Skip to Content

Volume I Chapter 11: Jane Recovers

Chapter 11: Jane Recovers

ஜேன் குணமடைகிறாள்

Summary: With Jane feeling better, she arrives in the drawing room and spends a few hours of the evening talking with Bingley. In an attempt to draw Darcy’s attention, Miss Bingley asks Elizabeth to walk with her. Darcy and Elizabeth analyse their characters. She comments that his problem is a “propensity to hate everybody” and he responds by saying that she tries to “willfully misunderstand”.
 
சுருக்கம்: ஜேன் சற்று குணமடைந்தவுடன், வரவேற்பறைக்கு வந்து மாலை நேரத்தில் சில மணி நேரம், பிங்கிலியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். நடனத்தைப்பற்றி மிஸ். பிங்கிலி தனது சகோதரனிடம் விசாரிக்க, அவனும் அதைக் கண்டிப்பாக நடத்தப் போவதாக கூறுகிறான். டார்சி, தன்னிடம் எந்தவித கவனமும் செலுத்தாததைக் கவனித்த அவள், எலிசபெத்தை தன்னுடன் நடக்கும்படி கேட்டுக் கொண்ட பொழுது மட்டும் தங்களை கவனிப்பதைப் பார்க்கிறாள். வீண் பெருமையைப்பற்றி டார்சியும், எலிசபெத்தும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்கின்றனர். அவனுடைய பிரச்சினையே “எல்லோரையும் வெறுக்கும் மனோபாவம்”என்று எலிசபெத் விமரிசனம் செய்ய அதற்கு அவன் “மற்றவர்களை வேண்டும் என்றே தவறாகப் புரிந்துக் கொள்கிறாய்”என்று கூறுகிறான்.
 
