Skip to Content

ஸ்வரூபம், சுபாவம்

வழக்கில் ஸ்வரூபம் என்ற சொல் சொரூபம் எனப்படும். மறைந்துள்ள கெட்ட குணங்கள் வெளிப்படும்பொழுது அவன் சொரூபம் வந்தது என்கிறோம். மறைந்துள்ள ஆன்மீக உருவமும், அதன் உயர்ந்த வெளிப்பாடுகளும் நாம் மறந்தவை. அவற்றை அறிவது தவமுயற்சி, பலன் தவப் பலன்.

அந்த ரூபத்திற்கு ஒரு பாவம் உண்டு. அதுவே சுபாவம் எனப்படுவது. பிறப்பில் ஏற்படுவது. மனிதனுக்குக் கட்டுப்படாதது. நாய் வால் போன்றது. கீதை, உன்னுடைய தாழ்ந்த சுபாவத்தை ஒட்டி செய்யும் யோகம், அடுத்தவருடைய உயர்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவதை விட உயர்ந்தது என்கிறது.

மனித சுபாவத்தை மாற்ற முடியும், தெய்வீகச்சுபாவமாக மாற வேண்டும் என்பது பூரண யோகம்.

 

Sincerity, opening, receptivity, உண்மை, விழிப்பு, ஏற்புத்திறன் என்ற கருத்துகள் அன்னைக்கு முக்கியமானவை. அவை யோகப் பாதையில் போக உதவும். Sincerity என்றால் நாம் உள்ளதைப் பேசுவது, விஸ்வாசமாக நடப்பது என அறிவோம். அன்னை விளக்கம் வேறு. நாம் யார், என்ன நினைக்கிறோம், என்ன பேசுகிறோம், நினைப்பதைப் பேசுகிறோமா, நல்லதை நினைக்கின்றோமா, எதை நினைக்க வேண்டும் என்ற அறிவு நமக்குண்டா? என்ற தெளிவு Sincerity என்கிறார். அத்தெளிவு போதுமானதாக இருந்தால் அன்னை செயல்படுவார். Life response எழும். அந்த அளவுக்குள்ள தெளிவே Sincerity எனப்படும். அன்னை கூறுவது போன்ற Sincerity நமக்கிருந்தால் காலில் குத்திய பின் மறையும், ஓடும் ரயில் நிற்கும், கட்டி 3 நகரும், தொலைந்த வைர மோதிரம் இரண்டு முறை தேடிய அதே மேஜை மீதிருக்கும். அதனாலும், அடுத்தவரை மாற்ற முடியாது. அந்த சக்தி Sincerity இல்லை. அத்துடன் பிறரை மாற்ற முயலக் கூடாது என்கிறார். பிறர் - மகனாக இருந்தாலும் - மாறப் பிரியப்பட்டால், அதற்காக நம்மிடம் ஆலோசனை கேட்டால், நாம் சொல்லலாம். நாமே முனைந்து மாற்ற முயல்வது அகந்தை. செய்யக்கூடாது என்கிறார் பகவான்.

மனிதன் தன் சுபாவத்தை ஏற்கிறான், போற்றுகிறான், அதைத் தொட மனம் வாராது. நாம் நம் சுபாவத்தை மாற்ற முயலலாம். பிறரையோ, அவர் சுபாவத்தையோ மாற்ற முயலக் கூடாது. கருமிக்குத் தான் சிக்கனம் எனத் தெரிவது குறைவு. கோபக்காரர்களில் சிலர் தமக்குக் கோபமே வாராது என்பதுண்டு. எல்லோரும் தங்களை நல்லவர் என வைத்துக் கொள்கிறார்கள். நாமும் அப்படியா என யோசனை செய்வது பலன் தரும்.

பிறர் குறையைச் சொல்வது அழகன்று. நாம் நம் குறையைப் பிறரிடம் சொல்வது அநாகரீகம். எனவே நாம் அவற்றை விலக்குகிறோம். விலக்கிய பின் அக்குறைகளில்லை என நினைக்கிறோம். கொஞ்ச நாள் கழித்து அக்குறைகள் இல்லவேயில்லை என்று நம்புகிறோம். அவை நிறைவு எனவும் நாளாவட்டத்தில் முடிவு செய்கிறோம். இது ஒரு திரை. இத்திரையை விலக்க முடியாது. கிழித்தெறிய வேண்டும். அது Sincerity ஆகும். அதை உற்பத்தி செய்வது நல்லது. அம்மனநிலையிலிருந்து அன்னையை அழைத்தால் அவரது சக்தி நம்முள் பாயும். அதற்கு யானை பலம் உண்டு. நடக்காதது நடக்கும். அதுவே நம்முள் பொதிந்துள்ள ஸ்வரூபம். அது ஆன்மீகச் சொரூபமாகும். அதை உணர்ந்தவர்க்கு அன்னை அனுதினமும் உடனிருப்பார்.

