Skip to Content

பகுதி 2

XIV. The Supermind as Creator

 

 

The Self-possession of the One is above. Page No.122

This flux of the Many is below. Para No.1

There is an intermediary state of being.

It is a power.

It is the creatrix of the worlds.

It is superior to Mind.

It is a principle of Will and Knowledge.

Both are active.

This principle is not entirely alien to us.

There is a Being.

That Being is entirely other than ourselves.

This principle does not belong to that Being.

Nor is it incommunicable.

It is not a state that mysteriously has given birth to us.

Nor does it reject our return to it.

There are heights far above us.

It seems to be seated there.

They are heights of our own being.

We can reach there.

We can infer that Truth.

We can glimpse it.

We can realise that Truth.

 

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

 

ஏகன் அனைத்தையும் தன்னுட்கொண்டவன்.

நாம் வாழும் உலகம் அநேகன்.

இடைப்பட்ட நிலையுண்டு.

அது சக்தி.

அதுவே உலகை சிருஷ்டித்தது.

அது மனத்தைவிட உயர்ந்தது.

அது ஞானமும், உறுதியும் செயல்படும் சட்டம்.

இரண்டும் செயல்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

இது நாமறியாததில்லை.

ஒரு ஜீவன் உண்டு.

அது நம்மிலிருந்து வேறுபட்டது.

இந்தச் சட்டம் ஜீவனுக்குரியதன்று.

அது நாமறிய முடியாததில்லை.

ஏதோ புதிராக அது உலகை சிருஷ்டிக்கவில்லை.

நாம் அதை நாடினால் அது நம்மை விலக்காது.

நமக்கு மேலே உயர்ந்த நிலையுண்டு.

அது அங்கு உட்கார்ந்துள்ளது.

அவை நம் ஜீவனின் சிகரங்கள்.

நாம் அதையடையலாம்.

சத்தியம் எதுஎன ஊகிக்கலாம்.

அது நமக்குப் பொறியாகத் தட்டுப்படும்.

நாம் சத்தியத்தை சித்தியாகப் பெறலாம்.

 

 

These are the greatest superhuman experiences.

We can live there for days on end.

They may be hours or days.

They are unforgettable moments.

They are our summits of being.

We can go there in two ways.

One is progressive expansion.

The other is sudden and luminous.

It is self-transcendance.

We descend next.

The doors shut.

They are doors of communication.

We can reopen them.

We can also keep them open always.

Our supreme ideal can be two.

One is self-annulment.

The other is self-fulfilment.

Self-fulfilment is self-perfection.

It is the highest summit of created being.

The other is the highest summit of the creative being.

Thus our human consciousness evolves.

This is the last summit.

Thus we can dwell permanently there.

We have seen this now.

This is the original Idea.

It is the final harmony.

We gradually express ourselves in the world.

We mean to achieve it.

 

மனிதநிலையைக்கடந்த உயர்ந்த அனுபவங்கள் அவை.

அங்கு நாம் நாள்கணக்காக வாழலாம்.

அது மணிக்கணக்காகவுமிருக்கும்.

அவை மறக்கமுடியாத நேரம்.

அவை நம் ஜீவனின் சிகரம்.

இருவகைகளாக நாம் அதையடையலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம்மை விரிவுபடுத்தலாம்.

அடுத்தது திடீரென்று ஜோதி காட்சியளிப்பது.

நம்மை நாம் கடந்து செல்லும் நேரம் அது.

மீண்டும் நாம் நம் நிலைக்கு வருகிறோம்.

கதவு மூடிக்கொள்ளும்.

அவை நம்மை அத்துடன் இணைப்பவை.

நாம் மீண்டும் அதைத் திறக்கலாம்.

எப்பொழுதும் அதைத் திறந்துவைக்கலாம்.

நம் உயர்ந்த இலட்சியங்கள் இரண்டு.

ஒன்று ஜீவன் மோட்சத்தில் கரைவது.

அடுத்தது நாம் பூரணம் பெறுவது.

முழுமையடைவது பூரணம் பெறுவது.

சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் சிகரம் அது.

மற்றது சிருஷ்டிகர்த்தாவின் உச்சி, உச்சியில் ஒரு சிகரம்.

அதுவே நமது பரிணாமம்.

இதுவே கடைசி மலையுச்சி.

அவ்விதம் நாம் அங்கு நிரந்தரமாகக் குடியேறலாம்.

இதை நாம் இப்பொழுது கண்டோம்.

இதுவே ஆரம்ப எண்ணம்.

இதுவே முடிவான சுமுகம்.

நாம் கொஞ்சம் கொஞ்சமாக உலகில் வெளிப்படுகிறோம்.

இதை நாம் அடைவது நம் குறிக்கோள்.

 

 

We need to elevate our human knowledge. Page No.122

Our action too must be raised. Para No.2

For that we need to know its divine workings.

Our human intellect needs to know how.

Can we communicate that to the intellect?

Will that help organise the divine workings?

What account can we give to the intellect?

Is it possible?

Is it ever possible?

We doubt that possibility.

This divine faculty has a human working.

But it is rare.

It is also dubious.

It is not easily verifiable.

It is separate from ordinary humanity.

It is remote from verifiable knowledge.

Human experience is separate from this.

But the doubt does not arise from these aspects.

The divine Supermind and human mentality are opposites.

This contradiction is apparant.

It is so in essence.

Even in operation it is like that.

Therefore our doubts arise.

We need to give an account of this Page No.123

consciousness. Para No.3

It must be given to the human mind.

For that there should be a relation between them.

 

மனித அறிவு உயரவேண்டும்.

நம் செயலும் உயர்த்தப்படவேண்டும்.

அதற்கு, தெய்வம் செயல்படும் வகையை நாம் அறியவேண்டும்.

அது மனித அறிவுக்குப் புலப்படவேண்டும்.

நாம் அதை மனத்திற்குக் கூறமுடியுமா?

தெய்வச்செயலைத் திறம்படச் செய்ய அது உதவுமா?

அறிவிடம் நாம் என்ன கூறலாம்?

அது முடியுமா?

எப்பொழுதாவது அது முடியுமா?

நமக்கு ஐயம் எழுகிறது.

தெய்வச்செயல் மனிதச்செயல் வெளிப்படுகிறது.

அது அபூர்வம்.

அது நிலையற்றது.

அதைச் சுலபமாக நிரூபிக்கமுடியாது.

அது மனிதவாழ்விலிருந்து பிரிந்துள்ளது.

நிரூபணத்திலிருந்து விலகிநிற்கிறது.

மனிதஅனுபவம் இதனின்று வேறுபட்டது.

இவற்றாலெல்லாம் சந்தேகம் எழவில்லை.

சத்தியஜீவியமும், அறிவும் எதிரானவை.

முரண்பாடு வெளிப்படை.

அடிப்படையில் அந்த முரண்பாடுள்ளது.

நடைமுறையிலும் அது உண்டு.

அதனால் எழுவது சந்தேகம்.

இந்த ஜீவியத்தை நாம் விவரிக்கவேண்டும்.

மனத்திற்குப் புரியுமாறு சொல்லவேண்டும்.

அதற்கு இவற்றிடையே தொடர்பு தேவை

 

 

Otherwise it is impossible.

It must have some identity with the mental being.

It must have some relation with the mind.

Its nature may be a vision.

It may be a vision of knowledge.

It may not be a dynamic power of knowledge.

Then the results will be different.

We could hope for an illumination.

It may not be a greater light and power.

They will work for the world.

This consciousness is a creatrix of the world.

Therefore it won't be a mere knowledge.

It will also be a power of knowledge.

It is not only a Will to light and vision.

It will be a Will to power and works.

Mind too is created out of it.

Mind must have developed out of it.

It must be a development by limitation.

Therefore mind may resolve back into it.

It may be through a reverse development.

It is a development by expansion.

Mind is contrary to Supermind in operation.

They are settled modes of operation.

Mind must be identical with the Supermind.

It is identical in essence.

The potentiality of mind is concealed in Supermind.

It is so in spite of the differences.

Mind becomes contrary to Supermind in actual forms.

 

தொடர்பு இல்லாவிட்டால் விவரிக்கமுடியாது.

மனத்துடன் அதற்கு ஏதாவது தொடர்பு தேவை.

மனத்தின் ஜீவனுடன் தொடர்புவேண்டும்.

அது காட்சியாக இருக்கலாம்.

அது ஞானத்தின் திருஷ்டியாக இருக்கலாம்.

அது செயல்திறனுள்ள ஞானமாக இருக்கலாம்.

அப்படியானால் பலன் வேறு.

அது ஞானோதயமாக இருக்கும்.

அது பெரிய ஜோதியாகவோ, சக்தியாகவோ இல்லாமருக்கலாம்.

அவை உலகுக்காகச் செயல்படும்.

இந்த ஜீவியம் உலகை சிருஷ்டித்தது.

எனவே இது வெறும் ஞானமாக இருக்காது.

அது ஞானத்தின் திறனாகவுமிருக்கும்.

ஞானத்தின் திறனாகவோ, காட்சியின் திறனாகவோமட்டும் அது இருக்காது.

அது செயன் திறனாகவும், சக்தியின் திறனாகவுமிருக்கும்.

மனமும் அதனுள்ளிருந்து உற்பத்தியானது.

மனம் அதன் உள்ளிருந்து எழுந்தது.

வரையறையால் அது வளர்ந்தது.