 
1
When the ladies removed after dinner, Elizabeth ran up to her sister, and seeing her well guarded from cold, attended her into the drawing-room, where she was welcomed by her two friends with many professions of pleasure; and Elizabeth had never seen them so agreeable as they were during the hour which passed before the gentlemen appeared. Their powers of conversation were considerable. They could describe an entertainment with accuracy, relate an anecdote with humour, and laugh at their acquaintance with spirit.
இரவு விருந்துக்குப்பின், எலிசபெத் ஜேனிடம் சென்று, அவளுடைய உடலில் நல்ல முன்னேற்றம் இருந்ததால், வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றாள். இரு சகோதரிகளும் அவளை இன்முகத்துடன் வரவேற்று, வீட்டிலுள்ள ஆண்கள் உள்ளே நுழையும்வரை மிகவும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்ததை, இதுவரை எலிசபெத் கண்டதில்லை. மேலும் அவர்கள் உரையாடிய விதமும் சிறப்பாக இருந்தது. ஒரு விஷயத்தை மிகத் துல்லியமாகவும், ஒரு நிகழ்ச்சியை ஹாஸ்யத்தோடும் விளக்கி அதனை தாங்கள் எவ்வாறு ரசித்தனர் என்பதைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
  1. Professions of pleasure soothe the nerves, true or untrue
    உண்மையோ, பொய்யோ, சந்தோஷப்படுவதாகப் பேசினால், அது மனத்திற்கு இதம் தரும்.
  2. Politeness is circumstantial
    மரியாதை இடத்தைப் பொருத்தது.
  3. Alertness is to remain on the first object of attention
    பார்த்தது கவனத்தை முழுவதும் பெறுவது உஷார்.
  4. Powers of conversation enables one to become a very agreeable literary companion
    அறிவுடன் உரையாடினால் அன்புடன் பழகும் இலக்கிய நண்பனாவாய்.
  5. Conversation is not mere communication. Imagination expanding an event as the language enrichingly permits is conversation
  6. Power of conversation is so far removed as ordinary speech is different from inarticulate sound
    உரையாடல் ஒரு பெரும் கலை. சத்தம் பேச்சிலிருந்து வேறுபடும் அளவுக்கு உரையாடல் பேச்சிலிருந்து மாறுபடும்.
  7. One needs well-developed powers of mind to describe an entertainment with accuracy
    ஒரு நிகழ்ச்சியை விவரமாக, கேட்பவர் வியக்கும் வகையில் கூற மனம் வளர்ந்து உயர்ந்த பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
  8. To see an entertainment is different from describing it accurately
  9. To laugh at an acquaintance with spirit inoffensively is a high mark of education and culture
    இனிமையான கேலி கல்வியும் பண்பும் மிளிரும் முத்திரை.
2
But when the gentlemen entered, Jane was no longer the first object; Miss Bingley's eyes were instantly turned towards Darcy, and she had something to say to him before he had advanced many steps. He addressed himself directly to Miss Bennet, with a polite congratulation; Mr. Hurst also made her a slight bow, and said he was 'very glad'; but diffuseness and warmth remained for Bingley's salutation. He was full of joy and attention. The first half-hour was spent in piling up the fire, lest she should suffer from the change of room; and she removed at his desire to the other side of the fireplace, that she might be farther from the door. He then sat down by her, and talked scarcely to any one else. Elizabeth, at work in the opposite corner, saw it all with great delight.
ஆனால் ஆண்கள் உள்ளே நுழைந்தவுடன், அவர்களது கவனம் ஜேனைவிட்டு, உள்ளே நுழைந்தவர்களிடம் சென்றது. மிஸ். பிங்கிலியின் கவனம் டார்சியின்மீது சென்றது. அவன் உள்ளே நுழைவதற்குள், அவனிடம் சொல்வதற்கு ஏதோ விஷயம் அவளிடம் இருந்தது. ஆனால் அவனோ நேராக மிஸ். பென்னட்டிடம் வந்து அவளது உடல் நலத்தைப் பற்றி பணிவாக விசாரித்தான். திரு. ஹர்ஸ்ட்டும் வணக்கம் சொல்லியவாறு “மிக்க சந்தோஷம்” என்றார். பிங்கிலியின் விசாரிப்பில் கனிவும், பரிவும் இருந்தன. அவன் மிகவும் சந்தோஷமாகவும், ஜேனிடம் கரிசனமாகவும் நடந்து கொண்டான். ஜேனுக்கு இடமாற்றம் எந்தவித பாதிப்பையும் தரக்கூடாது என்று அவ்வறையை சூடாக்கும் முயற்சியில் முதல் அரைமணி நேரம் செலவழிந்தது. பிங்கிலியின் அறிவுரைப்படி ஜேன், கதவிற்கு நேரே உட்காராமல், அடுப்பிற்கு மறுபக்கமாக உட்கார்ந்தாள். பிங்கிலி அவளருகே சென்றமர்ந்தான். வேறு எவருடனும் அதிகம் பேசவில்லை. எதிர்புறத்தில் வேலையாக இருந்த எலிசபெத், இவையெல்லாவற்றையும் சந்தோஷமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
  1. Presence of a VIP in the room deprives all the rest even a modicum of attention
    பெரிய மனிதர் உள்ள இடத்தில் வேறொருவர் கண்ணில் படாது.
  2. Salutation can be formal, empty or warm
    நமஸ்காரத்தை இதமாக, வெறுமையாக, ஒப்புக்கும் சொல்லலாம்.
  3. The sisters are intrinsically mercenary, polite on the surface
  4. Attraction by interest acts instantaneously
  5. Diffuseness and warmth are expressive of the overflowing emotions of an unstructured character
    அர்த்தமற்ற சுபாவம் ஆர்வத்தால் பொங்கி வழிந்தால் இதமான உணர்வு இனிமையாக மலர்ந்து பரவும்.
  6. Human relationships readily reveal the various grades of interest
  7. Feelings of affection expand the inner sensations in joy
  8. True love feels the slightest discomfort as the total loss of everything as perfection of possession is the experience of love
    முழுவதும் இழப்பது பூரணமாகப் பெறுவது என உணர்வது உண்மையான அன்பு. அதனால் பூரண நஷ்டம் அதற்கு வருத்தம் தராது.