நாட்டில் வருகின்ற பேஷனை ஏற்பதில் நாம் விழிப்போடிருக்கிறோம். நம் சுபாவத்திற்கு sincere ஆக இருக்கிறோம். பணமுள்ளவரை மனம் ஏற்கிறது. இந்த opening, sincerity, receptivity அன்னையிடமிருந்தால் நாம் நூறு பேரில் ஒருவராவோம். வருமானம் 10 மடங்காகும். எந்தப் பிரார்த்தனையும் தவறாது. பிரச்சினைகளிருக்கா, வந்த வாய்ப்புகள் அத்தனையும் பலிக்கும். ஒன்று தவறாமல் பலிக்கும்.

இதன் உண்மையை அறிய வாழ்வுக்கும், அன்னை வாழ்வுக்கும் உள்ள வேற்றுமை என்ன என்று அறிய வேண்டியது அவசியம்.

  • நாலு பேர் ஏற்கக் கூடியதை சொன்னால், செய்தால் உலகம் நம்மை ஏற்கும். அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பொய்யாகவுமிருக்கலாம். உலகம் ஏற்றால் சரி. அதாவது உலகம் ஏற்பது வாழ்வில் உண்மை.
  • அன்னை வாழ்வில் உண்மை மட்டும் ஏற்கப்படும். யார் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், அனைவரும் ஏகமனதாக ஏற்றாலும் உண்மையற்றவற்றை அன்னை ஏற்கமாட்டார். அன்னை வாழ்வு அதைப் புறக்கணிக்கும். மனச்சாட்சி ஏற்றாலும், உண்மையில்லாவிட்டால் அன்னை ஏற்க மாட்டார்.
  • அதேபோல் அறிவு அதற்கேற்றதை ஏற்கும். உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் அறிவுக்கில்லை.
  • உண்மை என்பது உலகம் ஏற்பதாகவும் அமையும், ஏற்க மறுப்பதாகவும் அமையும்.
  • சமூகம் ஏற்பதை நாம் ஏற்றால் சமூகத்தில் நமக்கு வெற்றியுண்டு. அதனால் அன்னையிடம் வெற்றியுண்டு என்று கூற முடியாது.

அன்னையை தெய்வமாக வழிபடுபவர்களுக்கு சமூகம் உடன்பாடு. அவர்கள் பிரார்த்தனை அன்னையிடம் பலிக்கும்.

அன்னையின் சக்தி (force) அவர்களை நாடாது. நம் ஜாதகப் படியில்லாத வாய்ப்புகள் பலிப்பதற்கும், சமூக சட்டப்படி நமக்கு உரிமையில்லாதது கிடைக்கவும், நம் திறமைக்குரியதை விட உயர்ந்த வாய்ப்பு பலிக்கவும் சாதாரண பிரார்த்தனை போதாது. அன்னையின் சக்தி தேவை. அது பலிக்க நம்மிடம் உண்மை வேண்டும். அவ்வுண்மையில்லாதபொழுது பிரார்த்தனை கிணற்றில் போட்ட கல்போல் இருக்கும். ஏன் பலிக்கவில்லை என்கிறோம்.

இன்றைய நிலவரப்படி M.A. படித்தவனுக்கு ரூ. 800 சம்பளம். Ph.D. படித்த பின் பஸ் வேலைக்குப் போகும் நிலையும் உண்டு. பிரார்த்தனையால் இவர்கட்கு சர்க்கார் வேலை, கல்லூரி ஆசிரியர் வேலை கிடைப்பதுண்டு. S.S.L.C. பாஸ் பண்ண முடியாது என்றவன் படிப்படியாக உயர்ந்து இன்று vice chancellor ஆக அழைக்கப்படுகிறான் என்பது பிரார்த்தனையால் நடப்பதல்ல. அன்னை சக்தி செயல்பட்டு நடப்பது. அதற்கேற்ற உண்மை இருப்பதால் நடக்கின்றது.

உண்மை என்றால் என்ன? நம் வீட்டு விஷயங்களை அனைவரிடமும் சொல்வதுதான் உண்மையா? அப்பொழுதுதான் Mother's force செயல்படுமா? என்று கேள்விகள் எழுகின்றன. அன்னை அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் சிஷ்யர்களை அப்படி நடக்கச் சொல்லவில்லை. இது அன்னையின் முறையன்று. மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே அன்னையின் முறை. தெய்வத்திடம் ஆதாயத்தை எதிர்பார்ப்பது அழகில்லை என்பது அன்னையின் பாங்கு. நம்மால் அன்னையிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. கேட்கலாம், எதையும் கேட்கலாம் என அன்னை கூறியுள்ளார். நம் மனம் தூய்மையாக இல்லை. தூய்மை என்றால் என்ன என்று நமக்குத் தெரியவில்லை. அதனால் அன்னை சக்தி நம்முள் செயல்படுவதில்லை. ஆபத்தான நேரத்தில் ஆழ்ந்த பிரார்த்தனை வேதனையை விலக்குகிறது. மற்றபடி வாய்ப்பு வருவதில்லை. வந்தால் பலிப்பதில்லை. அதுவே நம் நிலை.

