Skip to Content

Volume I Chapter 04: The First Ball is Discussed

Chapter 4: The First Ball is Discussed

முதல் நடனம் விவாதிக்கப்படுகிறது

 

Summary: In each other’s confidence, Jane tells Elizabeth that she admires Bingley and enjoys his sisters’ company as well. Elizabeth is not so easily charmed and finds her sister too easy to impress. She finds Bingley’s sisters proud. Miss Bingley, the unmarried of his sisters is to live with him in Netherfield and the friendship between Darcy and Bingley is revealed to be rather deep with Bingley having a high regard for Darcy’s intelligence. 
 
சுருக்கம்: தன்னுடைய அந்தரங்கத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் , தான் பிங்கிலியை பாராட்டுவதாகவும் , அவனுடைய சகோதரிகளின் நட்பை ரசிப்பதாகவும் ஜேன் எலிசபெத்திடம் கூறுகிறாள். எலிசபெத்தால் அவர்களை ரசிக்க முடியவில்லை , ஜேனை எவரும் சுலபத்தில் நம்ப வைத்துவிடலாம் என அறிகிறாள். "மற்றவர்களது முட்டாள்தனத்தையும் , அர்த்தமற்ற செயலையும் பார்க்க முடியாதது." அவனது இரு சகோதரிகளும் கர்வமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறாள் , பிங்கிலி சொந்தமாக எஸ்டேட் வாங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதையும் கவனிக்கிறாள். (அவன் தனது தகப்பனாரிடமிருந்து , பணத்தை சொத்தாக பெற்றிருக்கிறான்.) மிஸ். பிங்கிலி , திருமணமாகாத அவனது சகோதரி அவனுடன் நெதர்பீல்டில் வசிப்பாள் , பிங்கிலிக்கும் , டார்சிக்கும் இடையே இருக்கும் நட்பு ஆழமாகத் தெரிகிறது , டார்சியின் புத்திசாலித்தனத்தின்மேல் பிங்கிலிக்கு பெரும் மதிப்பு இருக்கிறது.
 
 
1
When Jane and Elizabeth were alone, the former, who had been cautious in her praise of Mr. Bingley before, expressed to her sister how very much she admired him.
இதுவரை தன் விருப்பத்தை அதிகம் வெளிக்காட்டாமல் இருந்த ஜேன் , எலிசபெத்துடன் தனியாக இருக்கும்பொழுது , தான் பிங்கிலியை மிகவும் வியப்புடன் ரசித்ததை வெளியிட்டாள்.
  1. True love is offended in mentioning it to another
  2. Acknowledging her admiration to Elizabeth, Jane’s mind moves into the subtle plane
  3. Elizabeth’s love for Jane is in the causal plane, a plane of accomplishment
  4. Confidence is the acme of intimacy
    நெருக்கம் நம்பிக்கையில் பூர்த்தியாகும்.
    To share one’s joy, confidence is necessary
    நம்பிக்கையில்லாமல் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது.
    To share one’s sorrows, intimacy and confidence are necessary
    சோகத்தைப் பகிர்ந்து கொள்ள நம்பிக்கையும் நெருக்கமும் தேவை.
2
"He is just what a young man ought to be," said she, "sensible, good-humoured, lively; and I never saw such happy manners! -- so much ease, with such perfect good-breeding!"
"வாலிபன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற அவள் "நல்ல அறிவும் , நகைச்சுவை உணர்ச்சியும் , கலகலப்பான சுபாவமும் கொண்ட அவன் மிகவும் இயல்பாகவும் , நல்ல பண்புள்ளவனாகவும் இருக்கிறான்" என்றாள்.
  1. Love sees no blemish
  2. To a lady in love, a handsome man is a perfect man
  3. Mutual confidence creates power
  4. Breeding makes for smooth relationships
    வளர்ப்பு அழகாகப் பழக உதவும்.
3
"He is also handsome," said Elizabeth; "which a young man ought likewise to be, if he possibly can. His character is thereby complete."
"அவன் அழகாகவும் இருக்கிறான்" என்ற எலிசபெத் "இளைஞன் என்றால் அழகும் வேண்டும். அப்பொழுதுதான் அவன் முழு இளைஞனாவான்" என்றாள்.
  1. Wishful thinking has no limits
    கற்பனைக்கு அளவில்லை.