  9. Bingley was violently in love as he scarcely talked to anyone else
    தீவிரமாக அன்பு செலுத்தும் பிங்லி வேறெவரிடமும் பேச முன் வருவதில்லை.
  10. Jane fully absorbed Bingley’s attention
  11. Capacity to be uncivil to another is one indication of being violently in love
    தீராக் காதலில் உள்ளவன் அடுத்தவரை மனம் புண்பட நடத்துவதை அறியான்.
  12. To receive attention is joy, to enjoy another’s success is delight
    கவனம் மகிழ்ச்சிக்குரியது. பிறர் வெற்றி பெருமிதம் தருவது ஆனந்தம்.
3
When tea was over, Mr. Hurst reminded his sister-in-law of the card-table -- but in vain. She had obtained private intelligence that Mr. Darcy did not wish for cards; and Mr. Hurst soon found even his open petition rejected. She assured him that no one intended to play, and the silence of the whole party on the subject seemed to justify her. Mr. Hurst had therefore nothing to do but to stretch himself on one of the sofas and go to sleep. Darcy took up a book; Miss Bingley did the same; and Mrs. Hurst, principally occupied in playing with her bracelets and rings, joined now and then in her brother's conversation with Miss Bennet.
தேநீர் அருந்தியபின், திரு. ஹர்ஸ்ட் சீட்டாட மிஸ். பிங்கிலியிடம் ஞாபகப்படுத்தினார். ஆனால் அதை அவள் கேட்கவில்லை. டார்சிக்கு சீட்டு பிடிக்காது என்பதை எப்படியோ அறிந்த மிஸ். பிங்கிலி, திரு. ஹர்ஸ்ட் வெளிப்படையாகக் கேட்டும் மறுத்துவிட்டாள். யாருக்கும் சீட்டாட விருப்பமில்லை என அவள் சொல்லிய பொழுது எல்லோரும் மௌனமாக இருந்தது அதை ஆமோதிப்பது போலிருந்தது. அதனால் வேறு எந்த வேலையும் இல்லாததால் திரு. ஹர்ஸ்ட் சோபாவில் படுத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தார். டார்சி ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டான். மிஸ். பிங்கிலியும் புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். திருமதி. ஹர்ஸ்ட் தன் கை வளையல்களையும், மோதிரத்தையும் திருகிய வண்ணம் அவ்வப்போது தனது தம்பி-ஜேன் இவர்களது உரையாடலில் கலந்து கொண்டாள்.
  1. Indolence, in the absence of exercise, goes to sleep
    உழைக்காத உடலின் சோம்பேறித்தனம் தூங்கும்.
  2. The card game is an active version of sleeping on the sofa
  3. The subtle atmosphere is built up by private information
    சூட்சும சூழல் வதந்தி மூலம் உருவாகிறது.
  4. It was not a cheerful gathering of pleasant friends, but a polite gathering of those who were compulsorily thrown together
  5. Conversation is indispensable for idle gatherings
    சும்மாயிருப்பவர் கூடினால் பேச வேண்டியது அவசியம்.
4
Miss Bingley's attention was quite as much engaged in watching Mr. Darcy's progress through his book, as in reading her own; and she was perpetually either making some inquiry, or looking at his page. She could not win him, however, to any conversation; he merely answered her question, and read on. At length, quite exhausted by the attempt to be amused with her own book, which she had only chosen because it was the second volume of his, she gave a great yawn and said, "How pleasant it is to spend an evening in this way! I declare after all there is no enjoyment like reading! How much sooner one tires of anything than of a book! When I have a house of my own, I shall be miserable if I have not an excellent library."
மிஸ். பிங்கிலி புத்தகத்தை வாசித்தாலும், டார்சி என்ன படித்துக் கொண்டிருக்கிறான், எவ்வளவு தூரம் படித்திருக்கிறான் என்பதில்தான் கவனம் இருந்தது. அவ்வப்போது அவனிடம் ஏதோ கேட்டுக் கொண்டும், அவன் படிக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். எவ்வளவு முயன்றும் அவனை தன்னுடைய உரையாடலில் ஈடுபடுத்த முடியவில்லை. கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்து படிப்பை தொடர்ந்தான். டார்சி படிப்பதாலேயே, அப்புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை படிக்க முயன்று, வெகு நேரத்திற்குப் பிறகு அம்முயற்சியில் தோற்று, களைத்துப்போய் பெரிய கொட்டாவியை விட்டுவிட்டு, பேசலானாள். “மாலைப் பொழுதை இம்மாதிரியாக கழிப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது! புத்தகம் படிப்பதுபோல் சுவாரசியமானது வேறெதுவும் கிடையாது. மற்ற எதிலுமே எவ்வளவு சீக்கிரம் களைப்பு வந்து விடுகிறது! எனக்கென சொந்தவீடு அமையும் பொழுது, ஒரு சிறந்த நூலகம் இல்லை எனில் நான் மிகவும் கஷ்டப்படுவேன்.”
  1. One in love watching his beloved will not be deterred by shame
    காரலின் டார்சியை அன்பால் அரவணைக்கும்பொழுது அவளுக்கு வெட்கமில்லை.
  2. A lady whose eyes involuntarily turn to her man will not be smitten by social shame
    கண் காதலன் மீது பதியும்பொழுது ஊரார் நினைப்பு உரைக்காது.
  3. To Caroline, ‘Darcy’ comprises of all the population of the house
    காரலினுக்கு வீட்டில் டார்சி இருப்பது மட்டும் தெரியும். மற்றவர் கண்ணில் படாது.
  4. A dominant personality pervades his own people silently
    பெரிய மனிதன் தன் வீட்டில் அனைவரையும் மௌனமாக ஆட்கொள்வான்.
  5. For one in love, there exists only one object in the world
    காதல் எழுந்தபின் கருத்தில் அது தவிர எதுவும் படாது.
  6. For a man to be indifferent to a lady’s constant advances is a socially demeaning annoyance of subconscious pleasure
    காரலின் இடைவிடாது டார்சியை கவனிப்பது ஊரார் பார்வையில் சரியில்லாதது. எனினும் அது அவனுக்கு உள்ளூர இதமாக இருக்கிறது.
