Skip to Content

Volume I Chapter 12: Jane and Elizabeth leave Netherfield

Chapter 12: Jane and Elizabeth leave Netherfield

ஜேனும், எலிசபெத்தும் நெதர்பீல்டை விட்டுக் கிளம்புதல்

 
Summary: With Jane’s recovery complete, she and Elizabeth decide to return home. Darcy notes that he has been paying too much attention to Elizabeth and decides to speak with her less. The Bennet sisters return home to a mother who is not entirely happy that Jane has returned, having wanted her to stay with Bingley for as long as possible. Kitty and Lydia are full of news of the military officers in Meryton.
 
சுருக்கம்: ஜேன் நன்றாக குணமடைந்த பிறகு, ஜேனும், எலிசபெத்தும் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் தீர்மானிக்கின்றனர். ஆனால் அவர்களது தாயாரோ வண்டி அனுப்ப முடியாததற்கு ஏதோ காரணங்களை கூறுகிறாள். இறுதியில் ஜேன், பிங்கிலியின் வண்டியை கேட்க நேர்ந்தது, அதனால் மேலும் ஒரு நாள் அங்கு தங்கும்படி நேரிடுகிறது. இதற்கிடையில் டார்சி, தான் எலிஸபெத்மீது கூடுதல் கவனம் செலுத்துவதை அறிந்து, அவளிடம் அதிகம் பேச வேண்டாம் என தீர்மானிக்கிறான். மறுநாள் பென்னட் சகோதரிகள் வீடு திரும்புகின்றனர். பிங்கிலியுடன் எவ்வளவு நாட்கள் தங்க முடியுமோ அவ்வளவு நாட்கள் தங்கட்டும் என அவர்களது தாயார் விரும்பியதால், அவர்கள் வீடு திரும்பியதில் தாயாருக்கு சந்தோஷமில்லை. கிட்டியும், லிடியாவும் மெரிடனில் இருக்கும் இராணுவ அதிகாரிகளைப்பற்றி செய்தி சொல்லிய வண்ணம் இருக்கின்றனர்.
 
 
1
In consequence of an agreement between the sisters, Elizabeth wrote the next morning to her mother, to beg that the carriage might be sent for them in the course of the day. But Mrs. Bennet, who had calculated on her daughters remaining at Netherfield till the following Tuesday, which would exactly finish Jane's week, could not bring herself to receive them with pleasure before. Her answer, therefore, was not propitious, at least not to Elizabeth's wishes, for she was impatient to get home. Mrs. Bennet sent them word that they could not possibly have the carriage before Tuesday; and in her postscript it was added that, if Mr. Bingley and his sister pressed them to stay longer, she could spare them very well. Against staying longer, however, Elizabeth was positively resolved -- nor did she much expect it would be asked; and fearful, on the contrary, as being considered as intruding themselves needlessly long, she urged Jane to borrow Mr. Bingley's carriage immediately, and at length it was settled that their original design of leaving Netherfield that morning should be mentioned, and the request made.
