Skip to Content

Volume I Chapter 20 : Mrs. Bennet tries to Persuade Elizabeth

Chapter 20: Mrs. Bennet tries to Persuade Elizabeth

திரு. பென்னட் எலிசபெத்தை சம்மதிக்க வைக்க எடுக்கும் முயற்சி

 

Summary: Mrs. Bennet is upset by Elizabeth’s refusal. She decides she must convince her daughter to marry him and tries to get her husband to help. She states that if Elizabeth refuses she will never talk to her again. Mr. Bennet bluntly refuses to oblige her, not wanting Collins to marry into his family. Charlotte arrives and learns of what has happened.
 
சுருக்கம்: எலிசபெத்தின் நிராகரிப்பு திருமதி. பென்னட்டை மிகவும் பாதித்தது, காலின்ஸ் என்ன நினைக்கிறான் என்பதைப்பற்றி அக்கறைபடவில்லை. காலின்ஸை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த தீர்மானிக்கிறாள், தன் கணவரையும் உதவிக்கு அழைத்துக் கொள்கிறாள். எலிசபெத் மறுத்தால் தான் இனி அவள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்கிறாள். தன் குடும்பத்தில் ஒருத்தியுடன் காலின்ஸின் திருமணத்தை விரும்பாத திரு. பென்னட், தன் மனைவி கூறியதற்கு மாறாக சொல்கிறார். எலிசபெத் தொடர்ந்து மறுக்கிறாள், சார்லெட் அப்பொழுது அங்கு வருகிறாள், என்ன நடந்தது எனத் தெரிந்துக் கொள்கிறாள். காலின்ஸை அறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.
 
 
1
Mr. Collins was not left long to the silent contemplation of his successful love; for Mrs. Bennet, having dawdled about in the vestibule to watch for the end of the conference, no sooner saw Elizabeth open the door and with quick step pass her towards the staircase, than she entered the breakfast-room, and congratulated both him and herself in warm terms on the happy prospect of their nearer connexion. Mr. Collins received and returned these felicitations with equal pleasure, and then proceeded to relate the particulars of their interview, with the result of which he trusted he had every reason to be satisfied, since the refusal which his cousin had stedfastly given him would naturally flow from her bashful modesty and the genuine delicacy of her character.
காலின்ஸ், அவனுடைய வெற்றிகரமான காதலைப்பற்றி, வெகுநேரம் அமைதியான சிந்தனையில் ஆழ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் காலின்ஸ்--எலிஸாவின் சந்திப்பின் முடிவைக் காண்பதற்காக அறைக்கு வெளியே வேறு வேலையின்றி காத்திருந்த திருமதி. பென்னட், எலிசபெத் அறையிலிருந்து வெளியேறி அவளைத் தாண்டி மாடிப்படியை நோக்கி செல்வதைப் பார்த்து, காலைச் சிற்றுண்டி அறைக்குள் நுழைவதற்குள், அவர்கள் இருவரும் நெருங்கி வருவது குறித்து, இருவரையும் பாராட்டினாள். காலின்ஸ் அந்த பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு திருமதி. பென்னட்டிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தான். அவர்கள் சந்திப்பின் விவரங்களைக் கூறிவிட்டு, எலிஸாவின் அடக்கம் மற்றும் நளினமான குணம் காரணமாக, தன்னுடைய யோசனையை அவள் ஏற்க மறுத்தாலும் முடிவு திருப்திகரமாக இருக்கும் என நம்புவதாக கூறினான்.
  1. Successful love leads to no silent contemplation
    காதலில் வெற்றி மௌனமாக இருக்காது.
  2. He who waits for a result, cancels it by that waiting
    பலனுக்காகக் காத்திருப்பவன் அதனால் பலனை அழிப்பான்.
  3. Eagerness to speak indicates the positive result
    பேச ஆர்வம் எழுவது நல்ல பலன் வரும் எனக் காட்டுகிறது.
  4. Mrs. Bennet will happily sit in the conference and dictate to both of them what they should speak
    Mrs.பென்னட் proposal ல் உட்கார்ந்து இருவரும் என்ன பேசவேண்டும் எனக் கூற பிரியப்படுவாள்.
  5. Mrs. Bennet takes for granted the outcome of the meeting
    Proposal எப்படி முடிய வேண்டும் என Mrs. பென்னட் முடிவு செய்து அதை எதிர்பார்க்கிறாள்.
  6. Idiocy is fortified by the belief of ever-present success
    மந்தமானவனுக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்தால் அவன் தன் மந்த புத்தியை நம்புவான்.
  7. Congratulation in anticipation negatives the outcome
    பலன் வருமுன் பாராட்டுவது பலனை அழிக்கும்.
  8. Mrs. Bennet does not wait for the report. She was close on their heels. To her it was a foregone conclusion. Mrs. Bennet could not believe her ears. She wants to order everyone according to her ideas. What failed with Collins worked with Jane. That is the only method she knew. Sometimes it works also by default. Having been used to the constant compliance of Mr. Bennet she takes for granted that Collins too will be like that. What she proposed with Elizabeth, rightly alienated Collins for ever. There is nothing subtle about Mrs. Bennet. It is all direct talking
  9. We see both Mrs. Bennet and Mr. Collins are of the same type
    Mrs. பென்னட்டும் காலின்ஸூம் ஒன்று போன்றவர்.
  10. Hers, Austen says, is an illiberal mind; his is one of conceit
    அவள் மனம் வளர்ச்சியற்றது என ஆசிரியர் கூறுகிறார். அவன் கர்வி.
  11. Felicitations and pleasure do not indicate the prospect
    பாராட்டும் சந்தோஷமும் வருவதைக் காட்டவில்லை.
  12. Bashful modesty and genuine delicacy were conspicuous by their absence
    கூச்சப்படும் அடக்கமும், பண்பான தயக்கமும் அங்கு காணப்படவில்லை.
2
This information, however, startled Mrs. Bennet; she would have been glad to be equally satisfied that her daughter had meant to encourage him by protesting against his proposals, but she dared not to believe it, and could not help saying so.