  2. Evaluation of another is according to the suitability of the self
    பிறரையறிய முயல்வது
4
"I was very much flattered by his asking me to dance a second time. I did not expect such a compliment."
"இரண்டாவது முறை என்னை ஆட அழைத்ததைக் கேட்டு மிகவும் சந்தோஷமாகி விட்டது. இந்த பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை."
  1. Compliments come when unexpected
    பாராட்டு எதிர்பார்க்காத பொழுது வரும்.
  2. Not expecting made him ask
  3. Absence of rivalry or jealousy entitles one to receive the very best in the circumstances
    போட்டியும் பொறாமையுமில்லாவிட்டால் நன்றாக வளர முடியும்.
5
"Did not you? I did for you. But that is one great difference between us. Compliments always take you by surprise, and me never. What could be more natural than his asking you again? He could not help seeing that you were about five times as pretty as every other woman in the room. No thanks to his gallantry for that. Well, he certainly is very agreeable, and I give you leave to like him. You have liked many a stupider person."
"ஆனால் நான் எதிர்பார்த்தேன். நம் இரண்டு பேரிலுள்ள வித்தியாசமே இதுதான். பாராட்டை கண்டு நான் எப்பொழுதுமே ஆச்சரியப்பட்டதில்லை. ஆனால் நீ அப்படியில்லை. அவனால் எப்படி உன்னை இரண்டாம் முறையாக நடனமாட கேட்காமலிருக்க முடியும். அங்கு இருந்தவர்களிலேயே நீ ஒருத்திதான் எல்லோரையும்விட ஐந்து மடங்கு அழகாக இருந்தாய். அதனால் அவனுடைய இந்த வீர தீரத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சரி , பார்ப்பதற்கு மோசம் ஒன்றுமில்லை , அது உன் இஷ்டம். இவனைவிட மோசமானவர்களை நீ விரும்பியிருக்கிறாய்."
  1. Good will is powerful
  2. Elizabeth’s expectation is good will
  3. More than her beauty, it is Elizabeth’s good will that gets Jane married
  4. Self-forgetful good will belongs to self-giving
    தன்னை மறந்த நல்லெண்ணம் அர்ப்பணம்.
  5. Her self-forgetful goodwill for Jane brings her one who offers to her after self- transformation
    எலிசபெத்தின் தன்னையிழந்த நல்லெண்ணம் தன்னைத் திருவுருமாற்றி அவளுக்கு அளிக்கும்படி டார்சியைச் செய்தது.
  6. To wish another to receive a compliment is the height of good will
    அடுத்தவருக்குப் பாராட்டு வேண்டும் என விரும்புவதைவிட உயர்ந்த நல்லெண்ணமில்லை
  7. For the natural thing to happen, the atmosphere must be normal
    நடக்க வேண்டியது நடக்க சூழல் முறையாக இருக்க வேண்டும்.
  8. Intelligence repels
    அறிவுடையவனை விலக்குவர்.
    Stupidity is agreeable
    மடையனை ஏற்பார்கள்.
  9. Stupidity is attractive to men and women
  10. Stupidity with good manners is extremely popular
    மடையனின் இனிய பழக்கம் பிரபலம் தரும்.
6
"Dear Lizzy!"
“ஓ , லிசி.”
  1. Jane could never conceive she was stupid. She is oblivious
7
"Oh! You are a great deal too apt, you know, to like people in general. You never see a fault in anybody. All the world are good and agreeable in your eyes. I never heard you speak ill of a human being in my life."
“உனக்கு எல்லோரையும் பிடிக்கும். எவரிடமும் ஒரு குறையும் தெரியாது. உன் பார்வையில் எல்லோரும் நல்லவர்கள் , ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள். நீ யாரைப்பற்றியும் குற்றம் கூறி இதுவரை நான் கேட்டதில்லை”.
  1. Capacity not to see a fault in another is to think one has no faults
    பிறரிடம் குறை காணாமலிருக்க, அவரிடம் குறையில்லை என்று நினைக்க வேண்டும்.
  2. Jane is superstitious. She sees no faults. No one’s faults disturb her in the end
  3. Incapacity to see a fault prevents life from bringing any fault
    குறையைக் காண முடியாவிட்டால், நம்மிடம் குறை வளராது.
8
"I would wish not to be hasty in censuring any one; but I always speak what I think."