  7. A lady who should be sought after, frustrated in her advances, not only loses her interest but her energies
    ஆண் பெண்ணை நாட வேண்டும், அப்படியிருக்க காரலின் டார்சியின் பின்னால் போய்ப் பலனில்லை என்று விரக்தியுற்று, சோர்வடைகிறாள்.
  8. It is a wretched state to seek attention. It is worse still if the efforts meet with failure
  9. Thinking loud is the habit of one who lives in oneself
    தன்னை மட்டும் கருதி வாழ்பவன் தனக்குத் தானே பேசிக் கொள்வான்.
  10. A small mind’s ploys backfire
  11. Even that failure resulting in a yawn will yield unseen pleasure in the pursuit of the man
    தோல்வியுற்று கொட்டாவி எழுந்தாலும், அவனை நாடுவதில் அவளுக்கின்பமுண்டு.
5
No one made any reply. She then yawned again, threw aside her book, and cast her eyes round the room in quest of some amusement; when, hearing her brother mentioning a ball to Miss Bennet, she turned suddenly towards him and said -- "By the bye, Charles, are you really serious in meditating a dance at Netherfield? I would advise you, before you determine on it, to consult the wishes of the present party; I am much mistaken if there are not some among us to whom a ball would be rather a punishment than a pleasure."
யாரும் இதற்கு பதிலளிக்கவில்லை. மறுபடியும் சோம்பல் முறித்தவளாய் புத்தகத்தை வைத்துவிட்டு, சுவாரசியமாக ஏதேனும் இருக்குமா என்று அவ்வறையை சுற்றி பார்வையை திருப்பிய பொழுது, தன்னுடைய சகோதரன் ஒரு நடனத்தைபற்றி ஜேனிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததால் உடனே அவனை நோக்கி கூறலானாள்.
“சரி சார்லஸ், நீ நெதர்பீல்டில் நடனத்திற்கு ஏற்பாடு செய்வதில் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறாயா? நீ தீர்மானம் செய்யும்முன் இங்கு கூடியிருப்பவர்களின் விருப்பத்தைப் பற்றி கலந்து ஆலோசி என நான் உனக்கு அறிவுரை கூற விரும்புகிறேன். நடனம் ஒரு பொழுதுபோக்கு என்பதைவிட தண்டனை என்றுதான் இங்கு நம்மில் சிலருக்கு இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.”
  1. Interest that is not evoked by a book can be evoked by the physical movement of walking
    புத்தகத்திலில்லாத தெம்பு, எழுந்து நடந்தால் வரும்.
  2. Active expressive attention precedes silent unexpressed love
    மௌனமாக வெளிவர மறுக்கும் அன்பு எழுமுன், கவனமாகக் கலந்து பேசி மகிழ முடியும்.
  3. Bingley is more than willing to please Jane by giving a ball
  4. The joy of negativism is a source of fulfillment
  5. Caroline’s great yawn shows her violent love is on the surface mind as love knows no tiredness of any description
    அன்பு பூத்தபின் களைப்பெழாது. காரலின் பெரிய கொட்டாவி விடுவது அவள் பிரியம் மேலெழுந்தவாரியானது என்றாகும். அதில் தீவிரத்தின் ஆழமில்லை.
  6. While yawning, she describes the evening as pleasant. Yawning represents lack of environmental response, while pleasure shows deep down she is pleasantly engaged
    கொட்டாவி விடும்பொழுது மாலை இனிமையாகப் போயிற்று என்கிறாள். எவரும் பொருட்படுத்தவில்லை என்பதால் கொட்டாவி வருகிறது. மனம் ஆழத்தில் டார்சியில் சந்தோஷமாக நிலைத்திருப்பது சந்தோஷம் தருகிறது.
  7. He who has organised his occupation will never be bored
    தொழிலில் திறமையுடையவனுக்கு சலிப்பெழாது.
6
"If you mean Darcy," cried her brother, "he may go to bed, if he chuses, before it begins -- but as for the ball, it is quite a settled thing; and as soon as Nicholls has made white soup enough, I shall send round my cards."
“நீ டார்சியைத்தான் சொல்கிறாய் எனில், நடனம் ஆரம்பிக்கும்முன் அவன் வேண்டும் எனில் படுக்கப் போகட்டும். ஆனால் இந்த ஏற்பாடென்னவோ நிச்சயம்தான். கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப் போகிறேன்.”
  1. Even submissive people when their own personality is touched defy everyone and everything
    பணிந்து அடங்கியவனும் அவன் சொந்த விஷயத்தில் அனைவரையும் எதிர்ப்பான். அனைத்தையும் எதிர்க்கத் தயங்க மாட்டான்.
  2. When one’s own interest is involved, not even the weak characters allow interference
    தனக்கு ஆர்வமுள்ள இடத்தில் பலஹீனனும் எவரையும் குறுக்கிட விடமாட்டான். பிங்லி நடனம் நடத்த முடிவாக இருக்கிறான்.
  3. A submissive person asserts within limits
  4. Man is more interested in preventing others to do something than in his own doing anything
    தான் சாதிப்பதைவிட பிறர் சாதிப்பதே முக்கியம்.
  5. Caroline is against the ball to prevent Darcy from dancing with Eliza
    எலிசபெத் டார்சியுடன் நடனமாடுவதைத் தடுக்க காரலின் டான்ஸ் வேண்டாம் என்கிறாள்.
  6. One man’s pleasure is another man’s punishment
  7. It is this ball that brought Darcy and Lizzy together. Caroline is perceptive of that
7
"I should like balls infinitely better," she replied, "if they were carried on in a different manner; but there is something insufferably tedious in the usual process of such a meeting. It would surely be much more rational if conversation instead of dancing made the order of the day."
“இந்த நடன ஏற்பாடு எப்பொழுதும்போல் ஒரே மாதிரியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தால் நன்றாக இருக்கும். நடனம் மாத்திரம் பிரதானமாக இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதுபோல் அமைந்தால் இன்னமும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.”
 
