Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

‘ஓ’ எனக் கதறாமலிருக்க Mother பெரும் பாடுபட்டார்

Volume 13, page 414

  • யோகம் சாதகருக்கு ஒளிமயமான பாதை Sunlit Path என்றார் Mother.
  • “இந்த யோகத்தைச் செய்யும்படி நான் யாரையும் அழைக்க மாட்டேன்” என்றார்.
  • இந்த யோகம் உலகத்திற்குப் புதியது.
  • இதற்குரிய பாதை பொன்மூடியைக் கடந்தது.
  • Overmind தெய்வீக மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே மௌனமும் சூன்யமும் உள்ளது என்றார் பகவான்.
  • அங்குத் தான் புதிய பாதை ஏற்படுத்த முயல்வதாகக் கூறினார்.
  • அப்பாதையில் நுழைய மூன்று திருவுருமாற்றங்களைப் பிரபஞ்ச ஜீவன் பெற்றிருக்க வேண்டும்.
  • மூன்றாம் திருவுருமாற்றம் சத்திய ஜீவியத்தால் மட்டும் முடியும்.
  • இரண்டாம் திருவுருமாற்றம் ஆன்மாவுக்குரியது.
  • முதல் திருவுருமாற்றம் சைத்திய புருஷனுக்குரியது.
  • இவை அனைத்தும் பிரபஞ்ச ஜீவனுக்குரியது.
  • பிரபஞ்சம் முழுவதும் “உடல்” பரவ அந்த ஜீவன் பூவுலகில் உடலில் பரிணாம வளர்ச்சி பெற வேண்டும்.
  • வேத அமரத்துவம் பெற்றபின் பெறக்கூடிய சித்தியது.
  • ஆத்மா (Soul) பிரம்மத்தை (Self) பிறப்பிற்கு முன்னும் சிருஷ்டிக்கு முன்னும் அறிவது வேதம் கூறும் அமரத்துவம்.
  • இது சூட்சும உடலில் பெறுவது.
  • இதைப் பெறும் தகுதி சூட்சும உலகில் ஆத்மா (Soul) தங்கி பூவுலகில் பெற்ற அனுபவங்களைத் தன் சூட்சுமப் பொருளில் கிரகித்துக் கொள்ள வேண்டும்.
  • இதை உடல் உயிரை விட்டுப் பிரிந்த பின்னரே சாதிக்க முடியும்.
  • இதற்குமுன் எழுவகை அஞ்ஞானம் எழுவகை ஞானமாக மாற வேண்டும்.
  • பாதாளமும், பரமாத்மாவும் மனிதனில் இணைந்து புது ரூபம் பெற்று, பரிணாமத்தால் உயர்ந்து சுப்ரீம் — புருஷோத்தமனுடன் — ஐக்கியம் பெற வேண்டும்.
  • தெய்வீக ஆன்மா வாழ்வை ஊடுருவி பாதாளத்தை ஏற்பது முதற்படி.
  • ஜீவாத்மாவே முடிவு, பரமாத்மாவே முடிவு என்பதை மாற்றி அவையிரண்டையும் உட்கொள்ளும் பிரம்மமே முடிவு என்பது இப்பாதையின் ஆரம்பம்.
  • அன்னை 1914-இல் வந்தபொழுது கீதையின் யோகத்தை முடித்தவர்.
  • பகவான் அவருக்கு மௌனம் கொடுத்தார்.
  • 1926-இல் பகவான் தனிமையை முழுமையாக நாடியபொழுது பகவான் சாதகர்கள் யோகத்தை மேற்கொண்டார். Mother ஆசிரம வேலைகளை ஏற்றார்.
  • அந்த வேலைகளைச் செய்ய, ஆசிரமத்தில் 150 சாதகர்கள் வரும்வரை அவர்கள் எண்ணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
  • 1950-இல் வேலையையும் யோகத்தையும் பகவான் ஆதரவின்றிச் செய்தும் பகவானைக் கடந்து யோகம் செய்த பொழுது அவரே புதுப்பாதையை ஏற்படுத்த வேண்டிய நிலையில் அவர் உடல் ஓலம் எடுத்தது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

யோகம் தானே தன்னை மனிதனில் பூர்த்தி செய்ய

மனிதன் இலட்சியங்களைக் கைவிட வேண்டும்.

**********



book | by Dr. Radut