“நான் யாரைப் பற்றியும் அவசரமாக எந்த குறையும் சொல்ல மாட்டேன். ஆனால் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்லிவிடுவேன்.”
  1. Hesitation to censure is a spiritual quality
    கண்டிக்கத் தயங்குவது ஆன்ம விழிப்பு.
  2. Incapacity to censure is capacity to accomplish
  3. One cannot be uniformly good without a little stupidity
    ஒரளவு மடமையில்லாவிட்டால், பூரணமாக நல்லவனாக நடக்க முடியாது.
  4. Honest blindness to other’s follies is pure goodness or dullness
  5. Elizabeth is all perception. That drives people away
  6. Sometimes stupidity is an asset. Subtlety benefits
9
"I know you do; and it is that which makes the wonder. With your good sense to be so honestly blind to the follies and nonsense of others! Affectation of candour is common enough; -- one meets it everywhere. But to be candid without ostentation or design -- to take the good of everybody's character and make it still better, and say nothing of the bad -- belongs to you alone. And so you like this man's sisters too, do you? Their manners are not equal to his."
“நீ அப்படித்தான் என எனக்குத் தெரியும். இதுதான் உன் பலமே. நல்ல அறிவு இருந்தும், பிறரது தவற்றையும், அபத்தமான செயலையும் காண மறுக்கிறாய். மற்றவர்களை சந்தோஷப்படுத்த , அவர்களைப் பற்றி மிகைப்படுத்தி சொல்வது சகஜம்தான். ஆனால் உன்னால் மட்டுமே , பிறரது குறைகளைத் தவிர்த்து , நல்லதை மட்டுமே பாராட்டி அதைப்போற்றி , கெடுதலாக அவர்களைப்பற்றி எதுவும் சொல்லாமலிருக்க முடியும். சரி , உனக்கு இவனுடைய சகோதரிகளையும் பிடித்திருக்கிறது , இல்லையா? அவர்களுடைய நடத்தை இவனுடையது போலில்லை.”
  1. Affection of candour eliminates friends, gains society
  2. To be candid without ostentation or design is truth of character
  3. To recognise the good, be oblivious of the bad is noble
  4. Jane’s candour is of the purity of a simpleton, does not carry weight of personality
  5. When you relate to a person without thinking, you don’t see their faults
    சிந்திக்காதவருடன் பழகும்பொழுது, அவர் குறை தெரிவதில்லை.
  6. Sense of harmony refuses to see the defects of others
    சுமுகம் குறை காணாது
  7. Spirit that blinds refuses to see the folly of others
    கண்ணை மறைக்கும் ஆன்மா பிறர் குறையைக் காணாது.
  8. Inability to see others’ weakness is spiritual, unwillingness to see is rational
    பிறர் குறையைக் காண முடியாதது ஆன்மீகம், பார்க்கப் பிரியப்படாதது அறிவு செயல்படுவது.
  9. To improve upon others’ goodness is psychic
    பிறர் நல்ல குணத்தை முழுமையாக்க முயல்வது சைத்திய புருஷன்.
  10. Perceptive penetration can be on the right side too
    கூர்ந்து பார்ப்பது நல்ல முறையிலும் செய்யலாம்.
  11. Affectation requires some cleverness
    கெட்டிக்காரத்தனமில்லாமல், நடிப்பு வாராது.
  12. Cleverness or clownishness can practise affectation
    கோமாளியும் ,சாமர்த்தியசாலியும் நடிக்க முடியும்.
  13. Absence of discrimination prevents affectation
    பாகுபாடில்லையெனில் நடிப்பது சிரமம்.
10
"Certainly not -- at first. But they are very pleasing women when you converse with them. Miss Bingley is to live with her brother, and keep his house; and I am much mistaken if we shall not find a very charming neighbour in her."
“முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர்களுடன் பேசி பழகியபொழுது , மிகவும் இனிய சுபாவம் உள்ளவர்களாகத் தெரிந்தது. ஒரு சகோதரி அவனுடன் தங்கி அவனது வீட்டை கவனித்துக் கொள்ளப் போகிறாள். நமது அருகாமையில் வசிக்கும் நல்ல குடும்பமாக அவர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
  1. Manners endorsed by character become behaviour
    பழக்கத்தைச் சுபாவம் ஏற்றால் நடத்தை எழுகிறது.