எனவே மனம் அதை மீண்டும் அடையமுடியும்.

அவ்வழி வந்த வழியாகப் போவதாகும்.

அவ்வழி விரிவடையும் வழியாகும்.

செயல்படுவதில் சத்தியஜீவியம் மனத்தைவிட உயர்ந்தது, எதிரானது.

மனம் செயல்படுவதில் முடிவான வகையுண்டு.

மனமும், சத்தியஜீவியமும் இரண்டறக்கலந்தவையாக இருக்கவேண்டும்.

இரண்டிற்கும் சாரம் ஒன்று.

மனம் சத்தியஜீவியத்தினுள் புதைந்துள்ளது.

மாறுபாடிருப்பினும் இது உண்மை.

உருவம் பெறும்பொழுது மனம் சத்தியஜீவியத்தின்று மாறுபட்டது.

 

 

Therefore there may be some methods of comparison.

There may be other methods of contrast.

It could be in terms of our intellectual knowledge.

It may give some idea of Supermind.

That idea may be from our point of view.

So, it may be rational to try these methods.

It may be also profitable.

The idea may be inadequate.

The terms may be insufficient.

Still, it may be a finger of light.

It can point onward.

It may lead us to some distance at least.

We may hope to tread that way.

It is possible for mind to go beyond itself.

It can do so to certain heights.

It is another plane of consciousness.

It may receive a higher power.

It may be a modified power.

They may be of the supramental plane.

We can know by illumination.

Or, we may know by intuition.

It may be a direct contact.

It may even be an experience.

To live in it is a victory.

To act in it is also a victory.

Still, it is not humanly possible.

 

எனவே ஒற்றுமையான அம்சங்களிருக்கவேண்டும்.

வேறுபடுத்திப் பார்க்கும் வேறு வழிகளிருக்கலாம்.

அவை நம் அறிவுக்குரியவையாக இருக்கலாம்.

அதிருந்து நாம் சத்தியஜீவியத்தை அறியலாம்.

அது நம் கண்ணோட்டத்திற்குரியதாக இருக்கலாம்.

அம்முறைகளைக் கடைப்பிடிப்பது சரியாக இருக்கலாம்.

அது பலன் தரலாம்.

இந்த எண்ணம் போதாதுஎனவுமிருக்கலாம்.

இக்கொள்கைகள் பற்றாக்குறையானதாக இருக்கலாம்.

இருந்தாலும் இது சுட்டிக்காட்ட உதவலாம்.

இது வழிகாட்டலாம்.

ஓரளவு நம்மை இது வழிநடத்திச்செல்லலாம்.

இவ்வழி போக நாம் முயலலாம்.

மனம் தன்னைக் கடக்க முடியலாம்.

ஓரளவு அதை மனம் சாதிக்கலாம்.

அது அடுத்தகட்ட ஜீவியம்.

அதன் உயர்ந்த சக்தியை நாம் காணலாம்.

அது சற்று மாறுபட்டிருக்கலாம்.

அது சத்தியஜீவியமாக இருக்கலாம்.

நாம் அதை ஜோதியால் அறியலாம்.

நாம் அதை ஞானத்தால் அறியலாம்.

நேரடித் தொடர்பாலும் அறியலாம்.

அது ஆத்மானுபவமாகவுமிருக்கலாம்.

அங்கு வாழ்வது வெற்றி.

அங்கு செயல்படுவது வெற்றி.

இதுவரை அது மனிதனால் முடிந்ததில்லை.

 

 

At first let us pause a moment. Page No.124

Let us ask whether there is Para No.4

any light from the past.

Can we find that light?

This is an ill-explored domain.

Can that light guide us?

We need a name.

We need a starting point.

This is a state of consciousness.

We have called it Supermind.

The word is not precise.

It may be mistaken.

It may be taken for a super-eminent mind.

A mind above the ordinary mentality.

But not radically changed.

Or, it can be contrary.

It may note what is beyond mind.

Therefore it may assume something too vast.

It may mean the ineffable itself.

We need a subsidiary description.

It should be more accurate.

It must limit its significance.

The Vedic verses are cryptic. Page No.124

There is a help for us about this. Para No.5

The Supermind is divine.

It is immortal.

We find its gospel there.

 

சற்று நிதானிப்போம்.

கடந்தகால ஞானம் ஏதேனும் உண்டாஎன யோசிப்போம்.

ஏதேனும் ஜோதி வழிகாட்டுமா?

இதுவரை எவரும் கண்டறியாத லோகம் இது.

பழையஞானம் வழிகாட்டுமா?

இதற்கு ஒரு பெயர் தேவை.

நாம் ஆரம்பிக்க ஓர் இடம் குறிப்பிடவேண்டும்.

இது ஒரு ஜீவியம்.

இதை சத்தியஜீவியம்என நாம் அழைத்தோம்.

இது தெளிவற்ற சொல்.

இதைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

மிகஉயர்ந்த மனம்எனக் கொள்ளும் வாய்ப்புண்டு.

மனிதமனத்தைவிட உயர்ந்ததுஎன நினைக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.

அடிப்படை மாறுதல்லாததாகக் கொள்ளலாம்.

எதிராகவுமிருக்கும்.

மனத்தைக்கடந்ததை அது கண்ணுறும்.

மிகப்பரந்த ஜீவியமாக நினைத்துவிடலாம்.

சொல்லைக்கடந்த நிலையாகக் கருதிவிடலாம்.

அதன் பகுதியானதைக் குறிக்கும் சொல் தேவை.

மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டுவது அவசியம்.

வரையறையிட்டுத் தெளிவுபடுத்தவேண்டும்.

வேதம் மறைபொருளானது.

நாம் தேடுவதை அங்குக் காணலாம்.

சத்தியஜீவியம் தெய்வீகமானது.

அது அழிவில்லாதது.

அதன் தாரக மந்திரத்தை இங்குக் காணலாம்.

 

 

The Vedas contain it.

It is concealed in its expression.

There is a veil on it.

Some flashes come through the veil.

They are illuminating.

It is described as a vastness.

Our consciousness is ordinary.

Its firmaments are limited.

The Supermind is vaster than that.

There is the truth of being.

It expresses itself.

That truth and that expression are one.

They join luminously.

There is a truth of vision.

It is inevitable.

It assures its inevitability.

That truth is formulated.

It has an arrangement.

Its word and act are defined.

There is a result of movement.

There is a result of action and expression.

It is an infallible law or ordinance.

The Vedas describe Supermind.

It has some essential terms.

Vast all-comprehensiveness is one.

Luminous truth is another.

Harmony of being in that vastness is a third.

It is not a vague chaos.

 

அது வேதத்திலுள்ளது.

சொல்வதை வேதம் மறைத்துச் சொல்கிறது.

வேதத்தின்மீது திரையொன்றுளது.

திரையைமீறிச் சில பொறிகள் வெளிவருகின்றன.

அவை பிரகாசமானவை.

சத்தியஜீவியம் பரந்தவெளியாகக் கூறப்படுகிறது.

நம் ஜீவியம் சாதாரணமானது.

அதன் வானவெளி வரம்புக்குட்பட்டது.

சத்தியஜீவியம் அதைக்கடந்தது.

ஜீவனில் சத்தியம் உண்டு.

அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

சத்தியமும், அதன் வெளிப்பாடும் ஒன்றே.

அவை ஜோதிமயமாகச் சந்திக்கின்றன.

திருஷ்டிக்குச் சத்தியம் உண்டு.

அது தவிர்க்கமுடியாதது.

தவிர்க்கமுடியாதுஎன உறுதி கூறுகிறது.

அந்த சத்தியம் உருவகப்படுத்தப்பட்டது.

அது ஓர் ஏற்பாடு.

அதன் சொல்லும், செயலும் விளக்கப்பட்டுள்ளன.

சலனத்திற்குப் பலன் உண்டு.

பலனும் வெளிப்பாடும் உண்டு.

அது தவறாத சட்டம். அவசரச் சட்டம்.

வேதம் சத்தியஜீவியத்தை விளக்குகிறது.

அதற்குச் சில முக்கிய அம்சங்களுண்டு.

பரந்து விரியும் ஞானம் ஒன்று.

ஜோதிமயமான சத்தியம் அடுத்தது.

அப்பரவெளியில் சுமுகம் அடுத்தது.

ஏதோ குழறுபடியான குழப்பமன்று.

 

 

Nor is it a self-lost obscuirty.

That harmonious truth of being is expressive.

Truth of law and act too express it.

Knowledge offers its own expression.

These are the essential terms.

The Gods are of Supermind.

It is their highest secret entity.

They carry the powers of this Supermind.

They are born of it.

They are seated in it.

Supermind is their proper home.

Their knowledge is 'truth-conscious'.

Their action carries the 'seer-will'.

Their conscious-force is turned towards works.

It is also turned towards creation.

It has a direct knowledge.

It is guided by it.

It is a knowledge of the works.

It is the essence and the law.

It is a knowledge that determines.

It determines a will-power.

It is wholly effective.

It does not deviate.

Nor does it falter in its process or its result.

It expresses in the act.

It has seen the act in its vision.

It fulfils spontaneously.

It is inevitable.

 

தன்னை இழந்த இருளன்று.

சுமுகமான ஜீவனின் சத்தியம் எடுத்துக் கூறவல்லது.

சட்டத்தின் உண்மையும், செயலும் எடுத்துக் கூறுகின்றன.

