DAILY MESSAGES                           

Series XVI

 

901)    Terrorism as stealing is the result of freedom for the negative to act, as it resents the neglect of the positive.

             பண்பின் குறையை நிறைவு ஏற்றால் முழுநிறைவு உண்டாகும். விலக்கிய குறை சேர முயல்வது பயங்கரவாதம், திருடு.

             திருடு குறையின் நிறைவு.

902)    Quarrels lose their intensity as time passes, unless they spring from a past unsatisfied grudge when it grows leading to a break.

             நாளாக நாளாக நட்பில் சண்டை வலுவிழக்கும். மறக்க முடியாத வடு ஒன்றிருந்தால் நாள் கழிவது வடுவை வலுப்படுத்தும்.

903)    Sri Aurobindo's surrender is surrender of Existence not into Non-Existence but into greater Existence. Surrendering one's existence, one moves into the Absolute.

             சத்தை சரணம் செய்வதே சரணாகதியானால், அதை செய்த பின் நாம் பிரம்மமாகிறோம் அன்றோ!

904)    Surrender, if completed, will be followed by evolution.

             சரணாகதி பூர்த்தியானால் பரிணாமம் நம் முன் ஆரம்பிக்கும்.

905)    Silence is not surrender. It is the spiritual base.

             மௌனம் சரணாகதிக்குரிய நிபந்தனை, அதுவே சரணாகதி யாகாது.

906)    We know when to stop eating which is a physical balance, when to stop provoking, a vital balance. Finding the Spiritual balance in life, one parts with failure; it is the inner joy.

             தாகம் தீர்வது தெரிவது போல், ஆன்மாவுக்கு அளவுண்டு. அது அகம் பெறும் நிறைவு. அந்நிறைவு நிலையானால், அவருக்குத் தோல்வியில்லை.

             அகம் பெறும் நிறைவு ஆன்ம நிறைவு.

907)    History is the memory line of the world.

             வரலாறு வாழ்வின் வரவு செலவு.

908)    Consecration that does not fill the inner being with light is still no consecration.

             ஜீவனின் அகம் ஒளிமயமாவது சமர்ப்பணம்.

909)    Innovations on a tiny scale, like Grameen Bank, if exhausted, will fully develop the place.

             சிறிய நல்ல காரியம் செய்யக் கூடிய அனைத்தும் சேர்ந்து பெரிய காரியமாகும்.

910)    To surrender an act is different from making an act as one expression of the movement of surrender inside.

             ஒரு செயலை சரணம் செய்வது வேறு. சரணாகதியை வாழ்வின் மூச்சாக்கி அதன் ஓர் அலையாக இச்செயலை வெளிப் படுத்துவது வேறு.       

911)    Full conscious awareness of the inner spiritual moment also shows the naked body and vital fully separated and not filled with light.

             ஆன்மீக ஒளியின் அசைவை இடைவிடாது உள்ளே காணும் பொழுது, உடலும் உணர்வும் பிரிந்து தனியாக ஒளியின்றி தெரிகிறது.

912)    To see Mother inside is Darsan, not surrender.

             உள்ளே அன்னை தெரிவது தரிசனம், சரணாகதியில்லை.

             தரிசனம் சரணாகதியாகாது.

913)    The inner tension changes into unease and later ease.

             படபடப்பு வெளியிலிருந்து உள்ளே போய் அடங்கி சுகம் ஆகுமுன் திருப்தியின்றி அடங்கும்.

914)    As long as there is something negative in your atmosphere or thought, attacks can emanate from there.

             வேண்டாதது என்பது உள்ளவரை அங்கிருந்து எதிர்ப்பு வந்தபடி யிருக்கும்.

915)    Social tragedies that are personal fulfilment give a thrill overcoming the oppressiveness. Life expands with prosperity.

             மானம் போகும் பொழுது மனம் மலர்வதுண்டு. அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டம் வரும்.