  2. One can have conversational manners without having real manners
    பழக்கமும் இருநிலைகளில் உள்ளன. பேச்சுக்குரிய பழக்கம், உண்மையான பழக்கம்.
  3. Eternal passivity makes for an excellent neighbour
    ஆழ்ந்த அமைதி சிறந்த உறவு.
  4. Passivity that is active makes the neighbour culturally creative
    ஆழ்ந்த அமைதி செயல்பட்டால், உறவு பண்பு மலரும் பண்ணையாகும்.
  5. Jane is not shrewd enough to see the affectation of Caroline
  6. Hence she was her victim
  7. You see what you seek to see
    பார்க்க வேண்டும் என்பதைப் பார்க்கிறோம்.
  8. Taking another as he presents can be innocent or ignorant
    பிறர் கூறுவதை அப்படியே ஏற்பது கள்ளமற்றதாகவோ, அறியாமையாகவோ இருக்கும்.
  9. Inability to see is ignorance; unwillingness to see is innocence
    பார்க்க முடியாதது அறியாமை, பிரியப்படாதது நல்ல குணம்.
  10. Jane takes Caroline’s words for facts, becoming a willing victim
  11. Jane could marry only when she undeceived herself of Caroline
    காரலினை நம்பும் வரை ஜேன் திருமணம் முடியாது.
  12. Completion of a work needs the removal of folly
    வேலை முடிய அறியாமை விலக வேண்டும்
  13. The eldest child is dull
    மூத்தது மோழை.
  14. Inability to think meanly of others makes one a gentleman
    பிறரைப் பற்றி மட்டமாக நினைக்க முடியாதவன் நல்லவனாகிறான். (gentleman)
  15. Ready approval makes for easy victims
11
Elizabeth listened in silence, but was not convinced; their behaviour at the assembly had not been calculated to please in general; and with more quickness of observation and less pliancy of temper than her sister, and with a judgment too unassailed by any attention to herself, she was very little disposed to approve them. They were in fact very fine ladies; not deficient in good-humour when they were pleased, nor in the power of being agreeable where they chose it, but proud and conceited. They were rather handsome, had been educated in one of the first private seminaries in town, had a fortune of twenty thousand pounds, were in the habit of spending more than they ought, and of associating with people of rank, and were therefore in every respect entitled to think well of themselves, and meanly of others. They were of a respectable family in the north of England; a circumstance more deeply impressed on their memories than that their brother's fortune and their own had been acquired by trade.
பதில் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தாலும் எலிசபெத்திற்கு , ஜேன் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. தன்னை விலக்கி அவர்களைப் பார்க்கும்பொழுது அவ்வளவு இனிய சுபாவம் உள்ளவர்களாக தெரியாததால் எலிசபெத்தால் ஜேனுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் நாகரீகமானவர்களாக இருந்தனர். பிடித்த இடங்களில் நல்ல விதமாக நடந்து கொள்வர். ஆனால் கர்வமாகவும் , எல்லோரையும்விட தாங்கள் உயர்ந்தவர்கள் என எண்ணம் இருந்தது. அழகு , படிப்பு , வசதி , அந்தஸ்து என எல்லாம் இருந்ததால் அவர்கள் தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மரியாதைமிக்க குடும்பத்தில் பிறந்த அவர்களது வருமானம் இருபதாயிரம் பவுன். சகோதர னுடைய செல்வம் , மற்றும் தங்களுடைய செல்வம் முழுவதும் குடும்ப வியாபாரம் மூலம் வந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டிருந்தனர்.
  1. True listening is in silence
    மௌனமாகக் கேட்பது, கேட்பதற்கு இலட்சணம்.
  2. To be open-minded, the conviction must be in silence
    மௌனத்தில் நம்பிக்கை எழுவது வெள்ளை மனத்தகுதி.
  3. Silent Mind offers creative Silence. Its listening is creative
    மனம் மௌனமானால் மௌனம் ஜீவன் பெறும். அம்மனம் கேட்கும்பொழுது கேள்விக்கு ஜீவன் உண்டு.
  4. Silent Mind is capable of creative listening
    மௌனமான மனம் ஜீவனால் கேட்கும்.
  5. Silent listening is not conviction
  6. Listening in silence without conviction is to suspend judgement
    மௌனமாகக் கேட்பது அபிப்பிராயமில்லாமல் - முடிவு செய்யாத மனநிலை.
