Karmayogi.net Forums

Karmayogi.net Forums (http://karmayogi.net/forums/index.php)
-   Announcements (http://karmayogi.net/forums/forumdisplay.php?f=67)
-   -   முக்கிய அறிவிப்பு (http://karmayogi.net/forums/showthread.php?t=3024)

Administrator 02-03-2013 10:31 AM

முக்கிய அறிவிப்பு
 
பிழைகளை நீக்கினால் பிரம்மத்தைக் காணலாம் என்பது நாமனைவரும் ஏற்றுக் கொண்ட கருத்து. மனம் ஏற்றுக் கொண்டதை செயலிலும் ஏற்றுக் கொண்டால், முன்னேற்றம் நம்மைத் தேடி வரும்.

ஆங்கிலம் நம் தாய்மொழி அல்ல. பழுதற்ற முயற்சியும், முறையான பயிற்சியும் இல்லை என்றால், நாம் எழுதும் ஆங்கிலம் நகைப்பிற்கு இடந்தரும் ஒன்றாகிவிடும்.

இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்பவர்களில் ஓரிருவரைத் தவிர, அனைவருமே தமிழில் வாசிக்கவும், பெரும்பாலும் பிழையின்றி தமிழில் எழுதவும் கூடியவர்கள்.

எனவே, தவறான ஆங்கிலத்தில் எழுதாமல், பிழையற்ற தீந்தமிழில் கருத்து கூறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

பிழைகள் மலிந்த பதிவுகள் - தமிழானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி - இனி இங்கு அனுமதிக்கப்படமாட்டா.

நன்றி.


All times are GMT +5.5. The time now is 01:55 PM.

Powered by vBulletin® Version 3.8.4
Copyright ©2000 - 2022, Jelsoft Enterprises Ltd.