இரு சகோதரிகளும் பேசி தீர்மானித்தபடி, அடுத்த நாள் காலை எலிசபெத், தங்களை அழைத்துச் செல்ல வண்டி அனுப்பும்படி தங்களது தாயாருக்கு எழுதினாள். ஆனால் திருமதி. பென்னட்டிற்கோ, அவர்கள் வரும் செவ்வாய் கிழமைவரை தங்கினால் ஒரு வாரம் கணக்காகும் என நினைத்ததால், வீட்டிற்கு அழைத்துக் கொள்ள விருப்பப்படவில்லை. வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த எலிசபெத்திற்கு தாயாரின் பதில் சாதகமாக இல்லை. செவ்வாய் கிழமைக்குமுன் வண்டி அனுப்ப இயலாது எனவும், பிங்கிலியும் அவனது சகோதரியும் தங்கச் சொல்லி வற்புறுத்தினால் தனக்கு அதில் சம்மதம் என்றும் திருமதி. பென்னட் சொல்லி அனுப்பினாள். அவ்வாறு அவர்கள் கூறமாட்டார்கள் என எலிசபெத் நினைத்தாள். அதற்கு மேலும் அதிக நாட்கள் தேவையில்லாமல் தங்குகிறோமோ என்றுகூட நினைக்கலாம், என அஞ்சினாள். அதனால் பிங்கிலியிடம் வண்டி கேட்குமாறு ஜேனை கேட்டுக் கொண்டாள். இறுதியில் அன்று காலை நெதர்பீல்டைவிட்டு கிளம்புவதாக தீர்மானித்து, அதற்காக அவர்களிடம் வண்டி கேட்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
  1. Cultural sensitivity does not permit continued enjoyment of favours
    தொடர்ந்து உதவி பெற பரம்பரைப் பண்பு சொரணையாக மறுக்கும்.
  2. Calculation of the mercenary mind is far from cultural sensitivities
    ஆதாயத்தை நாடும் மனம் பண்பையும், சொரணையையும் புறக்கணிக்கும்.
  3. Those who make advances are not shy of the other discerning it
    உதவி கேட்டு கை நீட்டுபவர் அடுத்தவர் அதைக் காண்பதைப் பொருட்படுத்தமாட்டார்.
  4. Mrs. Bennet is determined! Human determination will evoke a life determination of similar character
    Mrs. பென்னட் தீர்மானமாக இருக்கிறார். மனிதன் முடிவு செய்தால் அதே போன்ற மனிதன் மூலம் வாழ்வு செயல்பட முடிவு செய்யும்.
  5. Mrs. Bennet is a determined woman of physicality. Her determination is energetic. It is based on an understanding of her physical mind. Her energy is physical. The rules of accomplishment require not taking initiative. She constantly takes insistent initiatives. They all contribute to cancel the work. She is extremely foolish. Throughout the story it is in evidence everywhere. Her wish is genuine and sincere. Its strength is greater than that of her folly. So, in the end three daughters are married not by her initiatives, but in spite of them
  6. Smallness readily acts according to its understanding, especially in refusing
  7. An illiberal mind sees vulgar initiative as a capital strategy
  8. Children who resent lack of culture in the parents have an abundance of them
    பெற்றோர் பண்பற்றவர் என நினைக்கும் குழந்தைகள், அதிகமாகப் பண்பற்றவர்.
  9. The subconscious, when its purpose is served, will be impatient to quit
    காரியம் முடிந்தபின் ஆழ் மனம் அங்கிருக்காது.
  10. Trespassing into hospitality is indelicate indeed
    உபசாரத்தை அதிகமாக அனுபவிப்பது அழகல்ல.
  11. Hospitality, being a guest, courtesy, to be delicately pleasant are native cultural endowments not easily acquired or even transmitted
    உபசாரம், விருந்து, நயம் மென்மையானவை. பிறப்பில் பெற வேண்டும். கற்க முடியாது. கொடுக்க முடியாது.
  12. To every foolish initiative Life has occasions that can countermand
  13. To offer one’s own advantage as if it is advantageous to the other is crass folly
  14. A right decision is always supported by circumstances
  15. Elizabeth’s impatience to go home is a right urge. Elizabeth balances Mrs. Bennet
    வீட்டிற்குப் போக எலிசபெத் துடிப்பது சரி. எலிசபெத் தாயாருக்கு ஈடு கொடுக்க முயல்கிறாள்.
2
The communication excited many professions of concern; and enough was said of wishing them to stay at least till the following day to work on Jane; and till the morrow their going was deferred. Miss Bingley was then sorry that she had proposed the delay, for her jealousy and dislike of one sister much exceeded her affection for the other.
