Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும்.

தற்சமயம் உடல் தாக்குதலினின்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்.

  • ஒரு குடும்ப வருமானம் அதனால் சம்பாதிக்கப்பட வேண்டும்.
  • வழக்கு, கோர்ட், வருமானம் தராது. ஆபத்தை, அநியாயத்தை விலக்கும். நேரம் சரியில்லாவிட்டால் கோர்ட் அநியாயம் வழங்கும்.
  • வருமானம் நாமே சம்பாதிப்பது போல் உடல் நலம் உடலே பேணுவது.
  • எந்த வைத்தியரும், வைத்தியமும் உடலுக்கு நலன் தருவதில்லை. உடல் நோய் வாய்ப்பட்டிருப்பதால் மருந்து நோயைக் குணப்படுத்தும்பொழுது உடல் தான் இழந்த நலனைப் பெறும்.
  • நடைமுறையில் உடல் நலக்குறைவு இருமலானால், வைத்தியம் நம்மை இருமலைக் கவனிக்கச் செய்யும். இருமல் வலுப்பட்டு அதிகமாகும். நோய் வந்தபிறகு அதை அது வளராமல் குணப்படுத்துவது கடினம்.
  • மேதை ரஸ்ஸல் “கல்வி” என்றெழுதிய நூல் பிரசித்தமானது. சிறு குழந்தை காலையில் மலம் கழிப்பதை நாம் கவனிப்பதால் அது நாம் எதிர்பார்ப்பதற்கு எதிராக செயல்படுகிறது. மலச்சிக்கல் வரும் என்கிறார்.
  • உடல் அற்புதமான கருவி. அதை முறையாகக் கவனிக்கப் பொறுமை வேண்டும். அறிவு வேண்டும். அதற்குரிய உபாயம் தேவை. இருமினால், மனம் இருமலின் உண்மையை அறிந்து - கவனித்தால் வளரும் என அறிந்து - அதை ‘மறப்பதற்காக’ வேறு வேலையில் ஈடுபட்டால், மறப்பது அவசியம் என அறிந்தால் ஓரிரு நாள் கழித்து இருந்த இடம் தெரியாமல் போகும்.
  • தேள், பூரான், பாம்பு வந்தால் அடித்தால் அதிகமாக வரும் என்பதும் இக்கருத்தே.
  • வேலை நிறுத்தம் எக்காரணமுமில்லாமல் 1960-இல் பரவியது. சிலர் பீதியடைந்து எதிர்த்தனர். அது வளர்ந்தது. ஒருவர் அன்று விடுமுறை தந்தார். அது வளரவில்லை.
  • ஒருமுறை நோயை இது போல் குணப்படுத்துவது அரிது. இக்கருத்தை அறிந்து மனம் இந்த “நோக்கத்”தை ஏற்றால் அடுத்த ஆண்டுகளில் நோய் எழாததைக் காணலாம்.
  • பிள்ளைகள் செல்லத்தால் கெட்டுப் போவதை பொறுமையுள்ள பெற்றோர் இது போல் தடுப்பார்கள். அதிக செல்லம் கொடுத்தாலோ, பதட்டப்பட்டாலோ குழந்தைகள் அதிகமாகக் கெட்டுப் போகும்.
  • தினமும் வரும் பழக்காரியை ‘எதிர்பார்த்தால்’ நேரம் கழித்து வருவாள்.
  • வேலையைச் செய்பவனுக்கு பிரமோஷன் எளிதிலும், பிரமோஷனை எதிர்பார்ப்பவனுக்குத் தாழ்ந்தும் வரும்.
  • பகவானும் அன்னையும் தரிசனம் தரும் ஆண்டுகளில் ஒரு சாதகர் தரிசனத்திற்குப் போக அடுத்தவரை உடன் அழைக்கப் போனார். அவர் வீட்டினுள் நுழைந்ததை அறியாத அந்த சாதகர் கதவைப் பூட்டிக் கொண்டு தரிசனத்திற்குப் போய் விட்டார். உள்ளே இருந்தவருக்கு எதுவும் புரியவில்லை. அவர் வந்து திறக்கவுமில்லை. நேரமானால் தரிசனம் தவறும். தோட்டத்து மதில் மேல் ஏறி ஆசிரமம் வந்து தரிசன அறைக்குப் போனார். தரிசனம் முடிந்து அன்னை போய் விட்டார். பகவான் எழுந்திருக்க முயல்கிறார். இவரைப் பார்த்து விவரமறிந்து “அன்னையைக் கூப்பிடு” என்றார். இருவரும் இணைந்து தரிசனம் தந்தார்கள். தரிசனம் ஒருவருக்குத் தனிப்பட்டது. இருவர் சேர நினைத்தால் நிலைமை மாறுகிறது. தரிசனம் தரும் இருவரில் ஒருவரில்லை. கருணை பெருங்கருணையாகி இழந்ததை ரத்து செய்து மீண்டும் முழு தரிசனம் வழங்கினர்.

********



book | by Dr. Radut