Skip to Content

Volume I Chapter 05: The Lucases

Chapter 5: The Lucases
லூகாஸ் குடும்பத்தினர்
 

Summary: Sir William and Lady Lucas have a quite large family. Their oldest daughter Charlotte is one of Elizabeth’s best friends and the chapter shows the conversations between Charlotte and the Bennet daughters as they discuss Darcy and his pride Charlotte feels his wealth justifies his pride.

சுருக்கம்: சர் வில்லியம் , லேடி லூகாஸ் ,அதிக குழந்தைகள் கொண்ட அவர்களது குடும்பத்தைப்பற்றி மேலும் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. அவர்களது மூத்த மகள் சார்லெட் , எலிசபெத்தின் நெருங்கிய தோழிகளுள் ஒருத்தி ஆவாள். இந்த அத்தியாயத்தில் , திரு. டார்சியைப்பற்றியும் அவனது கர்வத்தைப்பற்றியும் , எவ்வாறு அவன் அருகில் அரைமணி நேரமாக அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணியிடத்து அவனுக்குப் பேச விருப்பமில்லாமல் இருந்ததைப்பற்றியும் , எலிசபெத்திடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டான் என்பதைப்பற்றியும் லூகாஸ் குடும்பத்து பெண்களும் , பென்னட் குடும்பத்து பெண்களும் விவாதம் செய்வதை விவரிக்கிறது. அவளிடம் கடுமையாக நடந்து கொண்டது அவளை மிகவும் பாதித்தது என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

 

1
Within a short walk of Longbourn lived a family with whom the Bennets were particularly intimate. Sir William Lucas had been formerly in trade in Meryton, where he had made a tolerable fortune, and risen to the honour of knighthood by an address to the King, during his mayoralty. The distinction had perhaps been felt too strongly. It had given him a disgust to his business, and to his residence in a small market town; and, quitting them both, he had removed with his family to an house about a mile from Meryton, denominated from that period Lucas Lodge, where he could think with pleasure of his own importance, and, unshackled by business, occupy himself solely in being civil to all the world. For, though elated by his rank, it did not render him supercilious; on the contrary, he was all attention to everybody. By nature inoffensive, friendly, and obliging, his presentation at St. James's had made him courteous.
சர். வில்லியம் குடும்பத்தினர் ,லாங்பர்னுக்கு மிக அருகாமையில் வசித்து வந்தனர். திரு.பென்னட் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கம் உண்டு. வில்லியம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் மேயராக இருந்தபொழுது அவருக்கு “சர்”பட்டம் கிடைத்தது. “சர்”பட்டத்தின் பெருமையை உணர்ந்த வில்லியம் , வியாபாரத்தை விட்டுவிட்டு , மெரிடனிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்தார். அது லூகாஸ் இல்லம் என அழைக்கப்பட்டது. புதிய அந்தஸ்து கிடைத்தபோதும் அடக்கத்தை கைவிடவில்லை , சமுதாயத்தில் மதிப்பிற்குரியவராக நடந்து கொண்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். எல்லோருக்கும் உதவி புரிந்து அன்புடன் நடந்து கொண்டார். செயின்ட் ஜேம்ஸ் சபைக்கு சென்று திரும்பியதில் இருந்து அவர் கண்ணியமாக நடந்து கொண்டார்.
  1. Intimacy between families develops out of compatibility, submissiveness, culture, and desire not to dominate
    பொருத்தம், அடக்கம், பண்பு, அதிகாரம் செய்ய முடியாத மனநிலை குடும்பங்களை நெருக்கமாக்கும்.
  2. Intimacy is proximity
  3. Trade is a social activity where one relates to another in the context of a product honestly
    நேர்மையாக சரக்கை விற்க முயல்வது வியாபாரம்.
  4. Trade brings power, honour, wealth and status
    அதிகாரம் , அந்தஸ்து , நாணயம் ,செல்வம் தருவது வியாபாரம்.
  5. Trade that gives wealth may not give status
    செல்வம் தரும் வியாபாரம் அந்தஸ்து தருவதில்லை.
  6. Status acquired, not having come by itself will be no real status
    தானே வராமல் நாமே பெற்றுக் கொண்ட அந்தஸ்து, அந்தஸ்தாகாது.
  7. The minimum in a field satisfies most
    குறைந்தபட்ச சாதனை பெரும்பாலோர்க்கு திருப்தியளிக்கும்.
