Skip to Content

Volume I Chapter 02: Mr. Bennet calls on Bingley

Chapter 2: Mr. Bennet calls on Bingley

திரு. பென்னட், திரு. பிங்கிலியை சந்தித்தல்

 
Summary: Elizabeth and three of her sisters are introduced, Kitty, Mary, and Lydia. After Mr. Bennet’s early teasing over visiting Bingley, it is revealed that he was first in line to meet Mr. Bingley, and subsequently the rest of the chapter is spent considering when Bingley will visit the Bennets in return.
 
சுருக்கம் : எலிசபெத்தும், அவளது மூன்று சகோதரிகள் கிட்டி, லிடியா, மேரி அறிமுகமாகின்றனர். பிங்கிலியை சந்திக்கச் செல்வதைப்பற்றி முதலில் திரு. பென்னட் கேலி செய்வது முடிந்தவுடன், அவர்தான் அவனை முதலில் சந்திக்கச் சென்றார் என்று பின்னால் தெரிய வருகிறது. பதில் மரியாதைக்காக, பிங்கிலி எப்பொழுது பென்னட் குடும்பத்தினரைச் சந்திக்க வருவான் என்பதில் மீதி அத்தியாயம் முடிகிறது.
 
 
 
1
Mr. Bennet was among the earliest of those who waited on Mr. Bingley. He had always intended to visit him, though to the last always assuring his wife that he should not go; and till the evening after the visit was paid she had no knowledge of it. It was then disclosed in the following manner: -- Observing his second daughter employed in trimming a hat, he suddenly addressed her with –
பிங்கிலியை சந்திக்கச் செல்ல மாட்டேன் என்று சொன்னாலும் அவரை முதலில் சந்திக்கச் சென்றவர் திரு. பென்னட்தான். ஆனால் தான் சந்தித்த விஷயத்தை அன்று மாலை வரை வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லவில்லை. சொல்ல வந்தபோதும் அதை வெளியிட்ட விதமே வேறு. இரண்டாவது மகள் தன்னுடைய தொப்பியை சீர் செய்து கொண்டிருந்த பொழுது அவளை நோக்கி -
  1. He who protests will readily do it
    எதிர்ப்பவன் தயாராக எதிர்த்ததைச் செய்வான்.
  2. Those who resist will act readily 
    எதிர்ப்பவர் எளிதாக ஏற்பார்கள்.
  3. Unwillingness to accept an idea is readiness to act
  4. Apparent resistance is from anxiety to act
    ஏற்பதற்குள்ள அவசரம் எதிர்ப்பாகவும் தோன்றும்.
  5. He who cannot disobey puts up a behaviour of disobliging  
    எதிர்க்க முடியாதவன் எதிர்த்துப் பேசுகிறான்.
  6. Secrecy ministers to the capacity of possessiveness
    பெற்றதை முழுவதும் ஆக்ரமித்துக் கொள்பவருக்கு இரகஸ்யம் துணை.
  7. Secrecy is the source of selfish pleasure
    சுயநலம் இரகஸ்யத்தால் சந்தோஷப்படும்.
  8. Secrecy acquires power only when others are aware of the existence of a secret
    இரகஸ்யம் என ஒன்றிருப்பது தெரிந்தால் இரகஸ்யம் முக்கியமாகும்.
  9. Through secrecy one tries to acquire a power he does not have
    இல்லாத அதிகாரத்தை இரகஸ்யம் பெற்றுத் தரும்.
2
"I hope Mr. Bingley will like it, Lizzy."
“லிசி, திரு. பிங்கிலிக்கு இத்தொப்பி பிடிக்கும் என நினைக்கிறேன்.”
  1. Suggestion is the most powerful method of communication
    குறிப்பாகச் சொல்வது முழுப்பலன் தரும்.
  2. A suggestion that contains an expectation loses its power
    எதிர்பார்க்கச் சொல்வது ஏமாற்றம் தரும்
3
"We are not in a way to know what Mr. Bingley likes," said her mother resentfully, "since we are not to visit."
