம்மை அறியாமல் தரையில் வந்து உட்காருகிறோம். “ஓம் நமோ பகவதே” என்றால் மனமும், ஜீவனும், ஆத்மாவும் நிறைவு பெறுகின்றன. மந்திரம் சொல்லிய பரம்பரை பழக்கம். மந்திரம் மாறுகிறது. பழக்கம் போகவில்லை. பகவான் மந்திரங்கள் எழுதியுள்ளார். அன்னை ஆயிரம் மந்திரங்களைப் பயன்படுத்தினார். தான் எழுதிய எல்லா மந்திரங்களையும்விட Mother, ஸ்ரீ அரவிந்தர் என்ற அவர் திருநாமம் அதிக சக்தியுள்ள மந்திரங்கள் எனவும் கூறினார். நமக்கு தியானம் லயமான நேரம் மந்திரங்கள் மறப்பது தெரியும். லயம் நிலைத்த நேரம் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் லயம் கலைந்து தியானமாகும் என்பது நம் அனுபவம்.

***********



book | by Dr. Radut