  8. The minimum is raised to the maximum by any one of the following:
    1) Organisation 2) not deserting the field 3) by a greater aspiration

    கீழ்க்கண்டவை குறைந்த பட்சத்தை அதிகபட்சமாக்கும்.
    1) ஸ்தாபனம் , 2) தொழிலை மாற்றாதது, 3) ஆர்வம்.
  9. Though service is rewarded, it was rewarded for the rich
  10. Anyone who comes near the king, the seat of power, shares his power
  11. Disgust of a field that raised one does not bring reputation to him in the new situation
    தான் வளர்ந்த துறையில் வெறுப்பு எழுந்தால் புதுத்துறை பிரபலம் தராது.
  12. Man kicks away the ladder by which he rose
  13. Distancing from others is a form of status
  14. Disgust of trade that elevated him makes him disgusting
    வியாபாரம் வெறுத்து உயர்ந்ததால் அவர் வெறுப்புக்குள்ளாகிறார்.
  15. The business that raised him instead of receiving gratitude receives disgust
  16. Rank by itself cannot elevate one
    பட்டம் மட்டும் மனிதனை உயர்த்தாது.
  17. Names of the houses are symbols of prestige
  18. He, who is aware of his importance, will not be important in the community
    தன் முக்கியத்தை அறிபவனுக்கு முக்கியத்துவமிருக்காது.
  19. One who wishes to be civil to all the world for its own sake, is certainly not civilised
    அனைவரிடமும் அழகாகப் பழகுவதே குறிக்கோள் எனில் அது நாகரீகமாகாது.
  20. Man dwells constantly on his small achievement
  21. The small saturates itself with self-adulation
  22. By pleasing others Lucas pleases himself
  23. Empty smallness is elated
  24. Small strength becomes supercilious by rising
  25. Being civil to all can be manners, not a profession
    அனைவருக்கும் மரியாதை செலுத்துவது பழக்கம்,தொழிலாகாது.
  26. Superciliousness is the result of elevation of an empty personality
    அதிகாரம் பெற்ற வெறும் மனிதன் அர்த்தமற்றுப் போவான்.
  27. Attentiveness to all given will have the minimum result
    அனைவரையும் கவனித்தால் எவருக்கும் திருப்தி படாது.
  28. Its maximum result will come when attention is received, not given
    முக்கியமானவரை அனைவரும் கவனித்தால், முழுப்பலன் வரும்.
  29. Energy in him expresses positively pleasing others
  30. Goodness rewarded is inoffensive
  31. He who has received no offence can be inoffensive
  32. Bingley is inoffensive by nature as well as his position
  33. Being inoffensive not only attracts people but wealth too
  34. Sir Lucas is an inoffensive Collins for which reason Charlotte married him
    சர். லூகாஸ் இனிமையான காலின்ஸ். அதுவே ஷார்லோட் காலின்ஸை மணந்த காரணம்.
  35. Inoffensiveness of an ignorant man will be received as ignorance
    அறிவில்லாதவனின் இதமான பழக்கத்தை உலகம் அறியாமையெனக் கொள்ளும்.
  36. A good man’s raising in the society makes him courteous
    நல்லவர் உயரும்பொழுது பழக்கம் பண்பால் மகிழும்.
2
Lady Lucas was a very good kind of woman, not too clever to be a valuable neighbour to Mrs. Bennet. They had several children. The eldest of them, a sensible, intelligent young woman, about twenty-seven, was Elizabeth's intimate friend.
திருமதி. லூகாஸ் நல்ல பெண்மணி. ஆனால் அறிவாளியில்லை. அவர்களுக்கு நிறைய குழந்தைகள். பெரியவள் புத்திசாலி , வயது 27. எலிசபெத்திற்கு நெருங்கிய தோழியும் ஆவாள்.
  1. Good parents when they are really good, bring luck to their children
    நல்ல பெற்றோரின் நல்லெண்ணம் குழந்தைகட்கு அதிர்ஷ்டம்.
  2. Insensible parents beget sensible children
    சொரணையற்றவர்க்கு சூட்சுமமான குழந்தைகள் பிறக்கும்.
  3. A good kind woman is incapable of malice
  4. Lady Lucas, to preserve her new status, is obliged to be good
  5. Even she is not incapable of spreading Lydia’s elopement
  6. Real kindness and goodness is helpless against human nature
  7. Cleverness, in the last resort, prevents good fortune
    கெட்டிக்காரத்தனத்தின் சாயலும், அதிர்ஷ்டத்தைத் தடை செய்யும்.