ஞானம் தானும் வெளிப்படுத்தும்.

இவை முக்கிய அம்சங்கள்.

தெய்வங்கள் சத்தியஜீவியத்திற்குரியவை.

அது அவர்களது பெரியஇரகஸ்யம்.

சத்தியஜீவிய சக்தி அவர்கட்குண்டு.

அதிலிருந்து அவர்கள் பிறந்தவர்கள்.

அங்கே அவர்கள் வீற்றிருக்கிறார்கள்.

சத்தியஜீவியம் அவர்கள் பிறந்த இடம்.

அவர்கள் ஞானம் சத்திய-ஜீவியம்.

அவர்கள் செயலுக்கு திருஷ்டியின்-திறன் உண்டு.

சித்-சக்தி வேலையை எடுத்துக்கொள்கிறது.

அது சிருஷ்டியை நோக்கிப்போகிறது.

அதன் ஞானம் நேரடி ஞானம்.

சத்தியஜீவியம் அவர்களை வழிநடத்துகிறது.

ஞானம் செயலைப்பற்றியது.

ஞானம் அதன் சாரம், சட்டம்.

அது நிர்ணயிக்கும் ஞானம்.

செயல்திறனை நிர்ணயிக்கும் ஞானம் அது.

அது முழுத்திறன் பெற்றது.

அது வழுவாது.

வழியிலோ, பலனிலோ அது வழுவாது.

அது செயல் வெளிப்படும்.

செயலைத் தன் திருஷ்டியில் அது கண்டுள்ளது.

உடனே பூர்த்தியாகும்.

அது தவிர்க்கமுடியாதது.

 

 

Light is here one with Force.

Light is a vibration of knowledge.

Its rhythm is that of the will.

Both are one.

It is so perfectly.

It does not seek.

It does not grope.

It takes no effort.

Its result is assured.

The divine Nature has a double power.

It is a spontaneous self-formulation.

It is a self-arrangement.

It wells naturally out of its essence.

It is the essence of manifestation.

It expresses its original truth.

It is a self-force of light.

It is inherent in the thing itself.

It is the source of its spontaneous and inevitable

self-arrangement.

There are other details. Page No.125

They are subordinate ones. Para No.6

But they are important.

There are two primary faculties.

The Vedic seers speak of it.

They are of 'truth-conscious' soul.

One is Sight.

The other is Hearing.

 

ஞானமும், திறனும் இதில் இணைந்துள்ளன.

ஜோதி ஞானத்தின் சுடர்.

அதன் அசைவு திறனுடையது.

இரண்டும் ஒன்றே.

அவை சிறப்பாக இணைகின்றன.

அது நாடுவதில்லை.

அது தடுமாறுவதில்லை.

அது முயல்வதில்லை.

அதன் பலன் நிச்சயம்.

தெய்வீகச் சுபாவத்திற்கு இருவகையான சக்தியுண்டு.

தானே தன்னை அமைத்துக்கொள்ளவல்லது.

அது சொந்த ஏற்பாடு.

அதன் சாரத்திலிருந்து இயல்பாக அது எழுகிறது.

அது சிருஷ்டியின் சாரம்.

ஆதியின் சத்தியம் அதன் வெளிப்பாடு.

அது ஜோதியின் சுயசக்தி.

அது பொருள்களில் பொதிந்துள்ளது.

இயல்பாக, தவிர்க்கமுடியாதபடி சுயஏற்பாட்டின் உற்பத்தி ஸ்தானம் அது.

மற்ற விவரங்கள் உள்ளன.

அவை முக்கிய கருத்திற்கு உட்பட்டவை.

ஆனால் முக்கியமானவை.

இரண்டு அடிப்படையான கருத்துகள் உள.

வேதம் அவற்றைக் கூறுகிறது.

ஒன்று சத்திய-ஜீவிய ஆத்மா.

அது திருஷ்டி.

அடுத்தது அசரீரி.

 

 

They are direct operations.

They are of inherent knowledge.

One is described as truth-vision.

The other is truth-audition.

They are far off from our human mentality.

We see it as revelation.

We also see it as inspiration.

Besides, there is another distinction.

It arises in the operation of the Supermind.

One is comprehending knowledge.

It is of pervading consciousness.

It is near to subjective knowledge.

It is by identity.

The other is knowledge by projection.

It confronts and apprehends.

It is another type of cognition.

It is objective. It begins there.

These are clues from the Vedas.

This is an ancient experience.

We may accept this subsidiary term.

It is "truth consciousness".

Supermind is more elastic.

Truth-consciousness limits it.

At once something is clear to us.

This is a consciousness of the above description.

Its characteristics are such. Page No.125

It is a formulation. Para No.7

It must be an intermediate term

 

அவை இரண்டும் நேரடியாகச் செயல்படுகின்றன.

அவை பிறப்பிலேயே அமைந்தவை.

ஒன்றை சத்தியத்தின் பார்வை என்போம்.

அடுத்தது சத்தியத்தின் குரல் எனப்படும்.

நம் மனத்தினின்று அவை தொலைவில் உள்ளவை.

நாம் அவற்றை ஞானோதயமாகக் காண்கிறோம்.

அடியெடுத்துக்கொடுக்கும் ஆண்டவனாகவும் காண்கிறோம்.

மேலும் ஒரு வேறுபாடுண்டு.

சத்தியஜீவியம் செயல்படுவதால் அவை ஏற்படும்.

அனைத்தையும் தன்னுட்கொண்ட ஞானம் ஒன்று.

அது ஊடுருவும் ஜீவியம்.

அது அகத்திற்குரியது.

இது ஐக்கியத்தால் நடப்பது.

அடுத்தது வெளிப்படும் ஞானம்.

அது புறத்திலுள்ளதுடன் மோதும், பேசும்.

அது மற்றொரு வகையான பார்வை.

அது புறத்திற்குரியது. அங்கு ஆரம்பிக்கும்.

இவை வேதத்தில் காணப்படும் குறிப்புகள்.

இது பண்டைக்கால அனுபவம்.

இவை இரண்டாம்பட்சமான சொற்கள்.

அது சத்தியம்-ஜீவியம்எனப்படும்.

சத்தியஜீவியம்என்ற சொல் விரிவான கருத்துடையது.

சத்தியம்-ஜீவியம்என்பது அதற்கு வரையறை ஏற்படுத்தும்.

உடனே நமக்குத் தெளிவுபடுகிறது.

மேற்கண்டபடி ஒரு ஜீவியம் உண்டு.

அதன் குணங்கள் அப்படிப்பட்டவை.

அது ஓர் உருவகம்.

அது இடைப்பட்ட நிலையாக இருக்கவேண்டும்.

 

 

It refers to a term above it.

It also refers to a term below it.

This term is forward.

We see it is a link.

Evidently it is so.

It is a means of development.

The inferior develops out of the superior.

Therefore, it can act in the other direction also.

It may develop back again towards its source.

Above is Sachchidananda.

It is indivisible consciousness.

It is unitarian.

It is the term above.

There are here no separating distinctions.

It is pure.

There is a term below.

It is analytic.

It is the dividing consciousness of Mind.

It knows by distinction.

It knows by separation.

It has a vague apprehension of unity.

It has a secondary apprehension of infinity.

It can synthesize its divisions.

It cannot arrive at a true totality.

There is the comprehensive consciousness.

It is creative.

It is between them.

It has the power of pervading and comprehending.

 

மேல் உள்ள நிலையை அது குறிக்கும்.

கீழுள்ள நிலையையும் அது குறிக்கும்.

முன்னுக்கும் போகும் நிலை அது.

இது இணைப்பது.

இது தெளிவு.

இது வளரும் வழி.

சிறியது பெரியதினின்று வெளிவரும்.

எனவே அது எதிர்த்திசையிலும் செயல்படும்.

ஆதலால் அது தன் ஆதியை நோக்கிப்போகலாம்.

மேலே சச்சிதானந்தம்.

அது பிரிக்கமுடியாத முழுமையுடையது.

அது ஒருமையுணர்வுடையது.

அது மேலுள்ள நிலை.

பிரித்துணரும் அம்சங்கள் இங்கில்லை.

அது தூய்மையானது.

கீழே ஒரு நிலையுண்டு.

அது ஆராயும்.

அது பிரிக்கும் மனத்தின் ஜீவியம்.

அது பிரிப்பதால் அறியும்.

அதுவே அது பகுத்தறிவதாகும்.

ஐக்கியம் அதற்குத் தெளிவில்லாமல் தெரியும்.

அனந்தத்தை அது எட்ட இருந்து அறியும்.

அதன் பகுதிகளை இணைக்கவல்லது.

உண்மையான முழுமை அதற்குரியதன்று.

அனைத்தையும் அரவணைக்கும் ஜீவியம் உண்டு.

அது சிருஷ்டிக்கும் திறனுடையது.

அது இவற்றிடையே அமைந்துள்ளது.

ஊடுருவி உள்ளதை அறியவல்லது அது.

 

 

It is the child of self-aware identity.

It is the poise of Brahman.

It has the power of projecting, confronting and apprehending

knowledge.

It is parent of the awareness by distinction.

This is the process of the Mind.

There is the formula of the One. Page No.125

It is eternally stable and immutable. Para No.8

It is above.

There is the formula of the Many.

It is eternally mutable.

It constantly seeks.

It seeks a firm standpoint.

It must be firm and immutable.

It seeks it amidst the flux of things.