ஆனால் இந்த செய்தி திருமதி. பென்னட்டை திடுக்கிடச் செய்தது; -- அவனுடைய வேண்டுகோளை எதிர்ப்பதன்மூலம் அவனை எலிசபெத் ஊக்குவித்திருந்தால் அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் அவளால் இப்படி இருக்கும் என நம்ப முடியவில்லை. அதை வெளியே சொல்லாமலிருக்கவும் முடியவில்லை.
  1. Startling is a physical jolt
    தூக்கிவாரிப் போடுவது உடல் ஆட்டம் காண்பது.
  2. Interviews are sought, not thrust upon the parties
    தேடிப் போய் ஒருவரைப் பார்க்கிறோம். எவரையும் வற்புறுத்த முடியாது.
  3. There are intelligences that understand a No as a Yes
    இல்லை என்பது உண்டு எனப் புரியும் ஞானம் பெற்றவருண்டு.
  4. Warm expectations turn into hot disappointments
    ஆர்வமாக எதிர்பார்த்து ஏமாந்து அவமானமடைவதுண்டு.
  5. Normal flow of events startles the expectations of the physical
    ஜடமான மனிதன் எதிர்பார்ப்பது இயல்பான செயலோட்டத்தால்
  6. His illusion of her bashful modesty is different from the illusion of the mother’s pious expectation
    காலின்ஸ் எலிசபெத் கூச்சத்தால் அடக்கமாகப் பேசுகிறாள் என நினைக்கிறான். அது இல்லாத ஒன்று. மிஸஸ். பென்னட் மனப்பால் குடிக்கிறாள். இவை வெவ்வேறான மாயை.
3
"But depend upon it, Mr. Collins," she added, "that Lizzy shall be brought to reason. I will speak to her about it myself directly. She is a very headstrong, foolish girl, and does not know her own interest; but I will make her know it."
“லிசிக்குப் புரிய வைத்துவிடுவோம் என்று நம்புங்கள் காலின்ஸ். இதைப்பற்றி நானே அவளிடம் நேரில் பேசுகிறேன். அவள் மிகவும் உறுதி படைத்தவள். ஆனால் முட்டாளாக இருக்கிறாள். எது நல்லது என அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன்.”
  1. Often arguments in favour work steadily against
    ஆதரித்துப் பேசுவது காரியத்தைக் கெடுப்பதுண்டு.
  2. Authority accepted in domestic matters cannot be accepted in personal affairs of superior significance
    வீட்டு விஷயத்தில் நாம் ஏற்பதை முக்கியமான விஷயத்தில் சொந்த உணர்ச்சி ஏற்காது.
  3. It is said that one cannot make another learn
    எவரிடமிருந்தும் எவரும் கற்றுக் கொள்ள மாட்டார்.
  4. Mrs. Bennet tries to make Lizzy accept Collins by the influence of Mr. Bennet. It produces the very opposite results. She could only think of her husband doing what she wants never otherwise. He was a British husband to whom the only way to treat a woman is to be soft to her
  5. Mrs. Bennet recommends her headstrong and foolish daughter to Collins
    Mrs.பென்னட் அறிவில்லாத பிடிவாதக்காரியான மகளை காலின்ஸூக்கு பரிந்துரைக்கிறார்.
4
"Pardon me for interrupting you, madam," cried Mr. Collins; "but if she is really headstrong and foolish, I know not whether she would altogether be a very desirable wife to a man in my situation, who naturally looks for happiness in the marriage state. If, therefore, she actually persists in rejecting my suit, perhaps it were better not to force her into accepting me, because if liable to such defects of temper, she could not contribute much to my felicity."
“குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்” என்ற காலின்ஸ் “நான் இயற்கையாகவே திருமணத்தில் சந்தோஷத்தை எதிர்நோக்குபவன் அப்படிப்பட்டவனாகிய எனக்கு உண்மையில் அவள் உறுதி படைத்தவளாகவும், முட்டாளாகவும் இருந்தால் ஒரு விரும்பத்தக்க மனைவியாக இருப்பாளா எனத் தெரியவில்லை. அவள் உண்மையாகவே என்னை நிராகரித்திருந்தால், என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவளைக் கட்டாயப்படுத்தாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் இம்மாதிரி சுபாவம் உள்ளவளால் எனக்கு சந்தோஷத்தைத் தர முடியாது.”
  1. Life has a fuse in every foolish act to destroy it. Equally, it provides for a link to complete every intelligent act
    மடத்தனமான காரியம் கெட்டுப்போக வாழ்வு ஆங்காங்கு ஒரு யுக்தி செய்கிறது. அதே போல் அறிவுள்ள செயலைப் பூர்த்தி செய்ய ஆங்காங்கு ஒரு உதவி செய்கிறது.
  2. Mr. Collins gives up Elizabeth on knowing her to be headstrong
    எலிசபெத் பிடிவாதக்காரி என்றவுடன் காலின்ஸ் அவளை மறந்து விடுகிறான்.
  3. Wickham goes to Mrs. Young which enables Darcy to find him
    விக்காம் Mrs. யங்கிடம் போனதால் டார்சியால் கண்டு பிடிக்க முடிந்தது.
  4. A lover is not deterred by the headstrong nature or foolishness of a girl, but a Man will turn off
    பிடிவாதம், அறியாமை மனிதனுக்குப் பெண்ணிடம் ஏமாற்றம் தரும். காதலனுக்கில்லை.
  5. A wife becomes desirable not necessarily by her temper
    நல்ல குணத்தால் ஒரு பெண் நல்ல மனைவியாவதில்லை.
  6. Everyone looks for happiness in marriage
    திருமணம் திருப்தி தரும் என அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.
  7. One cannot force another to give happiness
    அடுத்தவர் உன்னை சந்தோஷப்படுத்த வற்புறுத்த முடியாது.
  8. Defects of temper never prevent one from being a good wife
    குணம் குறையாக இருப்பதால் நல்ல மனைவியாக இருக்க முடியாதுஎன்பதில்லை.