  7. Observation observes on the surface 
    பார்ப்பவர் மேலெழுந்தவாரியாகப் பார்ப்பார்.
  8. Pliancy of temper prevents fixities
  9. Quickness of observation needs intelligence. It is of character, not behaviour
  10. A second child is alert
    இளையது காளை.
  11. Quickness of observation demands excessive vital energy in the Mind
    கவனம் மனத்திலெழுந்தால் எதுவும் கண்ணில் படத் தவறாது.
  12. Temper is pliant when vital has mental knowledge
    உணர்வின் அறிவு குணம் பெறும் பக்குவம்.
  13. Judgement needs silent energy in great measure
    நியாயமாகத் தீர்மானிக்க மனம் பெறுமளவு மௌனம் பெற வேண்டும்.
  14. Judgement with any attention to oneself cannot be fair
    தன்னைக் கருதும் தீர்மானம் நியாயமாக இருக்க முடியாது.
  15. Not to approve of a thing is different from not being disposed to approve of it
    ஒரு விஷயத்தை ஏற்பதும், ஏற்க நினைப்பதும் வேறு.
  16. A judgment unassailed by any attention to herself is impartial
  17. To have a judgement unassailed by any attention to herself is rationality that is unfailing except when charmed
    நமக்காக இல்லாமல் எடுக்கும் முடிவு தவறற்றதாக இருக்கும்.மையலில் உள்ளபொழுது தவறும்.
  18. Cultivation can make for fine ladies
  19. Excess vital energy is good humour in a positive individual
  20. Behaviour can please all; character never escapes observation
  21. Good behaviour is calculated to please in general
    நல்ல பழக்கம் இனிக்கும்.
  22. To be able to please when one chooses is manners
    பிறருக்கு இனிக்க வேண்டும் என்ற முடிவு இனிய பழக்கம் தரும்.
  23. To be pleasant all the time is character
    எப்பொழுதுமுள்ள இனிமை சுபாவம்.
  24. Pride or conceit does not permit a pleasant character; it can permit a pleasant behaviour
    கர்வமும் திமிரும் இனிய சுபாவம் பெற முடியாது, இனிய பழக்கம் பெறலாம்.
  25. Pride and conceit can go hand in hand with good humour and agreeableness
    கலகலப்பாகப் பலருடனும் பழகுபவர் கர்வமாகவும் திமிராகவும் இருப்பதுண்டு.
  26. Several well formed characteristics can be harboured in one’s behaviour
  27. Amiability and conceit can coexist
  28. Education gives behaviour, not character
  29. First private seminary can produce fine cultivated specimens
  30. Spending more than they ought, gives a social strength of steady domination
    தேவைக்கு மேல் செலவு செய்யும் திறன் சமூகத்தில் அந்தஸ்து தரும்.
  31. Liberal spending gives a generous character
    தாராளமாகச் செய்யும் செலவு பார்வைக்கு தாராளமான சுபாவம் எனத் தெரியும்.
  32. Association with people of rank is status
  33. Association with people or rank gives good manners, not good character
    உயர்ந்த சமூகம் இனிய பழக்கம் தரும், இனிய சுபாவம் அங்கு எழாது.
  34. Thinking well of themselves is self-conceit
  35. Thinking well of themselves and meanly of others develops hypocrisy
    தன்னை உயர்வாகவும், பிறரை மட்டமாகவும் நினைப்பது உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகும்.
  36. To think meanly of others is not to be cultured
  37. One who is aware of the respectability of his own family is not respectable
    தன் குடும்ப கௌரவத்தைக் கருதுபவன் கௌரவத்திற்கு உரியவனாக மாட்டான்.
  38. Family prestige is in one’s blood
  39. Recent wealth will not bring family tradition
  40. First generation of wealth remembers the respectability of their families
    பணம் வந்த புதிதில் குடும்ப கௌரவம் முக்கியமாகும்.
  41. To think low of the fortune from trade is a superstition
    வியாபாரச் செல்வம் குறைவு என்பது மூட நம்பிக்கை.
12
Mr. Bingley inherited property to the amount of nearly an hundred thousand pounds from his father, who had intended to purchase an estate, but did not live to do it. Mr. Bingley intended it likewise, and sometimes made choice of his county; but as he was now provided with a good house and the liberty of a manor, it was doubtful to many of those who best knew the easiness of his temper, whether he might not spend the remainder of his days at Netherfield, and leave the next generation to purchase.