சில சமயங்களில் ஏதோ ஓர் ஆபத்து வருகிறது. அது விலகி, ஒரு பெரிய அதிர்ஷ்டம் வருகிறது. இது ஆச்சரியமானது.

வாழ்வில் ஊறியவர் பொய்யில் ஊறியவர்கள். பக்தி மேலீட்டால் அன்னை சக்தி அவர்களை நெருங்கினால், மனம் தூய்மையில்லாததால் சக்தி மாறி ஆபத்தாகிறது. ஆபத்து விலகிய பின் ஓரளவு தூய்மை ஏற்படுவதால் சக்தி, அதிர்ஷ்டமாகிறது என்பதை நாம் எல்லோருடைய வாழ்விலும் காண்கிறோம். சாதாரண மனிதன் வாழ்வில் அன்னை செயல்பட்டு அதிர்ஷ்டத்தை அவன் மீது அன்னை திணிக்கும் முறையிது.

இம்முறை நமக்குப் புரிந்தபொழுது, பிறர் நம்மை காரணமில்லாமல் திட்டும்பொழுது, அன்னை சக்தி செயல்படுகிறது என நாம் புரிந்து கொள்கிறோம். பதிலுக்கு நாமும் திட்டினால் நாம் வாழ்வில் செயல்பட்டு அதிர்ஷ்டத்தை விட்டு விடுகிறோம். வருவது அன்னை அதிர்ஷ்டம் என நாம் திட்டுவதைப் புரிந்து கொண்டு கோபப்படாமலிருந்தால் அவர் திட்டுவதால் நம் மனம் தூய்மையாகிறது. அதிர்ஷ்டம் வருகிறது. நாம் நம் குறைகளை உணர்வது, அடுத்தவரிடம் அதைக் கூறுவது நாமே நம்மைத் திட்டிக் கொள்வதாகும். இதன் பலனாக மனம் தூய்மையாகும். அதிர்ஷ்டம் வரும்.

அன்னை நம்மை இதுபோல் நடக்கச் சொல்லவில்லை. நாமே அதிர்ஷ்டத்தை நாடிப் போகக் கண்டு பிடித்த முறையிது. பிறருக்குச் சொல்வதன்று. நாமே நமக்காகப் பின்பற்ற முயல்வது. நம் குறைகளை, நம் சொந்த விஷயங்களைப் பிறரிடம் கூற வேண்டும் என நம்மை எவராலும் வற்புறுத்த முடியாது.

எந்தக் குடும்பம் இவ்வுண்மையை அறிந்து பின்பற்ற முன் வருகிறதோ அவர்கட்கு அன்னை அதிர்ஷ்டம் உண்டு.

பக்தியாலோ, வலிமையாலோ strength, நல்லெண்ணத்தாலோ, அம்சத்தாலோ சிலரை அன்னை அதிர்ஷ்டம் நாடி வருவதுண்டு. அதை அவர்கள் பெறத் தடையாகப் பழக்கமோ, மற்ற வீட்டு மனிதர்களோ அமைவதுண்டு. அப்பழக்கம் வந்ததை விலக்கும். தடையான நபர் வந்த அதிர்ஷ்டத்தை விலக்குவார். அவருக்கே அதிர்ஷ்டம் வர நாம் முயன்றாலும் அவர் அதை விலக்குவார். அவரையும் மீறி அவருக்கு அவ்வதிர்ஷ்டம் பலிக்க வேண்டுமானால், நம் மனத்தூய்மை, நம் குறைகளை மீறி நாம் வெளிப்படுத்தும் தூய்மை உயர்வானதாகவும், முழுமையானதாகவுமிருக்க வேண்டும். பொதுவாக இந்நேரங்களில் யாருக்காக நாம் அதிர்ஷ்டத்தை அழைக்கின்றோமோ,

அவர் மட்டும் அதைத் தடை செய்ய பெரு முயற்சி செய்வார் என்பது அனுபவம்.

அவரையும் மீறி நாம் அதைச் செய்ய வேண்டுமா என்பது நமக்கும் அவருக்கும் உள்ள உறவைப் பொருத்தது. அறிவுக்குகந்தது.

அவரே முன் வந்து நம்மை ஊக்குவித்து, அவருக்காக நாம் எடுக்கும் முயற்சி பலிக்க ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் நாம் காண்பது,

  • அவர் தடையாக அமைவார்.
  • நாம் அவர் மனம் புண்படக் கூடாது என்று தடையை ஏற்போம்.