916)    Men and women are like Rhett and Scarlett down below and that is why 'Gone with the Wind' is popular.

             எதையும் விரும்பிச் செய்யும் தைரியமான மனிதனை உலகம் போற்றும். அவனுடைய குறைகள் கண்ணுக்குத் தெரியா.

917)    We are the Becoming all dark inside. Invoking the light we do see it. It is the Being. While in intense consecration we often see the Light emerging out of a part of being ― mind etc. It is the Being of the Becoming.

             நாம் இயற்கை. உள்ளே இருளாக இருக்கிறோம். அன்னையை அழைத்தால் உள்ளே ஒளி தெரிகிறது. அது ஜீவன். சமர்ப்பணம் உச்சமாக இருக்கும் பொழுது ஓர் கரணத்துள்ளிருந்து - மனம் முதலியவை - ஒளி எழுவது பிரகிருதியின் ஜீவன், வளரும் ஆன்மா, சைத்தியபுருஷன்.

918)    The inanimate matter that moves acquiring life does so by the excess of overflowing energy. Matter's aspiration releases this energy.

             ஜடம் அசைவது அபரிமிதமான உபரி சக்தியால். ஜடத்தின் பரிணாம ஆர்வம் உபரி சக்தியை வெளியிடுகிறது. ஆர்வமே சக்தியாகிறது.

919)    In surrender Brahman realises itself.

             பிரம்மம் தன்னை அறிவது சரணாகதி.

920)    The chemicals that will not break down are the physical representative of their psychologically unbreakable fundamentalism.

             சூழல் கெட்டுப் போவதற்கு இரசாயனப் பொருள்கள் காரணம். ஆன்மீக சூழல் கெட்டுப் போவதற்கு வெறுப்பு, கடுமை, கொடுமை கரையாதது காரணம்.

921)    Violence is the inner pressure of the physical to expand itself.

             அகத்தில் ஜடம் அசைந்து புறத்தை ஆள விரும்புவது வன்முறை.

922)    Unsuspecting nature is a rich fertile ground for suspicious characters to weave a web of gossip around.

             பிறரை சந்தேகப்பட முடியாதவன் ஒருவனிருந்தால், அவனைச் சுற்றி ஆயிரம் வலை பின்னுவது சமூகம்.

923)    Aggression which is a physical act of assertion loses its edge when the individual ruler is replaced by the population as the electorate.

             அரசன் போரை விரும்புவது போல் மக்கள் ஆட்சி விரும்புவதில்லை. உலகில் மக்களாட்சி பரவினால் போர் அழியும்.

924)    God draws man's attention to totality when a mean man disregarding his various virtues, hints at the one defect he has.

             நமது பல்வேறு திறமைகளையும், நல்ல குணங்களையும் புறக்கணித்து, ஒளிந்துள்ள குறையை சுட்டிக் காட்டும் கயமையை நாம் இறைவன் நமக்கு முழுமையை உணர்த்துகிறார் என அறிவதில்லை.

925)    Scratch the surface, you will land in the lap of plenty.

             அபரிமிதமான செல்வம் அளவுகடந்து திரைக்குப் பின்னா லிருக்கிறது. திரையை விலக்கினால், அற்புதம் அபரிமிதமாகத் தெரியும்.

926)    In the last century Negroes slaved. In freedom they kill themselves in huge numbers.

             நீக்ரோவை அடிமையாக்கும் உலகை மனம் கண்டித்தது. சுதந்திரம் பெற்ற பின் அவர்கள் தங்களை ஆயிரக்கணக்காகக் கொலை செய்கின்றனர். நியாயம் அன்றேயிருந்தது.

927)    Organised killing all over the world under various pretexts is man's effort to come out of the physical plane.

             போர், பயங்கரவாதம், கட்சி சண்டை என்ற பேரால் லட்சக் கணக்கான மக்கள் இறப்பது மனிதன் உடல் வாழ்வை விட்டு மனவாழ்வை எட்ட முயல்வதைக் காட்டுகிறது.

