DAILY MESSAGES                           

Series XVI

 

1)       People of high energy when they refuse to be positively active, are overtaken by the intensities of negative problems.

          சிறப்பான கடமையை தீவிரமாக செய்ய மறுப்பவனுடைய சக்தியை ஏற்க பிரச்சினை எழுகிறது.

          பிரச்சினை விலக்கிய கடமை.

2)         No problems can be solved in another plane. Work to be done cannot be accomplished by talk.

          பேச்சு செயலாகாது.  

3)         Life is an adventure to evolve mind. Peaceful life is an oxymoron.

          நிம்மதியாக வாழ வேண்டும் என்பவன் வாழ்வை அறியாதவன். வாழ்வு வளமான ஆபத்து வளருமிடம்.

4)         Occupation is taste of ignorance.

          மனத்தை ஆட்கொள்வது அறியாமையை ஜீவன் ரசிப்பது.

5)         Minds that need occupation do not enjoy Silence.         

          மௌனமில்லாதவரை ஏதாவது செய்யத் தோன்றும்.

6)         Falsehood when answered grows by that attention. That which desires to answer is the falsehood in us.

          பொய்யை எதிர்த்தாலும், பதில் சொன்னாலும் வளரும். பதில் சொல்ல விரும்புவது நம்முள் உள்ள பொய்.

          பொய் வளர மெய் தேவைப்படுகிறதன்றோ! 

7)         As the individuals in the Congress have landed in the very opposite of idealism, those fortunate souls that came to The Mother will end up in the very opposite consciousness, if the growth of soul has not been a continuous phenomenon.

          இலட்சியவாதிகளான தேசபக்தர்கள் இலட்சியத்தை அழிக்கும் சின்னமானது போல், அன்னையை நெருங்கிய அற்புத ஆத்மாக்கள் வளர மறுத்தால், ஆத்மாவுக்கும் அன்னைக்கும் எதிரியாவார்கள்.

8)       Objectivity has the limits of its own context. The context is always subjective.

          புறத்தைப் புறமாக அறிவது அகம்.  

          முடிவானது அகம், புறமில்லை.

             All objectivity is subject to subjectivity.

             Pure objectivity is non-existent. 

9)         Scientific mastery of the mother tongue and artistic expression of it make a man full, vigorous and cultured.

        இலக்கணமாகப் பயின்ற தாய்மொழி இலக்கியமாக வெளிப் படுவது பண்பு பெறும் பக்குவம்.

10)       To learn the mother tongue grammatically, absorb its idiom artistically is a rare mental possession.

          மொழி நயம் மௌனத்தை உயர்த்தவல்லது.

11)       Universal learning of the mother tongue with a cultural intensity will make a nation talented as well as prosperous on that score alone.  

          மொழி பயின்றவர் அதிர்ஷ்ட திறமை பெற்றவர்.

12)       The spirit of honour in a soul of nobility immunises one against social aberrations.

          சான்றோர் புறத்தில் செறிந்து அகத்தில் அடங்கிய ஆத்மாக்கள்.

13)       உள்ளத்தில் பிறந்து உணர்ச்சியில் வளர்ந்த அவள் உலகில் இன்னும் பிறக்கவில்லை.

           The complement of the woman is born in his heart, grown in his finer emotions. She is yet to be born on earth.

14)       It is easier to be idealistic than objective, as idealism requires energy in a given direction while objectivity demands shedding oneself.

          இலட்சியவாதிக்குத் தேவை இலட்சியத் தீவிரம். புற உண்மையை வெளிப்படுத்த அகம் இருக்கக் கூடாது. அகத்தை அழிப்பது இலட்சியத்தை ஏற்பதை விடக் கடினம்.

15)       Rare products come to the market by the services of the smuggler.

          கடத்தல்காரனும் சேவை செய்கிறான்.

16)       Great achievements are not to be spoken of or explained at length. To be able to explain them too is to establish what is silently achieved at the top at all levels of the society.

          பெரிய காரியங்களை சொல்லாமல் சாதிக்க வேண்டும். அவை சொல்லைக் கடந்தவை. அவற்றை சொல்ல முடிவது சான்றோர் சாதித்ததை அனைவரும் சாதிப்பதாகும்.

          சொல்லக் கூடாததை சொல்வது பூரண சாதனை.

17)       One takes as much time to complete his surrender from the moment he successfully enters it as the time he took to enter it.

          சரணாகதியை ஆரம்பிக்க எவ்வளவு நாளாகிறதோ, அவ்வளவு நாளாகும் அதைப் பூர்த்தி செய்ய.

        ஆரம்பிப்பது அடுத்த நாட்டை வெல்வது போல. முடிப்பது உலகை ஆள்வது போல்.