Sincerity என்பது நம் மனத்தையும், அவர் தடையையும் விலக்கி, அன்னை அதிர்ஷ்டம் செயல்படுமாறு நாம் மனத்தை நேராக்கி, எது முறையோ அதைச் செய்ய முன் வருவதாகும். அதற்கு அதிகத் தைரியம், தெளிவு, நம்பிக்கை தேவை. அதற்குச் சுபாவம் இடம் தாராது. ஏனெனில் அது மனித சுபாவம் மாறி தெய்வச் சுபாவமாவதாகும். சுபாவத்தை மாற்ற வேண்டும். ஆனால் வந்து மாற்றக் கூடாது. மாற வேண்டும் என்ற ஞானத்தை மனம் ஏற்றுக் கொண்டால், பிறகு மாறுவது வந்து மாறுவதாகாது. மனம் ஏற்றுக் கொண்டதுபோல் உணர்வும், செயலும் ஏற்றுக் கொள்வது நம் பங்கு. அதன் பின்,

அன்னையை அழைத்தால், அவரிடம் சரண் செய்தால் அன்னை அம்மாற்றத்தைச் செய்வது பூரண யோகம்.

இம்மாற்றத்தை ஏற்க முயலும் ஒவ்வொரு கட்டத்திலும் நம் சொரூபம் விஸ்வரூபம் எடுக்கும், எடுத்து எதிர்க்கும். அன்னையைச் சரணடைந்த பின் ஸ்வரூபம் எழுந்து தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

சொரூபம் விஸ்வரூபம் எடுத்து, மனத்திடம் ஆர்ப்பாட்டம் செய்து இது முடியாது. இது தவறு, நாலு பேர் ஏற்கமாட்டார்கள், அநியாயமாக அவன் மனதைப் புண்படுத்துவது பாவம், அன்னை இவற்றையெல்லாம் சொல்லவில்லை என ஆயிரம் முறை கூறியபடியிருக்கும். அதைக் கடந்தவர் இல்லை. அப்படிக் கடந்து வந்தால், உயிரிடம் (vital) அப்பப்பா, எனக்குத் தாங்காது, தாங்கவே தாங்காது, வேணாம், வேண்டவே வேண்டாம் என்று கதறும். இந்தக் கட்டத்திற்கு வந்தவரில்லை.

உடலிடம், நீ மயக்கம் போடு என்று கூறும். நாம் மாறும் முயற்சியைக் கைவிடும்வரை மயக்கம் தெளியாது. முயற்சியைத் தொடர்ந்தால் நிச்சயம் உயிர் போகும்.

ஒவ்வொரு கட்டத்திலும், 'நாமிருக்கும்'வரை மேற்சொன்னவை நடக்கும். நாம் போய் அன்னை வந்தால், அதாவது நாம் சரணடைந்தால், நம்மால் முடியாததை, மனிதனால் முடியாததை அன்னை நடத்துவார். அன்னையை ஏற்பது sincerity. நம்மை ஏற்பது insincerity. அன்னையை அறிவது opening. நம்மை அறிவது closed mind. அன்னையை ஏற்பது receptivity. நம்மை ஏற்பது receptivity இல்லை என்பதாகும்.

அம்சம் உள்ளவர்கட்கும், strength உள்ளவர்க்கும், நல்லெண்ணமுள்ளவர்க்கும், அவர்கள் சுபாவத்தையும், சொரூபத்தையும் மீறி Mother's force ஒரு சமயம் செயல்பட்டுப் பெரிய காரியங்கள் நடப்பதுண்டு. கனடா வரன், pin மறைவது போன்றவை நடப்பதுண்டு.

அதை conscious ஆக, நிரந்தரமாக, நன்றியுடன் ஏற்றுப் பூரண யோகப் பாதையில் வருபவர் இதுவரை இல்லை. இனிமேல் ஏற்பட்டால்தான் உண்டு.

அது இருந்திருந்தால் பகவானோ, அன்னையோ உடலை நீத்திருக்க மாட்டார்கள். அன்னை அதை எழுதியதே அப்படிப்பட்ட விஷயம். ஏன் நான் தொழிலாளிகட்கெதிரே ஆசிரமவாசிகளை ஆதரிக்க வேண்டும்? ஏன் ஆசிரமம் தாக்கப்படுவதை நான் அனுமதிக்க வேண்டும் என்று அன்னை எழுதியவை, தம் falsehoodஐப் பற்றிப் பேசியவை, பகவான் காலை முறித்துக் கொண்டபொழுது தம் தவற்றை விளக்கியது, சுயநலத்தைப் பற்றிப் பேசியது, தம்மால் ஏன் சிரிக்க முடியவில்லை எனக் கூறியது போன்றவை அவர்கள் தங்கள் வாழ்வில் இம்முறையை - தம் குறையை வெளியிடும் முறையை - ஏற்று நடந்ததாகும்.