  9. It is by persistent pleasant misunderstanding that friendships sustain
    தொடர்ந்த இனிமையான சந்தேகம் நட்பு நீடிக்க உதவும்.
  10. There is no known human agency that contributes to one’s felicity
    ஒருவர் சந்தோஷத்தை அதிகரிக்கும் மனித உபாயமில்லை.
5
"Sir, you quite misunderstand me," said Mrs. Bennet, alarmed. "Lizzy is only headstrong in such matters as these. In everything else she is as good-natured a girl as ever lived. I will go directly to Mr. Bennet, and we shall very soon settle it with her, I am sure."
“நீ என்னை தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறாய். லிசி இந்த மாதிரி விஷயங்களில் மட்டும்தான் உறுதியாக இருப்பாள். மற்றபடி அவள் நல்லவள்தான். நான் நேராக திரு. பென்னட்டிடம் செல்கிறேன். நாங்கள் இருவரும் அவளிடம் பேசி, விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வருவோம் என்பது உறுதி.”
  1. Precious secrets let out cannot be taken back
    முக்கியமான இரகஸ்யம் வெளிப்பட்டால் மீண்டும் உள்ளே வர இயலாது.
  2. Good nature cannot be compartmentalized
    நல்ல குணம் ஒரு விஷயத்தில் மட்டுமிருக்காது.
  3. For any work, Man uses the maximum authority he has access to
    ஒரு வேலையை முடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் மனிதன் பயன்படுத்துவான்.
  4. The illogical person too has his logic
    அர்த்தமற்றவருக்குரிய அர்த்தம் உண்டு.
  5. Mr. Bennet is there only to do what she wants
    Mr.பென்னட் மனைவி சொல்வதை செய்வதற்காகவே இருக்கிறார்.
6
She would not give him time to reply, but hurrying instantly to her husband, called out as she entered the library, "Oh! Mr. Bennet, you are wanted immediately; we are all in an uproar. You must come and make Lizzy marry Mr. Collins, for she vows she will not have him, and if you do not make haste he will change his mind and not have her."
காலின்ஸ் பதில் சொல்வதற்கு நேரம் அளிக்காமல், கணவரை நோக்கி நூலகம் விரைந்தாள். “ திரு. பென்னட், நீங்கள் உடனே வரவேண்டும். நாங்கள் ஒரே அமளியில் இருக்கிறோம். நீங்கள் வந்து லிசியிடம் பேசி காலின்ஸை மணக்க, சம்மதிக்க வைக்க வேண்டும். அவள் அதற்கு மறுக்கிறாள். நீங்கள் உடனடியாக செயல்படாவிட்டால் அவன் மனம்மாறி அவளை ஏற்க மாட்டான்.”
  1. Impatience makes one talk to people before reaching them
    ஒருவருடன் பேச அவசரப்பட்டால், அவர் வருமுன் பேச ஆரம்பித்து விடுவான்.
  2. The energy of the demand asks for all, more than it needs
    தேவையின் வேகம் தேவைப்படாததெல்லாம் கேட்கும்.
  3. The other man has no right for any view
    அவருக்குச் சொந்த அபிப்பிராயமிருக்கக்கூடாது.
  4. ‘Come and do what I want’ says the stupid person to all the world
    ‘வா, சொல்வதைச் செய்’ என்று அறிவிலி உலகுக்குச் சொல்கிறான்.
  5. This is the view of ignorance organised into idiocy in Matter
    அறியாமை தன்னை ஜடத்துள் மடமையாக உருவகப்படுத்தியபின் விளைவு இது.
  6. His capacity not to discipline his wife had the otherside of his retiring into his library. As the indulgence is great so the refusal too is great, Lizzy is his favourite child. All his laxity with his wife cannot extend to ruin Lizzy’s life. That is too much. Mrs. Bennet, of course, does not think. She only acts and wants everyone to act as she wishes. It worked for her for 25 non-stop years. He went to call on Bingley to oblige his wife against his natural inclination. He would send Lydia to Brighton as he would not cross her wishes. When Bingley departed, she would not know whom to blame as life has not acted according to her wishes. She wanted it to rain when Jane was on her way to Netherfield. She gloated over her scheming when Jane fell ill and stayed at Netherfield. She would not send the coach to bring her back. She was a lady self-willed. In her own marriage she had her way. Now she expects everything to go her way. All of us are like that unless life checkmates. Here he puts his foot down and acts on his own and says he would not see Lizzy if she marries Collins as she says she would not see Lizzy if she refuses him. Had he shown that determination in refusing to send Lydia to Brighton, the catastrophe would not have happened
  7. Till then, she did not bring the husband into the project. The family is hers, he is there as an instrument. This is the only view of any selfish person who senses a little scope
    அது வரைக் கணவரை proposal உடன் சம்பந்தப்படுத்தவில்லை. குடும்பம் தன்னுடையது. கணவன் ஒரு கருவி. சுயநலமானவர் இடம் கிடைக்குமானால் இதுமட்டுமே செய்வார்கள்.
  8. Blindness to all others is selfishness
    உலகமிருப்பதை அறியாதது சுயநலம்.
7
Mr. Bennet raised his eyes from his book as she entered, and fixed them on her face with a calm unconcern which was not in the least altered by her communication.
திரு. பென்னட் புத்தகத்திலிருந்து கண்களை உயர்த்தி, அமைதியாக, ஒருவித அக்கறையும் இல்லாமல் அவளை நோக்கினார். அவள் பேசியதைக் கேட்டும் அவரது முகபாவம் மாறவில்லை.
  1. Not to be affected by what she does is his lifelong discipline
    மனைவியின் செயலால் பாதிக்கப்படாமலிருக்க பென்னட் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார்.
  2. The greatest noise will not be noticed by silent concentration
    நிஷ்டையின் மௌனம் எந்த நிசப்தத்தையும் பொருட்படுத்தாது.
8
"I have not the pleasure of understanding you," said he, when she had finished her speech. "Of what are you talking?"
அவள் பேசி முடித்தவுடன், “நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. நீ எதைப்பற்றி பேசுகிறாய்?”