8
"Much more rational, my dear Caroline, I dare say, but it would not be near so much like a ball."
“நன்றாகத்தான் இருக்கும் எனதருமை கரோலின், ஆனால் நிச்சயமாக இது ஒரு நடன கூட்டம்போல் இருக்காது என என்னால் சொல்ல முடியும்.”
 
9
Miss Bingley made no answer, and soon afterwards got up and walked about the room. Her figure was elegant, and she walked well; but Darcy, at whom it was all aimed, was still inflexibly studious. In the desperation of her feelings, she resolved on one effort more, and turning to Elizabeth, said –
"Miss Eliza Bennet, let me persuade you to follow my example, and take a turn about the room. I assure you it is very refreshing after sitting so long in one attitude."
மிஸ். பிங்கிலி பதிலேதும் கூறாமல் அவ்வறையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் பார்ப்பதற்கும் லட்சணமாக இருந்தாள், நடையும் அழகாக இருந்தது. இவையெல்லாம் டார்சியை மனதில் வைத்துக் கொண்டுதான் செய்தாள் என்றாலும் அவன் ஆடாமல் அசையாமல் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய உணர்ச்சியின் வேகத்தில், இன்னொரு முறை அவன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் எலிசபெத்தை நோக்கி,
“மிஸ். எலிசா பென்னட், என்னைப்போல் நீயும் இவ்வறையை ஒரு முறை சுற்றி வந்தால், ஒரே இடத்தில் உட்கார்ந்து களைத்த உடம்பிற்கு மிகத்தெம்பாக இருக்கும்” என்றாள்.
  1. Any initiative in despair, as a rule, leads to despair and frustration
  2. Ulterior motive of an action has become ordinary motive
    ஆழ்ந்த நோக்கம் அன்றாட நோக்கமாகிறது.
  3. The one aim of Man is to be in the limelight
    நாலு பேர் பார்வையில் படுவது முக்கியம்.
  4. An aim energises life. The aim of romance energises most
    இலட்சியம் தெம்பு தரும். காதல் பெரு இலட்சியம்.
  5. It is true that Man subconsciously serves the collective consciousness
    தன்னை அறியாமல் எவரும் ஊருக்குப் பணிவர்.
  6. It is not a reason that urges an activity. Activity comes first, reason arises later as a justification
    அறிவால் செயல் எழுவதில்லை. செயல் முதலில், பிறகு விளக்கம் தர அறிவு வருகிறது.
  7. Caroline studiously attempts to impress Darcy. To Elizabeth’s surprise she calls her, too little knowing Darcy would like that more. It is a truism that wherever there is truth, there is force. Perhaps that compels Caroline to act this way
    டார்சியின் கவனத்தைக் கவர காரலின் பெருமுயற்சி செய்கிறாள். காரலின் எலிசபெத்தை நடக்க அழைக்கிறாள். டார்சிக்கு அது பிடிக்கும் எனக் காரலின் அறியவில்லை. சத்தியமுள்ள இடத்தில் சக்தியிருக்கும். அந்த சக்தி காரலினை அழைக்கச் சொல்கிறது.
  8. Caroline soon finds out her effort ended in a lively conversation between Darcy and Elizabeth. The atmosphere is so powerful in favour of Elizabeth that Caroline was unconsciously drawn into it
    தான் செய்த வேலையால் டார்சியும், எலிசபெத்தும் ஆர்வமாகப் பேசுகிறார்கள் என காரலின் கண்டாள். எலிசபெத்திற்குச் சாதகமாக சூழல் வலுவாகச் செயல்படுகிறது. காரலின் தன்னையறியாமல் அதனுள் இழுக்கப்படுகிறாள்.
  9. Elizabeth is painfully aware she was a misfit there
  10. Miss Bingley who is in love mistakes Darcy’s interest is for her
  11. Idle prattle admits of inadvertent interpretations
10
Elizabeth was surprised, but agreed to it immediately. Miss Bingley succeeded no less in the real object of her civility: Mr. Darcy looked up. He was as much awake to the novelty of attention in that quarter as Elizabeth herself could be, and unconsciously closed his book. He was directly invited to join their party, but he declined it, observing that he could imagine but two motives for their chusing to walk up and down the room together, with either of which motives his joining them would interfere. What could he mean? She was dying to know what could be his meaning -- and asked Elizabeth whether she could at all understand him?
எலிசபெத்திற்கு ஆச்சரியமாக இருந்தாலும், உடனே சம்மதித்தாள். மிஸ். பிங்கிலி எந்த நோக்கத்தோடு கூறினாளோ அதில் வெற்றியடைந்தாற் போலிருந்தது டார்சியின் செய்கை. ஏனெனில் டார்சி நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இருவரும் நடப்பதை வியப்புடன் பார்த்த டார்சி தன்னையறியாமல் புத்தகத்தை மூடி வைத்தான். அவனையும் தங்களுடன் நடக்க அழைத்தனர். ஆனால் எந்த இரண்டு காரணத்திற்காக அவர்கள் நடக்கிறார்களோ அது கெட்டுப் போய்விடும் என மறுத்துவிட்டான்.
இதற்கு அவனுடைய அர்த்தம் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ளத் துடித்தாள் மிஸ். பிங்கிலி. எலிசபெத்திற்கு அவனை புரிகிறதா எனவும் கேட்டாள்.
 