Guilty Conscience : தப்பை ஆதாயம் கருதி செய்யும்பொழுது மனம் உறுத்தும். அதை guilty conscience என்கிறோம். சில சமயங்களில் நல்லது சம்பிரதாயத்திற்கு ஒத்து வாராமல், எதிராக இருப்பதுண்டு. தான் படித்த ஆசிரியர் தலைமை ஆசிரியராக உள்ள பள்ளியில் D.E.O. வாக வந்து இன்ஸ்பெக்ஷன் செய்யும்பொழுது, கடமை கணக்கைச் சரி பார்க்கச் சொல்லும். சம்பிரதாயம் எப்படி என் ஆசிரியரையே குறை சொல்வது எனக் கூறும். மனம் கசங்கும். இதுவும் guilty conscience போலிருக்கும். எக்காரணத்தாலும் மனம் கசங்கினால், பின் வாங்கினால், காரியம் அரைகுறையாகும். கதவு திறக்காது. உள்ளே போக முடியாது. அனுபவம் பாதியாகும். சில சமயங்களில் ஆரம்பிக்கவே முடியாது. இதுபோன்ற விஷயங்களில் மனம் தெளிவு பெற சிந்தனை வேண்டும். ஏற்றுக் கொண்டு செயல்பட பரந்த மனப்பான்மை வேண்டும். காரியத்தை ஆரம்பிக்கு முன், அதை நாட வேண்டும்.

சில அனுபவங்கள் : நாம் vital உணர்வால் செயல்படுகிறோம். ஏதோ அரிபொருளாக மனத்தால் செயல்படுகிறோம். இயல்பாகச் automatic செயல்படும்பொழுது உடலால் செயல்படுகிறோம். இவை மூன்றுக்கும் ஜடம், சூட்சுமம் (gross, subtle) என்ற இரண்டு இடங்களுண்டு. அது போக மேல் மனம், உள் மனம், ஆழ்ந்த மனம், அடி மனம் surface mind, inner mind, subconscious mind, subliminal mind என்ற பிரிவுகள் உண்டு. இதே பிரிவுகள் உணர்வுக்கும், உடலுக்கும் உண்டு. மேலும் consciousness, substance என்ற இரு பிரிவுகள் இவை மூன்றிற்கும் உண்டு. இதுவரை நமக்கு நடந்த நல்ல காரியங்களை நினைத்துப் பார்த்தால், நடக்காமல் தடையானவற்றையும் நினைத்தால் சில விஷயங்கள் விளங்கும்.

  1. செயல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக பிரார்த்தனை பலிக்கும்.
  2. தடை எவ்வளவு ஊறியிருக்கிறதோ, அவ்வளவு கடுமையாக இருக்கும்.

ஆபத்து நேரத்தில், ஆழ்ந்த அலறல் அனைவருக்கும் பூரணமாகப் பலிப்பது எதனால் எனில், அந்நேரம் மனம், உணர்வு விலகும். உடல் நேரடியாக Force சக்தியைப் பெறும். அப்பொழுது கால் உள்ள பின் மறையும். பின் மறைய உடலும் விலக வேண்டும்.