பிங்கிலிக்கு அவனுடைய தகப்பனாரிடமிருந்து ஒரு லட்சம் பவுன் சேமிப்பாக கிடைத்தது. ஒரு பெரிய தோட்டம் வாங்க வேண்டும் என்றிருந்த அவனது தகப்பனார் அவ்வெண்ணம் நிறைவேறும்முன் காலமாகி விட்டார். பிங்கிலி அந்த முயற்சியில் ஈடுபட்டாலும் வசிக்க ஒரு நல்ல வீடும் , நில புலன்களும் இருந்ததால் தன் அலைபாயும் சுபாவம் காரணமாக அதில் அதிக சிரத்தைக் காட்ட முடியவில்லை. தன்னுடைய வாரிசுகள் சொத்து வாங்கிக் கொள்ளட்டும் என்று நெதர்பீல்டில் நிரந்தரமாக தங்கி விடுவானோ என கூட பலர் நினைத்தனர்.
  1. Money is more easily inherited than values or character
    அடுத்த தலைமுறைக்கு பணம் எளிதாகப் போகும், பண்பு போகாது.
  2. Easiness of temper is laziness of character
    சௌகரியமாக வாழ நினைப்பது சோம்பேறித்தனம்.
  3. Laziness meeting comfort stays there forever
    சோம்பேறி வசதி பெற்றால் அதிலேயே நிலைத்து விடுவான்.
  4. Easiness of temper can hardly hold on to the property
    உடலை வருத்தாத வாழ்வு சொத்தைக் காப்பாற்றுகிறது
  5. An estate bought may bring status, not respectability
    எஸ்டேட்டை வாங்கினால் அந்தஸ்து வரும், மரியாதை வராது.
  6. Not money, but landed estate carried prestige then in England
  7. Easiness of temper does not exert
  8. Estate makes one a gentleman, not wealth
13
His sisters were very anxious for his having an estate of his own; but, though he was now established only as a tenant, Miss Bingley was by no means unwilling to preside at his table -- nor was Mrs. Hurst, who had married a man of more fashion than fortune, less disposed to consider his house as her home when it suited her. Mr. Bingley had not been of age two years, when he was tempted by an accidental recommendation to look at Netherfield House. He did look at it, and into it, for half an hour -- was pleased with the situation and the principal rooms, satisfied with what the owner said in its praise, and took it immediately.
வாடகை வீட்டில் வசிக்கும் தங்களது சகோதரன் , பெரிய சொத்து வாங்க வேண்டும் என்பதில் , அவனது சகோதரிகள் அதிக தீவிரம் காட்டினர். வாடகை வீட்டில் இருந்தாலும் அவனுடனேயே தங்க விருப்பப்பட்டனர். சந்தர்ப்பவசமாக நெதர்பீல்ட் இல்லத்தைப்பற்றி , மேஜராகி இரண்டு வருடத்தில் அதனைப்பற்றி கேள்விப்பட்டான். அவ்வீட்டை பார்வையிட்ட அரைமணி நேரத்திலேயே மிகவும் பிடித்துப் போய்விட்டதால் அதனை வாடகைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்தான்.
  1. Acquiring an estate does not automatically acquire status
    எஸ்டேட் வாங்கினால் ஒருவர் பெரியவராகி விட மாட்டார்.
  2. More than men, women are anxious for status
  3. Not only appearance of status is readily acceptable, but they canvass for status
  4. Bingley is casual, non-serious. He will be pliable
  5. To him his status and Darcy are important, not work, and not even Jane
  6. Second generation of neo-rich cannot exert, as they have no strength
  7. Mr. Bingley will choose his wife as he selected Netherfield
    நெதர்பீல்டை எடுத்ததைப் போல் பிங்லி திருமணம் செய்து கொள்வான்
  8. Easiness of temper is averse to penetrating examination
    சொகுசாக வாழ்பவர் ஆழ்ந்த ஆராய்ச்சியை விரும்ப மாட்டார்.
  9. To accept another’s version is to have a pliant temper
    கேட்பார் பேச்சைக் கேட்பது உருவம் பெறாத களிமண்ணாகும்.