But it hardly finds it.

This is below.

The seat of all trinities is in between.

It is a seat of all that is biune.

It is a seat of all that becomes Many-in-One.

And yet it remains One-in-Many.

It was originally One.

It was the One that is always potentially Many.

This is the intermediary term.

It is the beginning and end of all creation and arrangement.

It is the Alpha and the Omega of creation.

It is the starting point of all differentiation.

 

தன்னையறியும் ஐக்கியத்தின் பிறப்பு அது.

அது பிரம்மம் பெற்ற பேறு.

எதிர்கொண்டு, வெளிப்படுத்தி அறியும் ஞானம் அது.

பிரித்தறியும் ஞானத்தின் தாய் அது.

இது மனம் செயல்படும் வழி.

அது ஏகனுடைய சூத்திரம்.

அது நிலையானது, அழிவில்லாதது.

அது மேலேயுள்ளது.

அநேகனுக்கும் சூத்திரம் உண்டு.

அது காலத்திற்கும் மாறுவது.

அது தொடர்ந்து தேடுகிறது.

அது நிலையான நோக்கத்தைத் தேடுகிறது.

அது அசைக்கமுடியாததாகவும், அழிவற்றதாகவுமிருக்கவேண்டும்.

அலை மோதும் கடல் இதை அது தேடுகிறது.

ஆனால் அது கிடைப்பதில்லை.

இது கீழேயுள்ளது.

இடையே திருமூர்த்திகளின் உலகம் உள்ளது.

அங்கு இரட்டை இரண்டில் ஒன்றாக உள்ளது.

ஒன்றில் பல உள்ள மையம் அது.

இருப்பினும் அது பலவற்றில் உள்ள ஒன்றாக உள்ளது.

அதுவே ஆதியான ஏகன்.

அநேகனையுட்கொண்ட ஒன்று அது.

இதுவே இடைப்பட்ட நிலை.

சிருஷ்டிக்கும், பிரபஞ்ச ஏற்பாட்டிற்கும் அதுவே ஆரம்பமும், முடிவுமாகும்.

அ முதல் ஃ வரை அதுவேயாகும்.

எல்லா மாறுபாட்டிற்கும் அதுவே ஆரம்பம்.

 

 

It is the instrument of all unification.

These are realisable harmonies.

These are realised harmonies.

It is originative of them.

It is executive of them.

It is consummative of them.

It has the knowledge of the One.

The One has its hidden multitudes.

It is able to draw them out of it.

It manifests the Many.

It has differentiations.

It does not lose itself in them.

There is the ineffable unity.

We have a supreme perception of it.

There is Something beyond that.

The existence of the intermediary term tells us something.

It says that that Something exists.

That is Something ineffable.

It is mentally inconceivable.

It is not because of its unity.

It is not because of its indivisibility.

But it is because of it is free from these.

These are formulations of the mind.

It is Something beyond Unity.

It is also beyond multiplicity.

That would be the utter Absolute.

It would be the Real.

We have our knowledge of God.

 

எல்லாவற்றையும் இணைக்கும் கருவியது.

நாம் எட்டக்கூடிய சுமுகம் இது.

இதுவரை எட்டிய சுமுகமும் அதுவே.

அவற்றை ஆரம்பிப்பது இதுவே.

அவற்றைச் செயல்படுத்துவதும் இதுவே.

அவற்றைப் பூர்த்திசெய்வதும் அதுவே.

அது ஏகனை அறியும்.

ஒன்றில் ஆயிரம் ஒளிந்துள்ளது.

அதனின்று அவற்றை அதனால் வெளிக்கொணரமுடியும்.

அது அநேகனைப் படைக்கும்.

அதற்கு மாறுபாடுகள் உண்டு.

தன்னை அம்மாறுபாடுகளில் அது இழப்பதில்லை.

சொல்லைக்கடந்த ஐக்கியம் அது.

அதை நாம் உச்சக்கட்டத்தில் அறிவோம்.

அதைக்கடந்த ஒன்றுள்ளது.

இடைப்பட்டது அதைச் சுட்டிக்காட்டுகிறது.

அந்த ஒன்றிருப்பதை அது கூறுகிறது.

அது விவரிக்கவொண்ணாதது.

மனத்தால் நினைக்கமுடியாத ஒன்று அது.

அது ஐக்கியத்தால் அப்படியில்லை.

பகுக்கப்படாதது என்பதாலன்று.

அவற்றினின்று அது விடுபட்டது என்பதால் அதை விவரிக்கமுடியாது.

இவை நம் மனத்தின் சித்ரகூடங்கள்.

அது ஐக்கியத்தைக்கடந்தது.

அது பிரிவினையைக்கடந்தது.

அது பிரம்மம்.

அது சத்தியம்.

நமக்கு ஆண்டவனைத் தெரியும்.

 

 

We also have our knowledge of the world.

It justifies both.

These are large difficult terms. Page No.126

It is difficult to grasp them. Para No.9

Let us come to precisions.

The One is Sachchidananda.

We speak thus.

We point three entities.

It is its description.

We unite them.

Thus we arrive at a trinity.

We say 'Existence, Consciousness, Bliss'.

And we say they are One.

It is a process of the mind.

Sachchidananda is a unitarian consciousness.

To it, it is inadmissible.

Existence is Consciousness.

There can be no distinction between them.

Consciousness is Bliss.

They cannot be distinguished.

So, there can be no world.

Because there is no distinction.

Suppose it is the sole reality.

Then the world is not.

It never existed.

It can never have been conceived.

The world is division.

 

நாம் உலகை அறிவோம்.

அது இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்.

இவை பெரிய தத்துவங்கள்.

நமக்கு இவை பிடிபடா.

நடைமுறைக்கு வருவோம்.

ஏகன் என்பது சச்சிதானந்தம்.

நாம் இதைப் பற்றிப் பேசுகிறோம்.

இங்கு மூன்றைக் கூறுகிறோம்.

அதுவே அதன் விளக்கம்.

நாம் அவற்றைச் சேர்க்கிறோம்.

இணைத்து மூன்று தத்துவங்களை ஏற்படுத்துகிறோம்.

சத், சித், ஆனந்தம் என அவற்றைக் கூறுகிறோம்.

அவை ஒன்று என்கிறோம்.

இது மனம் செயல்படும் வழி.

சச்சிதானந்தம் ஐக்கியத்தாலான ஜீவியம்.

அதற்கு இப்பிரிவினை ஒத்துவாராது.

சத் சித்தாகும்.

அவற்றிடையே வேறுபாடில்லை.

சித் ஆனந்தம்.

அவை ஒன்றே.

அப்படியெனில், உலகமில்லை.

பிரிவினையில்லை என்பதால் உலகமில்லை.

அது மட்டுமே சத்தியம் எனக்கொள்வோம்.

அது உண்மையானால் உலகம் இல்லை.

உலகம் ஏற்பட்டேயிருக்கமுடியாது.

சிருஷ்டியை நினைத்தேயிருக்கமுடியாது.

உலகம் பிரிவினையால் ஏற்பட்டது.

 

It is differentiation.

An indivisible consciousness cannot originate division.

An undividing consciousness cannot originate differentiation.

But this is reductio ad absurdum.

We cannot admit it.

If we do so, our basis will be different.

It will be an impossible paradox.

It will be an unreconciled antithesis.

There is the other side. Page No.126

Division is real to Mind. Para No.10

It can conceive of it precisely.

It can conceive of a totality.

It will be synthetic.

It can think of a boundless finite.

The divided parts can aggregate.

Mind can grasp them.

The divided parts are the same.

The sameness underlies them.

Mind can know them.

But there is an ultimate unity.

It is an absolute infinity.

To the mind they are abstract notions.

They are unseizable quantities.

They are not real to its grasp.

It cannot take them to be the only reality.

This is the very opposite of the One.

The One is a unitarian consciousness.

 

ஒன்றிலிருந்து அடுத்தது வேறுபட்டிருக்கவேண்டும்.

ஐக்கியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியாது.

பிரிக்கமுடியாத ஜீவியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியுமா?

இது அபத்தம்.

நாம் இதை ஏற்கமுடியாது.

நாம் ஏற்றால், நம் அடிப்படை மாறும்.

அடிப்படை நடைமுறைக்கு உதவாத முரண்பாடாகும்.

சுமுகத்திற்கெதிரான முரண்பாடாக முடியும்.

அதற்கு மறுபுறம் உண்டு.

மனம் பகுக்கும்.

பகுதியை மனம் தெளிவாக அறியும்.

மனம் முழுமையை அறியும்.

பகுதி சேர்ந்த முழுமையாகும்.

முடிவற்ற பகுதியை மனம் ஏற்கும்.

பகுதி சேரும்.

மனம் அதைப் புரிந்துகொள்ளும்.

பிரிந்த பகுதிகள் ஒன்றுபோலானவை.

அவற்றின் அடிப்படை ஒருமை.

மனம் அதையறியும்.

முடிவான ஐக்கியம் உண்டு.

அது பிரம்மத்தின் அனந்தம்.

இவை மனத்திற்குப் பிடிபடா.

மனத்தின் கையில் பிடிபடாதவை இவை.

பிடித்தால் பிடியுள் அவை கிடைக்கா.

அதை மட்டும் உண்மையென மனம் கொள்ளாது.

ஏகனின் ஒருமைக்கு இவை எதிரானவை.

ஏகன் ஐக்கிய ஜீவியம்.