  • சொத்து தேவை என்பது உடல் தேடும் ஆர்வம். சக்தியுள்ளது. அதனால் 24 மாதச் சம்பளத்தில் வாங்கும் சொத்து தொழிலின் ஆரம்பத்தில் பலிக்கிறது. அது 100 மடங்கானது அறிவுடை உழைப்பால்.
  • ஆன்மா செயல்பட்டபொழுது 1 பெருகி 1000 ஆயிற்று. மனம் உண்மையிலேயே சொத்தை நாடாததால் (அறிவை நாடியதால்) அது 200 மடங்கில் அரைகுறையாயிற்று.
  • இரவு பகலாக உழைத்தவர் அன்னையை ஏற்றுக் கொண்டவுடன் சற்று அதிகச் சம்பளம் கிடைத்து வேலையேயில்லாமலிருக்க வேண்டியதாயிற்று. அவர் உடல் ஆழ்ந்து வேலையை வெறுத்தது.
  • ஆபீசில் கொஞ்சம் வேலை செய்தவர், மனம் அந்த வேலையையும் செய்ய விரும்பவில்லை. அதிகச் சம்பளம் கேட்டது. அதுவும் நடந்தது.
  • மிகப் பெரிய வாய்ப்பு (10 மடங்கு) பெற்றவர் 3 வருஷம் வேலையே செய்யாமல் சோம்பேறியாக இருந்தது எதனால் எனில் இவர் முதலாளிக்கு பயந்து 15 மணி வேலை செய்வார். அப்பயமில்லாவிட்டால் 1 மணியும் வேலை செய்யமாட்டார். இவர் உண்மையான சுபாவம்: தன் காரியத்தை மட்டும் செய்வார். முதலாளிக்குட்பட தாமே வேலை செய்யமாட்டார்.
  • வெளிநாட்டு வரன் வந்து அந்தஸ்து உயர்ந்தவர், திறமையும், வலிமையும், நேர்மையும் மிக்கவர். மணியானவர், is a gem. நேர்மையுள்ள வலிமை உயர்கிறது.
  • அருள் காரணமேயில்லாமல் செயல்படும். எக்காரணமுமில்லாமல் ரூ. 10,000 பெறுமான உபயோகமான பொருளை சம்பந்தமில்லாதவர் பரிசு கொடுக்க முடிவு செய்தவுடன், பெற வேண்டியவருடைய தரித்திரம் விஸ்வரூபம் எடுத்து தமக்கிருந்த சம்பளத்தையும் வேண்டாம் என்றார். சூட்சுமமாக அன்னை வருவது தெரிந்தவுடன் குறையான குணம் தரித்திரமாக எழுந்து அதிர்ஷ்டத்தைத் தடை செய்கிறது. யாருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றாலும், அவரே தடையாக இருப்பதற்கு இது உதாரணம்.
  • இன்று நாம் செய்த தவற்றைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதால் சாதுர்யமாக பேச்சை மாற்றிப் பேசினால், வந்த வாய்ப்பு மாறும். பேச்சை மாற்றிப் பேசும் பழக்கம் பொய். தரித்திரத்தை பரம்பரைக்கும் அளிக்கும் திறமையுள்ளது.

நினைவே வழிபாடு : இடைவிடாமல் அன்னையை நினைப்பவர் இல்லை. குறைவாகவும் இல்லை. இடைவிடாமல் நான் அன்னையை நினைக்கின்றேனே என்று கூறுபவர் உண்டு. அவர் சற்று யோசனை செய்தால் அவர் இடைவிடாமல் தன்னையே நினைப்பது தெரியும். தன் நலனுக்காக அன்னையை நினைப்பது தெரியும். அந்த உண்மையை அவர் ஏற்காவிட்டால் பொய் பூதாகரமாக வளரும்.

மரியாதை, அந்தஸ்து : விழிப்பாக மனிதன் அன்னையை அறிய வேண்டும் என்கிறார் பகவான். மனிதன் அதுபோல் ஒரு விஷயத்திற்கு மட்டும் விழிப்பாக இருக்கிறான். தன் அந்தஸ்து, மரியாதையை அதுபோல் காக்கின்றான்.

மரியாதை என்பது அந்தஸ்தால் வருகிறது. அந்தஸ்து சொத்தால் ஏற்படும். சொத்து உழைப்பால் நெடுநாளில் சேரும். அது இருப்பவரை உலகம் மதிக்கும். இல்லாதவர் இருப்பதாக எத்தனை ரூபங்களில் நடித்தாலும், உலகம் அதே விழிப்போடு அதை மறுக்கும்.

நடிக்கும் திறமையுள்ளவர்கள், இது விஷயத்தில் அனைவரும் அதே திறமையோடு நம்மைக் கண்டு பிடிக்கின்றார்கள் என்று அறிவதில்லை.

அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவையிரண்டும் போலி. நடிப்பதை மனம் ஏற்று, விலக்காதவரை அன்னைக்கும் நமக்கும் காத தூரம். அந்த உண்மை புரியாதவர் தம்மையே ஏமாற்றிக் கொள்கிறார். உலகம் ஏமாறுவதில்லை. அன்னையை ஏமாற்ற முடியாது. நம்மை மட்டுமே ஏமாற்றிக் கொள்ளலாம். நாம் நம்மை ஏமாற்றுவதை அறிந்தாலும், அதை விட, தெளிவிருக்காது.

நான் போலி, வேஷம், என்னை நம்பாதீர்கள் எனக் கூற எவருக்கும் தைரியமில்லை. அதைக் கூறியவுடன் வேஷம் கலையும். கலைந்த பின்னும், ஏன் வேஷத்தைக் கலைத்தோம் என்று மனம் புழுங்குமே தவிர, கலைத்ததற்குச் சந்தோஷப்படாது. சந்தோஷப்படும்வரை தரித்திரமும் போகாது. அதிர்ஷ்டமும் வாராது.

மரியாதைக்குரியவனாக உள்ளே மனத்தில் ஒருவர் உயர்ந்தால் மரியாதை தேடி வரும். கவனித்தால் இன்றுள்ள மரியாதை அது போல் வந்ததே. நாம் நடித்த இடத்திலெல்லாம் 1% கூட மரியாதை வரவில்லை எனத் தெரியும். It must be created inside. No use trying to find it outside. There is nothing outside. Everything is inside.

