Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

 

P.81 His being towered into pathless heights.

அவனது ஜீவன் கோபுரமாக வளர்ந்தது.

  • மனித காய வஸ்த்ரமிழந்த நிர்வாணம்.
  • துணியுடுத்தாத தூய்மையில் அவனைச் சந்திக்க விழைந்து,
  • பலமான பவித்ரம் பாய்ந்து இறங்கியது. எரியும் நெருப்பு, எடுப்பான வலிமை.
  • மரணமிலாப் பார்வையில் அரைகுறையாக எழும் அழகின் அற்புதம்.
  • கடுமையான இனிமை, வலியெழும் பூரிப்பு.
  • பெருவலிமையின் பேராதரவு சூழ்ந்தது.
  • மனமும், உணர்வும், இதயமும் ஊடுருவப்பட்டன.
  • உச்சஸ்தாயின் புல்லரிப்பு தாங்க முடியாத மயக்கம்.
  • புலப்படாத பிடியில் சுபாவம் சுருண்டு துவண்டது.
  • மரணத்தைவிடச் சிறிய, காலத்தைவிட நீண்ட தருணம்.
  • அன்பைவிடக் கடுமையான சக்தி, மோட்சத்தைவிட ஆனந்தம் தருவது.
  • அனந்தனின் ஆதரவு, அரசனின் அரவணைப்பு.
  • பூரண ஆனந்தம் வலை வீசிப் பிடித்து, கசக்கிப் பிழிந்தது.
  • ஆனந்த சக்தியின் சூறாவளிச் சூழல்.
  • கற்பனையைக் கடந்த ஆழத்தை அவசரமாக எட்டியது.
  • கணக்கிலடங்கா உயரத்திற்குத் தூக்கிப் பிடித்தது.
  • மரணப் பிடியினின்று அதைக் கிழித்தெடுத்தது.
  • கரை கடந்த மாறுதல் கணக்கிலடங்காப் புதுமை.
  • பார்வையும், எண்ணமுமற்ற சர்வ ஞானம் சித்தி பெற்றது.
  • உலகை உட்கொள்ளும் புதிரான ரூபம்.
  • ஒரு மனித இதயம் அதன் பாசமான பாசறை.
  • தனிமையில் வாடுபவனை இழுத்துப்போட்டது.
  • இறைவனின் அரவணைப்பில் இழுத்துப்போட்டது.
  • காலத்தைக் கடந்த பார்வை நேரத்தைக் கரைக்கிறது.
  • செயலையும், கருவியையும் சேர்த்து அழிக்கிறது.
  • அகன்று, தூய்மையாய், வெற்றிடமாக ஆத்மா மிளிர்ந்தது.
  • விழிப்புற்ற மனம் வெற்றுப் பலகை.
  • வெற்றுப் பலகையில் பிரபஞ்சமும், பிரம்மமும் எழுதலாம்.
  • அஞ்ஞானத்திலமிழ்ந்த நம் ஜீவியம் அழித்தெடுத்த பாங்கு.
  • பாரம் நீங்க மறந்த சுமை.
  • கடந்த சிறுமைகளை உணவாக உட்கொண்டது.
  • தெய்வ உடலென்ற கனல்.
  • புதிய பிறவியின் பெருவாழ்வுக்குரிய பேரவை.
  • உணர்ச்சியின் உரிமையை உடைத்த காலத்தைக் கடந்தது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குயர இலட்சியம் உதவும். உயர்ந்தபின் அந்நிலையில் நிரந்தரமாக நிற்க (pragmatism) யதார்த்தவாதம் உதவும்.
 
இருப்பதை விட்டு இல்லாத உயர்வை நாடுவது இலட்சியவாதம்.
இருப்பதன் உயர்வையும், அவசியத்தையும் பாராட்டுவது யதார்த்தவாதம்.



book | by Dr. Radut