“நாம்தான் அவரை சென்று சந்திக்கப் போவதில்லையே, அப்படியிருக்கும்பொழுது அவருக்கு என்ன பிடிக்கும் என எப்படி நமக்குத் தெரியும்” என்று வெறுப்பாகச் சொல்கிறாள் திருமதி. பென்னட்.
  1. The physical is impervious to suggestions
    ஜாடைமாடையாகப் பேசினால் ஜடமானவர்க்குப் புரியாது.
  2. The oblivious physical is unaware of the subtle
  3. Mrs. Bennet missed that suggestion
    என்ன சொல்கிறார் கணவன் என மனைவி புரிந்து கொள்ளவில்லை.
  4. Final accomplishment is indicated by the subtle communication
4
"But you forget, mama," said Elizabeth, "that we shall meet him at the assemblies, and that Mrs. Long has promised to introduce him."
“ஆனால் நீ ஒன்றை மறந்து விடுகிறாய் அம்மா, நாம் எல்லோரும் நடனமாட சேருமிடத்தில் அவரை சந்திக்கத்தானே போகிறோம், திருமதி. லாங்க் அவரை நமக்கு றிமுகப்படுத்துவதாக வாக்களித்திருக்கிறாரே” என்றாள் எலிசபெத்.
  1. Too subtle a suggestion misses its purpose
    சூட்சுமம் அதிகமானால் எவருக்கும் தட்டுப்படாது.
  2. Lizzy too missed it
    எலிசபெத்திற்கும் அது புரியவில்லை.
  3. Younger generation is less cynical
    சிறுவர்கட்குத் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது.
  4. Intelligence is not frustrated like ignorance
    விரக்தி அறியாமைக்கு, அறிவுக்கல்ல.
    It tries to devise other methods
    அறிவு வேறு வழி காணும்.
  5. Penetration perceives
    கூர்ந்த பார்வை புரிந்து கொள்ளும்.
  6. In a positive atmosphere, people are forced to act against their low characters
    நல்ல நேரத்தில் மட்டமானவருக்கு அனைவரும் எதிர்.
5
"I do not believe Mrs. Long will do any such thing. She has two neices of her own. She is a selfish, hypocritical woman, and I have no opinion of her."
“திருமதி. லாங்க் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. அவருக்கே தனது சகோதரரின் பெண்கள் இருவர் உள்ளனர். மேலும் பொய்மையும், சுயநலமும் படைத்த அவள் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது” என்றாள் திருமதி.பென்னட்.
  1. Jealousy overrides courtesy
  2. Age is unbelieving
    வயதானால் நம்பிக்கை இருக்காது.
  3. One evaluates another as oneself
  4. To expect another to act like oneself is to be narrow-minded
    தன்னைப் போல் பிறரிருக்க வேண்டும் என்பது குறுகிய மனப்பான்மை.
  5. No man can be the only source of success to another
    ஒருவர் வெற்றி பெற அடுத்தவரை நம்ப வேண்டியதில்லை.
  6. Life is alive on all sides, if one is not blind
    கண் திறந்து பார்த்தால் வாழ்வின் ஜீவன் தெரியும்.
  7. One’s action need not be circumscribed by his situation
    செயல் சந்தர்ப்பத்தைப் பொறுத்ததில்லை.
  8. A selfish person can act selflessly for selfish reasons
    சுயநலமி சுயநலத்திற்காக பிறர் பலன்பட செயல்படுவதுண்டு.
6
"No more have I," said Mr. Bennet; "and I am glad to find that you do not depend on her serving you."
திரு. பென்னட் அதற்கு “எனக்கும் அவள் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. நீ அவளை நம்பாமல் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது” என்றார்.
  1. You cannot employ a method for which you have no faculty
    உனக்குப் பிடிபடாத முறையை நீ பயன்படுத்த முடியாது.
  2. Mr. Bennet is not subtle enough to make a suggestion work
    சொல்வது புரியுமாறு சொல்லும் சூட்சுமமில்லை பென்னட்டுக்கு.
  3. Secrecy generates self-enjoyment
7
Mrs. Bennet deigned not to make any reply, but, unable to contain herself, began scolding one of her daughters.
