DAILY MESSAGES                           

Series XVI

 

951)    Men destroyed themselves in war heroically and were destroyed by calamities and cruelties. This is the way the physical breaks down its rigidities to rise to the vital and mental.

             வீரனாகப் போரிலும், இயற்கை சேதத்திலும், பஞ்சத்திலும் மனிதன் அழிவதன் மூலம் உடலை விட்டு மனத்தையடைய மனிதன் முயல்கிறான்.

             Education eradicates natural calamities.

952)    Mental education minimises natural calamities of war as well as riots. Vital education almost wipes it out. Thus democracies do not go to war.

             கல்வி இயற்கையின் கடுமையைக் குறைக்கும். பண்பு அதை முழுவதும் விலக்கும். மக்களாட்சி போரைத் தொடங்காததன் காரணம் அதுவே.

953)    All the improvements Jews have are selfish strengths. Their sufferings come from there.

             பெரும் படிப்பும், திறமையையும் பெற்ற யூதர்கள் அவற்றை சுயநலமின்றிப் பெற்றால் அவர்களை உலகம் துன்புறுத்தாது.

954)    One who makes all his acts or most of them as Token will succeed in the Token Act.

             சோதனை வெற்றி பெற வாழ்க்கையையே சோதனையாக்குவது சரி.

955)    Life Science, before entering into the subtle life, can discover the ROOT causes of all human problems.

             வாழ்வை ஆராய்ச்சி செய்யுமுன் மனிதனுடைய எல்லாப் பிரச்சினைகட்கும் மூலகாரணம் கண்டால், அவை எளிதில் அழியும்.

             மூலத்தை அறிந்தால் முழு விடுதலை கிடைக்கும்.

956)    The nations that are enemies both supply arms to the third country which starts local fights. Both go to negotiate! What enmity did in the beginning was done later by profiteering.

             அரசியல் எதிரிகள் ஆயுத விற்பனையில் இலாபத்திற்காக ஒரே மாதிரியாக நடக்கிறார்கள்.

             எதிர்ப்பு அரசியலில்; சுபாவம் ஒன்றே.

957)    Transitions are slow to start, slower to move, move in a zigzag path. Where Her Force enters as in the war of Bangladesh, it is swift. The war ended in a few days.

             மாற்றம் மாடு விற்பவனைப் போன்றது. மயிரிழை மயிரிழையாக மாறும். பங்களாதேஷ் சண்டை போல் அன்னை வந்தால் உடனே மாறும்.

958)    Harmony in ignorance will still be of some value; but harmony arrived at knowing the opposite character of the other person as the complement can really achieve.

             அறியாமையின் சுமுகமும் நல்லது செய்யும் என்றாலும் பிறரின் எதிரான குணம் நமக்குத் தேவையானது என்ற ஞானம் தரும் சுமுகம் காரியத்தைச் சாதிக்கும்.

959)    Smile is the mating call in the animal. Divine grace descending on human misery is the Smile.

             பிச்சை பசித்தவனுக்குப் போடும் சோறு. பரமனை நாடும் ஆத்மாவுக்கு சேவை செய்து குடும்பஸ்தன் பெறும் பாக்கியமும் அதுவே.

960)    Dissolution of Ignorance, represented by the organised ego, starts with emotions accepting the mind and ends with the revelation of the Cosmic Self.

             அறிவை உணர்வு ஏற்பதில் ஆரம்பித்து, விஞ்ஞானமய புருஷன் தெரிவதில் முடிவது அகந்தை கரைவது. அதுவே அறியாமை கரையும் பாதை.

961)    Mind loves to imagine the result it is unable to produce and thus prevents it.

             மனம் நினைப்பதால் காரியம் நடக்காது. நடக்காத காரியத்தை நடந்ததாகக் கற்பனை செய்வது மனத்தின் பழக்கம். கற்பனை, கற்பனையாக முடியும்.

962)    The decision not to pray is against the one to pray and is still a mental decision. Moving from the mind to the Soul, if one SEES the truth of not speaking and accepts that, it is better.

             பிரார்த்தனை செய்வதில்லை என்பது பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கு எதிரான மனத்தின் முடிவு. மனத்தை விட்டு சைத்திய புருஷனுக்கு சமர்ப்பணத்தால் சென்று, அந்த உண்மையை ஆத்மா அறிவது, அறிந்ததை ஏற்பது, சரி.

963)    The natural incline of the head to the right shows he will achieve what he works for.