  8. For a sensible intelligent person luck may be delayed, but when it comes it is solid good luck
    அறிவும் சொரணையும் உள்ளவர் அதிர்ஷ்டம் தள்ளிப் போனால், வரும்பொழுது சேர்ந்து வரும்.
  9. By 27 a girl at that time goes out of the marriage market
  10. Charlotte’s intimacy with Elizabeth brings Longbourn to her
    எலிசபெத்துடனிருந்த நெருக்கம் ஷார்லோட்டிற்கு லாங்பார்னைப் பெற்றுத் தந்தது.
  11. Intimacy in friendship is brought about in many ways. One of them is the capacity to appreciate the other’s endowments
    நட்பில் நெருக்கம் ஏற்படும் காரணங்கள் பல.
3
That the Miss Lucases and the Miss Bennets should meet to talk over a ball was absolutely necessary; and the morning after the assembly brought the former to Longbourn to hear and to communicate.
இரு குடும்பத்தினரின் பெண்களும் , முதல் நாள் நடந்த நடனத்தைப்பற்றி பேசுவது அவசியம் என நினைத்தனர். அதனால் லூகாஸ் குடும்பத்தின் பெண்கள் லாங்பர்னுக்கு வந்தனர்.
  1. Common interests, when shared copiously in detail, enrich life
    பொதுவான விஷயங்களை விவரமாகப் பகிர்ந்து கொண்டால் நட்பு சிறக்கும்.
  2. A ball is the real centre of social existence of women
  3. The less important goes to the weighty neighbour
  4. A ball is more lived before and after
    நடனம் ஆடுமுன்னும், பின்னும் ஜீவனோடிருக்கும்.
4
"You began the evening well, Charlotte," said Mrs. Bennet, with civil self-command, to Miss Lucas. "You were Mr. Bingley's first choice."
“சார்லெட் , அம்மாலைப் பொழுது உனக்கு மிகவும் நன்றாக ஆரம்பித்தது. உன்னுடன்தான் பிங்கிலி முதலாவதாக நடனமாடினான்”என கம்பீரமாக ஆரம்பித்தாள் திருமதி. பென்னட்.
  1. Manners can be acquired and practiced by any character of any intensity
    எவரும் எந்த பழக்கத்தையும் பயின்று பழகலாம், எந்த அளவுக்கும் பயிலலாம்.
  2. Civil Self-command is a social virtue, however thin it is
  3. To please another at least by speech is not easily acquired
5
"Yes; but he seemed to like his second better." “ஆமாம் , ஆனால் அவனுக்கு இரண்டாவது நடனம்தான் பிடித்திருந்தது எனத் தெரிகிறது.”
  1. Miss Lucas speaks the truth in the same strain
  2. Raise in social status, obliges one to be courteous
  3. It is good will that returns a genuine compliment to a polite one
    பாராட்டுபவருக்கு பொருத்தமான நல்ல பதில் கூறுவது நல்லெண்ணம்.
  4. Miss Lucas is incapable of competition
  5. Without goodwill, good speech is impossible
  6. Jane’s beauty was striking. So Bingley readily chose her
  7. His marrying her readily in the end is shown by this ready choice
  8. The unreserved good opinion of Charlotte expresses the value of sincerity
  9. Sincerity is a value that takes one to the causal plane
6
"Oh! You mean Jane, I suppose, because he danced with her twice. To be sure that did seem as if he admired her -- indeed I rather believe he did -- I heard something about it -- but I hardly know what -- something about Mr. Robinson."
“ஓ! நீ ஜேனைப் பற்றிச் சொல்கிறாயா. ஆம். அவளுடன் இருமுறை ஜோடி சேர்ந்தான். அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் , கேள்விப்பட்டேன். ஆனால் திரு. ராபின்ஸனைப் பற்றி ஏதோ கேள்விப் பட்டேன். சரியாக என்ன என்று தெரியவில்லை.”
  1. What Mrs. Bennet believed she saw
  2. Affectations are skin deep
    பிரியம் உதடுவரை.
  3. To accept a compliment and enjoy it gives a further life to it
    பாராட்டை ஏற்று மகிழ்வது அதற்கு ஜீவனளிக்கும்.
  4. Admiration extracted is counter productive
    பாராட்டைக் கேட்டுப் பெறுவது எதிரான பலன் தரும்.