இதற்கு எந்த பதிலும் தராதபோதிலும், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத திருமதி. பென்னட் தனது ஒரு மகளை திட்ட ஆரம்பித்தாள்.
  1. Physical mind faced with incomprehension turns abusive
    புரியாவிட்டால் மடையன் திட்டுவான்.
  2. Incapacity to contain an emotion bursts out as anger
8
"Don't keep coughing so Kitty, for Heaven's sake! Have a little compassion on my nerves. You tear them to pieces."
“கிட்டி, தயவு செய்து உன் இருமலை நிறுத்து. என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.”
  1. Inner inability is outer abuse
    அகத்தின் இயலாமை புறத்தில் அநியாயம்.
  2. Inability evokes the life response of a weakness
    இயலாமை பலஹீனத்தின் பலன் பெறும்.
  3. To abuse another for one’s weakness is not lack of culture but it is the culture of barbarians
    தன் குறைக்காகப் பிறரைக் குறை கூறுவது பண்பற்ற செயல் மட்டுமல்ல. அது காட்டுமிராண்டியின் பண்பு.
  4. Weak minds straining to think cough
    மனவளர்ச்சியற்றவர் சிந்திக்க நினைத்தால் தொண்டை அடைத்துக் கொள்ளும்.
  5. A subtle suggestion that is crude will evoke the physical response of a cough
    அறிவற்றவனின் சூட்சுமம் உடலைக் கிளப்பும், இருமல் வரும்.
9
"Kitty has no discretion in her coughs," said her father; "she times them ill."
“என்ன செய்வது? நேரம் காலம் தெரியாமல் அவள் இருமுகிறாள்”என்றார் திரு. பென்னட்.
  1. Suggestion lacking apt strategy has ill-directed effects
    குறிப்பு பொருத்தமற்றதானால் பலன் வேறு மாதிரி வரும்.
10
"I do not cough for my own amusement," replied Kitty fretfully. "
“என்னுடைய சந்தோஷத்திற்காகவா நான் இருமுகிறேன்” என்றாள் கிட்டி எரிச்சலுடன்.
  1. Awkwardness defends itself amusingly
    பழகத் தெரியாதவர் சொல்லும் பதில் சிரிப்பை எழுப்பும்.
  2. Thwarted physical turns mildly rough
    காரியம் நடக்காவிட்டால் பேச்சு முரட்டுத்தனமாக எழும்.
  3. Fretfulness is inability to accept the atmosphere
11
“When is your next ball to be, Lizzy?"
“லிசி, உங்களுடைய அடுத்த நடனம் எப்பொழுது?”
  1. Failed suggestion refuses to revive by similar moves
    தவறிய குறிப்பை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.
12
"To-morrow fortnight."
“பதினைந்து நாட்களுக்குப் பிறகு.”
 
13
"Aye, so it is," cried her mother; "and Mrs. Long does not come back till the day before; so it will be impossible for her to introduce him, for she will not know him herself."
“அப்படியா, அதற்கு முதல் நாள்தானே திருமதி. லாங்க் ஊரிலிருந்து வருகிறார். அவளுக்கு திரு.பிங்கிலியைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க முடியாதே, பின் எப்படி எனக்கு அவரை அறிமுகப்படுத்த முடியும்” என வியக்கிறாள் திருமதி. பென்னட்.
  1. The physical can hardly wait
  2. Social etiquette has a compelling force even among low conscious people and the uncultured
    தாழ்ந்தவர், பண்பற்றவரிடமும் ஊருக்குரிய சட்டங்களை பின்பற்றுதல் அவசியம்.
14
"Then, my dear, you may have the advantage of your friend, and introduce Mr. Bingley to her."
“அப்படி எனில் நீ, திருமதி லாங்கிற்கு பிங்கிலியை அறிமுகப்படுத்தி விடு.”
  1. Suggestion gives place to awkward openings
    குறிப்பு அடுத்தவரை விழிக்கச் செய்கிறது.