 

 

We have an essential multiplicity.

It cannot arrive at Unity.

If it does, it will abolish itself.

Really we are confronting the essential unity.

It is an indivisible unity.

The multiplicity has a confession to make.

It says it could have never existed.

Yet it was.

It is this that has found unity.

Thus it abolished itself.

Again, a reductio ad absurdum.

It is a violent paradox.

It is a repetition.

It stuns thought to convince it.

This is an irreconciled antithesis.

It is a irreconcilable antithesis.

It seeks to convince thought.

There is a difficulty in the lower term. Page No.127

Mind is a form of our consciousness. Para No.11

And it is a preparatory form.

When we realise this, the difficulty disappears.

Mind is an instrument.

It analyses.

It synthesises.

It is not an instrument of essential knowledge.

It cuts out something vaguely.

It does so from the unknown thing in itself.

 

உலகம் அடிப்படையில் பலவானது.

உலகம் ஒருமையை அறியாது.

ஒருமையை ஏற்றால் உலகம் தன்னையழிக்கும்.

அடிப்படை ஒருமையுடன் நாம் இப்படி மோதுகிறோம்.

அது பகுக்கவொண்ணாதது.

பல தம் உண்மைகளை வெளியிடுகின்றன.

தான் பிறந்திருக்கமுடியாதுஎனக் கூறும்.

இருப்பினும், உலகம் நித்தியம்.

இதுவே ஒற்றுமையைக் கண்டது.

உலகம், இவ்விதம் தன்னை அழித்துக்கொள்கிறது.

மீண்டும், நாம் ஓர் அபத்தத்தைக் காண்கிறோம்.

இது கடுமையான முரண்பாடு.

மீண்டும் நாம் அதைக் கூறுகிறோம்.

மனத்தை திகைக்கவைத்துத் தெளிவுபடுத்தும் முறையிது.

இது ஒத்துவரமுடியாத முரண்பாடு.

இணையமுடியாத எதிர்ப்பு இது.

இது மனத்தைத் தெளிவுபடுத்த முயல்கிறது.

சிறிய தத்துவத்தில் சிக்கல் உண்டு.

மனம் நம் ஜீவியத்தின் ரூபம்.

அது ஆரம்பம்.

இதை நாம் அறிந்தால், சிரமம் விலகும்.

மனம் ஒரு கருவி.

அது ஆராயும்.

அது சேர்த்துப்பிடிக்கும்.

அடிப்படை ஞானத்தின் கருவியன்று மனம்.

விவரமற்றதை அது வெட்டிப்பிரிக்கிறது.

அறியமுடியாததினின்று அப்படி எடுக்கிறது.

 

 

It is a measurement.

It is a delimitation.

Mind calls this the whole.

Again it continues the analysis into its parts.

To it they are separate mental objects.

They are only parts.

They are mere accidents.

Mind can see only them definitely.

It does so after a fashion.

It knows them thus.

There is the assemblage of parts.

Or there is a totality of properties.

Or they can be accidents.

To the mind these are the wholes.

This is its definite idea of the whole.

The whole is a part of something to the mind.

The whole can reveal itself in its parts.

Or it can be seen in its properties or accidents.

Anything else is a vague perception to the mind.

Mind understands analysis.

The object must be a totality in a larger totality.

It must be so constituted.

Then the mind can know it.

Really mind does not know.

It knows only its analysis.

It analyses the object or the idea.

It forms an idea by a synthesis.

It is a synthesis of separate parts.

 

அது ஓர் அளவுகோல்.

அது ஒரு வரையறை.

மனம் இதை முழுமையெனக்கொள்ளும்.

மீண்டும் மனம் தன் ஆராய்ச்சியைத் தொடரும்.

மனத்திற்கு அவை தனித்தனிப் பொருள்களாகும்.

அவை பகுதிகள்.

அவை தற்செயலாய் எழுந்தவை.

மனம் அவற்றைமட்டும் காணமுடியும்.

ஏதோ அது கண்டது அது.

மனம் அவற்றை அப்படி அறிகிறது.

பகுதிகள் சேர்ந்த முழுமையுண்டு.

அல்லது குணச்சேர்க்கையுண்டு.

அவையும் தற்செயலாய் எழுந்தவை.

மனம் அவற்றை முழுமையாக ஏற்கிறது.

மனம் முழுமையென நிச்சயமாகக் கருதுவது இது.

முழுமையென்பது மனத்திற்கு முழுமையின் பகுதி.

முழுமை பகுதியில் தன்னை வெளிப்படுத்தமுடியும்.

முழுமை அதன் குணங்களிலோ, தற்செயலாய் எழுந்தவற்றிலோ காணமுடியும்.

மற்றவை மனத்திற்குத் தெளிவற்றவை.

மனம் ஆராய்ச்சியை அறியும்.

முழுமை என்பது பெரிய முழுமையின் பகுதி.

அது அப்படி ஏற்பட்டிருக்கவேண்டும்.

அப்படியெனில் மனம் புரிந்துகொள்ளும்.

உண்மையில் மனம் அறியாது.

மனம் தன் ஆராய்ச்சியை அறியும்.

தன் எண்ணம் குறிக்கும் பொருளை அது ஆராயும்.

ஆராய்ச்சியைச் சேர்த்து ஓர் எண்ணமாக்கும்.

பகுதிகள் சேர்ந்த முழுமையிது.

 

 

Or it is a synthesis of properties.

It is mind's characteristic power.

It is its sure function.

They cease there.

We would have a greater knowledge.

It would be real and profound.

(There are deep parts of us.

They are inarticulate.

They are of our mentality.

A sentiment arises from these.

It is formless.

It is intense.

It is not knowledge.)

To achieve it mind must move away.

Another consciousness must come in.

It will fulfill mind.

It does so by rising above it.

Or it does so by a reversal.

Thus its operations are rectified.

It does so by leaping beyond it.

That leap can be taken from the summit of Mind.

It is a vaulting board.

Mind has a great duty.

Our consciousness is obscure.

It can train it.

Matter is a dark prison.

Consciousness emerged out of it.

Mind's instincts are blind.

 

அல்லது குணங்கள் சேர்ந்த முழுமையிது.

இதுவே மனத்தின் முத்திரை.

இது மனத்தின் நிச்சயமான அஸ்திவாரம்.

அத்துடன் அது முடியும்.

நமக்குப் பெரிய ஞானம் உண்டு.

அது உண்மையானது, உயர்வானது.

(நம்முள் ஆழ்ந்த பகுதிகள் உண்டு.

அவை சொல்லற்றவை.

அது நம் மனம்.

அதனினின்று ஓர் உணர்ச்சி எழுகிறது.

அதற்கு ரூபமில்லை.

அது தீவிரமானது.

அது ஞானமில்லை.)

அதையடைய, மனம் தன்னைவிட்டகலவேண்டும்.

வேறொரு ஜீவியம் எழவேண்டும்.

அது மனத்தைப் பூர்த்திசெய்யும்.

மனத்தைக்கடந்து அது இதைச் சாதிக்கும்.

அல்லது தான் தலைகீழே மாறி அதைச் செய்யும்.

அவ்வகை மனம் தன் செயன் குறையைப் போக்கும்.

தன்னை வலியக் கடந்து மனம் அதைச் சாதிக்கும்.

மனத்தின் சிகரத்திலிருந்து குதிக்கவேண்டும்.

தாவும் கட்டம் அது.

மனத்திற்குப் பெரிய கடமையுண்டு.

மனத்தின் ஜீவியம் இருளானது.

மனம் அதற்குப் பயிற்சியளிக்கும்.

ஜடம் இருண்ட சிறை.

ஜீவியம் அதிலிருந்து எழுந்தது.

மனத்தின் உணர்ச்சி குருடானது.

 

 

It can be enlightened.

The intuitions are random.

Its perceptions are vague.

It must be helped to ascend.

It must be shown the higher light.

Mind is a passage.

It is not an end.

Let us see the other side. Page No.128

There is the unitarian consciousness. Para No.12

It is of indivisible Unity.

It cannot be an impossible entity.

It is not a thing without contents.

All contents have issued out of it.

All contents return to it.

Into it they disappear.

There they dissolve.

It must be original.

It must be a self-concentration.

All is contained in it.

Ours is a temporal manifestation.

It is a spatial manifestation.

But the One is constituted in another way.

It is concentrated thus.

It is utterly ineffable.

It is inconceivable.

It is Existence.

To the Nihilist it is a Void.

 

அதைத் தெளிவுபடுத்தலாம்.

அதன் ஞானம் முறையற்றது.

அதன் ருசி விவரமற்றது.

மனம் எழ நாம் உதவவேண்டும்.

உயர்ந்த ஜோதியை நாம் அதற்குக் காட்டவேண்டும்.

மனம் பாதை.

மனம் முடிவன்று.

நாம் அடுத்த பக்கத்தைக் காண்போம்.

ஐக்கிய ஜீவியம் உண்டு.

அது பகுக்கமுடியாத ஐக்கியம்.

நமக்குப் புரியமுடியாத ஒன்றில்லை அது.

அது வெற்றிடமில்லை.

எல்லாம் அதனுள்ளிருந்து எழுந்தவை.

எல்லாம் மீண்டும் அதை நோக்கிப் போகும்.

அதனுள் அவை மறைகின்றன.

அங்கு அவை கரைகின்றன.

அது ஆதி.

அது சுயமானது.