7
"Perhaps you mean what I overheard between him and Mr. Robinson: did not I mention it to you? Mr. Robinson's asking him how he liked our Meryton assemblies, and whether he did not think there were a great many pretty women in the room, and which he thought the prettiest? And his answering immediately to the last question -- 'Oh! The eldest Miss Bennet, beyond a doubt; there cannot be two opinions on that point.'"
“பிங்கிலியும் , ராபின்ஸனும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்க நேர்ந்ததை உங்களிடம் சொல்லவில்லை என்கிறீர்களா? மெரிடன் அரங்குகள் எவ்வாறு உள்ளன , இங்கு பல பெண்மணிகள் அழகாகத் தென்படுகிறார்களா , அதில் யார் மிகவும் அழகு என்று திரு. ராபின்ஸன் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவன் , பென்னட்டின் மூத்த மகள்தான் அழகு , இதில் சந்தேகத்திற்கே இடமில்லை என்றான்.”
  1. It was not a period where the culture of not overhearing was born
    அந்த நாளில் ஒட்டுக் கேட்பது அவமானமில்லை.
  2. Robinson elicits Bingley’s opinion; she does not wait for him to speak, not in taste
  3. Bingley’s good opinion of Jane is unequivocal
  4. To explain the obvious is the way stupidity discovers its intelligence
    தெரிந்ததைப் புதியதாகப் புரிந்து கொள்வது மடமையின் அறிவு.
8
"Upon my word! Well, that was very decided indeed -- that does seem as if -- but, however, it may all come to nothing, you know."
“அப்படியா , அவன் நினைப்பது என்ன என்று தெளிவாக உள்ளது. அதனால் ஒருவேளை அவன் சு , சரி , இதனால் ஒன்றும் நடக்காமலும் போகலாம்.”
  1. To enjoy a truth or compliment more fully than it permits stands in the way of its higher accomplishment
    ஒரு விஷயத்தையோ, பாராட்டையோ அளவு கடந்து அனுபவிப்பது உயர்ந்த அனுபவத்திற்குத் தடை.
  2. A shallow character’s satisfaction disrupts work
    எளிய ஷார்லோட்டின் திருப்தி வேலையைக் கெடுக்கும்.
  3. Population desires that the newly arrived VIP admire the locality
    புதிதாக வந்த பெரிய மனிதர் ஊரைப் பாராட்ட வேண்டும் என உள்ளூர்வாசிகள் பிரியப்படுவர்.
  4. Opinions expressed too fully lose their power of accomplishment
    அபிப்பிராயத்தை அதிகமாகத் தெரிவிப்பது அர்த்தமற்றுப் போகும்.
  5. Pretended modesty speaks out the truth involuntarily
    அடக்கமாக நடித்தால் உள்ளது தானே வெளி வரும்.
  6. Mrs. Bennet’s ‘It may all come to nothing’ becomes initially true
9
"My overhearings were more to the purpose than yours, Eliza," said Charlotte. "Mr. Darcy is not so well worth listening to as his friend, is he? Poor Eliza! To be only just tolerable."
“பிங்கிலியின் பேச்சை கேட்டதற்கு நாம் சந்தோஷப்படலாம். ஆனால் டார்சியின் பேச்சை கேட்காமலேயே இருந்திருக்கலாம். பாவம் உன்னைப் பற்றி கடுமையாக விமரிசனம் செய்து விட்டான். நண்பனைப் போலல்ல அவன்”என்றாள் சார்லெட்.
  1. One index of culture is the attitude to overhearing
    ஒட்டுக் கேட்பது கெட்ட பழக்கம்.
  2. Charlotte overhears. It is one reason why her value of good will is diluted
  3. He who does good to another slightly compensates it before or after
    சிறிய நல்லெண்ணம் எதிராகவும் செயல்பட விழையும்.
  4. Charlotte’s reporting ‘tolerable’ is not in good taste
  5. Mrs. Bennet too is sensitive
    Mrs. பென்னட் சூடாக இருக்கிறார்.
  6. Later, Lizzy says it is a misfortune to like him
    பின்னால் எலிசபெத் டார்சியைப் பிடிப்பது துர் அதிர்ஷ்டம் என்கிறாள்.
  7. One desists from overhearing when the desire not to intrude into one’s privacy becomes a sensitivity
    பிறர் விஷயத்தில் தலையிடக் கூடாது என்பது சொரணையான பண்பானால் ஒட்டுக்கேட்பது என்பது வெறுக்கத்தக்க பழக்கமாகும்.