18)    An attitude of surrender is born when the effort of surrender is surrendered.

          முயற்சி முனைப்புக்குரியது.

             Effort is egoistic.

19)       Romance is the reckless adventure of emotion that flies in the face of practical reality as well as sound rationality.

          அறிவையும் அவசியத்தையும் மறக்கும் மனவளம் காதல்.

20)       Romance is the intensity of adventurous emotion which, in its fascination for itself, forgets the present and future.

          உணர்வின் வேகம் உள்ளதையும் உலகையும் மறப்பது காதல்.

21)       அதிர்ஷ்டம் என்பது அடுத்தவர் உணர்ச்சியை நம் உணர்ச்சியாக வெளிப்படுத்துவது.

             To express another's feelings as our own feelings is luck.

          பரந்த உள்ளுணர்வு சிறந்து உயர்வது அதிர்ஷ்டம்.

22)       நல்லவனை நல்லவன் என அறியலாம், உணரலாம், ஏற்கலாம், நிரூபிக்க முடியாது. உணர்வை உணர்வுக்குக் காட்டலாம், அறிவுக்குக் காட்ட முடியாது.

             Emotions are evident to emotions. They do not lend themselves to explanations.

23)       Understanding is to surrender ignorance in favour of knowledge. To surrender the instrument of understanding is greater still.

          அறியாமையை சரணம் செய்வது அறிவு. அதன் கருவியான மனத்தைச் சரணம் செய்வது பெரியது. ஜீவனை சரணம் செய்வது பூரண சரணாகதி.

24)       Mind can surrender ignorance in favour of knowledge. Soul can surrender Mind in favour of the whole being replacing Mind. What can surrender the being, consciousness, power and delight? It is not even the soul, but the soul that evolves ―  the psychic being.

          அறியாமையை அறிவும், அறிவை, மனமும், மனத்தை ஜீவனும், ஜீவனை ஆத்மாவும் சரண் செய்தால் ஆத்மாவை எது சரண் செய்யும்? வளரும் ஆத்மாவே அதைச் செய்ய முடியும்.

25)       Universal love should be delivered by isolation and treating all others as hostiles.

          பிரிந்து நின்று பெறும் ஒருமையுணர்வு.

26)       அறிவுக்குப் புலப்படுவது கண்ணுக்குப் புலப்படாத போது, ஆத்மாவுக்குப் புலப்படுவது கண்ணுக்குத் தெரியுமா?

             Conception is invisible. How can the eye see the Soul's vision?

          ஊனக் கண்ணுக்குத் தெரியாததை ஞானக் கண் பார்க்கும். ஞானக் கண்ணுக்குத் தெரியாததை ஊனக் கண்ணுக்குக் காட்டச் சொல்வான் மனிதன்.

27)       The concept of Infinity forms when one perceives the formation of the known life from out of the unknown ―  the unknowable.

          தெரிய முடியாதது தெரிந்ததாக மாறுவது காலத்தைக் கடந்த அனந்தம் - தெரியாததில்லை, தெரிய முடியாதது.

             Not the unknown, but the unknowable.

28)       Safety First of Baldwin made Britain of the thirties, the years of depression, a miniature boom. Safety First made Prosperity in depression but created the danger of World War II.

          அஸ்திவாரம் அசைக்க முடியாததானால் ஆச்சரியம் நடக்கும். அதற்கெதிரானதும் நடக்கும்.

29)       The scientist who opts for spirituality makes the same progress as the man on the street trying to accumulate wisdom joining a university.

          தவம் ஆன்மாவின் பல்கலைக் கழகம்.

             Inner exploration is organised spiritual education for the scientist.

             Spirituality is organised scientific knowledge. 

30)       Perfection of the part will be inimical to the perfection of the whole.

          ஊர் நியாயம் உலகத்திற்கு அநியாயம்.

31)       The organisation of the unorganised is that of the oppressed.

          அசத்தின் செயல் அகங்காரமற்ற ஆபாசத்தின் செயல்.

32)       The inevitable excess collects neither as possibilities nor as potentials, but as          the base for fresh creative organisation.

          உபரி உதிரியாக இல்லை. ஆபத்திற்கு அவசரமாக உதவும் ஆழ்ந்த சேகரமாக உள்ளது.

33)       Objectivity is confined to objects, not extended to areas where one is    subjective.

        காய்தல், உவத்திலின்றி பொருள்களைப் பற்றிப் பேசலாம்.     பற்றெழுந்த பின் மனிதர்களைப் பற்றிப் பேச முடியாது.

           As no fully rational man is born yet, one cannot expect objective studies of people, religion or isms.