எல்லாம் அதனுள் உள்ளது.

உலகம் காலத்தின் படைப்பு.

இடத்தாலானது உலகம்.

சத் அப்படி ஏற்பட்டதில்லை.

வேறுவகையான செறிவுடையது அது.

சொல்லுக்கு அகப்படாதது அது.

கருத்துக்குப் பிடிபடாது.

அது சத்.

சூன்யவாதிக்கு அது வெற்றிடம்.

 

 

It is negative to him.

He images thus.

It is negative to our existence.

It is negative to what we are.

There is the Transcendentalist.

He has his own reason.

To him the same thing is positive.

But, it is, to him indistinguishable Reality.

The Vedanta speaks of the beginning.

There was the one Existence, it says.

It was without a second.

But there is the beginning.

Before and after it there is something.

It is there forever.

It is beyond Time.

We cannot describe it.

We cannot even call it the One.

We can say that nothing but That is.

Still, it is not fully described.

We can be aware of three things.

First, there is its original self-concentration.

It is the indivisible One.

We try to realise it as such.

Secondly, there is this diffusion.

It is an apparent disintegration.

Mind conceives of the universe.

It conceives of it as unity.

Thirdly, there is a self-extension.

 

அவனுக்கு அது எதிரானது.

அவன் அப்படிக் கற்பனை செய்கிறான்.

நம் வாழ்வுக்கு அது எதிரானது.

நம் அமைப்புக்கு அது எதிரானது.

சிருஷ்டியைக் கடந்த நிலையுண்டு.

அவனுக்கேயுரிய காரணம் உண்டு.

அதுவே அவனுக்கு வேண்டியதாகும்.

அவனுக்கு அது புலப்படாத சத்தியம்.

வேதாந்தம் ஆதியைக் கூறுகிறது.

ஆதியில் சத்திருந்தது என்கிறது.

அடுத்தது அதற்கில்லை.

என்றாலும் ஆதியுண்டு.

அதன் முன்னும் பின்னும் ஒன்றுண்டு.

அது நிலையானது.

அது காலத்தைக்கடந்தது.

நம்மால் அதை விவரிக்கமுடியாது.

நாம் அதை ஏகன் எனவும் கூறமுடியாது.

அதைத்தவிர வேறொன்றுமில்லை எனலாம்.

இருந்தாலும், அது முழு விளக்கமாகாது.

நாம் மூன்றை அறியலாம்.

முதல், ஆதியான ஏகன்.

அது பகுக்கமுடியாத ஒன்று.

நாம் அதை அப்படியே அடைய முயலலாம்.

அடுத்தது துண்டு துண்டாகச் சிதறியது.

பார்வைக்கு அது அழிவை நாடுவது.

மனம் உலகை நாடுகிறது.

உலகை மனம் ஒற்றுமையாகக் கருதுகிறது.

மூன்றாவதாக, பிரம்மத்தின் வெளிப்பாடுள்ளது.

 

 

It is the Truth-Consciousness.

It is firm.

It contains the diffusion.

It upholds the diffusion.

It prevents its disintegration.

It maintains its unity in diversity.

It is stable.

Also it is mutably stable.

It insists on harmony.

It seeks it in strife and collision.

They are all-pervading.

It keeps eternal cosmos.

Mind can only arrive at chaos.

The chaos eternally attempts to form itself.

This is Supermind.

This is Truth-Consciousness.

It is the Real-Idea.

It knows itself.

It is all that it becomes.

Brahman extends itself. Page No.128

It is Supermind. Para No.13

It contains and develops.

It develops by the Idea.

It develops out of the unity.

The unity is indivisible.

Consciousness, Existence, Bliss emerge out of it.

They are triune.

 

அது சத்தியஜீவியம்.

அது நிலையானது.

சிதறியதைத் தன்னுட் கொண்டது.

சிதறியதை ஆதரிப்பது.

அது அழிவைத் தடுக்கிறது.

அது பகுதியில் முழுமையைக் காக்கிறது.

அது நிரந்தரமானது.

அத்துடன் அது மாற்றத்தில் நிலையானது.

அது சுமுகத்தை வற்புறுத்துகிறது.

பிணக்கிலும், மோதலும் அது சுமுகத்தைத் தேடுகிறது.

எங்கும் ஊடுருவிப் பரவுவது.

நிலையான பிரபஞ்சத்தை அது நாடுகிறது.

மனம் குழப்பத்தை உற்பத்தி செய்கிறது.

குழப்பம் நிலையாக உருவம் பெற முயல்கிறது.

அது சத்தியஜீவியம்.

அது சத்தியம் ஜீவியமாவது.

அதுவே முழுமையான எண்ணம்.

அது தன்னையறியும்.

அது அதுவாக மாறும்.

பிரம்மம் தன்னை வெளிப்படுத்தும்.

அது சத்தியஜீவியம்.

அது கட்டுப்படுத்தி, அபிவிருத்தி செய்யும்.

அது எண்ணத்தால் அபிவிருத்தி செய்கிறது.

அது ஐக்கியத்தினின்று அபிவிருத்தி செய்கிறது.

அவ்வைக்கியம் பகுக்கப்படக்கூடியதன்று.

சத், சித், ஆனந்தம் அதனின்று வெளிப்படுகிறது.

அம்மூன்றும் ஒன்றே.

 

 

It establishes a Trinity.

It does not work like Mind.

Mind arrives from the three to the One.

It manifests the three out of the One.

(For it manifests and develops).

Yet it maintains the unity.

(For it knows and contains).

It works by differentiation.

It brings forward one as the effective Deity.

Or, it does so with the other.

Each contains the others involved.

Or they are explicit in itself.

This is the process of differentiation.

It makes it the foundation.

The trinity is all-constituent.

Out of it, it evolves.

It evolves the possibilities and the principles.

It is thus it acts.

Its operation is the same here.

It possesses powers.

They are development and evolution.

It can make it explicit.

That power carries other powers.

They are involution, envelopment.

It also makes it implicit.

There are two involutions.

Creation is a movement between them.

Spirit is one.

 

மூன்றில் ஒன்றை அது ஏற்படுத்துகிறது.

அது மனம்போல வேலை செய்வதில்லை.

மனம் மூன்றிலிருந்து ஒன்றைத் தேடுகிறது.

இது ஒன்றிலிருந்து மூன்றை வெளிப்படுத்துகிறது.

(ஏனெனில் அது வெளிப்படுத்தி, அபிவிருத்தி செய்கிறது).

இருப்பினும், அது ஐக்கியத்தை நிலைநிறுத்துகிறது.

(ஏனெனில் அது அறியும், ஆட்கொள்ளும்).

வேறுபடுத்தி அது வேலை செய்கிறது.

சக்தியுள்ள தெய்வமாக அது ஒன்றை வெளிக்கொண்டுவருகிறது.

இல்லையெனில், மற்றதுடன் அப்படிச் செயல்படும்.

ஒவ்வொன்றும் அடுத்ததைத் தன்னுட்கொண்டுள்ளது.

அல்லது, அவை வெளிப்படையானவை.

இதுவே மாறுபடுத்தும் வழி.

அதை இதன் அடிப்படையாக்குகிறது.

திருமூர்த்திகள் அனைத்தையும் உட்கொண்டவர்கள்.

அதனினின்று இது வெளிவருகிறது.

தத்துவங்களும், சந்தர்ப்பங்களும் அதனினின்று எழுகின்றன.

அவ்விதம் அது செயல்படுகிறது.

இங்கும் அதன் செயல் அதுவே.

அதற்கு சக்தியுண்டு.

அவை பரிணாமம், அபிவிருத்தி.

அது அதை வெளிப்படையாக்கும்.

இந்த சக்திக்கு அடுத்த சக்திகள் உண்டு.

அவை சிருஷ்டி, சூழ்வது.

மேலும் அதை உள்ளடக்கும்.

இரண்டு உள்ளடக்கங்கள் உள்ளன.

சிருஷ்டி அவற்றிடையேயுள்ள சலனம்.

ஆன்மா ஒன்று.

 

 

All is involved in the Spirit.

Out of which all is evolved downward.

It moves to the other pole, Matter.

Matter is another.

All is involved in Matter.

Out of which all evolves upwards.

It moves to the other pole of Spirit.

In this sense creation is a movement.

There is the process of differentiation. Page No.129

It is by the Real-Idea. Para No.14

It is creative of the universe.

It puts forward three things.

They are principles, forces and forms.

They contain and front.

The comprehending consciousness contains them.

It contains all the rest of existence within them.

It fronts the apprehending consciousness.

All the rest of existence is implicit behind them.

Therefore all is in each.

And each is in all.

These are the seed of things.

It implies in itself all the infinity.

It is an infinity of all possibilities.

But it is kept to one law of process.

It is kept to one result by the will.

It can be said otherwise.

The Conscious-Being has the Knowledge-force.

 

அனைத்தும் ஆத்மாவுள் அடங்கியது.

அதனினின்று அனைத்தும் வெளிப்பட்டு கீழ்நோக்கிச் செல்கின்றன.

அடுத்த துருவத்தை அது நாடிப் போகிறது. அது ஜடம்.

ஜடம் அடுத்தது.

அனைத்தும் ஜடத்துள் உள்ளன.

அதனினின்று பரிணாமத்தால் எழுந்து அவை உயரும்.

அதிலிருந்து அடுத்த துருவமான ஆன்மாவை நோக்கி அது போகும்.