  8. Social development has several cultural landmarks of which the inability to overhear is one
    நாகரீகம் என்பதற்கு பல்வேறு பண்பின் சின்னங்களுண்டு. அவற்றுள் ஒன்று ஒட்டுக் கேட்க வெட்கப்படுவது.
  9. A human situation lends itself to infinite interpretations since the situation and the observer are infinite
    மனிதர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விளக்கும் முறைகட்கு முடிவில்லை. ஏனெனில் நிகழ்ச்சி அனந்தம். விமர்சனம் செய்பவர் அனந்தம். விளக்கம் முடிவற்றது.
  10. The outer reflects the inner is an absolute rule. The more you insist on it, the greater is the self-awareness as well as life-awareness
    புறம் அகத்தைப் பிரதிபலிப்பது விலக்கில்லாத விதி. அதைத் தீவிரமாகப் பின்பற்றினால் அதிகமாகத் தன்னையும், வாழ்வையும் அறிய முடியும்.
10
"I beg you would not put it into Lizzy's head to be vexed by his ill-treatment, for he is such a disagreeable man, that it would be quite a misfortune to be liked by him. Mrs. Long told me last night that he sat close to her for half an hour without once opening his lips."
“தயவு செய்து மேலும் லிசியைப் புண்படுத்தாதே, அவனைப்போல் ஒருவனுக்கு லிசியைப் பிடிக்காமல் போனதே ஒரு பெரிய அதிர்ஷ்டம்தான். தன் பக்கத்தில் சுமார் அரை மணி நேரமாக அமர்ந்திருந்தும் , டார்சி தன்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை” என திருமதி.லாங்க் சொன்னாள்.
  1. Aloofness is indicative of superiority
    தனித்திருப்பது உயர்வுக்கு அடையாளம்.
  2. Even Mrs. Bennet is sensitive to her speaking so. Meryton does not enjoy high manners
  3. Mrs. Bennet’s ‘misfortune’ later comes true
  4. Not to speak without introduction is British culture
11
"Are you quite sure, ma'am? Is not there a little mistake?" Said Jane. "I certainly saw Mr. Darcy speaking to her."
“ உனக்கு நிச்சயமாகத் தெரியுமா , தவறாக ஒன்றும் சொல்லவில்லையே” என்ற ஜேன் , “நான் அவளுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேனே , இது நிச்சயம்” என்றாள்.
  1. Jane finds no fault in Darcy
  2. Easy access is a measure of politeness
    நெருங்கிப் பழகினால் மரியாதைக்குரியவராவார்.
12
Ay -- because she asked him at last how he liked Netherfield, and he could not help answering her; -- but she said he seemed very angry at being spoke to."
“ஆமாம், நெதர்பீல்ட் பிடித்திருக்கிறதா என திருமதி. லாங்க் கேட்டதற்கு , அவன் பதில் சொல்லும்படி ஆயிற்று. அதுவும் அவனுடன் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபத்தை கிளறியது என்றும் சொன்னாள்.”
  1. What one is to everyone inevitably is manners, not when it is selective
    அனைவரிடமும் பழகுவது பழக்கம். சிலரிடம் மட்டும் பழகுவது பழக்கமாகாது.
  2. Mrs. Long speaks without introduction, a rude manner
13
"Miss Bingley told me," said Jane, "that he never speaks much, unless among his intimate acquaintance. With them he is remarkably agreeable."

அறிமுகம் இல்லாதவர்களிடம் , அவன் பேசியதே கிடையாது. ஆனால் , தெரிந்தவர்களிடம் நன்றாகப் பழகுவான் என பிங்கிலியின் சகோதரி என்னிடம் கூறினாள் ” என்றாள் ஜேன்.
  1. Nowhere is evil seen without a small admixture of good
    நல்லது கலக்காமல் கெட்டது இருக்காது.
  2. While in love, one does not like to hear anything adverse about anything related to the lover, even distantly
    காதல் எழுந்தபின் காதலியுடன் சம்பந்தப்பட்ட எந்த தவறான செய்தியையும் மனம் கேட்டுக் கொள்ள சம்மதிக்காது.