11
"Not at all," was her answer; "but depend upon it, he means to be severe on us, and our surest way of disappointing him will be to ask nothing about it."
“தெரியவில்லை”என்ற எலிசபெத் “ஆனால் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்கிறான் என்பது மட்டும் புரிகிறது. அவனுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டும் எனில் நாம் இதைப்பற்றி அவனிடம் ஒன்றும் கேட்கக் கூடாது”என்றாள்.
 
12
Miss Bingley, however, was incapable of disappointing Mr. Darcy in anything, and persevered, therefore, in requiring an explanation of his two motives.
ஆனால் மிஸ். பிங்கிலிக்கு எந்த விதத்திலும் டார்ஸிக்கு ஏமாற்றம் தர விருப்பமில்லை. அதனால் அந்த இரண்டு காரணங்கள் என்னவாக இருக்கும் என விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
  1. The atmosphere has a personality. If something fails once, the insistent energy that collects picks it up as soon as it can
    சூழலுக்குக் குணம் உண்டு. ஒரு காரியம் தோற்றால் தொடர்ந்து ஊறும் தெம்பு உடனே அதை எடுத்துக் கொள்ளும்.
  2. One in love loves to know how she is evaluated by the Man in every speech of his
    ஆண்மகன் மீது எழும் காதல் அவனுடைய ஒவ்வொரு சொல்லிலும் தன்னை எப்படி வர்ணிக்கிறான் என அறிய அவள் விரும்புவாள்.
  3. There is a feminine instinct that denies everything a Man seeks
    ஆண் நாடும் எதையும் மறுப்பது பெண் பிறப்புரிமை.
    There is another feminine instinct that abjectly submits to Man’s domination
    அடுத்த குணம் ஆண்மகனுக்கு அடிமையாக விரும்பும்.
  4. It is not in Caroline’s power to punish Darcy
    டார்சியை காரலினால் தண்டிக்க முடியாது.
  5. Admiration annihilates the power to punish
    பாராட்டினால் தண்டனை கரைகிறது.
  6. Elizabeth talks with energy; her energy comes from neglect
  7. Intimacy gives the liberty to be severe or silly
  8. Miss Bingley is submissive even in love. Lizzy is defiant. It is that which is seen as liveliness by Darcy
  9. Elizabeth’s defiance takes its own vehement form by her energy
  10. Submissiveness is insipid. Non-compliance is attractive by its energy
  11. Humour and joke puts even greatness into a human perspective
  12. The whims of one, the inconsistencies of another divert an idle company pleasantly
  13. Darcy’s study of life has made him selfish and mean! One who studies indirectly confirms his own character
13
"I have not the smallest objection to explaining them," said he, as soon as she allowed him to speak. "You either chuse this method of passing the evening because you are in each other's confidence, and have secret affairs to discuss, or because you are conscious that your figures appear to the greatest advantage in walking; -- if the first, I should be completely in your way, and if the second, I can admire you much better as I sit by the fire."
அவள், அவனை பேச அனுமதித்த மறுவினாடியே “எனக்கு அதைப்பற்றி விளக்க எந்தவித ஆட்சேபணையும் இல்லை“ என்றான். “நீங்கள் ஏன் இவ்வாறு மாலைப் பொழுதை கழிக்க விரும்புகிறீர்கள் என்றால் ஒன்று, உங்கள் இருவருக்கும் ரகசியமாக பேச ஏதோ விஷயங்கள் இருக்கும் அல்லது நடக்கும் பொழுது உங்களது அழகான தோற்றம் வெளிப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும் என்பதினாலும் இருக்கும். முதலாவதுதான் காரணம் என்றால் நான் உங்களுடன் சேர்ந்து நடப்பது, உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். இரண்டாவதுதான் காரணம் எனில் நான் இங்கு அடுப்பின் அருகில் உட்கார்ந்தால்தான் உங்களை மேலும் நன்றாக ரசிக்க முடியும்.” என்றான்.
  1. Two people who vastly differ are united in one motive from which the difference issues
    தீவிரமாக வேறுபடும் இருவர் ஒரு விஷயத்தில் சேர்வதால் மாறுபாடு எழும்.
  2. No speech or thought of a lover will be devoid of one touch of his love
    காதல் பேசினால் எந்த சொல்லிலும் காதலிருக்கும்.
14
"Oh! Shocking!" Cried Miss Bingley. "I never heard anything so abominable. How shall we punish him for such a speech?"
“ஓ! என்ன ஒரு அதிர்ச்சி”என்ற மிஸ். பிங்கிலி இதுபோன்று வெறுக்கத்தக்க ஒன்றை நான் கேட்டதேயில்லை. இம்மாதிரி பேசியதற்கு நாம் என்ன தண்டனை தரலாம்?” என்று கேட்டாள்.
 