  2. Sarcasm vexes to amuse
15
"Impossible, Mr. Bennet, impossible, when I am not acquainted with him myself; how can you be so teazing?"
“முடியாது திரு. பென்னட், முடியாது. எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாதபொழுது நான் எப்படி அறிமுகப்படுத்த முடியும். ஆனாலும் நீங்கள் என்னை மிகவும் கேலி செய்கிறீர்கள்.”
  1. The physical needs direct speech
    ஜடமானவர்க்கு நேரடியாகச் சொல்ல வேண்டும்.
  2. Humour is not for an uncultivated mind
  3. Inability to understand in a dull mind becomes teasing
    சொல்வது புரியாவிட்டால், கேலி செய்வதாக நினைப்பார்கள்.
16
"I honour your circumspection. A fortnight's acquaintance is certainly very little. One cannot know what a man really is by the end of a fortnight. But if we do not venture somebody else will; and after all, Mrs. Long and her neices must stand their chance; and, therefore, as she will think it an act of kindness, if you decline the office, I will take it on myself."
“நீ மிகவும் உஷாராகத்தான் இருக்கிறாய். ஆம். பதினைந்து நாட்கள் பழக்கத்தில் ஒருவரை தெரிந்து கொள்ள முடியாதுதான். ஆனால் நாம் விலகிக் கொண்டால் வேறு எவரேனும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு விட்டால் என் செய்வது. நீ இதனை செய்தால் திருமதி. லாங்கின் சகோதரர் மகள்களுக்காக நீ அக்கறை எடுத்துக் கொண்டதாக அவர்கள் நினைக்க வாய்ப்புண்டு. உன்னால் முடியாது எனில் நான் இதை செய்கிறேன்.”
  1. Failed suggestion reveals its true form
    பலிக்காத சொல்லின் சுய உருவம் வெளி வரும்.
  2. Opportunities are not for the dull witted or slow moving
  3. The heart chooses in a trice; the speech rises to social occasion
  4. Subtle perception tells you what a man is in the first few contacts
  5. People understand others for their own purposes at once in the first meeting
    பார்த்தவுடன் பிறரை தம் கோணத்தில் புரிந்து கொள்வார்கள்.
  6. Years of acquaintance are not enough to predict a man, even oneself, in new weighty affairs
    விஷயம் பெரியதானால் நாம் என்ன செய்வோம் எனக் கூற முடியாது. எவ்வளவு வருஷம் பழகினாலும் விஷயம் என எழுந்தால் தான் மனிதன் என்ன செய்வான் எனப் புரியும்.
  7. He who does not hesitate to compete for a favour is not a gentleman
    நல்லவரால் வசதி தேவையெனக் கேட்க முடியாது.
  8. Competing as others, one becomes a member of the crowd
    வேண்டும் எனக் கேட்பவர் எளிய மக்கட் கூட்டத்திற்குரியவர்.
  9. Man is generous in conceding what is not his own
    உரிமையற்றதை மனிதன் தாராளமாகக் கொடுப்பான்.  
  10. Refraining from competition out of inability can be considered as an act of kindness
    போட்டியிடத் திறமையற்றவரை நல்லவர் என்பதுண்டு.
17
The girls stared at their father. Mrs. Bennet said only, "Nonsense, nonsense!"
பெண்கள் தகப்பனாரை வியப்பாகப் பார்த்தனர். திருமதி. பென்னட்டால் “முட்டாள்தனம், முட்டாள்தனம்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
  1. The girls grow alert without comprehension
    புரியாவிட்டாலும் பெண்கள் உஷாராகின்றனர். 
  2. Personal interest makes for the best alertness
  3. The next generation is more perceptive
    அடுத்த தலைமுறைக்கு அறிவு அதிகம்.
  4. The physical prods மடையன் பிராண்டுவான்
  5. The physical demands direct communication
18
"What can be the meaning of that emphatic exclamation?" Cried he. "Do you consider the forms of introduction, and the stress that is laid on them, as nonsense? I cannot quite agree with you there. What say you, Mary? For you are a young lady of deep reflection, I know, and read great books and make extracts."
“இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவதில் என்ன முட்டாள்தனம் இருக்கிறது. மேரி, நீ என்ன சொல்கிறாய்? நீ தான் அழகாக சிந்திப்பவளாயிற்றே, நிறைய புத்தகங்கள் படிக்கிறாய். அதிலிருந்து ஏதேனும் சில கருத்துக்களை எழுதி வைத்துக் கொண்டிருப்பாயே.”
  1. Reading raises personality
  2. In society FORM carries significance
  3. Poor intellect trying subtle approaches to physical dullness has to undo its own riddle
    மந்தமானவரிடம் புத்தியில்லாதவர் சூட்சுமமாகப் பேசினால், பேசியவரே முடிச்சை அவிழ்க்க வேண்டும்.
  4. It is not given to man to speak out all that he knows
  5. Those who miss domestic joy consider even clumsy behaviour an entertainment
    அன்பான வீட்டில் பிறக்காதவர் ஆர்ப்பாட்டமான செயலையும் அனுபவிப்பார்.
19
Mary wished to say something very sensible, but knew not how.
மேரிக்கு ஏதாவது அர்த்தமுள்ளதாக கூற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி சொல்வது எனப் புரியவில்லை.
  1. Reading does not improve intelligence
    படித்தால் அறிவு வராது.
  2. Reading can give you information, not experience
    படித்தால் விபரம் தெரியும், அனுபவம் வாராது.
  3. Experience comes out of assimilating the information in the apperceptive mass
    படித்ததை மனம் ஏற்று பக்குவப்படுவது அனுபவம்.
  4. Extracts will help quoting, not explaining
    படித்ததைப் பிறருக்குச் சொல்லலாம், விளக்க முடியாது.
  5. Memory of experience is different from memory of reading
    படிப்பு நினைவு வருவது, அனுபவம் நினைவு வருவதினின்று வேறுபட்டது
20
"While Mary is adjusting her ideas," he continued, "let us return to Mr. Bingley."
“சரி, மேரி யோசிக்கட்டும். நாம் திரு. பிங்கிலியைப் பற்றி பேசுவோம்” என்றார் திரு. பென்னட்.
  1. Ideas adjust themselves in the mind
21
"I am sick of Mr. Bingley," cried his wife.
“போதும், அவரைப் பற்றி பேசியது” கத்தினாள் திருமதி. பென்னட்.
  1. Physicality is never appreciated by physicality
    ஜடம் ஜடத்தைப் புரிந்து கொள்ளாது.
  2. Disgust is lack of comprehension
  3. Practical jokes are unsavoury
  4. The delay in the first communication delays the first proposal
22
"I am sorry to hear that; but why did not you tell me so before? If I had known as much this morning I certainly would not have called on him. It is very unlucky; but as I have actually paid the visit, we cannot escape the acquaintance now."
“அப்படியா, எனக்கு இதைக் கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே, இப்படி என்று முன்பே தெரிந்திருந்தால் நான் இன்று காலை அவரை சென்று சந்தித்திருக்கவே மாட்டேனே. ஆனால் இனி எதுவும் செய்ய முடியாது. நான் அவரை சென்று பார்த்து விட்டு வந்து விட்டதால் அவரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.”
  1. Intelligence is not born in one generation. To catch a suggestion subtle intelligence is needed
    அறிவு ஒரு தலைமுறையில் வருவதில்லை. குறிப்பை உணர சூட்சும அறிவு தேவை
  2. His daughters too do not pick up his subtle suggestion
    அவர் பெண்களும் அவருடைய குறிப்பை அறியவில்லை.
23
The astonishment of the ladies was just what he wished; that of Mrs. Bennet perhaps surpassing the rest; though, when the first tumult of joy was over, she began to declare that it was what she had expected all the while.
எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதுதான் திரு.பென்னட் ஆசைப்பட்டதும். ஆனால் திருமதி. பென்னட்டால் தன்னுடைய வியப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. சற்று அமைதியானவுடன் திருமதி. பென்னட், தான் இதைத்தான் இவ்வளவு நேரமும் எதிர்பார்த்ததாக கூறுகிறாள்.