  3. Jane justifies Darcy’s behaviour. Her wanting to be flawless makes her think the world is flawless
  4. Harmony of the weak reflects weakness, not harmony
14
"I do not believe a word of it, my dear. If he had been so very agreeable, he would have talked to Mrs. Long. But I can guess how it was: everybody says that he is eat up with pride, and I dare say he had heard somehow that Mrs. Long does not keep a carriage, and had come to the ball in a hack chaise."
“நான் இதை சிறிதும் நம்ப மாட்டேன். அவன் நன்றாக பழகுபவனாக இருந்தால் திருமதி. லாங்குடன் பேசியிருக்க வேண்டும். அவன் மிகவும் கர்வம் படைத்தவன் என எல்லோரும் சொல்கிறார்கள். திருமதி. லாங்கிற்கு வண்டிகூட இல்லை , வாடகை குதிரையில் வந்திருப்பதை எப்படியோ அறிந்து கொண்ட அவன் , அவளை மதிக்கவில்லை என நினைக்கிறேன்.”
  1. Standards of evaluation vary, sometimes totally misses the point
    ஒருவரைப் பலவகையாகப் புரிந்து கொள்ளலாம்.
    பல சமயம் விஷயம் தலைகீழே போகும்.
  2. More than one interpretation is possible for any event
    எந்த விஷயத்தைப் பற்றியும் பல கருத்து எழும்.
  3. One who does not speak to strangers visits assemblies as a vulgar ostentation
    அனைவரிடமும் பழகாதவர் கூட்டத்திற்கு வருவது வந்து பழகாமல் தனித்திருக்கப் பிரியப்படுவதைப் பலரும் காண விழைவதாகும்.
  4. Opinions once formed try for self-justification
    அபிப்பிராயம் என ஏற்பட்டுவிட்டால் அது கரையாது. தான் சரி எனக் கருதும்.
  5. Reasoning stretches beyond reality limitlessly
    அறிவுரை விவாதம் அளவு கடந்து தொடரும்.
  6. False reasoning reinforces itself more from its own point of view
    தவறாக அறிவு விவாதிக்க ஆரம்பித்தால், தன் கண்ணோட்டத்திலேயேபேசும்.
  7. Mrs. Bennet has a fertile imagination about her not having a carriage
15
"I do not mind his not talking to Mrs. Long," said Miss Lucas, "but I wish he had danced with Eliza."
“திருமதி. லாங்குடன் பேச வேண்டாம். அதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை”என்ற மிஸ். லூகாஸ் “ஆனால் அவன் எலிசாவுடன் நடனமாடியிருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்”என்றாள்.
  1. Affectionate solicitude is one relationship of a sensible person to one who is strong and bright in some ways
    தெளிவாகப் பளிச்சென இருப்பவரிடம் அறிவுள்ளவர் பழகினால் அது அன்பு கலந்த இனிய பழக்கமாகும்.
  2. Miss Lucas has great goodwill towards Lizzy, but indelicate
  3. There are grades of offences in people who are impolite
    மரியாதையின்றிப் பேசுபவர் மனத்தைப் புண்படுத்துவது பல கட்டங்களில் உண்டு.
  4. Popularity of one and notoriety of another are simultaneous and equal
    ஒருவர் பிரபலமும் அடுத்தவர் கெட்ட பெயரும் சமம் , ஒரே சமயத்திலெழும்.
16
"Another time, Lizzy," said her mother, "I would not dance with him, if I were you."
“லிசி , நானாக இருந்தால் இன்னொரு முறை அவனுடன் நடனமாட மாட்டேன்” என்றாள் அவளது தாயார்.
  1. Mrs. Bennet persisting in denouncing Darcy, confirms in the subtle plane her wedding
  2. Offended dignity seeks revenge but it invites it in a greater measure
    புண்பட்ட உள்ளம் பழிவாங்கப் பிரியப்படும்.
    நடைமுறையில் அது ஏராளமாக அதற்குப் பலியாகும்.
17
"I believe, ma'am, I may safely promise you never to dance with him."
“கவலைப்படாதேம்மா , கண்டிப்பாக அவனுடன் ஆட மாட்டேன் ” என்று உறுதியளித்தாள் லிசி.
  1. Children, though of a different type, readily agree with their parents
    எவ்வளவு மாறுபட்டாலும், குழந்தைகள் பெற்றோரை தயக்கமின்றி ஏற்றுக் கொள்கின்றனர்.
  2. One is affected not so much by the act, as the person who commits the act
    செயல் பாதிக்கும்பொழுது செயலைவிட செய்பவர் முக்கியமாகும்.