  1. Mr. Bennet does not know of the project at all
    பென்னட்டிற்கு proposal விஷயம் தெரியாது.
  2. Not to know is ignorance; to pretend not to know is indifference
    தெரியாதது அறியாமை; தெரியாதது போல் நடிப்பது அலட்சியம்.
9
"Of Mr. Collins and Lizzy. Lizzy declares she will not have Mr. Collins, and Mr. Collins begins to say that he will not have Lizzy."
“காலின்ஸ் மற்றும் லிசியைப்பற்றிதான் பேசுகிறேன். லிசி, காலின்ஸை ஏற்க மறுக்கிறாள். காலின்ஸும் அவளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான்.”
  1. Her thinking came to an end and she speaks the facts
    சிந்தனை அவளுக்கு நின்றது. விஷயத்தைப் பேசினார்.
  2. The world of the physical mind is the small work on hand
    ஜட உலகம் சிறிய கடமை.
10
"And what am I to do on the occasion? -- It seems an hopeless business."
“அப்படியானால் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிகிறது. இதில் நான் என்ன செய்ய வேண்டும்?”
  1. He draws a petulant joy besides being helpless
    அவருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. மேலும் அல்ப சந்தோஷப்படுகிறார்.
  2. The spirit of contradiction disowns anything and everything
    மறுக்கும் சுபாவம் எதையும் மறுக்கும்.
11
"Speak to Lizzy about it yourself. Tell her that you insist upon her marrying him."
“நீங்களே லிசியிடம் இதைப்பற்றி பேசுங்கள். அவனைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள்.”
  1. For 25 years she was used to his not interfering; now she asks him to act as her docile instrument
    25 வருஷமாக அவர் குறுக்கிட்டதில்லை. வாயை மூடிச் சொன்னதைச் செய் என்கிறாள் மனைவி.
  2. When someone speaks on your behalf, he will speak his thoughts, not yours
    உன் சார்பாகப் பேசுபவர் அவர் எண்ணத்தைப் பேசுவார், உன் கருத்தை வெளியிட மாட்டார்.
12
"Let her be called down. She shall hear my opinion."
“அவளைக் கீழே கூப்பிடு. என் கருத்தை அவள் கேட்கட்டும்.”
  1. He gives her no promise
    அவர் வாக்கு தரவில்லை.
13
Mrs. Bennet rang the bell, and Miss Elizabeth was summoned to the library.
திருமதி. பென்னட் மணியை அடித்து, எலிஸாவை நூலகத்திற்கு வரவழைத்தாள்.
  1. In any situation different people expect different things
    எந்த நேரமும் பலரும் வெவ்வேறு விஷயத்தை எதிர்பார்ப்பார்கள்.
14
"Come here, child," cried her father as she appeared. "I have sent for you on an affair of importance. I understand that Mr. Collins has made you an offer of marriage. Is it true?" Elizabeth replied that it was. "Very well -- and this offer of marriage you have refused?"
“இங்கே வா, குழந்தாய், ஒரு முக்கியமான விஷயத்திற்காக நான் உன்னை அழைக்கச் சொன்னேன். காலின்ஸ் உன்னை திருமணம் செய்து கொள்ள உன் விருப்பத்தை கேட்டதாக அறிந்தேன். அது உண்மையா?” ஆம் என்றாள் எலிசபெத். “சரி -- நீ அதை மறுத்து விட்டாயா? ”
  1. The opening of a conversation can indicate its end
    உரையாடல் ஆரம்பம் முடிவைக் காட்டும்.
15
"I have, sir."
“ஆமாம்.”
 
16
"Very well. We now come to the point. Your mother insists upon your accepting it. Is not it so Mrs. Bennet?"
“மிகச் சரி. நாம் இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். உன் தாயார் நீ இதற்கு சம்மதிக்க வேண்டும் என வற்புறுத்துகிறாள். அப்படித்தானே திருமதி. பென்னட்?”
  1. He reports to Elizabeth her mother’s opinion without comment
    தாயார் கூறியதைப் பெண்ணிடம் கூறுகிறார்.
17
"Yes, or I will never see her again."
“ஆமாம். இல்லையேல் நான் அவளை மீண்டும் பார்க்கவே மாட்டேன்.”
  1. Mrs. Bennet, encouraged by the turn of events, offers not to speak to her if she refuses
    Mrs.பென்னட் உற்சாகப்பட்டு எலிசபெத் மறுத்தால் தான் பேசமாட்டேன் என்கிறார்.
  2. Any power, real or illusory, finds total employment
    அதிகாரம் உள்ளதோ, இல்லாததோ, முழுவதும் பயன்படுகிறது.
  3. Folly understands things will go only in her own way
    மடையன் தான் நினைப்பது போல் நடக்கும் என நினைப்பான்.
18
"An unhappy alternative is before you, Elizabeth. From this day you must be a stranger to one of your parents. Your mother will never see you again if you do not marry Mr. Collins, and I will never see you again if you do."
“ஒரு வருந்தத்தக்க விஷயம் உன்முன் உள்ளது எலிசபெத். இன்று முதல் உன் பெற்றோர்களில் ஒருவருக்கு நீ அந்நியமாகிவிடுவாய். நீ காலின்ஸை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன் தாயார் உன்னைப் பார்க்கமாட்டாள், நீ அவனை திருமணம் செய்து கொண்டால் நான் உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன்”என்று கூறினார்.
  1. It is a moment of triumph for Mr. Bennet to thwart the wife
    மனைவியை மடக்குவது கணவனுக்கு பெரிய வெற்றி.
  2. Sarcasm is the small victory issuing from a great defeat
    பெருந்தோல்வி தரும் சிறு வெற்றி குத்தலான பேச்சு.
19
Elizabeth could not but smile at such a conclusion of such a beginning; but Mrs. Bennet, who had persuaded herself that her husband regarded the affair as she wished, was excessively disappointed.