928)    Souls enter each other in a play of being with being, consciousness with consciousness, ananda with ananda. To enter into one's emotion and enjoy what he enjoys as he enjoys makes him reciprocate. From that emotion one can extend to being and consciousness. When that is complete one can enter God-consciousness and repeat the same.

             மடயனைக் கண்டு சிரிக்காமல் அவன் மனத்தோடு ஐக்கியமாகி அவனைப் போல் சிந்தித்து அச்சிந்தனையில் திளைத்து இன்பம் பெறுதல் அவனுடைய ஆத்மாவுடன் இணைவதாகும். அதை செய்தால் அதே போல் இறைவனுடன் ஐக்கியமாகலாம்.

929)    The old sometimes activates itself thinking it is reaching new intensities but they open the essence of the old to the new.

             பெரும் பணம் சம்பாதிப்பதால் ஒருவர் பணக்காரராவது பழக்கம். அது அதிகமாகப் பலிக்கும் பொழுது மனிதன் பணத்தை விட உயர்ந்து விடுகிறான்.

             வலி அளவுகடந்து அதிகரித்து ஆனந்தமாகும்.

             வறுமையின் உச்சி செல்வத்தின் சிகரம்.

930)    Romance holds its attraction after marriage has dissolved. It does so because the height of emotional intensity in the soul of the body offers itself as an adventure for you every minute. It refuses to be institutionalised.

             உணர்ச்சி இலட்சியத்தால் உயர்ந்து உடலின் ஆத்மாவில் வெளிப்படுவதால் காதல் கண்ணையும் கருத்தையும் நிரப்புகிறது. எந்த நிமிஷமும் காதலைப் போராடிப் பெற வேண்டும் என்பதால் அதன் மீது ஆர்வம் தணிவதில்லை. காதல் ஆத்மாவின் உணர்வை உடலின் நன்றியில் உணர்வதை உரிமையாக அளிப்பதில்லை என்பதால் அதன் ஸ்பர்சம் நிரந்தர பிரம்ம ஜனனம்.

931)    That man who succeeds in securing inner psychological security in a woman and does not leave her, but stays with her to raise his fulfilment is one who is evolutionarily mature.

             பெண்ணின் மனம் ஏற்பதில் பூர்த்தி பெற்ற ஆண் அவளை விட்டுப் போகாமல், பூர்த்தியை உயர்த்தினால் அவன் பிரம்ம ஞானத்தை பிரம்ம ஜனனத்தில் பூர்த்தி செய்வான்.

932)    Replace satisfaction by gratitude.

             திருப்திபடுவது நாம். நன்றி உணர்வது சைத்தியபுருஷன்.

933)    இல்லாததை இல்லை என ஏற்பது பூரணம்.

          To accept the truth of capacities one does not have is the capacity to accomplish.

934)    Consecration of a thought, the mental energy behind it and the physical urge is to accomplish it.

             எண்ணத்தையும் அதன் பின்னுள்ள உடலின் எழுச்சியும் சமர்ப்பணமானால் காரியம் முடியும்.

935)    Resistance overcome is Self-awareness.

             எதிர்ப்பை விலக்கினால் தன்னையறியலாம்.

936)    Memory disappears when we move away from the surface.

             மேல்மனத்தை விட்டகன்றால் நினைவு அகலும்.

937)    Surrender begins when it is the ONE thought that is uppermost in the being.

             சரணாகதி இடைவிடாமல் மனதிலிருந்தால் சரணாகதியை ஆரம்பிக்க முடியும்.

938)    The great spiritual siddhis of the past do not by themselves convert into practical realities. Any idea here realises itself.

             எந்த பெரிய சித்தியும் ஏற்கனவே தானே பலன் தராது. பூரண யோகத்தில் எண்ணமே பலிக்கும்.