  3. Offence is sensitivity touched negatively
    நுட்பமான விஷயத்தைத் தொட்டால் புண்படும்.
18
"His pride," said Miss Lucas, "does not offend me so much as pride often does, because there is an excuse for it. One cannot wonder that so very fine a young man, with family, fortune, everything in his favour, should think highly of himself. If I may so express it, he has a right to be proud."
“அவனுடைய கர்வம் என்னை சிறிதும் பாதிக்கவில்லை. கௌரவமான குடும்பம் ,சொத்து என்று எல்லாம் சாதகமாக அமைந்துள்ள ஒரு இளம் வாலிபனுக்கு கர்வம் இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அவனுக்கு கர்வப்பட எல்லா தகுதியும் இருக்கிறது என நான் நினைக்கிறேன் ” என்றாள் மிஸ்.லூகாஸ்.
  1. Any act can be fully justified from the point of view of the actor
    எவரும் தன் செயல் நியாயமானது எனப் பேச முடியும்.
  2. No one can have a right to certain offences
    எந்தத் தவறு செய்யவும் எவருக்கும் உரிமையில்லை.
    Children can be guided, not scolded.
    குழந்தைகளை பராமரித்து வளர்க்கலாம், திட்டக் கூடாது.
    Overflowing effusion has no room for advice or correction.
    செய்தி செறிந்து நிரம்பிய மனம் கேட்டுக் கொள்ளக் கூடியதில்லை. அவர்களைத் திருத்த முடியாது.
  3. Any offence will be tolerated from certain persons
    எந்தத் தவற்றையும் சிலர் செய்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
  4. Any act can change its character in changed circumstances
    நிலைமை மாறினால் செயலின் பலன் மாறும்.
  5. Miss Lucas is not offended by a wealthy man’s pride. She marries a stupid man for his wealth unoffended by his stupidity
  6. Money is social power. It excuses even arrogance
  7. The rights in the society are the collection of individual attitudes
    சமூகத்தில் உரிமை என்பது தனிப்பட்டவர் அபிப்பிராயத்தின் தொகுப்பு.
  8. Emotional rationality confines itself to emotions experienced
    ஒருவர் அனுபவித்த உணர்ச்சிகள் அவருடைய நியாய மனப்பான்மையின் உணர்ச்சியை நிர்ணயிக்கும்.
  9. Information, opinions, and knowledge press for expression
    அபிப்பிராயம், செய்தி, அறிவு வெளிப்படத் துடிக்கும்.
  10. Pedantry is to speak what one has read
    தான் படித்ததைப் பேசுவது பாண்டித்தியத்தின் பெருமை.
  11. That which distinguishes vanity from pride is discrimination
    பாகுபாடு வீண் பெருமை வேறு, கர்வம் வேறு என அறியும்.
  12. Charlotte admires family and fortune. They come to her as wealth and patronage
  13. Also family and fortune came to Elizabeth who scorned it in a greater measure. The same result can issue for opposite reasons
  14. Mind can be rational, not emotions
  15. Ideas of Mind press for expressions
19
"That is very true," replied Elizabeth, "and I could easily forgive his pride, if he had not mortified mine."
ஆம் , உண்மைதான் , அவன் மட்டும் என்னை மட்டம் தட்டாமலிருந்திருந்தால் , நானும் அவனது கர்வத்தை மன்னித்திருப்பேன் ”என்றாள் எலிசபெத்.
  1. Fully formed opinions find oral expressions
    கருத்து முழுமை பெற்றால் சொல்லாக வெளி வரும்.
  2. Wealth in a small man overrides culture, turn to enjoyable possessions
20
"Pride," observed Mary, who piqued herself upon the solidity of her reflections, "is a very common failing, I believe. By all that I have ever read, I am convinced that it is very common indeed; that human nature is particularly prone to it, and that there are very few of us who do not cherish a feeling of self-complacency on the score of some quality or other, real or imaginary. Vanity and pride are different things, though the words are often used synonimously. A person may be proud without being vain. Pride relates more to our opinion of ourselves, vanity to what we would have others think of us."