இவ்விதம் சிருஷ்டி சலனமாகிறது.

இது மாறுபாட்டின் வகை.

இது முழு-எண்ணம்.

இது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பது.

அது மூன்றை வெளிக்கொண்டு வருகிறது.

தத்துவம், சக்தி, ரூபம்என அவை மூன்று.

அவை உள்ளடங்கி, வெளிப்படுகிறது.

காலம் கடந்த சத்தியஜீவியம் அவற்றை உள்ளடக்குகிறது.

சிருஷ்டியில் மற்ற அனைத்தையும் தன்னுட் கொள்கிறது.

புறமான ஜீவியத்தை அது முன்னிறுத்துகிறது.

சிருஷ்டியில் மற்றவையெல்லாம் அதன்பின் மறைவாக இருக்கின்றன.

எனவே அனைத்தும் ஒன்றில் உள்ளது.

ஒன்று அனைத்திலும் உள்ளது.

அவை வித்து.

அனந்தம் முழுவதும் அதனுள் உள்ளது.

எல்லாச் சந்தர்ப்பங்களும் நிறைந்த அனந்தம் அது.

என்றாலும், அது ஒரு வழியில் மட்டும் நடக்கும்.

அது ஒரு பலனை மட்டும் வெளிப்படுத்தும்.

அதை வேறு வகையாகவும் கூறலாம்.

சத்-புருஷனுக்கு சித் சக்தியுண்டு.

 

 

 

He is maintaining himself.

He is sure of the Idea in himself.

He predetermines the result.

He does so by his own forms and movements.

The seed is the Truth of its own being.

This Self-Existence sees the seed in itself.

It has a resultant.

It is a seed of self-vision.

It is the Truth of self-action.

It is the natural law of self-development.

It is the law of formation and functioning.

It follows inevitably upon the Self-vision.

It keeps to the process.

It is involved in the original Truth.

So, All Nature is simply the Seer-Will.

It is the Knowledge-force of the Conscious-Being.

It is at work to evolve in force and form.

So emerges all the inevitable truth.

They are of the Idea.

Originally it has thrown itself into it.

Ours is the mental consciousness. Page No.129

There is this Truth-Consciousness. Para No.15

There is a contrast between them.

It is an essential contrast.

We conceive of this Idea.

It points out the essential contrast.

Thought is there.

 

அவன் தன்னை நடத்துகிறான்.

தன்னுள் உள்ள எண்ணத்தை அவன் அறிவான்.

முடிவை அவன் முன்கூட்டி நிர்ணயிக்கிறான்.

தன் ரூபங்களாலும், சலனங்களாலும் அதை அவன் செய்கிறான்.

விதை தன் ஜீவனின் சத்தியம்.

சத் வித்தைத் தன்னுள் காண்கிறது.

அதற்கு ஒரு முடிவுண்டு.

சுயதரிசன வித்து அது.

சுயசெயலுக்குரிய சத்தியம் அது.

சுயவளர்ச்சிக்குரிய இயல்பான சட்டம் அது.

ரூபம் பெறுவதும், நடைபெறுவதும் அச்சட்டத்திற்குட்படும்.

சுயதரிசனத்தால் அது தவிர்க்க முடியாதபடி அது நடக்கிறது.

முறையை அது காப்பாற்றுகிறது.

ஆதிசத்தியத்தில் அது உறைகிறது.

இயற்கை அனைத்தும் ஆண்டவனின் சித்தம்.

அது சத்புருஷனின் சித் சக்தி.

சக்தியாகவும் ரூபமாகவும் அது வெளிப்படுகிறது.

எல்லாச் சத்தியங்களும் அப்படி நிச்சயமாக வெளிவருகின்றன.

அவை எண்ணத்தைச் சார்ந்தவை.

ஆதியில் அவை எண்ணத்துள் அடங்கின.

நமது ஜீவியம் மனத்துடையது.

சத்தியஜீவியம் உள்ளது.

இரண்டும் வேறுபட்டவை.

வேறுபாடு முக்கியமானது.

நாம் எண்ணத்தைக் கருதுகிறோம்.

அடிப்படையான வித்தியாசத்தை அது காட்டுகிறது.

கருத்துள்ளது.

 

 

To us it is separate from existence.

It is abstract, unsubstantial.

It is different from reality.

We do not know where from it appears.

It detaches itself from objective reality.

It does so to observe.

Then only it can understand and judge.

Our mentality is all-analysing.

It is all-dividing.

Thought appears so to our mentality.

Mind has a first business.

It renders 'discrete'.

It makes fissures.

It does not discern.

It separates thought and reality.

It is paralysing.

In Supermind it is all one.

There being is consciousness.

Consciousness is being.

The idea is a vibration.

It is a vibration of consciousness.

It is equally a vibration of being.

There too it is again pregnant of itself.

It is an initial coming out.

It comes out in creative self-knowledge.

It lay elsewhere in potential.

It was so in uncreative self-awareness.

It comes out as Idea.

 

நமக்குக் கருத்து வேறு; சத் வேறு.

கருத்து கண்ணுக்குப் புலப்படாத தத்துவம்.

அது சத்தியத்திலிருந்து மாறுபட்டது.

அது எங்கிருந்து வருகிறதுஎன நாமறியோம்.

தெளிவான சத்தியத்திலினின்று அது தன்னைப் பிரித்துக்கொள்கிறது.

உலகை அறிய அது அதைச் செய்கிறது.

புரியவும், தீர்மானிக்கவும் அது அவசியம்.

எதையும் ஆராய்வது நம் மனப்பான்மை.

அது பகுக்கும் தன்மையுடையது.

கருத்து அதுபோன்று நம் மனப்பான்மைக்குத் தெரிகிறது.

மனத்திற்கு முதற் கடமையுண்டு.

மனம் பிரித்தெடுக்கிறது.

வெட்டி எடுத்து விலக்குகிறது.

அது பகுத்துணர்வதில்லை.

சத்தியத்தையும், கருத்தையும் அது பிரிக்கிறது.

அதனால் நாம் நம் நிலையிழக்கிறோம்.

சத்தியஜீவியத்தில் அனைத்தும் ஒன்று.

அதில் ஜீவனும் ஜீவியமும் ஒன்று.

ஜீவியமும் ஜீவனும் ஒன்றே.

எண்ணம் ஒரு கதிர்.

அது ஜீவியத்தின் கதிர்.

அது ஜீவனின் கதிருமாகும்.

அதிலும் அது செறிந்துள்ளது.

அது முதல் வெளிப்பாடு.

அது படைப்பின் சுயஞானமாக வெளிப்படுகிறது.

அது வேறிடத்தில் வித்தாக இருக்கிறது.

சிருஷ்டிக்கு முந்தைய சுயதெளிவில் அது இருந்திருக்கிறது.

அது எண்ணமாக வெளிவருகிறது.

 

 

That Idea is a reality.

That reality evolves itself.

It evolves always by its own power and consciousness.

It is always self-conscious.

It is always self-developing.

It does so by the will inherent in the Idea.

It is always self-realising.

It does so by the knowledge ingrained by every impulsion.

This is the truth of all creation, of all evolution.

Being, knowledge, will are there in Mind. Page No.130

They are all divided here. Para No.16

Their consciousness is divided.

In Supermind they are not so divided.

There they are a trinity.

They are one movement.

They have three aspects.

They are effective.

Each has its own effect.

Being has the effect of substance.

Consciousness has the effect of knowledge.

It guides itself.

It shapes the idea.

It comprehends and apprehends.

Will gives the effect of self-fulfilling force.

The idea is light.

It is the light of reality.

It illuminates itself.

 

எண்ணம் சத்தியம்.

சத்தியம் பரிணமிக்கிறது.

தன் சொந்த சக்தியாலும், ஜீவியத்தாலும் அது பரிணமிக்கிறது.

எப்பொழுதும் அது தன்னையறியும்.

எப்பொழுதும் அது தன்னை அபிவிருத்தி செய்யும்.

எண்ணத்திலுள்ள சக்தியால் அதைச் செய்கிறது.

அது தன்னையே சித்திக்கக்கூடியது.

ஒவ்வொரு சலனத்தாலும் பெற்ற ஞானத்தால் அதைச் செய்கிறது.

இதுவே சிருஷ்டியின் இரகசியம், பரிணாம இரகசியம்.

ஜீவன், ஞானம், சக்தி ஆகியவை மனத்திலுள்ளன.

அவையெல்லாம் இங்கு பகுக்கப்பட்டுள்ளன.

அவற்றின் ஜீவியம் பகுக்கப்பட்டது.

சத்தியஜீவியத்தில் அவை அப்படிப் பகுக்கப்படவில்லை.

அங்கு அவை திருமூர்த்திகளாக உள்ளன.

மூன்றும் அங்கு ஒன்றே.

அங்கு மூன்று அம்சங்களுள்ளன.

அவை சக்தி வாய்ந்தவை.

ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய சக்தியுண்டு.

ஜீவனுக்குப் பொருளின் பலன் உண்டு.

ஜீவியத்திற்கு ஞானத்தின் பலன் உண்டு.

அது வழி நடத்தும்.

அது எண்ணத்தை உருவாக்கும்.

அது அகமும், புறமுமாகும்.

சக்தி தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளக் கூடியது.

எண்ணம் பிரகாசமானது.

அது சத்தியப்பிரகாசம்.

அது சுயம்பிரகாசம்.

 

 

It is not mental thought.