939)    Dull minds don't think. Over time that dullness can be a soothing companion to the personality.

             மந்தமான மனம் இதமான துணைவனாவதும் மனித சுபாவம்.

940)    Move the surrender from words to motive, even to existence.

             சரணாகதி சொல்லிலிருந்து நோக்கமாகலாம். நோக்கமே ஜீவனாகலாம்.

             எண்ணம் ஜீவனாவது பரிணாமம்.

941)    Of the two conquerors, India has sent away one, the other remains.

             அன்னியனை 1947ல் அனுப்பிய பொழுது அதற்கு முன் வந்த முஸ்லீம்களை அனுப்ப முடியவில்லை.

942)    Mind surrenders by thought, vital by feeling, body by its sensation. The whole being desiring to surrender accepts it as motive. Beyond that is the human existence. Its surrender is by an urge to evolve.

             மனம் சொல்லாலும், பிராணன் உணர்வாலும், உடல் புல்லரிப்பாலும், ஜீவன் நோக்கத்தாலும் சரணாகதியை ஏற்கலாம். அந்நோக்கம் பரிணாமமாகும்.

             பரிணாம நோக்கம் பரமாத்மாவின் சரணாகதி.

943)    Surrender is to reverse the consciousness which means it has to generate the power to stop and reverse the course of creation.

             சரணாகதி சிருஷ்டியைப் பரிணாமமாக்குவது. சிருஷ்டியின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, திரும்பச் செல்லச் செய்வது. உலகையே ஆளும் சக்தி அது.

944)    Imagine stopping the traffic or commerce. Stopping the social forces moving and reversing them is inconceivable. Surrender reverses the forces of creation.

             ஜனநடமாட்டத்தை நிறுத்த முடியுமா. வியாபாரத்தைத் தடுக்க முடியுமா. சமூகம் செயல்படுவதை தடுக்கவோ, திருப்பி அனுப்புவதோ நினைக்க முடியாதது. சரணாகதி சிருஷ்டியைத் தலைகீழே மாற்றுவது.

945)    The inner movement can stop and reverse the movement outside. The power of surrender issues from there.

             அகத்தில் சரணாகதி அசைவது புறத்தில் உலக அசைவை நிறுத்தவல்லது. அதுவே ஆன்மீகப் புரட்சி. சரணாகதிக்கு ஏராளமான சக்தி எழுவது இக்காரணத்தால்தான்.

946)    When Sri Aurobindo conquered the world wars, HE compelled the outer course of history to change by his inner movements.

             இரு உலக யுத்தங்களை ஸ்ரீ அரவிந்தர் வென்றார். அகத்தின் அசைவால் அடுத்த ஆயிரம் ஆண்டு சரித்திரத்தின் போக்கை பகவான் தடுத்து நிறுத்தி, மாற்றியமைத்தார்.

947)    Universalisation is to know and see the world inside.

             உலகை உள்ளே காண்பது பிரபஞ்சம் முழுவதும் பரவுவது.

948)    Before one sees the Transcendent inside, he must acquire power over the universe.

             பிரம்மத்தை மூன்றாம் நிலையில் உள்ளே காண்பவனுக்குப் பிரபஞ்சம் கட்டுப்படும்.

949)    அகத்தில் எதிரானதை ஏற்பவன் உலகில் எதிரான சக்திகளை வெல்வான்.

             He who sees the inner negative forces as the complements of his positive ones, will be able to conquer the negative forces of the world.

950)    To realise simplicity as well as luxury are two expression of one spiritual abundance, is to have the capacity to create that abundance outside out of simplicity.

             எளிமையும் ஆடம்பரமும் ஒரே ஆத்மவளத்தின் இரு வெளிப் பாடுகள் என்றறிந்தால் அவரால் எளிமையை வளமான சுபீட்ச மாக்க முடியும்.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000