எப்படியோ ஆரம்பித்து, எப்படியோ முடிந்த இவ்விஷயத்தை நினைத்து எலிஸாவால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. ஆனால் தான் விரும்பியவாறு தன் கணவரும் செயல்படுவார் என்று எதிர்பார்த்த திருமதி. பென்னட் மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.
  1. She does not sufficiently protest the action of Mr. Bennet
    கணவனின் செயலை வேகமாக மனைவி எதிர்க்கவில்லை.
  2. Foolishness seeks support from the enemy
    அறியாமை எதிரியிடம் ஆதரவு தேடுகிறது.
  3. Excessive disappointment issues out of excessive expectation
    அதிகமாக எதிர்பார்த்துப் பெறுவது அதிக ஏமாற்றம்.
20
"What do you mean, Mr. Bennet, by talking in this way? You promised me to insist upon her marrying him."
“இம்மாதிரி பேசுகிறீர்களே திரு. பென்னட், இதற்கு என்ன அர்த்தம்? காலின்ஸை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவளை வற்புறுத்துவேன் என வாக்களித்தீர்களே.”
  1. She said he had promised, while he had not
  2. His presence at home is a standing promise to do what she wants
  3. He never relates to her and she accepts his non-interference. It is the life of a helpless British husband not out of incapacity but out of choice
  4. One’s expectation is taken as another’s promise
    எதிர்பார்ப்பவர் அடுத்தவர் வாக்குக் கொடுப்பதாக நினைப்பார்.
21
"My dear," replied her husband, "I have two small favours to request. First, that you will allow me the free use of my understanding on the present occasion; and secondly, of my room. I shall be glad to have the library to myself as soon as may be."
“எனதருமை திருமதி. பென்னட், எனக்கு இரண்டு உதவிகள் செய்ய வேண்டுகிறேன். முதலில் நான் சுதந்திரமாக செயல்பட்டு ஒரு முடிவு எடுக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும். இரண்டாவதாக இந்த நூலகத்தில் நான் மாத்திரம் இருக்க விரும்புகிறேன்.”
  1. A married man cannot have the free use of his understanding
    திருமணமானபின் சுதந்திர நினைவுக்கு இடமில்லை.
  2. Getting rid of small responsibilities will lead to greater responsibilities
    சிறு கடமைகளைப் புறக்கணித்தால் பெருங்கடமைகள் எழும்.
22
Not yet, however, in spite of her disappointment in her husband, did Mrs. Bennet give up the point. She talked to Elizabeth again and again; coaxed and threatened her by turns. She endeavoured to secure Jane in her interest; but Jane, with all possible mildness, declined interfering; and Elizabeth, sometimes with real earnestness, and sometimes with playful gaiety, replied to her attacks. Though her manner varied, however, her determination never did.
தன் கணவரின் செயல் ஏமாற்றத்தை அளித்தாலும், திருமதி. பென்னட் இந்த விஷயத்தை இத்துடன் விடவில்லை. மீண்டும் மீண்டும் எலிஸபெத்திடம் நயமாகவும், பயமுறுத்தியும் பேசி சம்மதிக்க வைக்க முயற்சி செய்தாள். இதற்கு ஜேனையும் துணைக்கு அழைக்க முயன்றாள். ஆனால் ஜேன் இதில் குறுக்கிட பணிவாக மறுத்துவிட்டாள். எலிசபெத்தும், சில சமயம் விளையாட்டாகவும், சில சமயம் தீவிரமாகவும் தாயாரின் தாக்குதலுக்கு பதில் அளித்தாள். பதிலளித்த முறை மாறினாலும் அவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.
  1. Determination in the physical will make one obstinate
    செயலை வற்புறுத்தினால் பிடிவாதம் எழும்.
  2. It is not in her to give up any point
  3. The physical cannot give up unless and until it is given up
  4. The mother and daughter each in her own way remain firm
  5. Authority accomplishes. Nothing else. Mr. Bennet refused to exert. In the absence of her husband’s authority, all her persuasions of Lizzy either draws a reply or a playful remark
  6. Coaxing and threatening go together
  7. Any work can be done positively. No amount of negative application will complete it
    எதையும் நல்லபடியாகப் பூர்த்தி செய்யலாம். பொருத்தமில்லாமல் எவ்வளவு முயற்சி செய்தாலும் கூடி வராது.
  8. Unvarying determination arises out of mental understanding
    மனம் செய்யும் முடிவு நீடிக்கும்.
23
Mr. Collins, meanwhile, was meditating in solitude on what had passed. He thought too well of himself to comprehend on what motive his cousin could refuse him; and though his pride was hurt, he suffered in no other way. His regard for her was quite imaginary; and the possibility of her deserving her mother's reproach prevented his feeling any regret.
இதற்கிடையில் காலின்ஸ் நடந்தவற்றை மௌனமாக அசை போட்டவாறு இருந்தான். அவனைப்பற்றி மிக உயர்வாக நினைத்திருந்ததால், எந்த காரணத்திற்காக தன்னை நிராகரித்தாள் என அவனால் யூகிக்க முடியவில்லை. அவனுடைய கர்வத்திற்கு அடி விழுந்திருந்தாலும் வேறு எந்த விதத்திலும் அவன் பாதிக்கப்படவில்லை. எலிசபெத்தை காதலிப்பதாக நினைத்திருந்தான். அவள், தனது தாயாருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும், ஆனால் அது அவளுக்கு அவசியம்தான் என நினைத்ததால், அவனுக்கு வருத்தம் ஏதும் வரவில்லை.
  1. A fool is always surprised at a failure since he contemplates only success because of the narrowness of the vision
  2. Foolishness arises out of self-sufficiency
  3. Grace constantly offers Man inconceivable benefits and witnesses his unconscious refusal. Utter folly can act like Grace or at least feel so
    கற்பனைக்கெட்டாததெல்லாம் தொடர்ந்து கொடுத்தாலும் மனிதன் மறுப்பான். மடமையின் முழுமை அருள் போலச் செயல்படும். அப்படி தன்னை நினைக்கும்.