15
"Nothing so easy, if you have but the inclination," said Elizabeth. "We can all plague and punish one another. Tease him -- laugh at him. Intimate as you are, you must know how it is to be done."
“தண்டனை தர வேண்டும் என்று தோன்றினால் அது சுலபம்தான். நாம் அவனை கேலி செய்யலாம், அல்லது அவனைப் பார்த்து சிரிக்கலாம். அவனை உனக்கு நன்கு தெரியும் என்பதால் எப்படி அவனை கேலி செய்யலாம் என உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்”என்றாள் எலிசபெத்.
 
16
"But upon my honour I do not. I do assure you that my intimacy has not yet taught me that. Tease calmness of temper and presence of mind! No, no -- I feel he may defy us there. And as to laughter, we will not expose ourselves, if you please, by attempting to laugh without a subject. Mr. Darcy may hug himself."
“எனக்குத் தெரியாது. அவனுடன் உள்ள நெருக்கம் எனக்கு இன்னும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அமைதியான குணமும், சமயோசித புத்தியும் கொண்ட அவனை எப்படி கேலி செய்ய முடியும். நம்மை அப்படிச் செய்யவிடாமல் தடுத்துவிடுவான். காரணமே இல்லாமல் சிரித்தால் நாமே கேலிக்குரியவராகி விடுவோம். அப்பொழுது அவன் ஜெயித்தது போல் ஆகிவிடும்.”
  1. Desire to please without strength is squeamish
    முடியாதவன் திருப்தி செய்ய முனைந்தால் குழைவான்.
  2. Conventional people are aghast to defy conventions
    சம்பிரதாயமானாவர் சம்பிரதாயத்தை மீறிப் பயப்படுவார்கள்.
17
"Mr. Darcy is not to be laughed at!" Cried Elizabeth. "That is an uncommon advantage, and uncommon I hope it will continue, for it would be a great loss to me to have many such acquaintance. I dearly love a laugh."
“டார்சியை பார்த்து சிரிக்கக் கூடாதா” என்ற எலிசபெத் “இது ஒரு அசாதாரணமான குணம். இம்மாதிரி, எனக்குத் தெரிந்தவர்கள் பல பேர் இருந்தால், அது எனக்குப் பொருந்தாது. ஏனெனில் சிரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.”
  1. Elizabeth’s daring to laugh at Darcy is interesting to him
    டார்சியைப் பார்த்து கேலியாக எலிசபெத் சிரிப்பது டார்சிக்கு ஆர்வமாக இருக்கிறது.
  2. To be able to laugh is to be cheerful. To enjoy being laughed at is broadmindedness
    கலகலப்பாக இருப்பது சிரித்து மகிழ்வது. பிறர் தன்னைக் கண்டு சிரிப்பதில் கலந்து கொள்வது பரந்த மனப்பான்மை.
  3. Humour defies all definitions of personality
    ஹாஸ்யம் சுபாவத்தைக் கடந்தது.
18
"Miss Bingley," said he, "has given me credit for more than can be. The wisest and the best of men -- nay, the wisest and best of their actions -- may be rendered ridiculous by a person whose first object in life is a joke."
மிஸ். பிங்கிலி” என்றழைத்த டார்சி “எலிசபெத் தேவைக்கு அதிகமாக என்னைப் பற்றி பேசுகிறாள். வாழ்க்கையில் கேலி செய்வதையே குறிக்கோளாக கொண்டவர்கள், விவேகமாக செய்த சில நல்ல செயல்களையும் கிண்டல் செய்வார்கள்”என்றான்.
  1. To render a solemn event to ridicule is a joke
    பெரிய விஷயத்தைக் கேலி செய்வது நகைச்சுவை.
19
"Certainly," replied Elizabeth -- "there are such people, but I hope I am not one of them. I hope I never ridicule what is wise or good. Follies and nonsense, whims and inconsistencies, do divert me, I own, and I laugh at them whenever I can. But these, I suppose, are precisely what you are without."
அதற்கு எலிசபெத் “அப்படிப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுள் ஒருவராக நான் இருக்கவில்லை என நம்புகிறேன். நல்ல விஷயங்களை கிண்டல் செய்ய மாட்டேன் என நினைக்கிறேன். அறிவற்ற, அர்த்தமற்ற, சபலபுத்தியுடைய, முரண்பாடான எதைக் கண்டாலும் நான் சிரிப்பேன். ஆனால் உன்னிடம் இவையெல்லாம் இல்லை என நினைக்கிறேன்.”
  1. Elizabeth taunts him with implied folly
    “அறிவில்லாமல் பேசுவதைச் சுட்டிக் காட்டி எலிசபெத் சவால் விடுகிறாள்.
  2. The ridiculous side of wisdom and goodness comes out in her moves
    விவேகமும் நல்ல குணமும் குறையுடையவை. நகைச்சுவை அவற்றைச் சுட்டிக் காட்டும்.
  3. Culture demands that one permits others to laugh at his folly
    நம் குறைகளைக் கண்டு பிறர் நகைப்பதும் அதை நாம் ரசிப்பதும் நாகரீகம்.
  4. Not to laugh at folly and nonsense is good manners
    மடையன் அர்த்தமற்றதைப் பேசுவதை கேலியாக ரசிக்க மறுப்பது நாகரீகம், பண்பு.
  5. To laugh at folly and nonsense is to offer pleasant company
    அபத்தமான மடமையைக் கண்டு சிரிப்பது அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.
  6. To laugh with others who laugh at our folly is to get out of folly
    நம் அறியாமையைக் கண்டு சிரிப்பவருடன் சேர்ந்து சிரிப்பது நம் அறியாமை அழிவது.
  7. To tell a person he is without folly is to accuse him of folly
    குறையற்றவர் என ஒருவரைக் கூறுவது அவர் குறையைச் சுட்டிக் காட்டுவதாகும்.
20
"Perhaps that is not possible for any one. But it has been the study of my life to avoid those weaknesses which often expose a strong understanding to ridicule."
“இவையெல்லாம் இல்லாமலிருப்பது சாத்தியமில்லை. இவைகளை தவிர்க்கவே முயற்சி செய்கிறேன்.”
  1. Darcy takes the occasion to make his strength felt, not knowing he is completely vulnerable
    இச்சந்தர்ப்பத்தில் தன் தெளிவை விளக்க டார்சி முனைகிறான். தனக்குள்ள பலஹீனம் அவனுக்குத் தெரியவில்லை.
  2. One who tries to avoid a weakness is one fully endowed with it
    எந்தக் குறையை விலக்க முயல்கிறோமோ அது நம்மிடம் இருக்கும்.
21
"Such as vanity and pride."
“கர்வம், பெருமை போன்றவற்றையும்”
  1. Vanity and pride are mistaken for each other
    கர்வத்தை பெருமையென நினைப்பதுண்டு.
22
"Yes, vanity is a weakness indeed. But pride -- where there is a real superiority of mind, pride will be always under good regulation."
“ஆமாம் பெருமை என்பது ஒரு பலவீனம்தான். மேன்மையான குணமுள்ளவனிடம் கர்வம் இருந்தால் அது அவன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.”
  1. In rare cases men consider vanity a virtue
    யாரோ ஒருவர் பெருமைப்படுவதில் திருப்தியடைவார்.
  2. Pride is really understood by many as a virtue even when they recognise it as a defect
    கர்வம் தவறு என நினைப்பவரும் அதற்குப் பெருமைப்படுவதுண்டு.
  3. To justify pride under any guise, one must be incurably proud
    கர்வம் தவறல்ல எனப் பேசுபவருக்கு கர்வம் இலட்சியமாகும்.
  4. It is folly in Darcy to defend pride in the name of superiority of mind
    உயர்ந்த மனம் என்ற பெயரில் கர்வம் நியாயமானது என டார்சி பேசுவது அறிவீனம்.
  5. Darcy fully played himself into a trap constructed by him
    தானே தன்னைப் பொறி வைத்துப் பிடித்தாற்போல் டார்சி நடக்கிறான்.
23
Elizabeth turned away to hide a smile.
தனது சிரிப்பினை மறைக்க முயன்ற எலிசபெத் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
  1. No argument can be of avail with one who justifies pride
    கர்வம் சரி என்பவருக்குச் சொல்லக் கூடியதில்லை.
24
"Your examination of Mr. Darcy is over, I presume," said Miss Bingley; "and pray what is the result?"
“டார்சியை பரிசோதனை செய்தது முடிந்தது என நினைக்கிறேன். அதன் முடிவு என்ன?” என்று மிஸ். பிங்கிலி கேட்டாள்.
  1. One’s painstaking efforts can directly serve the rival’s purpose
    நம் பெரு முயற்சி எதிரிக்கு நேரடியாகப் பயன்படுவதுண்டு.
25
"I am perfectly convinced by it that Mr. Darcy has no defect. He owns it himself without disguise."
“டார்சியிடம் குறைகளே இல்லை என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அவனும் அதை மறைக்காமல் ஒப்புக் கொள்கிறான்.”
  1. Elizabeth’s ridicule is totally a success
    எலிசபெத் வெகுவாகக் கேலி செய்ய ஏதுவாயிற்று.
  2. Even in a perverse context the subconscious urges are fulfilled
    குதர்க்கமாக நடந்தாலும் ஆழ் மனக் கிளர்ச்சிகள் பூர்த்தியாகும்.
26
"No," said Darcy, "I have made no such pretension. I have faults enough, but they are not, I hope, of understanding. My temper I dare not vouch for. It is, I believe, too little yielding -- certainly too little for the convenience of the world. I cannot forget the follies and vices of others so soon as I ought, nor their offences against myself. My feelings are not puffed about with every attempt to move them. My temper would perhaps be called resentful. My good opinion once lost is lost for ever."
“இல்லை“ என்ற டார்சி “அம்மாதிரி எதுவும் நான் சொல்லவில்லை. என்னிடமும் குறையிருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை தப்பாக புரிந்து கொள்ள மாட்டேன். என் கோபத்திற்கு நான் உத்திரவாதம் கொடுக்க முடியாது. என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அது இசைந்து கொடுக்காது. மற்றவர்களுடைய முட்டாள்தனம், கெட்ட பழக்க வழக்கங்களை என்னால் மறக்க முடியாது, முக்கியமாக அவை என்னை பாதித்தால். ஒருவரை பிடிக்கும், பிடிக்காது என்பதுதான் என்னிடம் உள்ள குறை. என்னுடைய நல்ல அபிப்பிராயத்தை ஒருவர் இழந்துவிட்டால் அது நிரந்தரமாகிவிடும்” என்றான்.
  1. This is the earliest occasion for Darcy to grow self-critical
    தன்னை விமர்சனம் செய்ய ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இது டார்சிக்கு.
  2. Man does not acknowledge his faults except to his love
    காதலியிடம் தவிர வேறெவரிடமும் தன் குறையை ஏற்க மாட்டார்
  3. Man sees his blatant defects as defects mankind has not cured
    தன் பெரிய குறைகளை உலகின் குறையாக மனிதன் நினைப்பான்.
  4. To make a virtue of one’s vices is Man’s claim to survival
    தன் குறைகளை நிறைவாகக் கருதாவிட்டால் மனிதன் உயிர் வாழ முடியாது.
  5. In the eyes of his love Man loves to present himself as an ideal person
    காதலன் தன்னை இலட்சியமாக நினைக்க வேண்டும் என்பது அவள் அவா.
27
"That is a failing indeed!" Cried Elizabeth. "Implacable resentment is a shade in a character. But you have chosen your fault well. I really cannot laugh at it. You are safe from me."
“இது ஒரு குணக்குறைதான். பிடிக்காது என்பது ஒரு குறை என்றாலும் அது ஒரு நியாயமான குறைதான். இதனை கண்டு என்னால் சிரிக்க முடியாது. நீ என்னிடம் இருந்து தப்பித்தாய்” என்றாள் எலிசபெத்.
 