தன் கருத்துக்களை ஆணித்தரமாக நம்பும் மேரி“ வீண்பெருமை என்பது தவிர்க்க முடியாதது. ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பெருமைப்படுவது மனித சுபாவம். காரணம் நியாயமாகவும் இருக்கும் , அல்லது நம் கற்பனையாகவும் இருக்கலாம். வீண்பெருமை - கர்வம் இரண்டையும் சேர்த்துதான் நாம் எப்பொழுதும் பேசுவோம் , ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல் ஒருவன் கர்வப்படலாம். சாதாரணமாக , கர்வம் என்பது நாம் நம்மைப் பற்றியே பெரியதாக நினைத்துக் கொள்வதுதான். ஆனால் வீண்பெருமை என்பது மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது”எனக் கூறினாள்.
  1. Darcy’s offence to Eliza finds justification from neglected Mary
  2. Self-complacency, Self-esteem, Pride, Vanity are the grades in self-evaluation
  3. Mary is given to contemplation
    மேரி சிந்திப்பவள்.
  4. Her distinguishing vanity and pride explain her experience
    வீண்பெருமை, கர்வத்தைப் பிரிப்பது மேரியின் திறன்.
  5. A rich man evokes the aspiration of others to become rich
    ஒரு பணக்காரன் மற்றவர்களைச் சம்பாதிக்கத் தூண்டுவான்.
  6. By virtue of something being a common failing, it can be understood but not allowed
    அனைவரும் செய்யும் தவற்றை ஒருவர் செய்தால் புரிவது சுலபம் , ஏற்க முடியாது.
  7. Weaknesses like pride survive because they are widespread
    கர்வம் போன்ற குறைகள் பரவலாக இருப்பதால், எளிதில் அழிவதில்லை.
  8. Pride is one’s own opinion about himself
    தன்னைப்பற்றித் தானறிவது கர்வம்.
  9. Vanity is what one wants others to think of himself
    வீண் பெருமை பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது.
21
"If I were as rich as Mr. Darcy," cried a young Lucas, who came with his sisters, "I should not care how proud I was. I would keep a pack of foxhounds, and drink a bottle of wine every day."
மிஸ். லூகாஸின் சகோதரன் “டார்சியைப் போல் நானும் பணக்காரனாய் இருந்தால் , கர்வப்படுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். நிறைய வேட்டை நாய்கள் வைத்திருப்பேன். ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் மது அருந்துவேன்<”என்றான்.
  1. Man aspires for prestige
    மனிதன் தேடுவது மரியாதை.
  2. Money is the symbol of prestige
    பணம் மரியாதையைக் குறிக்கும்.
  3. The only value for Money is use value
    வரவு செலவு தவிர பணத்திற்குப் பயனில்லை.
  4. Aspiration is for dissipation in the young Lucas
    லூகாஸ் பையனுக்கு அழிச்சாட்டம் இலட்சியம்.
22
"Then you would drink a great deal more than you ought," said Mrs. Bennet; "and if I were to see you at it, I should take away your bottle directly."
“நீ குடிக்க ஆரம்பித்தால் அளவுக்கு அதிகமாய் குடிப்பாய். நான் பார்த்தால் உன்னுடைய பாட்டிலை பிடுங்கிக் கொண்டு விடுவேன்”என்றாள் திருமதி. பென்னட்.
  1. To deprive another of pleasure even in imagination is jealousy
    கற்பனையிலும் அடுத்தவர் சந்தோஷம் கெட நினைப்பது பொறாமை.
  2. Even as a thought Mrs. Bennet could not concede prosperity to another
  3. Mrs. Bennet would not suffer anyone else enjoying
    Mrs. பென்னட்டிற்கு எவரும் சந்தோஷமாக இருப்பது பிடிக்காது.
  4. Imaginary positions are intensely real to excitable personalities
  5. Physical personalities cannot stop quarrelling unless separated
  6. Contentions physical continue as long as the scène lasts
    பிடிவாதக்காரனுடைய பிடிவாதம் காட்சி முடியும் வரை நீடிக்கும்.
  7. Mrs. Bennet and the young Lucas are of the same level
23
The boy protested that she should not; she continued to declare that she would, and the argument ended only with the visit.
“அவ்வாறு செய்யக் கூடாது”என அவன் சொல்ல , “அப்படித்தான் செய்வேன்” என இவள் சொல்ல , வாக்குவாதத்துடன் அன்றைய சந்திப்பு முடிந்தது.
  1. Imaginary ideas and discussion will last till imagination is there
    கற்பனையான கருத்தும் விவாதமும், கற்பனையுள்ளவரை நீடிக்கும்.



story | by Dr. Radut