24
While the family were in this confusion, Charlotte Lucas came to spend the day with them. She was met in the vestibule by Lydia, who, flying to her, cried in a half-whisper, "I am glad you are come, for there is such fun here! What do you think has happened this morning? -- Mr. Collins has made an offer to Lizzy, and she will not have him."
குடும்பம் இத்தகைய குழப்பத்தில் இருந்தபோது சார்லெட் லூகாஸ், அவர்களுடன் தங்குவதற்காக வந்தாள். வீட்டு வாசலிலேயே அவளைப் பார்த்த லிடியா, அவளிடம் விரைந்து வந்து தணிவான குரலில், “நீ வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இங்கு அத்தகைய வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை என்ன நடந்தது தெரியுமா? காலின்ஸ் லிசியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டான். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.”
  1. Every social visit has its subtle significance
    காரியமில்லாமல் ஒருவர் மற்றவரைப் போய்ப் பார்க்க மாட்டார்கள்.
  2. The overflowing energy of the most meaningless person accomplishes by its excess in some other member around
    அர்த்தமற்றவரின் அதிக உற்சாகம் அடுத்தவர் வாழ்வில் பலிக்கும்.
  3. What is rejected by one makes another rejoice
    ஒருவர் மறுப்பு அடுத்தவருக்கு ஆனந்தம்.
  4. Confusion is the indecision of the energy. Charlotte is clear-headed about these things. Naturally she arrives there
  5. The first thought when Charlotte heard Lizzy would not have Mr. Collins is she can very well have him
  6. To Charlotte any bachelor is an eligible bachelor. Only that she feels no right to expect any man to take interest in her at the age of 27. She can long for a man, but it is not in the scheme of her things. The rule is even the weakest can accomplish if the circumstances favour and the object rises to the occasion with the right attitudes. Here Collins is disappointed and mortified, feels hurt and would act readily to save his honour. His personality has the energy of foolish intensity. Thus a favourable situation has arisen to Charlotte. She can accomplish with a strategy of patiently listening to Collins which highly gratified his wounded dignity. Circumstances favour Charlotte as she has good will to Elizabeth and is armed with common sense. She is the one who feels the man of money has the right to offend. Such an attitude right after the blunt refusal of Elizabeth will be soothing to the jangled nerves of Collins
25
Charlotte had hardly time to answer before they were joined by Kitty, who came to tell the same news; and no sooner had they entered the breakfast-room, where Mrs. Bennet was alone, than she likewise began on the subject, calling on Miss Lucas for her compassion, and entreating her to persuade her friend Lizzy to comply with the wishes of all her family. "Pray do, my dear Miss Lucas," she added in a melancholy tone, "for nobody is on my side, nobody takes part with me; I am cruelly used, nobody feels for my poor nerves."
அதற்கு சார்லெட் பதில் அளிப்பதற்குள், அதே செய்தியை சொல்வதற்காக கிட்டி அங்கு வந்தாள். அவர்கள் காலைச் சிற்றுண்டி அறைக்குள் நுழைந்தவுடன் அங்கு தனியே இருந்த திருமதி. பென்னட் அச்செய்தியை பற்றியே பேச ஆரம்பித்தாள். மிஸ். லூகாஸை அழைத்து, தன் மேல் ஏதேனும் பரிதாபம் இருந்தால் தனது தோழி லிசியிடம் சென்று, குடும்பத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அவளை சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டாள். “எனதருமை லூகாஸ், யாரும் என் பக்கம் இல்லை. யாரும் என்னுடன் சேர்வதில்லை. என்னை மோசமாக நடத்துகிறார்கள். எனக்காக யாரும் அனுதாபப்படவில்லை” என்றாள்.
  1. In a moment of heat more than one unnecessary person arrives
    முக்கியமான நேரத்தில் அவசியமில்லாதவர் பலர் வருவர்.
  2. Three people giving the news of Lizzy’s refusal is invitation enough for her to think of herself in Lizzy’s place
  3. Complaint can pass on one’s benefit to the other
    குறை கூறினால் நமக்குள்ளது அவருக்குப் போகும்.
  4. Mrs. Bennet asks Miss Lucas to persuade Lizzy to comply with the wishes of all the family. All the family to her is herself. We cannot call Mrs. Bennet selfish as it is an attitude of a person who sees two attitudes and chooses the one that is selfish. She is a strong dynamic physical self who knows only herself. Even at that level, her passion for the marriage of her daughters is answered three fold. Charlotte has the vital resourcefulness that at once figures out an advantage for itself. She is not cunning or artful. It is a master stroke for her to see in one glance the opportunity for her. She has already qualified for this gift by her good will expressed to Elizabeth and Jane. She is endowed with mercenary common sense. What she gets in Collins is what she is exactly. It is worth noting that Elizabeth and Kitty persuade her to take Collins home as she has persuaded Elizabeth and Jane earlier. She is humble and self-effacing too. She tells Jane that she must let Bingley know of her liking. Now she has an opportunity to practise it herself. It worked successfully in 24 hours. Our study will be complete if we understand her marriage in the light of every attitude and action of hers since the beginning of the story
  5. Self pity is the surest way to ensure defeat
    தன் பரிதாப நிலையை அறிபவருக்கு வெற்றியென்பதில்லை.
  6. The fool thinks he is universally approved. Only when he fails even out of his own folly, he thinks everyone has deserted him
26
Charlotte's reply was spared by the entrance of Jane and Elizabeth.
ஜேனும், எலிசபெத்தும் அங்கு வந்ததால், சார்லெட் பதிலேதும் கூறவில்லை.
  1. A reply is an expenditure of productive energy
    பதில் சொல்வது தெம்பு அழிவது.
  2. Three people gave the news of Lizzy’s refusal. Charlotte is prevented from replying by the arrival of two people. She marries Collins. Here is a clue
27
"Ay, there she comes," continued Mrs. Bennet, "looking as unconcerned as may be, and caring no more for us than if we were at York, provided she can have her own way. But I tell you what, Miss Lizzy -- if you take it into your head to go on refusing every offer of marriage in this way, you will never get a husband at all -- and I am sure I do not know who is to maintain you when your father is dead. I shall not be able to keep you -- and so I warn you. I have done with you from this very day. I told you in the library, you know, that I should never speak to you again, and you will find me as good as my word. I have no pleasure in talking to undutiful children. Not that I have much pleasure, indeed, in talking to anybody. People who suffer as I do from nervous complaints can have no great inclination for talking. Nobody can tell what I suffer! But it is always so. Those who do not complain are never pitied."
