PDA

View Full Version : நன்றியுடன் mss நூல்கள் பெயர்கள் கொண்டு ஒர


swopnasoundar
30-12-2011, 03:26 PM
பூலோகத்தை சுவர்க்க லோகமாக மாற்ற ஸ்ரீ அன்னை பராசக்தி அவதாரமாக புண்ணிய பூமியில் ஸ்ரீ அரவிந்த தத்துவத்தை மேற்கொண்டு
அன்னையின் வாழ்வில் யோக வாழ்க்கை விளக்கத்தை தெளிவுபடுத்தி ஸ்ரீ அரவிந்தர் வாழ்வின் அடிச்சுவடுகளில் பாத கமலங்களை வைத்த ஸ்ரீ அன்னையே தங்களுக்கு நமஸ்காரம்.

பேரொளியாகும் உள்ளொளியால் பொன்னொளியை
காண லைப் டிவைன் கருத்துகள், விரிவுரைகள்
ஸ்ரீ அரவிந்த காவிய இதழ்கள்(சாவித்ரி) மற்றும்
உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம் மூலம் யோக சக்தி வாழ்வில்
பலிக்கும் முறைகளை அளித்த பரம்பொருள் பகவானே
தங்களுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ அன்னையின் வரலாறும் வழிபாடுகளையும்
எடுத்துரைத்து ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை, ஸ்ரீ அன்னையின் அருளை,
ஸ்ரீ அன்னையைப் பற்றிய அருளுரைகளை,
வேணுகானமாக, அதிர்ஷ்டமாக, அருளமுதமாக வழங்கிய
ஸ்ரீ. குருநாதரே தங்களுக்கு நமஸ்காரம்

திருவருளே தீராத செல்வம் என திருவடி தரிசனத்தை அருளோவியமாக பெற பக்தியும் சேவையும் மிக முக்கியம் என வழிகாட்டிய பால குருநாதரே தங்களுக்கு நமஸ்காரம்.

ஆயிரம் ஆயிரம் ஆன அன்னையே!

ஆயிரத்தில் ஒருவராகவோ, நூறு பேர்களில் ஒருவராகவோ மாற
உள்ளே வேலை இருக்கின்றது, வாழ்வில் சிறியதும் பெரியதும் ஏற்பட மனம்-ஜீவனின்- முக்கிய கரணம்.அதற்கு மனித சுபாவம் திருவுருமாற எனது பிரார்த்தனையை சமர்ப்பணம் செய்கின்றேன்.

இன்ப ஜோதியான அன்னையே!

தினமும் வாழ்வில் ஆத்ம சோதனை மேற்கொண்டு
அபரிமிதமான செல்வமான ஆன்மீகமும்
ஐஸ்வர்யமும் என்றும் என் வாழ்வில் காமதேனு போல் பொழிந்து நிலைக்க புஷ்பாஞ்சலி செய்கின்றேன்.

எல்லாம் தரும் அன்னையே!

தொழிலின் ஜீவன் உயர்ந்து வருமானம் ஐம்பது இலட்சமாக,கோடியாக உயர பரமனை நாடும் ஜீவாத்மாவாகிய நான் மலர்ந்த ஜீவியம் பெற்று அன்னையின் ஆன்மீகப் பரிசைப் பெறச் செய்யும் பிரார்த்தனை பலிக்க வேண்டும்.

பேரருள் புரியும் அன்னையே!

ஸ்ரீ அரவிந்தத்தின் சாரத்தை Pride & Prejudice கதை மூலம் அறியவும்,
தேடிவரும் யோகத்தை பெறவும், விதிக்கு வழி உண்டு என அறியவும் அதற்கு அகமும் புறமும் ஒன்று என்ற விழிப்புணர்வும் அமிர்தமான உணவு
எப்போதும் எங்கும் கிடைக்கவும், இரத்தினச்சுருக்கமாக
பேசவும், கணவன்-மனைவி சுமூகத்தால் நறுமணம் எங்கள் வாழ்வில் வீசவும், எங்கள் குடும்பம் அன்னை குடும்பமாக திருவுருமாறி அதன் மூலம் சமுகம் அதிர்ஷ்ட சாகரமாக மாற வேண்டும் .

சத்திய ஜீவிய சச்சிதானந்த அன்னையே!

பகவானும் பக்தனும் சரணாகதியின் ஆன்மீகச் சிறப்பால் தான் இணைய முடியும் அது பிரம்ம ஜனனமாகும் என்ற தத்துவ ஞானத்தை எங்களுக்கு அளித்து தங்கள் நினைவுடன் வைத்து தங்கள் பூரண பாதுகாப்பில் காத்து அருள் புரியுங்கள்.

M.Jagannathan
22-11-2012, 01:41 PM
பாற்கடலை கடைந்தெடுத்தனர் தேவரும், அசுரரும் ;
அமிர்தமும், ஆலகாலமும் பெற்றது இவ்வுலகு.

குருநாதர் அப்பாவின்

நூற்கடலை கடைந்தெடுத்தார் இவ்வன்பர் ;
அமிர்தமும், அருளமுதமும் பெற்றது அன்பருலகு.

அன்பருக்கு நன்றி .