|
Invite Your Friends | FAQ | Members List | Calendar | Search | Today's Posts | Mark Forums Read |
|
Thread Tools | Search this Thread | Display Modes |
#1
|
|||
|
|||
"Mother's Grace" என்னும் மந்திர சொல்
அப்பாவின் பாதங்களில் சமர்ப்பணம்.
எனது சொந்த அனுபவம் ஒன்றை அன்னை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது முத்த மகனை English டியூஷன் இல் சேர்த்து இருந்தேன். டியூஷன் டீச்சர் மிகவும் நன்றாக சொல்லிகொடுப்பார், மேலும் தான் கூறியபடி நடக்கவேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்பார். அவர் சொல்லிகொடுப்பதை அக்கடமிக்குடன் நிறுத்தி விடாமல், இங்கிலிஷை முழுமை யாக கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புவார். ஆனால் தான் சொன்ன படி கேட்க வில்லை என்றால் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார், கடினமான வார்த்தைகளில் திட்டிவிடுவார். சமீப காலமாக அவர் பிற மாணவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்ததை பார்த்து மனம் பதைத்தது, கோபமாக வந்தது. கடந்த சனியன்று காலை மகனை டியூஷன் இல் விட்டு விட்டு, மதர் சர்வீஸ்சுக்கு செல்ல முடிவு செய்து இருந்தேன். அதன் படி டியூஷன் சென்டருக்கு காலையில் சென்று இருந்தேன், எனது மகன் வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்று மிகவும் கோபப்பட்டார். ஆனால் எனது மகன் இந்த வீட்டு பாடம் கொடுத்ததை அறிந்திருக்கவில்லை. டீச்சர் மேலும் மேலும் மிகவும் கடுமையான வார்த்தை களால் சபித்தார், அடிக்கவும் செய்தார். திடீர் என்று என் கண் முன்னால் நடந்தை ஏற்று கொள்ள முடியவில்லை, எனக்கு அவர்களிடம் ஒன்றும் பேச முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. உடனே எனது மகனை டியூஷன் இல் இருந்து நிறுத்துவதாக அவரிடம் கூறிவிட்டேன். நான் அழுவதை பார்த்து, அவர் முகத்தில் லேசான சிரிப்பை பார்த்தேன். அவர் சிரித்ததை என்னால் தாங்க முடியவில்லை, மேலும் அழுதவண்ணமே மதர் சென்டர் சர்வீஸ்க்கு சென்றேன். மதர் சென்டர் Aunty என் முகம் பார்த்து, அன்னையிடம் சொன்னால் அணைத்து கஷ்டமும் போய்விடும், அமைதியாக சர்வீஸ் பண்ணுங்க என்றார். சர்வீஸ் பண்ணும் போது, நான் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஒரு மாணவனிடம் கடுமையாக நடந்தது ஞாபகம் வந்தது. உடனே அன்னையிடம் இது பற்றி கூறி மானசிகமாக அந்த மாணவனிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனாலும் மனம் அடங்க மறுத்து அழுதது. Aunty இது பத்தி பேசுகையில், அழுவதற்கு காரணம் நமது ego என்றார். மேலும் என்னை மலர்ந்த ஜீவியம் அக்டோபர் 2003 இதழில் வந்த குள்ளசாமி என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படிக்க சொன்னார். வீட்ற்கு வந்து விட்டு நடந்தை பற்றி நினைத்து பார்த்தேன். நான் டியூஷன் ஆசிரியர் எதுவும் பேசவில்லை, அனாலும் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்று என் மனம் கோபத்தால் பொங்கிய வண்ணம் இருந்தது. அதன் பிறகு மாலையில் வெளியே சென்று விட்டு இரவில் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் சமைத்து கொண்டிருந்தபோது மீண்டும் கோபம் என்னை பற்றி கொண்டது. மதரிடம் வந்த பிறகு நான் கோழையாகி விட்டேனா? என்று என் கோபம் அன்னையிடம் திரும்பியது. என் கோபம் எல்லை மீறியது, அதனால் அவைரிடம் உடனே சண்டை போடுவது என்று முடிவு செய்தேன். எனது கணவரின் போனில் அவரது செல் போன் நம்பர் இருந்தது, அனால் அவருடைய போன் டச் ஸ்க்ரீன் சரியாக வேலை செய்ய மறுத்தது. எனது கணவர் சுமார் 20 நிமிடம் முயற்சி பண்ணினார் ஆனாலும் போனை ஓபன் பண்ண முடியவில்லை. எனது போனிலும் அவரது நம்பரை தேடினேன், கிடைக்கவில்லை. எனது தோழிக்கு போன் செய்து அவரது நம்பரை வாங்க முயற்சித்தேன், ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை. முந்திய வாரம் அவர் என்னிடம் வீட்டு போனில் பேசியது நினைவு வந்தது. அவருடைய நம்பரை பதிவு செய்யாததால், எங்கள் வீட்டுக்கு வந்த அணைத்து நம்பர்களையும் கால் பண்ணி அவருடைய நம்பரை கண்டு பிடிக்க முடிவு செய்தேன். முதல் இரண்டு நம்பர்களில் யாரும் எடுக்கவில்லை. மூன்றாவது நம்பருக்கு கால் செய்த போது, மறு முனையில் "Mother's Grace" என்னும் மந்திர சொல் ஒலித்தது, குரலை உள்வாங்கினேன். என்னால் தொடர்ந்து பேசமுடியாமல் போனை கணவரிடம் தந்தேன். நிமிடத்தில் என் கோபம் கரைய தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் கோபம் முழுமையாக கரைந்தது. உடம்பும் மனமும் லேசாகி காற்றில் பறப்பது போலே உணர்ந்தேன். எனக்கு அந்த நிமிடம் மிகவும் ஆனந்தமாய் இருந்தது, இப்படியும் கோபம் கரையுமா? என்னால் நம்ப முடியவில்லை. அவரை(டீச்சர்) மீண்டும் நினைத்த போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. மதர் சென்டர் aunty இடம் நடந்தை கூறி சந்தோஷபட்டேன், ஒருவரின் மேல் உள்ள கோபத்தை அழித்தால், எவ்வளவு ஆனந்தம் என்பதை அன்னை என்னக்கு காட்டினார். Thank you Aunty Thank you Appa |
The following 11 users say they have read this useful post by Santhibala: | ||
P.Govindarajan (12-12-2012), R.Sasikala (10-05-2012), R.Sharmila (13-12-2020), Renuka Senthil (22-05-2012), Revathy Vijayan (15-08-2013), Sathya Asokan (16-08-2019), Suganthi Jayaraman (26-04-2012), Thirumal Jayaraman (01-03-2013), V.Hemalatha (18-07-2013), Vidhya Geetha (08-12-2015), vidya_muthulakshmi (10-05-2012) |
Thread Tools | Search this Thread |
Display Modes | |
|
|