Skip to Content

12. அறிவாக மாறும் அனுபவம்

அறிவாக மாறும் அனுபவம்

கர்மயோகி

  • உடல் செய்வது செயல்.
    உடலின் செயலை உணர்வது அனுபவம்.
    உணர்வது உயிர், பிராணன் எனக் கூறுவர்.
    அனுபவம் இனிமையானால் அடுத்த முறை தேடும்.
    அனுபவத்தைத் தேடுவது ஆனந்தத்தைத் தேடுவதாகும்.
    ஆனந்தத்தைத் தேடும் அனுபவம் அறிவு.
    செயல் அனுபவ மூலம் அறிவாக மாறியபின் மீண்டும் மீண்டும் அதை நாடி அனுபவித்துத் திளைப்பது வாழ்வு.
    பெற்ற அனுபவத்தைவிடப் பெரிய அனுபவம் வரும்வரை அறிவு அவ்வானந்தத்தைத் தேடியபடியிருக்கும்.
    அறிவு ஆனந்தத்தைத் தேடும் பாங்கு ஆர்வம்.
    அறிவும், ஆனந்தமும் திறமையைத் தரும்.
    திறமை வாழ்வின் திண்மை.
  • ஒருவர் தாம் பெற்ற அறிவைப் பாராட்டுவது அவருடைய விவேகம்.
  • இளமை இனிமையானது.
    இளமையின் இனிமை இதமாக இதயத்தில் சேரும்.
    சுயநலம் சுவைக்கும்.
    சுயநலம் தன்னைச் சுயநலமாக அறியாது.
    சுயநலம் சுயநலத்தைமட்டும் அறியும்.
    பிறரை அறிய முடியாத சுயநலம், சுயமான நலம்.
    சுபாவமான சுயநலம் தன் சொரூபத்தை அறியாது.
    உலகை மறந்து தன்னில் திளைப்பது சுயநலம்.
    வளரும் சுயநலம் வாழும் சுபாவம்.
    சுயநலம் சுடும்.
    முடிவாகத் தன்னையே சுடும்.
    சுடும்வரை சுயநலம் தன்னையறியாது.
    சுட்ட பின்னும் சுயநலம் சுவைக்கும்.
    சுயநலம் பரநலமாகாது.
    சுயநலமும், சுயநலத்திற்காகப் பரநலம் பேணுவது மாற்றம், அதிசயமான முன்னேற்றம்.
    ஆசை சுயநலத்தின் கருவி.
    அதிகாரம் சுயநலத்தின் சொந்தமான சுய உரிமை.
    ஆசை பூர்த்தியாக சுயநலம் அதிகாரம் செய்யும்.
    அதிகாரம் செல்லாவிட்டால், எதிராக மாறும்.
    காரணமின்றி வெறுப்பை உணர்வது சுயநலம்.
    சுயநலம் அறியாத உணர்வு வெட்கம்.
    ஆசை வெட்கமறியாது; சுயநலம் அடியோடு அறியாது.
    சுயநலம் பூரணம் பெற்றால் பூரித்துப் புளகாங்கிதமடையும்.
    அது சுயநலத்தின் புளகாங்கிதம்.
    புளகாங்கிதம் புல்லரிக்கும்.
    உலகம் தன்னை உயர்வாக நினைக்க விழைவது சுயநலம்.
    அதை உலகில் பரநலமாக சுயநலம் அறியும்.
    தனக்குச் செய்யும் சேவையே சுயநலத்திற்குச் சேவை எனப்படும்.
    எனவே சேவை அதன் இலட்சியமாகும்.
    உலகம் சுயநலத்தைக் கடந்து பல காலமாகிவிட்டது.
    எனினும் சுயநலமற்ற மனிதர் அரிது.
    சுயநலம் விரும்பும் தன்மை கயமை.
    சுயநலம் பரநலமாக உலகம் மாறவேண்டும்.
    உலகம் மாறாமல் மனிதன் மாறமாட்டான்.
    உலகம் மாறாமல் மாறும் மனிதன் இலட்சியவாதி. காலம் மாறினால் காலன் ஆள்வான்.
    இலட்சியவாதி பெறுவது அலட்சியம். காலன் மரணத்தின் தலைவன்.
    உலகை விட்டு ஒதுங்காமல் இலட்சியம் உயிர் பெறாது. காலன் ஆண்டால் மரணமடைவது அநியாயம்.
    ஒதுங்குபவன் ஒதுக்கப்படுவான். அழியும் அநியாயம் நியாயத்தையும் அழிப்பதுண்டு.
    ஒதுங்குபவன் எண்ணம் ஓங்க உலகை ஆதரவால் எதிர்க்க வேண்டும். அழிவது அநியாயம்.