             வலப்பக்கம் தலை இயல்பாக சாய்வது தான் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமையுள்ளவருடையது.

964)    Cultural minimum is the consciousness maximum.

             பழக்கம் குறைவது ஜீவியத்தின் அதிகபட்ச சாதனையை நிர்ணயிக்கும்.

             The lowest depth one can reach in his cultural values will seal the highest height his consciousness can rise to.

             குறைந்த செயல் உயர்ந்த தரிசனம்.

965)    To know the problem is the inner darkness, rather the love of inner darkness, is to let it dissolve.

             பிரச்சினை உள்ளேயுள்ள இருள். அது வெளியில் இல்லை. நமக்கு அவ்விருளின் மீதுள்ள பிடிப்பு என்று அறிந்த நேரம் அப்பிரச்சினை இருக்காது.

             பிரச்சினை என்பது இதமான இதயத்தின் இருள்.

966)    Anxieties big or small are anxieties. Submitting anxieties, instead of the problems they create, they dissolve totally.

             கவலை சிறியதானாலும், பெரியதானாலும், கவலையே. கவலையால் ஏற்படும் பிரச்சினையை சமர்ப்பணம் செய்வதற்குப் பதிலாக கவலையை சமர்ப்பணம் செய்தால் கவலையின் சுவடே அழியும்.

             மூல சமர்ப்பணம் முழு விடுதலை தரும்.

967)    ஜெயித்த எதிரியை குறை கூறுவது அல்ப சந்தோஷம். அதே போல் நடக்காத காரியங்களை நடந்ததாகக் கற்பனை செய்வது அல்ப சந்தோஷம்.

             One complains against a victorious enemy. So too, man imagines what he cannot attain thus effectively preventing grace.

             அல்ப சந்தோஷம் அருளை அர்த்தமற்றதாக்கும்.

968)    Discipline shapes where work is compelling.

             தவிர்க்க முடியாத வேலை செய்யும் பொழுது ஏற்படும் கட்டுப்பாடு நிலைக்கும்.

          கடமையில் எழுவது கட்டுப்பாடு.

969)    Capacity to see that there is no limit in any one direction is the capacity to understand Brahman.

             எதுவும் நடக்கும் என அறிவது பிரம்மத்தை அறியும் திறமை.

970)    Priest is to God what bureaucracy is to government.

             நிர்வாகம் சர்க்கார் என்ற கடவுளுக்குப் பூசாரி.

          இறைவன் பூலோகத்திற்கு அளித்த வரத்தை மனிதன் பூசாரியாகத் தடுக்கிறான்.

971)    When Mother says man is lazy, it means man loves the ignorance and evil he is.

             தன் அறியாமையையும், கொடுமையையும் ரசித்து மனிதன் அனுபவிக்கின்றான் என்பதை அன்னை மனிதன் சோம்பேறி என்கிறார்.

972)    The capacity not to exercise the power at its disposal or enjoy the freedom it has, is the capacity of the Absolute. Being not bound even by that, one becomes the Absolute.

             உள்ள அதிகாரத்தை செலுத்தாதது, சுதந்திரத்தை அனுபவிக் காதது பிரம்மத்தின் திறன். அதனாலும் கட்டுப்படாதது பிரம்ம மாகவே மாற்றும்.

973)    Man acts today by the same process of creation by which the universe is created. When a new thing is to be done one needs to know fully about it ― Self-conception ― and in doing it he has to limit his action to that work ― self-limitation. For completion of it he absorbs himself into it ― self-absorption.

             வாழ்வின் இரகஸ்யம், சிருஷ்டியின் இரகஸ்யம். நாம் அதற்குக் கட்டுப்பட்டால் மனிதனாவோம். அது நமக்குக் கட்டுப்பட்டால், பிரம்மமாவோம்.

974)    The greatest of changes is made possible or is seen in the smallest of changes in human attitudes.

             யுகப்புரட்சியானாலும், பிரம்மம் சித்திப்பதானாலும், அது நம் சிறு செயல்களில் ஏற்படும் மாற்றத்தில் தெரியும்.

             சிறு மாற்றம் பெரிய புரட்சி. 

975)    The centre of one's personality is there from where he is unable to communicate to another person.

             எதை எவரிடமும் சொல்ல முடியவில்லையோ அதுவே மனிதன், அவனது உள்ளத்து மையம்.

             சொல்ல முடியாதது சொந்தம்.

976)    Yoga is action of the Spiritual force in the plane of life through surrender.