இம்முடிவைக் கேட்டதும் மற்றவர்கள் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கூறலானார்கள். நாளை சென்றால் போதும், ஜேனுடைய உடல் நிலையை கவனித்துக் கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். ஒரு சகோதரியின்மேல் இருக்கும் வெறுப்பு, மற்றொரு சகோதரியின்மேல் இருக்கும் அன்பைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் அவர்கள் கிளம்புவதை தள்ளிப் போட்டதற்காக மிஸ். பிங்கிலி வருத்தப்பட்டாள்.
  1. An advantage arising entirely out of chance, is an occasion for man to use it as patrimony
    தற்செயலாய் எழும் வசதி, பிதிராஜ்யமாகும்.
  2. No advantage is without an attending disadvantage
    வசதியுடன் எதிரானதும் வரும்.
  3. Luck is there in the disadvantaged part
    வசதியற்ற கடந்த காலம் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யும்.
  4. Action initiated by one man’s liking can fully serve the purpose of another man’s liking
    ஒருவர் பிரியத்தால் ஆரம்பித்த காரியம், அடுத்தவர் பிரியத்தைப் பூர்த்தி செய்யும்.
  5. Politeness proposes the opposite to the intention
3
The master of the house heard with real sorrow that they were to go so soon, and repeatedly tried to persuade Miss Bennet that it would not be safe for her -- that she was not enough recovered; but Jane was firm where she felt herself to be right.
இவர்கள் சீக்கிரம் கிளம்புவதில் பிங்கிலிக்குத்தான் உண்மையிலேயே வருத்தம் இருந்தது. பூரண குணமாகாததால் பிரயாணம் செய்வது அவ்வளவு உசிதமல்ல என ஜேனை தங்க வைக்க முயற்சி செய்தான். ஆனால் அவள் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள்.
  1. Jane passively collaborates
    ஜேன் மௌனமாக ஒத்துழைக்கிறாள்.
  2. Bingley’s interest in Jane overcomes his shyness
4
To Mr. Darcy it was welcome intelligence: Elizabeth had been at Netherfield long enough. She attracted him more than he liked -- and Miss Bingley was uncivil to her, and more teasing than usual to himself. He wisely resolved to be particularly careful that no sign of admiration should now escape him, nothing that could elevate her with the hope of influencing his felicity; sensible that if such an idea had been suggested, his behaviour during the last day must have material weight in confirming or crushing it. Steady to his purpose, he scarcely spoke ten words to her through the whole of Saturday, and though they were at one time left by themselves for half an hour, he adhered most conscientiously to his book, and would not even look at her.
டார்சி இம்முடிவை வரவேற்றான். எலிசபெத் நீண்ட நாட்கள் நெதர்பீல்டில் தங்கிவிட்டதால், அவன் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அவளால் கவரப்பட்டான். மிஸ். பிங்கிலியும் அவளிடம் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை. தன்னையும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக கேலி செய்வதாக நினைத்தான். தான் அவளை விரும்புவதை எக்காரணம் கொண்டும் வெளியே தெரியாத வண்ணம் கவனமாக நடந்து கொண்டான். அவனால் அவளுக்கு சந்தோஷம் கிடைக்கும் என அவள் நினைத்திருந்தால் அதனை மாற்றும் வகையில் அவனுடைய நடத்தை இருந்தது. அதனால் இறுதி நாளான சனிக்கிழமையன்று எண்ணி பத்து வார்த்தைகள்கூட பேசவில்லை. மேலும் ஓர் அரை மணிநேரம் தனித்து இருந்தபோதும் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் புத்தகத்தை தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான்.