14
Between him and Darcy there was a very steady friendship, in spite of a great opposition of character. Bingley was endeared to Darcy by the easiness, openness, and ductility of his temper, though no disposition could offer a greater contrast to his own, and though with his own he never appeared dissatisfied. On the strength of Darcy's regard Bingley had the firmest reliance, and of his judgment the highest opinion. In understanding, Darcy was the superior. Bingley was by no means deficient, but Darcy was clever. He was at the same time haughty, reserved, and fastidious, and his manners, though well-bred, were not inviting. In that respect his friend had greatly the advantage. Bingley was sure of being liked wherever he appeared, Darcy was continually giving offence.
மாறுபட்ட குணங்களை உடையவர்களாய் இருந்தபோதிலும் பிங்கிலியும் , டார்சியும் நல்ல நண்பர்களாய் இருந்தனர். வெளிப்படையாகவும் ,வளைந்து கொடுக்கும் தன்மையும் , பழகுவதற்கு ஏற்றவனுமாய் விளங்கிய பிங்கிலியை டார்சிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் தன்னுடைய சுபாவத்தைப் பற்றியும் அவன் எப்பொழுதுமே வருத்தப்பட்டதில்லை. டார்சிமேல் பெரும் மதிப்பு வைத்திருக்கும் பிங்கிலி , அவன் மிகவும் திறமைசாலி ,அவனது கணிப்புகள் எப்பொழுதுமே சரியானவை என நினைத்தான். பிங்கிலியும் எந்தவிதத்திலும் குறைந்தவனில்லை என்றாலும் டார்சி புத்திசாலியாக இருந்தான். ஆனால் இறுக்கமாக இருந்தான். அவ்விதத்தில் பார்த்தால் பிங்கிலி எல்லோரையும் உடனே கவர்ந்து விடுவான். ஆனால் டார்சியோ எப்பொழுதும் யாரையாவது புண்படுத்தியபடி இருப்பான்.
  1. Steady friendship is enduring submissiveness
    நிலையாகப் பணிந்தால், நட்பு நீடிக்கும்.
  2. Bingley and Jane are only subplots. Elizabeth and Darcy are the main plots
  3. It is not reliance but dependence
    அது நம்பியிருப்பதில்லை, பாரமாக இருப்பது.
  4. Darcy’s approval is the sanction of causal plane for Bingley
  5. Bingley understands Darcy not the issues
    பிங்லிக்கு டார்சியைத் தெரியும், விஷயம் தெரியாது.
  6. Steady friendship is because of opposition of character not in spite of
  7. The greater the opposition, the closer the friendship
  8. Easiness, openness, ductility are Bingley’s characteristics
  9. They make for easy domination
  10. Bingley had enough strength to possess the wealth
  11. Self-satisfaction helps level off
    திருப்தி பெற்றால் வளர்ச்சியில்லை.
  12. Darcy enjoyed pliability with Bingley which crafty Wickham never allowed
  13. The strong enjoys a weak companion
  14. A strong character evokes a firm reliance and highest opinion
  15. Superior understanding evokes respect. Even cleverness does it
  16. Understanding means to know an event in terms of his experience
    அனுபவத்தால் பெறுவதே அறிவு.
  17. Superior understanding comes out of mental experience
    மனம் பெறும் அறிவு உயர்ந்தது.
  18. Goodness makes cleverness mature
    கெட்டிக்காரன் நல்லவனானால் அறிவாளியாவான்.
  19. Haughty, reserved, fastidious nature is acquired by single child
  20. Pet children are pampered and become fastidious
  21. Elizabeth was the first touch of life, Darcy had
  22. Good breeding need not be pleasant
  23. Bingley sought approval by being amiable
  24. Darcy gave offence by being aloof
  25. Capacity to give offence forfeits the claim to be a gentleman
    மனம் புண்பட செயல்பட்டால் நல்லவனாக (gentleman) இருக்க முடியாது.
15
The manner in which they spoke of the Meryton assembly was sufficiently characteristic. Bingley had never met with pleasanter people or prettier girls in his life; everybody had been most kind and attentive to him; there had been no formality, no stiffness; he had soon felt acquainted with all the room; and as to Miss Bennet, he could not conceive an angel more beautiful. Darcy, on the contrary, had seen a collection of people in whom there was little beauty and no fashion, for none of whom he had felt the smallest interest, and from none received either attention or pleasure. Miss Bennet he acknowledged to be pretty, but she smiled too much.