“எதைப்பற்றியும் கவலைப்படாமல், நம்மைப்பற்றிய அக்கறையும் இல்லாமல் வருகிறாள் பார். நான் ஒன்று சொல்கிறேன் லிசி, இந்த மாதிரி எல்லா திருமண வாய்ப்புகளையும் மறுத்துக் கொண்டே வந்தால் உனக்கு ஒரு கணவன் கிடைக்கவே மாட்டான். உன் தந்தையின் காலத்துக்குப் பிறகு யார் உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் உன்னை வைத்துக் கொள்ள முடியாது. அதனால் நான் உன்னை எச்சரிக்கிறேன், இன்றுடன் உன்னுடைய உறவை நான் முடித்துக் கொள்கிறேன். நூலகத்திலேயே, நான் இனி உன்னுடன் பேச மாட்டேன் என்று கூறினேன். அது உண்மை. கடமையை மறந்த குழந்தைகளிடம் பேசுவதில் எனக்கு ஒரு சந்தோஷமும் கிடையாது. ஏன், யாரிடமும் பேசுவதில் எனக்கு ஒரு சந்தோஷமும் கிடையாது. என்னைப்போல நரம்பு பிரச்சினைகளில் கஷ்டப்படுபவர்களுக்குப் பேச வேண்டும் என்கின்ற ஆசையே இருக்காது. நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் குறைபட்டுக் கொள்ளாதவர்கள் மேல் எப்பொழுதுமே பச்சாதாபம் எழாது.”
  1. Capacity to be unconcerned is capacity to win
    பொருட்படுத்தாமலிருக்கும் திறன் வெல்லும்.
  2. Good will in low characters turns into ill-will
    தாழ்ந்தவரின் நல்லெண்ணம் கெட்ட எண்ணமாகும்.
  3. He who talks non-stop imagines he never likes talking as his own subconscious is moving in future births to non-talking
    வாய் ஓயாமல் பேசுபவன் தனக்குப் பேசப் பிடிக்காது என நினைக்கிறான். வரப்போகும் பிறவிகளில் மௌனமாக இருக்கப்போவது இப்பொழுது அவனுக்குத் தெரிகிறது
  4. Overexertion of weak nerves is described here as nervous complaint
    பலமில்லாதவர் முனைந்து செய்யும் காரியம் நரம்பெல்லாம் குடைவதாகத் தெரியும்.
  5. Neglected people seek to evoke pity in others
    ஒதுக்கப்பட்டவர் பிறர் அனுதாபத்தைத் தேடுவர்.
  6. “I shall not be able to keep you” says Mrs. Bennet to Elizabeth. It is Elizabeth who rights the wrong done by Mrs. Bennet by having Lydia married. It is a rule that those who are obliged to others will speak as if the others are obliged to them. It is Mrs. Bennet who is obliged to Elizabeth. She talks as if Elizabeth is taken care of by her
  7. Mrs. Bennet offered not to speak to Lizzy, said she has done with her and she is unable to go to Pemberley
28
Her daughters listened in silence to this effusion, sensible that any attempt to reason with or sooth her would only increase the irritation. She talked on, therefore, without interruption from any of them, till they were joined by Mr.Collins, who entered with an air more stately than usual, and on perceiving whom she said to the girls, "Now, I do insist upon it, that you, all of you hold your tongues, and let Mr. Collins and me have a little conversation together."
என்ன சமாதானம் சொன்னாலும், அது அவள் எரிச்சலை அதிகப்படுத்தும் என்பதால், அவளது பெண்கள் மௌனமாக அவளது புலம்பலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதனால், காலின்ஸ் எப்பொழுதும் இல்லாத கம்பீரத்துடன் அங்கு வரும்வரை எந்தவித தடங்கலும் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் திருமதி. பென்னட் தனது பெண்களிடம், “நீங்கள் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருங்கள், நானும் காலின்ஸும் சிறிது பேச வேண்டும்” என்றாள்.
  1. There are conditions in which any remedy to a problem can only make it worse
    ஒரு பிரச்சினையை எப்படி தீர்க்க முயன்றாலும் அது பெரும் சிக்கலாகும் நிலையுண்டு.
  2. At any given moment, there is significance to the story by the arrival of any character
    எந்த நேரமும் கதையில் எவர் வந்தாலும் அது முக்கியமாகும்.
  3. Parental authority is great
  4. Mother and four daughters with Charlotte receiving Mr. Collins seems to offer her to him
  5. “Any attempt to reason with or sooth her would only increase her irritation”. Attention is energizing. Trying to reason will energise Mrs. Bennet. She is irritation. This energy will only increase the irritation she is. It is a great rule, “Mr. Collins, whose enquiries after herself and all her family were very minute”. Here Collins takes after Lady Catherine whose condescension takes this form
29
Elizabeth passed quietly out of the room, Jane and Kitty followed, but Lydia stood her ground, determined to hear all she could; and Charlotte, detained first by the civility of Mr. Collins, whose inquiries after herself and all her family were very minute, and then by a little curiosity, satisfied herself with walking to the window and pretending not to hear. In a doleful voice Mrs. Bennet thus began the projected conversation: -- "Oh! Mr. Collins!"
எலிசபெத் அமைதியாக அறையைவிட்டு வெளியேறினாள். ஜேனும், கிட்டியும் பின் தொடர்ந்தனர். லிடியா அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக அங்கேயே நின்றாள். காலின்ஸ், சார்லெட் பற்றியும், அவளது குடும்பத்தைப் பற்றியும் விரிவாக விசாரித்ததால், மரியாதை கருதி அங்கிருந்து செல்வதற்கு தயக்கம் காட்டிய அவள், பிறகு ஆர்வம் காரணமாய் ஜன்னல் அருகே சென்று அவர்கள் பேசுவதைக் கேட்காததுபோல் நின்று கொண்டிருந்தாள். சோகமான குரலில் திருமதி. பென்னட் பேச ஆரம்பித்தாள் - “ஓ! திரு. காலின்ஸ்!”