  1. Darcy feels a relief in spite of a greater longing for Elizabeth
  2. Contrary emotions cause opposite impulses
  3. Elizabeth insists on going in response to insistent attraction from Darcy
  4. Darcy’s inner struggle was because he could not acknowledge his love yet
  5. He wishes Elizabeth not to know of his love now. When he proposed to her it was this hesitation that stood in her way
  6. His conscious detachment now rears its head later as her conscious refusal
  7. Darcy’s studied avoidance – not speaking one word when left alone with her for half an hour – now enabled life to keep him aloof from her after the Pemberley visit for more than 30 or 45 days
    டார்சியின் பிடிவாதமான விலகல் - லீ மணி தனியாக எலிசபெத்துடனிருந்தும் ஒரு வார்த்தை பேசாதது - பெம்பர்லிக்கு அவள் வந்தபின் 30 அல்லது 45 நாட்களுக்கு விலகியிருக்கும்படிச் செய்தது.
  8. Grace gives unasked Mind refuses
    கேட்காமல் தரும் அருளை மனம் மறுக்கிறது.
  9. Mind has the fear that Grace may overwhelm it
    அருள் அபரிமிதமாகப் பலித்து விடும் என மனம் பயப்படுகிறது.
  10. Our acts are unconscious. Our only conscious act is to turn our face away from Grace
    நாம் கண்மூடியாகச் செயல்படுகிறோம். அருளை விட்டு நகர, அறிவோடு செயல்படுகிறோம்.
  11. Our failure is the occasion of Grace that compels us to shed our defects
    தோல்வியுற்ற நேரம் அருள் நம் குறையை விலக்குகிறது.
  12. Woman in love will accept a man who seeks her knowing her wrong side
    பெண் விரும்பினால், மனிதன் தவறானவன் என அறிந்தும் ஏற்றுக் கொள்வாள்
    She would want the man to love her for her wrong side but that is possible only when she offers it to him
    தன் குறைகளுக்காகத் தன்னை அவன் விரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பாள். அவளே அவள் குறையை அவனுக்கு எடுத்துரைத்தால் தான் அது முடியும்.
  13. The sub plots in a story are a must but the significance lies wholly in the main plot
    கிளைக் கதை அவசியம். கரு மூலக்கதையில் தானுள்ளது.
5
On Sunday, after morning service, the separation, so agreeable to almost all, took place. Miss Bingley's civility to Elizabeth increased at last very rapidly, as well as her affection for Jane; and when they parted, after assuring the latter of the pleasure it would always give her to see her either at Longbourn or Netherfield, and embracing her most tenderly, she even shook hands with the former. Elizabeth took leave of the whole party in the liveliest spirits.
எல்லோரும் விரும்பியபடி, ஞாயிறு காலையன்று சகோதரிகள் இருவரும் கிளம்பினர். மிஸ். பிங்கிலி மிக்க மரியாதையுடன் எலிசபெத்திடம் நடந்து கொண்டாள். ஜேனிடம் இருந்த அன்பு மேலும் கூடியது. லாங்க்பர்ன் அல்லது நெதர்பீல்டில் அவளை சந்திப்பது தங்களுக்கு எப்பொழுதும் மிக்க சந்தோஷத்தைத் தரும் என்றும் கூறி அவளை கட்டித் தழுவினாள். எலிசபெத்திற்குகூட கைகுலுக்கி விடை கொடுத்தாள். எலிசபெத் உற்சாகத்துடன் எல்லோரிடமும் விடை பெற்றாள்.
  1. It is freedom that makes Elizabeth lively
  2. A dying flame becomes brighter. Caroline’s civility to Elizabeth rapidly increases
    அணையும் தீபம் பிரகாசமாக இருக்கும். காரலின் எலிசபெத்திடம் அதிக மரியாதை காட்டினாள்.
  3. Courtesy and culture prevail over jealousy and dislike if the offending events offer to recede
    பொறாமையும் வெறுப்பும் தம்மை வலியுறுத்தாவிட்டால் பண்பும், நாகரீகமான பழக்கமும் இனிமையாகச் செயல்படும்.
6
They were not welcomed home very cordially by their mother. Mrs. Bennet wondered at their coming, and thought them very wrong to give so much trouble, and was sure Jane would have caught cold again; but their father, though very laconic in his expressions of pleasure, was really glad to see them; he had felt their importance in the family circle. The evening conversation, when they were all assembled, had lost much of its animation, and almost all its sense, by the absence of Jane and Elizabeth.