             ஆன்மீக சக்தி வாழ்வில் சரணாகதி மூலம் செயல்படுவது பூரண யோகம்.

             ஆண்டவன் மனிதனில் செயல்படுவது யோகம்.

977)    He who desires to act FREELY, in the utter freedom of Spirit in Life, who wishes to centre himself in the Truth of Life, who would not want to transact with the negative resourcefulness of the dark urges will do well to choose YOGA.

             வாழ்வின் சத்தியத்தில் காலூன்றி, வாழ்வின் ஆத்ம சத்தியத்தின் சுதந்திரத்தில் வாழ விரும்புபவன், இருளின் சாகஸத்தை சிறிதும் விரும்பாதவன் யோகவாழ்வுக்குரியவன்.

978)    To be inwardly positive in force ― the unstable psychological equilibrium ― will always meet with external success. But that is not knowledge.

             அகம் சற்று ஒளிமிகுந்திருந்தால் செய்யும் வேலை கட்டாயம் கூடி வரும். எப்படி என்று தெரியாது. உள்ளம் மிச்சமானால் உரியது கிடைக்கும். அது சக்தி, ஞானமாகாது.

979)    The excess inner power that wins has the knowledge fused into it to accomplish the act. It has no capacity to explain the process to us. Raising ourselves a little above the plane of action, that capacity to know comes.

             உள்ளே மிச்சமான ஒளி சாதிக்கும். அதற்கு சாதிக்கும் ஞானம் உண்டு. எடுத்து விளக்க முடியாது. செயலுக்கு மேல் சற்று உயர்ந்தால் விளக்க முடியும்.

980)    Anyone can solve a national problem if he is psychologically free of a similar problem.

             பொதுப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமானால் நம் மனத்தில் அதே போன்ற பிரச்சினை இருக்கக் கூடாது.

981)    Rational dealings are possible in three conditions. 1) Intelligence 2) Truthfulness 3) Absence of perversity.

             அறிவுடையவர் உண்மையாகப் பேசும் பொழுது குதர்க்கத்தைத் தவிர்த்தால், அவருக்கு ஸ்ரீ அரவிந்தம், யோக வாழ்வு, உலக நிகழ்ச்சி ஆகியவற்றை விளக்க முடியும்.

             அதிகாரத்திற்கு இவை கிடைக்கும். அது சாதிக்காது. சுதந்திரத்தில் இவையிருந்தால் சாதிக்கும்.

982)    அகம் உலகம். அங்கு தெளிவிருந்தால், திறமை வரும். நாம் தீர்க்க முயலும் பிரச்சினைகட்குரிய அகத் தெளிவு தேவை.

             The power of the universe, rather the power to move the universe is inside. Any outer problem, if it is clear inside will be solved by inner concentration.

             உள்ளம் உலகத்தை ஆளும்.

983)    The justice of power is those who are ruled by them should accept their injustice as justice.

             தன் அநியாயத்தை நியாயமாகக் கருத வேண்டும் என்பது முதலாளி - அரசன், கணவன் - யின் நியாயம்.

984)    Education was through the body, memory, mind. Raise the instrument, the child will become a genius.

             அடித்துப் பாடம் சொல்லிக் கொடுத்தால் உடல் மனத்திற்குக் கற்பிக்கிறது. நினைவு, அறிவு மூலம் கற்பிப்பதற்குப் பதிலாக, ஆத்மா மூலம் கற்பித்தால் குழந்தை மேதையாகும்.

985)    Secret is another name for patience required to pass on invaluable knowledge in appropriate Time.

             உயர்ந்த கருத்தை உரியவர்க்கு சொல்லும் நேரம் வரும் வரை காத்திருக்கும் பொறுமைக்கு இரகஸ்யம் எனப் பெயர்.

             இரகஸ்யம் பொருத்தமான பொறுமை.

986)    முன் மொழிதலுக்கு உயிர் கொடுத்தது ஆமோதிப்பவன்.

             No proposal can come to life without seconding.

             Seconding is the particular becomes general.

             The Superconscient One becomes the cosmos by the Many.

             ஆமோதிப்பவன் அனைத்தும் கொடுப்பவன்.

987)    Dissent is Mind emerging out of body.

             எதிர்ப்பு உடலின் எதேச்சாதிகாரத்திலிருந்து எழும் மனம்.

             சிந்தனை எதிர்ப்பாக எழும்.

