Skip to Content

முன்னுரை

 

தமிழ் நாட்டு மக்கள்  சமீபகாலமாக அன்னை,  ஸ்ரீ அரவிந்தரை அறிந்து பெருவாரியாக ஸ்ரீ    அரவிந்த    ஆசிரமம்    வர ஆரம்பித்துள்ளனர்.   வேதகாலத்து பரம்பரையில்   வந்த   பகவான்   ஸ்ரீ அரவிந்தரை   உலகம்   யோகி   என அறியும்.    வேத,    உபநிஷத    ரிஷி பரம்பரையைச்   சேர்ந்த   பகவான் தன்னைக்  கவியாகக்  கருதினார்.

இப்பிரசுரம், புதியதாக அன்னையை  அறிந்தவர்களுக்காக எழுதப்பட்டது.    மதர்    சர்வீஸ் சொஸைட்டி  வெளியிட்ட  25  தமிழ் புத்தகங்களில்  வந்தவற்றின் சுருக்கமாக    இவ்வெளியீட்டை முதன்முறையாக   ஸ்ரீ   அரவிந்தரை அறிபவர்கட்கு  வழங்குகிறோம். இப்  பிரசுரத்தின்  சில  முக்கிய கருத்துக்கள்:

  • வாழ்வில்   இதுவரை பலிக்காத பிரார்த்தனைகள் அன்னையிடம் பலிக்கும்.
  • நேர்மையான    எந்த    பிரார்த்தனையும்  தவறாது  பலிக்கும்.
  • பிரார்த்தனைகள்    பலிக்கும் பொழுது    உலகில்    இதுவரை இப்படி      நடந்ததில்லையே எனும்படி   நிகழ்ச்சிகள்   நடந்து ஸ்ரீ   அரவிந்தரின்   ஆன்மீகத் திறனை  வெளிப்படுத்தும்.
  • அன்னயயும், ஸ்ரீ  அரவிந்தரையும் ஏற்று வணங்க எந்த சாங்கியமும் இல்லை.
  • தூய்மையான மனமே பிரார்த்தனைக்குரியது. நினைவே வழிபாடு,  நெஞ்சமே  ஆலயம்.
  •  அழியாது   என   நாம்   நம்பும் கர்மவினை,   பிரார்த்தனையால் அழிவதை   நாம்   கண்   எதிரில் காணலாம்.
  • உழைப்பும்  நேர்மையுமுள்ளவர் வருமானம் ஓராண்டில் இரு மடங்காகும்.
  •  உடலுக்கும்,    மனத்திற்கும், வாழ்வுக்கும்  இதுவரை  உலகில் இல்லாத           பாதுகாப்பை வழங்குவது   அன்னை   அருள் என்பது    அன்றாட    அன்பர் அனுபவம்.

ஆசிரமத்தில் தரிசன நாட்களாக  ஜனவரி  1,  பிப்ரவரி  21, ஏப்ரல்  24,  ஆகஸ்ட்  15,  நவம்பர்  17, நவம்பர்  24,  டிசம்பர்  5  ஆகியவை ஆண்டுதோறும்    கொண்டாடப் படுகின்றன.

சென்னையில் தினமும் அன்னை  ஆசிபெற  மாம்பலத்தில்

அன்னை  தியான  மையம்,

27,  1-வது  குறுக்குத்  தெரு,

மேற்கு  சி.ஐ.டி  நகர்,

சென்னை  -  600035

-இல்  நிறுவப்பட்டுள்ளது.

காலை    7.00    மணி    முதல் மாலை  9.00  வரை  தியான  மையம் திறந்திருக்கும்.

-கர்மயோகி

மனிதன்  கேட்காத  வரம்

எந்தத்  தொந்தரவும்  அருகில்  வராமலிருக்கவும்,  நம்  காரியங்கள் அனைத்தும்  பூரணமாகப்  பூர்த்தியாகவும்,  நம்  நல்லெண்ணத்தை  உலகம் ஏற்கவும்  முடியும்  என  மனிதன்  அறியவில்லை.  இது  அவனுள்  கேட்கத் தெரியாத  வரம்.

மனம்   நல்லெண்ணத்தால்   மட்டும்   நிறைந்திருந்து   அன்னை நினைவு   தானே   உள்ருந்து   அழைப்பாக   எழுந்தால்   இவ்வரம் தானே   தன்னைப்   பூர்த்தி   செய்து   கொள்ளும். 



book | by Dr. Radut