28
"There is, I believe, in every disposition a tendency to some particular evil -- a natural defect, which not even the best education can overcome."
“எல்லோருடைய குணத்திலும் ஒரு குறை இருக்கும். எந்த கல்வியும் அதனை மாற்ற இயலாது.”
  1. Temperamental defects are not removed by education, but by culture
    படிப்பு குணத்தை மாற்றாது, பண்பு மாற்று
29
"And your defect is a propensity to hate everybody."
“எல்லோரையும் வெறுப்பதுதான் உன் குறை.”
 
30
"And yours," he replied, with a smile, "is wilfully to misunderstand them."
“மற்றவர்களை தவறாக புரிந்து கொள்வதுதான் உன் குறை”என்றான் அவன் சிரித்தவாறு.
  1. Darcy and Elizabeth describe each other while she is directly accusing him, he pleads, by implication, not to be misunderstood
    எலிசபெத் டார்சியைக் குறை சொல்கிறாள். ஒருவரையொருவர் விமர்சிக்கிறார்கள். புரியவில்லை என்கிறான் டார்சி.
  2. Love tempers hatred into misunderstanding
    வெறுப்பு அன்பால் தப்பபிப்ராயமாக மாறும்.
31
"Do let us have a little music," cried Miss Bingley, tired of a conversation in which she had no share. "Louisa, you will not mind my waking Mr. Hurst."
தான் பங்கேற்காத, இவ்வுரையாடலை கேட்டு களைப்படைந்த மிஸ். பிங்கிலி, “சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசிக்கலாமே, லுயிஸா நான் திரு. ஹர்ஸ்ட்டை எழுப்பி விட்டால் நீ பொருட்படுத்த மாட்டாய் என நம்புகிறேன்” என்றாள்.
  1. It is an intolerable situation to see your lover more intimate with another before your very eyes
    நீ விரும்பும் ஆண்மகன் அடுத்தவளோடு அளவளாவுவது பொறுக்க முடியாது
  2. Social manners are endlessly resourceful
    சமூகத்தில் பழக்கம் பண்பு பெற முடிவில்லை.
  3. Caroline is baffled by the level of the discussion and she can be no part of it as she is no intellectual
    தான் கலந்து கொள்ள முடியாத இந்த பேச்சு காரலினைத் திகைக்க வைக்கிறது. அவள் மனம் வளர்ந்தவளில்லை.
  4. Vanity is the imbalance of insufficiency
  5. Pride is the inflexible structure of uncultured selfishness
  6. No sensible man can ever justify Pride
  7. Darcy betrays his insufficiency pathetically before Elizabeth
  8. To a selfish man, he is himself the standard
  9. Darcy is indelicate not to know his Pride
  10. Obviously Elizabeth is the more cultivated among all of them
  11. There is no show of politeness towards a sleeping gentleman
    தூங்கும் பெரிய மனிதனுக்கு எவரும் மரியாதை செலுத்த முன் வரவில்லை.
32
Her sister made not the smallest objection, and the pianoforte was opened; and Darcy, after a few moments' recollection, was not sorry for it. He began to feel the danger of paying Elizabeth too much attention.
அவளது சகோதரி அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால் பியானோ திறக்கப்பட்டது. எலிசபெத்துடன் பேசி களைப்படைந்த டார்சிக்கும் இம்மாறுதல் ஒரு நல்ல வரவேற்பாக இருந்தது. எலிசபெத்மீது அதிகமாக கவனம் செலுத்துகிறோமோ என அவன் அஞ்ச ஆரம்பித்தான்.
  1. He is afraid of what attracts him most
    தன்னை அதிகமாகக் கவருவதைக் கண்டு டார்சி பயப்படுகிறான்.
  2. When one’s heart’s desire comes his way copiously, one feels the danger
    ஆழ்ந்து விரும்புவது கூடி வந்தால் ஆபத்து என மனம் நினைக்கும்.



story | by Dr. Radut