பொறாமை : இதன் நிலைகள் பல. எந்த நிலையில் பொறாமையின் சுவடு நம்மிடமிருந்தாலும், நிலையாக வருவது தரித்திரம். அன்னையும், அதிர்ஷ்டமும் விலகும். கிட்டே வர மறுக்கும்.

பிறர் வாழப் பொறுக்காதவர், தன்னைவிட அடுத்தவர் உயர்வதைக் காண முடியாதவர், பிறர் அழிவதை ரசிப்பவர், எதிரி அழிவதைக் கண்டு சிரிப்பவர் என்பன போன்று 10, 20 நிலைகளில் பொறாமையுண்டு. அவற்றை ஆராய்வதைவிட, பொறாமை இல்லாததற்கு அடையாளத்தைத் தேடலாம். நம்மால், நம் எண்ணத்தால் பிறர் இதுவரை உயர்ந்திருந்தால் பொறாமையில்லை எனலாம்.

பிறரை வாழ வைக்க மனம் துடித்தால், அதுபோன்ற முயற்சி பலித்தால் அவருக்குப் பொறாமை இல்லை என அறியலாம்.

Cashier உத்தியோகத்திற்குத் திருடனை வைப்பதில்லை. இதுவரை திருடாவிட்டாலும், திருடக் கூடியவனை cashier ஆக வைப்பதில்லை. திருட்டுப் புத்திக்கும், cashier உத்தியோகத்திற்கும் பகை. பொறாமை குணத்திற்கும், அருளுக்கும் அதுபோன்று பகை. அருகே வாராது.

நல்ல பழக்கங்கள்: குரு சொல்லை மீறக்கூடாது, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது என ஏராளமான நல்ல பழக்கங்கள் உண்டு. மனிதனுக்கு personality, character சுபாவம் என்று உண்டு. எந்தப் பழக்கத்தை மேற்கொண்டாலும் அதன் உச்சகட்டப் பலனை நிர்ணயிப்பது சுபாவம். ஒரே நல்ல பழக்கம், நல்ல சுபாவமுள்ளவனுக்கு அதிகப் பலனையும், கெட்ட சுபாவமுள்ளவனுக்குக் குறைந்த பலனையும் தருவதை நாம் காண்கிறோம். எதிரான பலனையும் காணலாம்.

நாம் வாழ்வில் பெற்ற பலனைக் கொண்டு நம் சுபாவத்தை அறிய முயல்வது sincerity.

உத்தியோகம், தொழில் : வாழ்வு உத்தியோகத்தில் சம்பளம், increment, promotion பெறுவதுபோல். அன்னை வாழ்வு சொந்தத் தொழில் போன்றது. வேலையில் risk இல்லை. பெரிய வருமானம் இல்லை. தொழில் அன்றாடம் risk. பெரிய இலாபம் வரலாம். முழு நஷ்டமும் வரலாம். வேலை செய்பவன் தொழிலில் அதிகம் சம்பாதிப்பவன்போல இருக்கப் பிரியப்படுகிறான். அவன் நினைவும், செயலும் பல வகையின. அவையாவன,

  • தானும் வேலையை விட்டுத் தொழில் ஆரம்பித்து வெற்றி பெறுபவன்.
  • யாராவது முதல் கொடுப்பார்களா என எதிர்பார்த்து இருப்பவன்.
  • அப்படி ஆரம்பித்த தொழிலில் திறமையில்லாததால் மீண்டும் பழைய சம்பளமே வருமானமாகப் பெறுபவன்.
  • தொழில் ஆரம்பிக்க தன் சொத்தெல்லாம் விற்று ஆரம்பிப்பவன்.
  • ஆரம்பித்த தொழிலால் சொத்தை இழப்பவன்.
  • சொத்தை இழந்து, வேலையையும் இழந்து வீட்டாரால் ஒதுக்கப்படுபவன்.
  • யாராவது முதலும் கொடுத்து, நிர்வாகமும் செய்து தனக்கு இலாபத்தில் பங்கு தர வேண்டும் என்பவன்.
  • முதலும் கொடுத்து, நிர்வாகமும் செய்து, முழு இலாபத்தையும் தனக்கே தர வேண்டும் என்பவன்.
  • இந்த வேலையிலேயே, தொழிலுடைய இலாபம் சம்பளமாக வேண்டும் என்பவன்.

நாம் எந்த மனநிலைக்குரியவர் என அறிதல் நன்று. ஆழ்ந்து யோசனை செய்தால் sincere ஆக உள்ளேயுள்ளவற்றை ஆராய்ந்தால், மேலுள்ள எல்லா மனநிலைகளும் வேறு வேறு சமயங்களில் நமக்கிருந்த உண்மை தெரியும். உண்மையை ஏற்பது sincerity. அதற்குரிய மாற்றத்தை நாடினால் பலன் வரும்.

