View Single Post
  #2  
Old 17-10-2010, 04:19 PM
M.Priya M.Priya is offline
Registered Member
Unsubscribe From M.Priya's Posts
 
Join Date: Dec 2007
Posts: 917
Threads: 194
Replies: 723
  Subscribers: 36 users
  Subscribed To: 1 user
Read: 2,462
Read 4,785 Times in 610 Posts
Thumbs up Excellent Speeches!

அப்பாவின் அருளாய் அமைந்த மதர்ஸ் சர்வீஸ் சொசைடியின் 40 தாவது ஆண்டுநிறைவை ஒட்டிய சொற்பொழிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
சொற்பொழிவாற்றிய அனைவரின் பேச்சும் கேட்ட அன்பர்களுக்கு அப்பாவின் அருளாய் அமைந்தது.

[COLOR="Blue"]திரு.அசோகன் [/COLOR]அவர்கள்,தியான மையங்களை தாண்டி மதர்ஸ் சர்வீஸ் சொசைடியின் நோக்கங்களையும்,பணிகளையும்,வெற்றிகளையும் அதற்க்கு அப்பாவின் தன்னலமற்ற சேவையையும் பற்றி அருமையான சொற்பொழிவாற்றினார்.மனமார்ந்த நன்றிகள்.

[COLOR="Blue"]திருமதி.விஜயா நாராயணன்[/COLOR] அவர்கள், அன்னையின் சேவையில் "நான் என்கிற தன்முனைப்பு கூடாது.அதை மனதினுள் சென்று களைய வேண்டும்".

நம் வீட்டிலோ,சூழலிலோ,அலுவலிலோ ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு பொறுப்பு நான் தான் என்று ஏற்க சம்மதித்து,உள்ளே போய்,அன்னையை ஆயிரம் முறை அழைத்தால் அது அன்னை வரும் தருணம்.

பிரச்சனைகளை மனத்தால் கடப்பவர் பாசிடிவ் ஆன முதல் வகை.அப்படி தான் பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்று அதை மனதால் கடக்கும் முதல் வகையினருக்கு "அன்பு அமிர்தமாகி ஆனந்த அபரிமிதம் கிடைக்கும்".

இரண்டாவது நெகடிவ் வகை.பிரச்சனைகளை இவர்களே உற்பத்தி செய்பவர்கள்.இந்த உண்மையை இவர்கள் நம்பி முழு பொறுப்பையும் ஏற்றால் அதன் பிறகு இவருக்கும் "அன்பு அமிர்தமாகி ஆனந்த அபரிமிதம் கிடைக்கும்"
என்கிற அருமையான கருத்தை கூறினார்.

மேலும் அபரிமிதம் P&P வடிவில் நம் கதவை தட்டுகிறது.உண்மையாக ஏற்றால் பெம்பெர்லி கிடைக்கும்.எலிசபெத்தை போல என் குடும்பம் மட்டம் அதற்கு நான் காரணம் என்று ஏற்றால் அபரிமிதம் கிடைக்கும்.
P&P கதையோட ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்முள் இருக்கு என்று conscious ஆக ஏற்றுக் கொள்ள வேண்டும்.அப்ப மதர் strength இல் நம் பொய் அழியும் என்ற கருத்தும் அருமை.

charolette போல வருகின்ற வாய்ப்பை ஏற்று அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்."To Acquire Egoless Humility and enjoy showers of Mother's Blessings".இந்த நிலைக்கு வந்தால் அடுத்தவர் வாழ்வில் சுபிட்சத்தை உற்பத்தி செய்யும் மையமாக அமையலாம்.நம் பரநலமே சுயனலமானால் உச்ச கட்டப் பலன் குறைந்தபட்ச முயற்சியில் வரும்.காண்பவரெல்லாம் அன்பராவார்.

நாம் உலகை நினைக்கும் போது உலகம் நம்மை நினைக்கும்.மனம் உள்ளமாகும்.உடல் அறிவு பெரும்.அன்பு மீறி அசரீரி கேட்கும்.காண்பனவெல்லாம் கற்பகவிருட்சமாகும்.வீடு பெம்பெர்லி ஆகும்.மையம் அன்னை பகவான் வாழும் அறை ஆகும்.
முத்தாய்பாக,"இந்த ஆண்டு நிறைவு ஆத்ம நிறைவு பெரும் தருணம் என்று அருமையாய் முடித்தார்".

[COLOR="Blue"]திருமதி.வசந்தா[/COLOR] அவர்கள், அப்பாவினுடைய முயற்சியால் திருஉருமாறி சுபிட்சமான கிராமத்தைப் பற்றியும்,10 ஆண்டுகளில் 20 லட்ச வருமானம் ஆனது பற்றியும் அருமையாக பேசினார்.அப்பாவின் வழிகாட்டுதலில் உயரிய கம்பனி தவற விட்ட 1000 கோடிக்கு மேல் உள்ள வருமானம் சுழலில் வாய்ப்பாக உள்ளது.அன்பர்கள் அனைவரும் அதை அக முயற்சியால் அன்பாக அருளாக பெறலாம்.

"நல்லெண்ணம் என்பது அரிது.அதை பிறருக்கு கொடுப்பது மிகவும் அரிது சாதகருக்கு உகந்தது என்ற கருத்து அருமை.
நல்லெண்ணத்தை 50 ,100 பேருக்கு தருவது உயர்ந்த அன்பர் வாழ்வு".
என்று அருமையாய் முடித்தார்.

[COLOR="Blue"]திரு.ரமேஷ் அவர்கள்,[/COLOR]எப்பொழுதும் போல நடைமுறையான விளக்கமாய்,"வருகின்ற அருளுக்கு தடையாக நாமே இல்லாமல் இருப்பது தான் சாதனைக்கு உகந்தது"என்றும்,ஒரு சிறிய செயலில் அந்த சாதனையையோ,வெற்றியோ கொண்டு வருவது தான் அன்னை அன்பராவது என்கிற அருமையான கருத்தும்,"Seeing MSS as Part of Our Mission",உணர்ச்சியின் முறைகளை வளர்ப்பது தான் "Accomplishment" என்பதும் அருமை.
ஆத்மாவில் பண்புகள் வெளிப்படுவது சிறப்பு என்று அருமையாய் முடித்த திரு.ரமேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


I kindly share the Glimpses of Wondreful Speech by Garry sir in the Preceding Post.

Last edited by M.Priya; 24-10-2010 at 04:35 PM.
Reply With Quote
The following 3 users say they have read this useful post by M.Priya:
Chitramadhavan (20-08-2013), Mathini Sambath (01-10-2013), Padma Ramachandran (12-04-2013)