Nor is it imagination.

It is effective self-awareness.

It is Real-Idea.

The Idea has knowledge and will. Page No.130

In Supermind they are one. Para No.17

They are not separated.

They are one as being and substance are one.

The substance is one with the being.

Being is luminous power of substance.

The substance of fire burns.

There is burning light.

They are not different.

So the Idea is one with the Being.

The power of the Idea is one with the substance of the Being.

The substance works itself out in the Idea.

That is development.

In our mentality all are different.

We have an idea.

We have a will according to the idea.

The will is the impulsion of the idea.

One detaches from the other.

We separate the idea from the will.

We separate both from ourselves.

I am.

It is an idea.

It is an abstraction.

 

அது மனத்தின் எண்ணமன்று.

அது கற்பனையுமில்லை.

தன்னையறியும் சக்தியது.

அது முழு எண்ணம்.

எண்ணத்திற்கு ஞானமும் சக்தியும் உண்டு.

சத்தியஜீவியத்தில் இரண்டும் ஒன்றே.

அவை பிரிந்தவையன்று.

ஜீவனும், பொருளும் இணைந்த ஒன்று அது.

பொருள் ஜீவனுடன் கலக்கிறது.

ஜீவன் பொருளின் பிரகாசம்.

பொருள் தழலாக எரிகிறது.

அது பிரகாசமாக எரிகிறது.

அவை வேறன்று.

எனவே எண்ணமும், ஜீவனும் ஒன்றே.

எண்ணத்தின் சக்தி ஜீவனின் பொருளுடன் சேர்கிறது.

பொருள் எண்ணமாக வெளிவருகிறது.

அது அபிவிருத்தியாகும்.

நம் மனத்தில் அவை வேறு.

நமக்கு ஓர் எண்ணம் உண்டு.

எண்ணத்திற்குரிய சக்தியுண்டு.

எண்ணம் உந்துவது சக்தி.

ஒன்று அடுத்ததிலிருந்து பிரிகிறது.

நாம் எண்ணத்தையும், சக்தியையும் பிரிக்கிறோம்.

இரண்டையும் நம்மிலிருந்து பிரிக்கிறோம்.

நானிருக்கிறேன்.

அது ஓர் எண்ணம்.

அது தத்துவம்.

 

 

It mysteriously appears in me.

The will is another mystery.

It is a force.

It is nearer to concreteness.

It is, of course, not concrete.

It is something not myself.

It is something I have got.

It is something I am seized with.

But I am not.

I make a gulf between my will and its effect.

To me, there are concrete realities.

They are outside of me.

They are other than myself.

So none of them is self-effective.

The idea may fall from me.

The will may fail.

The means may be lacking.

I myself may remain unfulfilled.

It is by any of them.

Or it may be by all of them.

Thought is not self-divided. Page No.131

Force is not self-divided. Para No.18

Being is not self-divided.

In the mind they are self-divided.

In the Supermind they are not divided.

They are not broken.

They are not separated from each other.

 

அது புதிராக எழுகிறது.

சக்தி மற்றொரு புதிர்.

அது சலனமாகும் சக்தி.

அது ஜடத்திற்குச் சமமானது.

அதுவே ஜடமில்லை.

அது நானில்லை.

இது நான் பெற்றது.

நான் ஏற்றுப் போற்றுவது இது.

ஆனால் நானில்லை.

என் சக்திக்கும், பலனுக்குமிடையே ஒரு வெளியை ஏற்படுத்துகிறேன்.

இவை எனக்கு ஜடசத்தியம்.

அவை எனக்குப் புறம்பானவை.

அவை என்னிலிருந்து வேறுபட்டவை.

எனவே அவை எதுவும் தானே பலன் தாரா.

எண்ணம் என்னிடமிருந்து விழலாம்.

சக்தி தோற்கலாம்.

ஜெயிக்கும் சாதனம் இல்லாமலிருக்கலாம்.

நானே பூர்த்தியாகாமலிருக்கலாம்.

எதனாலும் இது நடக்கலாம்.

எல்லாவற்றாலும் நடக்கலாம்.

எண்ணம் தானே தன்னைப் பகுப்பதில்லை.

சக்தியும் அப்படியே.

ஜீவன் தன்னைப் பிரித்துக்கொள்ளவில்லை.

மனத்தில் அவையெல்லாம் பிரிந்து காணப்படுகின்றன.

சத்தியஜீவியத்தில் அப்பிரிவினையில்லை.

அவை உடையவில்லை.

ஒன்று மற்றதிலிருந்து வேறுபட்டதில்லை

 

 

The Supermind is Vast.

It starts from unity.

It does not start from division.

It is comprehensive.

It is its primary trait.

Differentiation is secondary there.

A truth of being is expressed.

The idea corresponds to it exactly.

The will-force too corresponds with it.

(Force is only power of consciousness).

No idea clashes with another idea.

No will or force clashes with another will or force.

In man they clash.

In the world they clash.

There is one vast Consciousness.

It contains and relates all ideas in itself as its own ideas.

There is one vast Will.

It contains all energies.

It relates all energies as its own energies.

It holds back this.

It advances that other.

It acts according to its own preconceiving Idea-Will.

Omnipresence, Omnipotence, Page No.131

Omniscience are current religious Para No.19

notions of the Divine Being.

The above justifies them.

 

சத்தியஜீவியம் பரந்தது.

அதன் அடிப்படை ஐக்கியம்.

அது பிரிவினையிலிருந்து ஆரம்பிக்கவில்லை.

அது பூரணமானது.

அதுவே அதன் அடிப்படைக் குணம்.

மாறுபாடு அடுத்த விஷயம்.

ஜீவனின் சத்தியத்தை வெளிப்படுத்துகிறோம்.

எண்ணம் அதைச் சரியாகப் பிரதிபலிக்கிறது.

சித் சக்தியும் அப்படிப் பிரதிபலிக்கிறது.

(சக்தி ஜீவியத்தின் திறன் வெளிப்பாடு).

எந்த எண்ணமும் அடுத்த எண்ணத்துடன் மோதுவதில்லை.

சக்தியோ, செயலோ அடுத்த சக்தியுடன் மோதுவதில்லை.

மனிதனில் அம்முரண்பாடுண்டு.

உலகில் அம்மோதல் உண்டு.

ஓர் பரந்த ஜீவியம் உண்டு.

அனைத்தையும் தன்னுட்கொண்டு, எல்லா எண்ணங்களையும் தழுவி தன்

எண்ணமாக்குகிறது.

ஒரு பரந்த உறுதியுண்டு.

அது எல்லா சக்திகளையும் தன்னுட்கொண்டது.

எல்லா சக்திகளுடனும் தொடர்புகொண்டு அவற்றைத் தன் சொந்த

சக்தியாக்குகிறது.

ஒன்றை மறைத்து வைக்கிறது.

மற்றதை முன்னிருத்துகிறது.

தான் முன்கூட்டி முடிவு செய்தபடி அது செயல்படுகிறது.

எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன்என

ஆண்டவனை மதங்கள் கூறுகின்றன.

நாம் மேற்கூறியது இதைச் சரியெனக் கூறும்.

 

 

 

They are not irrational imagination.

They are perfectly rational.

They do not contradict logic.

Nor is the experience against them.

There is one error.

It is to separate God and man, Brahman and the world.

It makes the differentiation into division.

We shall speak of this later.

Now we arrived at one idea.

It is a conception of the Supermind.

There being, consciousness, will, delight are one.

Yet it is capable of infinite differentiation.

Still it does not destroy unity.

There Truth is the substance.

Truth rises in the Idea.

Truth comes out of the form.

There is one truth of knowledge and will.

There is one truth of self-fulfillment and delight.

Self-fulfillment is the satisfaction of the being.

In all mutations there is a harmony.

It is self-existent and inalienable.

It is equally so in all combinations.

The End

*******

 

அவை அர்த்தமற்ற கற்பனையில்லை.

அவற்றிற்குப் பூரண அர்த்தம் உண்டு.

அவை தர்க்கத்திற்குப் புறம்பானவையல்ல.

அனுபவமும் அதற்கெதிரானதன்று.

ஆனால் ஒரு தவறுண்டு.

மனிதனையும், ஆண்டவனையும் பிரிப்பது தவறு. பிரம்மத்தையும் உலகையும்

பிரிப்பது தவறு.

அது மாறுபாட்டை வேறுபாடாக்கும்.

இதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.

இப்பொழுது நாம் ஒன்றைக் கண்டோம்.

அது சத்தியஜீவியம்.

அங்கு ஜீவன், ஜீவியம், ஆனந்தம், செயல் ஒன்று.

இருப்பினும் அது அனந்தமாகப் பிரியவல்லது.

பிரிந்தாலும் ஐக்கியம் அழிவதில்லை.

சத்தியம் பொருளாகும்.

சத்தியம் எண்ணத்தில் எழுகிறது.

சத்தியம் ரூபமாக எழுகிறது.

ஞானமும், உறுதியும் ஒன்று என்று அறிகிறோம்.

ஆனந்தம், ஆத்மதிருப்தியாகிறது.

ஜீவன் பெறும் ஆனந்தம் ஜீவானந்தம்.

பிரிவினையில் சுமுகமுண்டு.

சுமுகம் அழியக்கூடியதில்லை, சுயமானது.

இணைவதிலும் சுமுகம் அப்படியே.

முற்றும்

********



book | by Dr. Radut