34)       A lawyer who supplies the court facts and arguments favourable to the   opponent and unfavourable to his client is an OBJECTIVE person. No such man is born yet.

          எதிர்கட்சிக்கு சாதகமாகவும், தன் கட்சிக்குப் பாதகமாகவும் பேச மறுக்காதவன் நியாய மனப்பான்மையுடையவன்.

35)       The greatest prejudices are to be found among those who strive for objectivity. The insincerity in politics is greatest in the West especially towards Russia and Asia. The insincerity in politics is only matched by superstition in the field of science.

          மூடநம்பிக்கையின் ஆன்மீக ரூபம் பொய்.  

36)       Human nature makes intelligence do duty to ignorance.

          அறிவை அறியாமையாக்குவது சுபாவம்.

37)       Foolishness retains its prerogative at all levels from the low stupid official to the British Cabinet Ministers, travelling through the excellent IAS officers.

          அர்த்தமற்றவனும், அறிவுடைய ஆபீசரும், ஆங்கில அரசியல் தலைவர்களும் ஒரே மாதிரி அறிவில்லாமல் பேசுவது சுபாவம்.

             Foolishness remains foolishness at all levels.

38)       Prejudice or superstition makes an intelligent person talk like a fool.

          வெறுப்பு அறிவை மூடநம்பிக்கையாக்கும்.  

39)       Politicians, especially the Western specimens, when they are prejudiced cannot bring themselves to accept facts.

        மேல்நாட்டு அரசியல்வாதியால் உள்ளதை ஒத்துக்கொள்ள முடியாது. 'உண்மை தனக்கு, வெறுப்பு பிறருக்கு' என்பது கொள்கை.

40)       Organised terrorism as well as sporadic violence is the symptom of the unwilling physical unable to accept the rule of mind ―  the Law.

          வன்முறை மனத்தை உடல் ஏற்க முடியாத நிலை.

41)       When a person refuses to act, his character is seen well in his inaction. Going into silence, his personality is all over his person.

          சும்மாயிருப்பவன் சுபாவம் முகத்தில் தெரியும். அவன் மௌனமானால் அவனது கோர சொரூபம் மௌனமாகத் தாண்டவமாடும்.

42)       Too great an idea too well grasped by too small a person will smear him all over with its taste and fragrance. It is not knowledge, but a condition to get it.

          சிறிய மனிதன் பெரிய இலட்சியத்தை உண்மையாகப் பற்றினால் கோடாலி சந்தன மரத்தின் வாசனையை வெட்டும் போது பெற்றது போலாகும்.

43)       Ignorance is the intelligence that takes a metaphor as a matter of fact.

          உவமையை உண்மையாக அறியும் அறிவு அறியாமை.

44)       Love is the imprint of her feet on the emotions of my being.

          அன்பு என் ஜீவனின் உணர்வில் பதித்தெடுத்த பாதங்கள்.

          திருவுள்ளத்தின் திருவடிகள்.   

45)       Insularity is the protective shield of ignorant selfishness.

          சுயநலம் தன் அறியாமைக்காகப் பெருமைப்பட்டால் சுருங்கி ஒதுங்கி வாழும்.  

          சுருங்கிய சுயநலம் சுத்தம் என்பது ஆன்மீக அசுத்தம்.

46)       Genuine affection is intense selfless emotion expanding in the harmony of kindred souls.

          ஆதரவில் வளரும் அன்பு ஆன்மீக உணர்வு.

47)       The psychic being known to be the size of the thumb since the descent of 1956 has grown to be golden to the size of Sri Aurobindo's head.

          கட்டைவிரல் அளவான சைத்திய புருஷன் 1956ல் சத்திய ஜீவிய சக்தி வந்தபின் பொன்மயமான பகவான் ஸ்ரீ அரவிந்தர் தலையாக மாறி விட்டது.

48)       The blemish of the woman is the brightest ornament for one who seeks in her the evolutionary envelopment.

          குறையை நிறைவின் அணிகலனாகக் காணும் கண் இறைவனின் இதயத்தில் வாழ்வது.

49)       Modernisation is the sophistication of the surface, not the enrichment of the cultural layers of the human being.

          நகர வாழ்க்கை மேலெழுந்த நல் வாழ்வு. ஆழ்ந்த நல்லுணர்வு அகன்ற பக்குவம் பெற வழி செய்வதில்லை.

50)       Thought extends language. Emotions expand the thought giving it a sensation.

          சொல்லுக்கு எண்ணம் மூலம். உணர்ச்சி சொல்லை செப்பனிட்டு,உயிரூட்டும்.

             Language is a medium of communication. It can make thought intelligible. It can serve emotion as a vehicle that takes its sensational shape. Nowhere else can language grow like this.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000