அவர்களை, தாயார் உள்ளன்போடு வரவேற்கவில்லை. அவர்கள் வந்ததே தவறு என்றும், இதனால் மறுபடியும் ஜேனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் எனவும் நிச்சயமாக நம்பினாள். ஆனால் தகப்பனார் அவர்களை பார்த்து மிக்க சந்தோஷம் அடைந்தார். அவர்கள் வீட்டில் இருப்பதை அவர் மிக முக்கியமாக நினைத்தார். ஜேன், எலிசபெத் இல்லாமல் நடக்கும் மாலை கலந்துரையாடல் இத்தனை நாட்களும் ஒரு ஜீவனும், அர்த்தமும் இல்லாமல் இருந்தது.
  1. To Mrs. Bennet what is inconvenient is wrong
  2. The father, mother, the five daughters in three groups each belong to a separate entity. The first time their unity arose was when Lydia ran away. It was a unity in sorrow, but still a unity. That led to all good events
    தகப்பனார், தாயார், ஐந்து பெண்கள் மூன்று பிரிவாகத் தனித்தனியாக இருந்தனர். லிடியா ஓடியபொழுது அவரனைவரும் ஒன்றாயினர். அது சோகத்தில் ஒன்றானது. ஆனாலும் அது ஒற்றுமை. அதன் விளைவாக நல்லது நடந்தன.
  3. It is a pity that the battlefield for the parents is the lives of their children
    குழந்தைகள் வாழ்வை பெற்றோர் தம் போர்க்களமாக்குவது துர்அதிர்ஷ்டம்.
  4. Even after an event is over it requires courteous manners to accept the fait accompli with social grace.
    காரியம் முடிந்தபின்னும், முடிவை அழகாக ஏற்க நயமான நாகரீகம் தேவை.
  5. The mother thinks of marriage, the father the evening conversation, the other daughters gossip
    தாயாருக்குத் திருமணம், தகப்பனாருக்கு மாலை உரையாடல்.
7
They found Mary, as usual, deep in the study of thorough bass and human nature; and had some new extracts to admire, and some new observations of thread-bare morality to listen to. Catherine and Lydia had information for them of a different sort. Much had been done and much had been said in the regiment since the preceding Wednesday: several of the officers had dined lately with their uncle, a private had been flogged, and it had actually been hinted that Colonel Forster was going to be married.
மேரி எப்பொழுதும் போல் தன் படிப்பில் மூழ்கி, அதனுள் இருந்த புதிய கருத்துக்களையும், நீதிகளையும் ரசித்துக் கொண்டிருந்தாள், காதரின், லிடியா இருவருக்கும் பல தரப்பட்ட விஷயங்கள் இருந்தன. சென்ற புதனிலிருந்து படைப்பிரிவை பற்றி கூறுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தங்கள் சித்தப்பாவுடன் பல இராணுவ அதிகாரிகள் விருந்துண்டனர், ஒரு அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்டது, கர்னல் பார்ஸ்டருக்கு திருமணம் நடக்கப் போவதாக பேச்சு இருந்தது என்று பல விஷயங்களைப் பற்றி கூறினர்.
  1. Neglect leads to concentration in Mary
  2. It is a pity to be neglected; it is a psychological tragedy to accept that neglect as inevitable
    ஒதுக்கப்படுவது பாவம், அதை விதியாக ஏற்பது பேயை மனைவியாக ஏற்பதாகும்.
  3. Learning and music are no sufficient compensation for life
    படிப்பும், இசையும் வாழ்வுக்குச் சமமாகாது.
  4. Empty heads are filled with useless information
  5. Families can exist with no emotional centre
    பற்றில்லாமல் குடும்பங்களுண்டு.



story | by Dr. Radut