Skip to Content

பிரார்த்தனையும் சமர்ப்பணமும்

  • இது  இறைவன்  வரும்  தருணம்.  அன்னை  அழைக்கும்  நேரம்.
  • லீலையைக்  காணும்  அழைப்பு.
  • லீலையாகும்  வாய்ப்பு.
  • பிரார்த்தனை  மனிதனுக்கு.
  • சமர்ப்பணம்  அன்னைக்கு.
  • மனிதன்  மனத்தின்  அறியாமையால்  செயல்படுபவன்.
  • மூடனுடைய  நம்பிக்கை  மூடநம்பிக்கை.
  • அன்னை  ஆத்மாவில்  பிறந்தபின்  உலகை  நாடுவது  அர்த்தமல்ல.

 

 




பிரார்த்தனையும்  சமர்ப்பணமும்  என்ற  கட்டுரையின்  சுருக்கம்

  • உலகம்  ருசிக்கிறது.  அன்னை  ரசிக்கவில்லை.
  • ருசிக்கும்  உலகை  ரசிக்க  விரும்புவது  சிறியதன்  சிறுமை.
  • அழைக்கும்  அன்னையை  அன்பால்  ஏற்பது  அருள்.
  • அது   பேரருளில்   முடியும்.
  • அதிர்ஷ்டமிருக்கிறது  அன்னை  அருள்  வாழ்வு  பெற. ஆசையிருக்கிறது  வெறும்  மனிதனாய்  வாழ.
  • போட்டி   அருளுக்கும்,   ஆசைக்கும்!

 

வேலை  வெளியில்  இல்லை;

வேலை  உள்ளேயிருக்கிறது.

நல்லவர்  என்று  ஒருவரிருந்தால்,

அவர்  மனம்  அழகாக  இருக்குமேயானால்,

நிதானம்  நிறையும்பொழுது,

சந்தோஷம்  பொங்கி  வரும்.

------

 

அழைக்காமல்  அன்னை  அங்கு  வருவார்.

வந்தவர்  தானே  அதை  விட்டுப்  போகமாட்டார்.



book | by Dr. Radut