உத்தியோகத்தை விடாமல் தொழில் வாராது என்பதுபோல் நம் இன்றைய வாழ்வுக்குரிய குணங்களை விடாமல், அன்னை அதிர்ஷ்டம் வாராது.

Prayer, Force : நாம் கேட்டுப் பெறுவது பிரார்த்தனை. அது சிறியது. ஆத்மா பெரியதானால் பிரார்த்தனையால் மோட்சமும் கிடைக்கும், திருவுருமாற்றமும் பெறலாம். நடைமுறையில் சிறியதுண்டு. சிறியவன் பெரிய பலன் பெற உள்ள வழிகளை ஆராயும் முயற்சி இது.

Force (சக்தி) செயல்பட்டால் கண நேரமானாலும் பெரியவை மட்டும் நடக்கும். எனவே அதை மட்டும் நாடுகிறேன்.

மனம் விலகினால் Force உள்ளே வரும். மறந்த நிலையில் விலகும். மற்ற நேரம் விலகாது. தூய்மையானால் Force அதிகமாகச் செயல்படும். பிரார்த்தனை இருக்கும் சுபாவத்தின் மூலம் செயல்படும். சக்தி சுபாவத்தை விலக்கி, மீறி செயல்படும்.

ரூ. 2,500 சம்பாதித்தவனுக்கு ஒன்றரை இலட்சம் சம்பளம் பெறும் வாய்ப்பு அனைவருக்கும் இருப்பதை அறியாதவனுக்கு என்ன பெயர்? அது மண். மண்ணாங்கட்டி. ஒவ்வொருவரும் தம்மைச் சோதனை செய்தால் இதேபோல் மண்ணாங்கட்டியாகப் பல சமயங்களிலிருப்பதை அறியலாம். மண்ணாங்கட்டி, மண்ணாங் கட்டியாக இருக்கும்வரை அவனுக்கு எதுவுமில்லை. அவன் கண் திறந்தால்தான் வாழ்வுண்டு. மண்ணாங்கட்டியும் தன் சொந்த காரியத்தில் சூரப்புலியாக இருப்பதுண்டு. அதனால் திறமையில்லை என்பதில்லை. அவன் மண்ணாங்கட்டியாக இருப்பதிலும் எதையோ ஒன்றை ரசிக்கிறான். அவன் ரசனைக்குத் தகுந்த பலன் வருகிறது.

மனிதச் சாதனை மனிதன் எதை ரசிக்கிறான் என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது.

எது பொய்? : ஒரு சர்ட் வாங்க வசதியில்லாத வீட்டில் 9 யோசனை எழும். வசதியுள்ள இடத்தில் 9 சட்டை உபயோகமில்லாமலிருக்கும். எப்படி அவனுக்கு இது வந்தது? ஒரு காலத்தில் இவன் ஒரு வேலையை 9 மடங்கு கவனமாகச் செய்தான். அதே சமயம் சோம்பேறி 1/9 பங்கு வேலை செய்து மீதியை ஏமாற்றினான். அன்று ஆபீசை ஏமாற்றினான் என நினைத்தான். தன்னையே ஏமாற்றிக் கொண்டதை அறியவில்லை. 9 மடங்கு வேலை செய்தவனுக்கும் 1/9 பாகம் செய்தவனுக்கும் இடைவெளி 81 மடங்கு. இதை மாற்றுவதே ஆரம்பம்.

எது பொய்? எல்லாமே பொய். "நான் பொய் சொல்வதில்லை" என்பவர் சொல்வதே பொய்.

Force வேலை செய்யும்பொழுது நாம் நினைப்பதற்கு முன் காரியம் நடந்து விடுகிறது. Force மனோவேகத்தை விட அதிவேகமாகச் செயல்படும். நம் receptivity பெற்றுக் கொள்ள அதே வேகம் வேண்டும்.

Two views: மனிதன் நினைப்பதற்கும், நினைக்க வேண்டியதற்கும் உள்ள வித்தியாசம்,

 
 
நினைப்பு


நினைக்க வேண்டியது

என் தேவையை அன்னை பூர்த்தி செய்ய வேண்டும் i.e. She must serve me.

நான் அன்னை கூறுவது போல் இருக்க வேண்டும். I must serve her.

Selfish behaviour

Selflessness

சமூகம் ஏற்கும் மனித வாழ்வு

அன்னை விரும்பும் யோக வாழ்வு

குறுகிய மனம

விசால மனப்பான்மை

மூட நம்பிக்கை

தெளிவான அறிவு

சௌகரியம்

கட்டுப்பாடு

Illussion

Reality

 



book | by Dr. Radut