  1. One needs an intelligence to successfully surprise dull people
    மந்தமானவர்க்கு ஆச்சரியம் தர அறிவு தேவை.
  2. Surprise is for the subtle
  3. Surprise surpasses existence
  4. The most disappointed is most surprised
    அதிக ஏமாற்றம் அதிக ஆச்சரியம் தரும்.
  5. Astonishment is in proportion to one’s ignorance
    ஆச்சரியம் அறியாமைக்குரியது.
  6. The physical understands a direct explanation
    ஜடமான புத்திக்கு சூட்சுமம் புரியாது, நேரடியாகக் கூற வேண்டும்.
  7. The physical consoles itself by imagining an intelligence in it
    ஜடமானவர் தனக்கு அறிவுள்ளதாக நினைத்து சமாதானமாகிறார்.
  8. The dullest is most enthusiastic
  9. Wisdom after the event is for the slow witted
  10. Success makes the detestable sweet
  11. The possessive physical claims all the credit to itself
24
"How good it was in you, my dear Mr. Bennet! But I knew I should persuade you at last. I was sure you loved your girls too well to neglect such an acquaintance. Well, how pleased I am! And it is such a good joke, too, that you should have gone this morning, and never said a word about it till now."
“நீங்கள் மிகவும் நல்லவர் திரு. பென்னட்! நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள் என எனக்கு தெரியும். உங்கள் பெண்கள் மீது உங்களுக்கு கரிசனம் உண்டு என எனக்குத் தெரியும். உங்களால் இவ்வளவு நல்ல சம்பந்தத்தை புறக்கணிக்க முடியாது. எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆனாலும் காலையில் சென்றுவிட்டு வந்ததைப்பற்றி இதுவரை மூச்சு விடாமல் இருந்தது ஆச்சரியம்தான்.”
  1. The physical has the capacity to consider its defect a victory if it gets the result
    பலன் வந்தால் ஜடம் தோல்வியை வெற்றியாகக் கருதுவார்.
  2. Love means material results now
    பிரியம் என்றால் வசதி கை மேல் வர வேண்டும்.
  3. Physical is not angry as long as results are there
    பலன் வந்தால் ஜடத்திற்கு கோபம் எழாது.
  4. Intensity of any emotion by its definition is short lived
    சிறிது நேரம் விரையுள்ளதற்கே தீவிரம் உண்டு.
  5. Stupidity takes the credit to itself of everyone’s achievement
    எவரும் தன்னால் சாதிப்பதாக மடையன் நினைக்கிறான்.
  6. Goodness is usefulness
    மடையனுக்குரியது நன்மை.
25
"Now, Kitty, you may cough as much as you chuse," said Mr. Bennet; and, as he spoke, he left the room, fatigued with the raptures of his wife.
“கிட்டி, நீ இப்பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் இருமலாம்” என்றபடியே மனைவியின் அலாதியான சந்தோஷத்தைப் பார்த்து களைத்த திரு.பென்னட் அவ்விடத்தை விட்டு அகலுகிறார்.
  1. Reversal of the physical can stand any nonsense
    ஜடம் எதையும் பொறுத்துக் கொள்ள மாறும்.
  2. Absence of appreciation fatigues
    பாராட்டு இல்லாவிடில் ஜீவனிருக்காது.
  3. Polite patience is a strain on the mind as well as body
  4. Raptures do not fatigue; another’s rapture will certainly fatigue
    பூரிப்பு களைக்காது, பிறர் பூரிப்பு களைப்பு தரும்.
26
"What an excellent father you have, girls!" Said she, when the door was shut. "I do not know how you will ever make him amends for his kindness; or me either, for that matter. At our time of life it is not so pleasant, I can tell you, to be making new acquaintance every day; but for your sakes, we would do any thing. Lydia, my love, though you are the youngest, I dare say Mr. Bingley will dance with you at the next ball."