  1. Those who stay will play a part; or those who are to play a part will not leave, but will stay
    கதையில் நீடிப்பவருக்கு இடமுண்டு. முக்கியமானவர் விலக மாட்டார்கள்.
  2. Lydia stood her ground with Charlotte
  3. Lydia is the link between Collins and Charlotte
  4. Charlotte was not ashamed of overhearing
  5. Those were days in England when overhearing was the fashion
  6. Charlotte overhears Collins withdrawing from Mrs. Bennet’s family. Now, she sees, the field is open to her. This is a rule of accomplishment by which the least person can substantially accomplish in the right circumstances by the right approach. Collins was stung. He craves for attention. Charlotte offers him venerable solicitude. He readily falls for her saying she was made for him
30
"My dear madam," replied he, "let us be for ever silent on this point. Far be it from me," he presently continued, in a voice that marked his displeasure, "to resent the behaviour of your daughter. Resignation to inevitable evils is the duty of us all; the peculiar duty of a young man who has been so fortunate as I have been in early preferment; and I trust I am resigned. Perhaps not the less so from feeling a doubt of my positive happiness had my fair cousin honoured me with her hand; for I have often observed that resignation is never so perfect as when the blessing denied begins to lose somewhat of its value in our estimation. You will not, I hope, consider me as shewing any disrespect to your family, my dear madam, by thus withdrawing my pretensions to your daughter's favour, without having paid yourself and Mr. Bennet the compliment of requesting you to interpose your authority in my behalf. My conduct may, I fear, be objectionable in having accepted my dismission from your daughter's lips instead of your own. But we are all liable to error. I have certainly meant well through the whole affair. My object has been to secure an amiable companion for myself, with due consideration for the advantage of all your family, and if my manner has been at all reprehensible, I here beg leave to apologise."
“எனதருமை மேடம், நாம் இனி இவ்விஷயத்தைப்பற்றி பேச வேண்டாம். உங்களுடைய மகளின் நடத்தையைக் கண்டு என்னால் கோபப்பட முடியாது. அது என்னால் முடியாது. சில கெட்டவைகள் நமது வாழ்க்கையில் நடக்கும். நாம் பொறுத்துக் கொண்டு போக வேண்டும். இதுவரை எல்லாம் நல்லதாகவே நடந்திருக்கும் எனக்கு, இதனையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தங்களுடைய மகள் சம்மதித்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் நிராகரிப்பும் ஒரு பெரிய விஷயமல்ல என என் மனம் நினைக்க ஆரம்பித்தவுடன், அவ்வளவு வருத்தம் ஏற்படவில்லை. எலிசபெத்தை வற்புறுத்த வேண்டாம், நானே விலகிவிடுகிறேன். அவளை சம்மதிக்க வைக்கும்படி உங்களை கேட்காததற்கு மன்னிக்கவும். நான் உங்களை அவமரியாதை செய்வதாக நினைக்க வேண்டாம். உங்கள் வாயிலிருந்து அல்லாமல் உங்கள் மகளிடமிருந்து எனக்கு மறுப்பு வந்ததை பார்த்து நான் நடந்து கொள்வது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நாம் அனைவருமே தவறு செய்ய நேரிடலாம். நான் இந்த விஷயத்தில் நல்லதையே நினைத்தேன். உங்கள் குடும்ப நலனைக் கருதி, எனக்கு ஒரு இணக்கமான துணையை பெறுவதுதான் எனது குறிக்கோள். இதில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று முடித்தான்.
  1. With a determined talker, there is no conversation, but it is only a monologue
    முனைந்து பேசுபவருடன் உரையாடலில்லை, அவர் பேசுவதைக் கேட்கலாம்.
  2. Formal magnanimity of the offended victim contains a volcano of energy of revenge or resentment
    புண்பட்டவருடைய சிரித்த முகத்தின் பின்னால் எரிமலை குமுறும், பழி வாங்க நினைப்பெழும், வெறுப்புண்டாகும்.
  3. It is not so much the words, but the voice reveals
    சொல்லை விட குரல் பேசும்.
  4. Resignation is the poise of inner patience that sees the true course of events
    நடப்பதை அறியும் பொறுமை நிதானத்தை இழக்காது.
  5. Youth, wealth, status, knowledge, and rank are flattering, even in one reminding it to himself
    தானே நினைத்துப் பார்த்தாலும் இளமை, செல்வம், அந்தஸ்து, பதவி பெருமை தரும்.
  6. Matrimony is positively known to be a door of happiness by all before marriage
    திருமணத்தின் முன் எவரும் திருமணம் பெரு மகிழ்வு தரும் என நினைப்பார்கள்.
  7. Any one desires to have the authority himself, instead of invoking that of others to his support
    எவரும் பிறரை நம்பியிருப்பதைவிட சொந்தமாகச் செயல்பட பிரியப்படுவர்.
  8. The ultimate decision in marriage is not with the girl, but her parents, though she can refuse when they sanction
    திருமண முடிவு பெண்ணிடம் உள்ளது. பெற்றோர் அனுமதி தேவையென்றாலும் அவள் மறுக்க முடியும்.
  9. Even in extreme conditions, one thinks only of himself, not the other person
    நெருக்கடியான நேரத்திலும் மனிதன் தன்னைப் பற்றியே நினைப்பான், பிறரை நினைப்பதில்லை
  10. Charlotte hearing firsthand Collins’ opinion, the coast was clear to her
  11. Collins is pompous. His entry was pompous. Now his withdrawal is ceremonious. We see in the stupidity of Collins a certain animal intelligence of shrewdness that readily knows where its advantage lies
  12. His speech to Mrs. Bennet is a proposal to Charlotte in the subtle plane



story | by Dr. Radut