இருவரது எதிர்மாறான குணத்தைப்பற்றி தெரிந்து கொள்ள மெரிடனில் நடந்த நடனத்தைப்பற்றி அவர்கள் விமர்சித்த விதம் ஒன்றே போதும். இதுபோல் இனிமையான அழகான பெண்களை இதுவரை பார்த்ததில்லை என்றும் , அன்பாகவும் இதமாகவும் அவர்கள் பழகியதால்தான் , எல்லோருடனும் சுலபமாக தன்னால் கலந்து கொள்ள முடிந்தது எனவும் , அதுவும் ஜேனைப்போல் ஒரு தேவதையை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் பிங்கிலி கூறினான். ஆனால் டார்சியின் அனுபவமே வேறு. அவன் பார்த்ததென்னவோ அழகோ , நாகரீகமோ அற்ற பெண்கள்தான் - யாரும் அவன் கவனத்தை கவரவில்லை , யாரிடமிருந்தும் அவனும் அதைப் பெறவில்லை. ஜேன் அழகாக இருந்தாலும் , அதிகமாக புன்னகைப்பதாக அவன் நினைத்தான்.
  1. An easy temper overestimates the situation
    பொறுப்பேற்க முடியாதவர்க்குப் பிரச்சினைகள் பூதாகாரமாகத் தெரியும்.
  2. Opinion expressed expresses character
  3. Those who accept Bingley are pleasant to him; it need not necessarily be true
  4. Being in love with the whole sex, every girl is pretty to Bingley
  5. His money received kind attention
  6. Second generation has not acquired formality, nor strength for stiffness
  7. Good looks make the first impression
  8. Darcy, being vitally sensitive, sees a collection of people
  9. Bingley seeks people; he sees a pleasant gathering
  10. Darcy, who expects high fashion, found none
  11. Opposite characters find in the same circumstance opposite things
  12. An immature mind smiles too much
    மனவளர்ச்சியில்லையெனில் அர்த்தமற்று முகம் மலரும்.
  13. Jane is pretty but weak which makes her smile too much
  14. Smiling too much expresses lack of weight in the character
    நிதானம் குறைவானால், அதிகமாக சிரிப்பு வரும்.
  15. A comment brings out the character of the one who comments
    விமர்சனம், விமர்சனம் செய்பவரை விளக்கும்.
16
Mrs. Hurst and her sister allowed it to be so; but still they admired her and liked her, and pronounced her to be a sweet girl, and one whom they should not object to know more of. Miss Bennet was therefore established as a sweet girl, and their brother felt authorised by such commendation to think of her as he chose.
பிங்கிலியின் சகோதரிகள் , ஜேனைப்பற்றி டார்சியின் கருத்தை ஆமோதித்தாலும் , அவர்களுக்கு அவளைப் பிடித்திருந்தது ,அவளை ரசித்தனர். அவள் மிகவும் இனிமையாக இருப்பதாகவும் கூறினர். சகோதரிகளின் பாராட்டு பிங்கிலிக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது.
  1. Sweetness is a poise of the soul
    இனிமை ஆத்மாவின் அம்சம்.
    Love becomes sweetness when it expresses Truth
    அன்பு உண்மையை வெளிப்படுத்துவது இனிமை.
    Joy becomes sweetness when it expresses unity
    சந்தோஷம் ஐக்கியத்தை வெளிப்படுத்தினால் இனிமையாகும்.
    Beauty becomes sweetness when it expresses knowledge
    அழகு ஞானத்துடன் இணைந்து இனிமையாகும்.
    Anything can become sweetness when it expands the other person
    பிறரை மலரச் செய்யும் எதுவும் இனிமையாகும்.
  2. Sweetness is the knowledge of love
    அன்பு பெறும் அறிவு இனிமை.
  3. Women accepting another woman’s beauty is rare
  4. Jane’s sweetness is something unmistakable
  5. Bingley waits to be authorised by his sisters to love Jane
    ஜேனை மணக்க பிங்லி சகோதரிகள் அனுமதியை நாடுகிறான்.
  6. Bingley was authorised to think well of Jane shows the extent to which Bingley is pliable. He can never be a hero
  7. A submissive person will be dominated by anyone around
    பணிந்து போகும் சுபாவத்தை எவரும் அதிகாரம் செய்வார்கள்.



story | by Dr. Radut