“எனதருமை பெண்களே, எவ்வளவு நல்ல தகப்பனார் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார். நீங்கள் எப்படி அவருக்கு பிரதி உபகாரம் செய்யப் போகிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு கூடத்தான். எங்களுடைய இந்த வயதில் புதியவர்களை சந்திப்பது என்பது எங்களுக்குப் பிடிக்காத விஷயம். ஆனால் இன்று உங்களுக்காக நாங்கள் எதுவும் செய்வோம். லிடியா, நீ எல்லோரையும்விட வயதில் சிறியவளாக இருந்தாலும் திரு.பிங்கிலி உன்னுடன்தான் நடனமாடுவார் என நான் உறுதியாக நம்புகிறேன்.”
  1. Appreciation is not for what he is, but what one understands
    பாராட்டு அவருக்கில்லை, எப்படிப் புரிகிறதோ அதற்குப் பாராட்டு.
  2. One hallmark of stupidity is it never owns a failure
    தோல்வியை ஏற்காதது மடமையின் முத்திரை.
  3. In gratitude too, one can give only what she has
    நன்றியை உணர்ந்தாலும் உள்ளதைத் தான் கொடுக்க முடியும்.
  4. In return, Mrs. Bennet displays her vulgarity
    பதிலாக Mrs. பென்னட் அழகில்லாமல் பேசுகிறார்.
  5. Gratitude expressed, even if it is mercenary, helps achieve
    தேவையில்லாவிட்டாலும் நன்றி தெரிவிப்பது நல்லது.
  6. Age delights in old acquaintances, does not seek new ones
    முதுமை விரும்புவது பழமை. முதுமை புதுமையை நாடாது.
  7. Age is physical, appreciates what is, dislikes the new
    வயதானால் ஜடமாவோம், இருப்பது பிடிக்கும், புதியது பிடிக்காது.
  8. Pliable vital characters move from one extreme to the other
  9. Conservation enjoys known company
  10. Passionate attachment is shameless
  11. The last child is the mother’s favourite
    தாயாருக்குக் கடைசி குழந்தை செல்லம்.
  12. Elder children represent the father, younger, the mother
  13. No enjoyment is greater than the enjoyment of expectation
  14. Man singles himself out for special favour
  15. The mother is forcefully there in Lydia – she elopes
    லிடியா தாயார் போன்றவள் - ஓடி விடுகிறாள்.
  16. The seriousness of folly will have the results of folly, not that of seriousness
    தீவிரமான மடமைக்கு மடமைக்குரிய தீவிரப் பலனிருக்கும். தீவிரத்தின் பலனிருக்காது.
  17. Expectation courts folly
    எதிர்பார்ப்பு தேடுவது மடமை.
  18. Expectation is entertainment for the imagination
    கற்பனையில் திளைப்பது எதிர்பார்ப்பது.
  19. Mrs. Bennet is not yet a wife except in the social sense. She is a bundle of raw untamed female energy that is shameless
    Mrs. பென்னட் மனைவியாகும் தகுதி பெறவில்லை. அளவு கடந்த தெம்புடைய பெண்பிள்ளை. இன்னும் வெட்க உணர்வு வரவில்லை.
27
"Oh!" Said Lydia stoutly, "I am not afraid; for though I am the youngest, I'm the tallest."
“அப்படியா, நான் தயார். வயதில் சிறியவளாக இருந்தாலும் நான் உயரமானவள்.”
  1. Man fixes the result first and searches for qualification
    முடிவை முதலில் நிர்ணயித்து, அதற்குரிய திறமையைத் தேடுவது மனிதன்.
28
The rest of the evening was spent in conjecturing how soon he would return Mr. Bennet's visit, and determining when they should ask him to dinner.
பிங்கிலி எப்பொழுது தங்களது இல்லத்திற்கு வருவார் என்பதிலும், என்று அவருக்கு விருந்து கொடுக்கலாம் என்று தீர்மானிப்பதிலுமே மீதி மாலைப் பொழுது கழிந்தது.
  1. The present is fleeting. Mind constructs out of the past
    நடப்பது பறப்பது, மனம் கடந்ததினின்று புனைகிறது.



story | by Dr. Radut