    ஆதரவால் எதிர்க்க ஆதரவை இழந்தவனால்தான் முடியும். அழியாதது நியாயம்.
    ஆரம்பத்திலிருந்தே ஆதரவை இழந்தவனை உலகம் ஆதரிக்கும். நேற்று நிலையானது இன்றழியும்.
    ஆதரவற்றவர் உலகில் அதிகம் பேர். இன்று நிலையானது நாளையழியும்.
    அன்பை இழந்தவர் ஆதரவற்றவர். ஆண்டு அழிவது நியாயம் ஆட்சி பெறுவது.
    விலக்கப்படுவது தாழ்த்தப்படுவது. சத்தியம் அழியாது.
    விலக்கப்படுவது இழிவு. பொய் நிலைக்காது.
    மனதால் விலக்கப்பட்டவர் ஆதரவை அதிகமாக இழந்தவர். ஆட்சி செய்த பொய், அழிவது நியாயம்.
    அன்புக்குரியவர் விலக்குவது கொடுமை. பயம் தருவது பொய், அழிய வேண்டியது.
    கொடுமைக்குச் சிறுமையுண்டு. சுகம் தருவது மெய், வளர வேண்டியது.
    ஆதரவையிழந்து கொடுமையால் சிறுமையடைந்தவர் உலகை ஆள முடியும். கோபம் இயலாமை.
    பிரபலம் பிறர் பலம். இயலாமை காயும்.
    பலமிழந்தவர்க்குப் பிறர் பலம் பிரபலமாக வரும். வலிமைக்கு இனிமையுண்டு.
    பலமற்றவர் பலமானவரை ஆள்வது மக்களாட்சி. வலிமைக்குக் காய்ச்சல்லை.
    மக்கள் பலம் மன்னன் பெற்ற மன்னராட்சி. வேகமும், தீவிரமும் காய்ச்சலுக்குண்டு.
    மன்னராட்சி மக்களாட்சியானபின் பலமிழந்தவர் பலம் பெற்றார். வலிமையான இனிமைக்கு நிதானமுண்டு.
    அன்பையும், ஆதரவையும் இழந்தவர் பெற்ற ஆட்சி மக்களாட்சி. நிதானம் நியாயமானது.
    மக்களாட்சியின் தர்மம் ஆண்டவனின் தர்மம். மனம் நாடுவது நியாயம்.
    அநியாயம் ஆண்டவனின் நியாயம். இலட்சியம் நியாயமானது.
    அநியாயம் நியாயமாவது மன்னராட்சி மக்களாட்சியாவது. உலகம் நாடுவது வசதி; நியாயமில்லை.
    மன்னர் நியாயம் மக்களுக்கு அநியாயம். நியாயத்தை நாடுபவன் உலகத்தை ஏற்க முடியாது.
    ஆண்டவன் அநியாயத்தை நியாயமாக்குவது மக்களாட்சி. நியாயத்தை உலகம் ஏற்றால் மனம் இலட்சியம் பெறும்.
    உலகமும், நியாயமும் ஒத்துப்போனதில்லை.
    உலகம் நியாயத்தை ஏற்க இலட்சியவாதி அநியாயத்தை நியாயமாக ஏற்க வேண்டும்.
    அநியாயத்தின் நியாயம் புரியாதவரை இலட்சியத்தை உலகம் அலட்சியம் செய்யும்.
    அநியாயத்தின் நியாயத்தை ஆண்டவனே ஏற்பதால் அதை ஏற்பது ஆண்டவனை ஏற்பதாகும்.
    அதை ஏற்கப் பொறுமை பூணவேண்டும்.
    பொறுமை ஆண்டவனின் பெருமை.
    பொறுமை பெறவே புவியில் பிறந்தோம்.
    உடல் பெறாத பொறுமையை மனம் பெற்றுத் தரும்.
    மனமும் பெற முடியாததை ஆத்மா பெற்றுத் தரும்.
    ஆத்மா அநியாயத்தில் நியாயமாக மலரும்.
    பொறுமை பொக்கிஷம்.
    ஆண்டவன் மனிதனில் மலர்வது பரிணாமம்.
    ஆண்டவன் மனிதனானது சிருஷ்டி.
    சிருஷ்டி பரிணாமமாவது ஆத்மா வாழ்வில் மலர்வது.
    சுயநலம் பரநலமாவது மனிதன் ஆண்டவனாவது.
    சுயநலம் உணர்ந்து பரநலமாக மலர விழைவது சிருஷ்டி பரிணாமமாக மாறுவது.
    சுயநலம் ஆண்டவனின் நியாயம்.
    அது அநியாயம். அதைப் பிறரிடம் ஏற்பது ஆண்டவனின் நியாயம்.

******



book | by Dr. Radut