988)    Destruction of human lives in war and calamities is the inability of unfit bodies to survive the birth of Mind.

             Gas வந்த பொழுது விறகடுப்பிற்கு வேலையில்லை.

             மனம் பிறந்த பின் உடலுக்குத் தெளிவு தேவை.

989)    The history of the twentieth century is the history of Man offering his body to infinite destruction so that the emerging Mind will survive.

             மனிதன் நூறாண்டாக விரும்பி தன் உடலைத் தியாகம் செய்யப் போரையும், புரட்சியையும் நாடினான். அது போதாது என்பதை பூகம்பமும் புயலும் காட்டுகின்றன.

             அழியும் உடல் முளையும் அறிவு.

990)    உலகில் ஒரு நாடு தவிர மற்ற எல்லா இடங்களிலும் தடுப்பு ஊசி பெரியம்மையை அழித்து விட்டது. போருக்கும், ஏழ்மைக்கும் தடுப்பு ஊசி கல்வி.

          Armed conflicts and poverty do have a vaccination in our waking up.

          உள்ளதை உபயோகப்படுத்தினால் உலகம் அமைதியான சுபீட்சம் பெறும்.

991)    Exhaust our resources, the world will be prosperous.

             உள்ள வசதிகளில் ஒரு சிறு பங்கு கூட நம்மால் பயன்படுத்த முடியாது. நமக்கு அபரிமிதம், வாழ்விற்கு ஒரு துளி.

992)    Enjoying the expansion of the being in the freedom of danger is adventure.

             ஆபத்து அளிக்கும் சுதந்திரத்தின் ஆனந்தமாக சஞ்சாரம் செய்யும் ஆத்மாவுக்குரியது பூரண யோகம்.

993)    ஆண்டவன் கண்ணுக்குத் தெரிந்து அவனையடைய மேற் கொள்ளும் யாத்திரைக்கு வாழ்வைப் பாதையாகவும், அரங்க மாகவும் ஆத்மா கொள்வதை ஆன்மீகப் பரிணாம யோகம் என்கிறார்.

          Having seen Him, unable to be where He is, seeking Him in life, making life the path and field of that pilgrimage is the adventure of the soul, called Yoga.

             யோகம் ஆன்மாவின் ஆனந்தம்.

994)    The split in the physical body of India is the gap between vital truth and Spiritual Truth.

             ஆன்மீக சத்தியத்தை பிராணன் உண்மையாக நாடினால், உடல் உடையும்.

             உடலின் ஒற்றுமை உண்மையின் ஒற்றுமை.

995)    The centre of Unity, Truth, Goodness, Knowledge, Power and Love lies in the subliminal psychic. In India it lies in the awakening of Tamilnadu.

             ஆறு அம்சங்களுடைய மையம் ஆத்மா. இந்தியாவின் ஆத்மா பகவான் ஸ்ரீ அரவிந்தர் 40 ஆண்டு தங்கிய மண் கண் விழிப்பதிலுள்ளது.

             கண் மண்ணில் இருக்கின்றது.

996)    கடலும் மலையும் கடவுளுக்குரிய இடம். பகவான் நாடியது கடல். அன்னை விரும்பியது மலை.

             God resides on the mountain and the sea. SHE chose the mountains. He loved the sea. கடல் வாழ்வு. மலை உடல்.

997)    Life realising the subliminal is the First realisation. Maybe Purna Yoga's first realisation is in the life of the people where HE stayed for forty years.

             வாழ்வில் அடிமனம் விழிப்பது முதல் சித்தி. பகவான் வாழ்ந்த இடத்தில் வாழ்வு ஆன்மாவைக் காண்பது உலகம் தன் ஆன்மாவில் விழிப்பதாகும்.

             யோக ஆரம்பம் வாழ்வு.

998)    Distraction refused becomes resistance.

             சிதறும் மனத்தைச் சேர்த்தால் எதிர்ப்பு தெரியும்.

999)    முழுப் பொய்யை மூலத்தில் சொல்பவர்க்கு மூலவன் விலக்கு.

             Complete falsehood in the substance eliminates one from Brahman.

1000)  The position or even the post given by the Force is accompanied by the capacity needed. Otherwise it is not the Force.

             மனிதன் பணம், பதவி பெற்றால் அதற்குரிய திறமை பண்பை அவனே பெற வேண்டும். இந்த சக்தி தரும் தகுதியுடன் திறமையும் வரும். வராவிட்டால் கொடுத்தது இந்த சக்தியல்ல

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000