DAILY MESSAGES                           

Series XVI

 

501)    Punctuality is time-consuming.

            காலத்தோடு காரியம் செய்ய காத்திருக்க வேண்டும்.

502)    The finest emotions of the 20th century Briton are often tinged with bad taste.

            உழைப்பாளியின் பண்பான சொல்லும் உரசும்.

503)    Power is never voluntarily relinquished whether it is the Prime Ministership or the ownership of a cow.

            படித்ததை விடுவதை அறியாதது உடல்.

504)    Men are human, not moral. Even great men are great in one trait only. Their morality is social, not personal.

            மேதாவிலாசம் ஒரு அம்சத்திற்குரியது. பெருந்தன்மை பிறந்த சமூகத்துடையது.

            Outside one's greatness, the great are social and human.

505)    To know how an event happened and why it happened is knowledge, not what should happen which is the capacity to make an event happen.

            என்ன நடந்தது, எப்படி, ஏன் என்பது அறிவு. என்ன நடக்க வேண்டும் என்பது திறமை.

506)    " I long had the knowledge, but not the knowledge that I had it. It took a life time of experience, research, and GRACE to know what was there. So does man find himself with respect to the soul he is born with."

            எனக்கு ஞானமிருக்கிறது என்று தெரிய அனுபவம், படிப்பு, ஆராய்ச்சி, அருள் ஐம்பது ஆண்டு தேவைப்படும். நம்முடன் பிறந்த ஆத்மாவை அறிய நாம் சிரமப்படுகிறோம்.

507)    The first stage of transformation is to reverse the roles of the sides.

            திருவுருமாற்றம் ஆரம்பித்தால் வலியவனும் எளியவனும் இடம் மாறுகிறார்கள்.

508)    The infinity becoming the finite and infinite simultaneously is the basic trait of being infinite.

            இருபுறமும் ஒருவரே ஒரு ஆட்டத்தை விளையாட முடியாது. அனந்தம் அதையும் செய்யும். எந்த பக்கமிருந்தாலும் அத்துடன் ஒன்றிப் போக அதனால் முடியும்.

             To be finite as well as infinite simultaneously is to be infinite.

            தலைவனாகவும், தொண்டனாகவும் ஒரே சமயத்தில் நடக்கும் திறன் பிறப்பிலேயே பெருந்தலைவனுக்குண்டு.

509)    The collective, whether it is the society or government, is an organisation of power while the individual, however high is mind represented by an opinion.

            சமூகமும், சர்க்காரும் உடல், சக்தி, தனி மனிதன் மனம்.

510)    கடந்தது கவலை தந்தாலும், அசிங்கமானாலும், பெருமைக்குரிய தானாலும், கடந்ததேயாகும்.

         The past keeps us in Time.

            The past is man, the present is divine.

511)    One can see all processes, from that of the smallest act to world events reduce to the one process of creation -- knowledge. To be able to have the power of Self-conception at that point is to have the power of God.

            எச்செயலுக்கும் சட்டம் சிருஷ்டியின் சட்டம் என்றறிவது ஞானம். அந்த ஞானம் தன்னிச்சைப்படி செயல்படுவது பிரம்ம ஜனனம்.

512)    எந்த நேரமும், எச் செயலுக்கும் தெம்பு பொங்கி எழுவது அன்னை நினைவிருப்பதாகும்.

         Endless energy at all times is the memory of The Mother.

            Presence of Self-conception is seen in the welling up of energy.

513)    The old values will not be replaced by new values. But there will be a light that is not value-bound. One must have the sincerity to follow that light.

            எது சரி என்பது பழைய பண்பாகவோ, புதிய பண்பாகவோ இருக்காது. பண்புகளைக் கடந்த ஜோதியாக இருக்கும்.

514)    The centre of personality is always on the surface, active, itching for expression, seen in the urges that press and the occupation into which it slides.

            எந்த நேரமும் மனிதன் செயலுக்கு ஆர்வமாக விழிப்போடி ருக்கிறான்.

            செயலுக்கு ஆர்வமான மனம் மனிதன்.

515)    Wit is the result of excessive learning and intelligence that is suppressed for one reason or other powerfully.

            அளவு கடந்த புத்திசாலித்தனம், அடக்கப்பட்டு வெளி வருவது ஹாஸ்யம், கேலி, நகைச்சுவை.

516)    Man knows the other side of others. Instead, if he chooses to know the good side of others, his own personality will flower positively.

            பிறர் குறைகளை அறியும் மனிதன் அவர் நிறைவுகளை அறிந்தால் தான் நிறைவு பெறுவான்.

517)    உணர்ந்தவன் உயிர் போவதை அறிந்து துடிக்கும் பொழுது உணராதவன் ஊர்க்கதை பேசுவான். உணர்ந்தவனை பயந்தாங் கொள்ளி என்பான்.

         At a time knowledgeable sensitive persons see the danger and are in panic, the dull witted steeped in superstition would indulge in pastimes and ridicule the other for panicking.

518)    One value of democracy is the leader is to serve the cause of Truth by pleasing ignorance and seeking the support of vital falsehood.

            சத்தியத்திற்கு சேவை செய்ய பொய்யின் தலைமையில் செயல் படும் அறியாமையின் ஆதரவை மக்களாட்சி தேடுவதால், சத்தியம் முடிவில் வெல்லும்.

519)    Sri Aurobindo says one should be a Kshatriya before he becomes a Brahmin. Spiritual siddhi demands strength and courage, a strength of concentration and reversal of attitudes and a courage to face the hostile forces whose power makes human opposition nothing.

            மனம் நிஷ்டையில் குவியவும், சுபாவம் மாறுவதற்கும் வலிமை வேண்டும். உள்ளே தீயசக்திகளை எதிர்ப்பது படையை எதிர்ப்பதை விடக் கடினம்.

520)    Human choice is the human choosing to be the Divine at once.

            ஜீவனின் முடிவு பூலோகத்தை சுவர்க்கமாக்கும்.

521)    Man's Self-awareness is the moment his self can change into Self and emerge in splendour.

            தன்னை மனிதன் அறிந்த நேரம் அகந்தை ஆத்மாவாகி வெளிப்படும்.

522)    When the being surfaces, the man with all his bones broken gets up and walks.

            ஜீவன் எட்டிப் பார்த்தால் முறிந்த எலும்பு கூடிவரும்.

523)    Repetition is the eternal re-living of the body seeking ecstasy of substance.

            அர்த்தமில்லாமல் திரும்பத்திரும்பப் பேசுவது உடலின் ஆழத்தில் அர்த்த புஷ்டியான ஆனந்தம் எழுப்புவது.

524)    To see in the fool's repetition the intense joy of the physical in another version of its infinite static existence is the vision of the substance in the spiritual mind.

            அறிவிலி உளறுவது ஆன்மாவின் ஆழம் அற்புதம் உற்பத்தி செய்வது.

525)    Surrender is preferrable to anything, even existence.

            எதையும் விட சரணாகதி நல்லது. 'சத்'தை விடவும் சரணாகதி நல்லது.

526)    Surrender can be a method, attitude, motive or even a state of consciousness.

            முறையான சரணாகதி, நோக்கமாக இருக்கலாம் என்பது போல் ஒரு நிலைமையாகவும் இருக்க முடியும்.

527)    Allies in the First World War who tried to crush USSR, financed, supported, worked with them to make USSR a super power over a wider region, as they worked against the trend of evolution.

            அவர்கள் இராட்சசர்கள் அவர்கட்குள்ளே அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற ராஜாஜி 60 முதல் 70 வரை DMK  மேடையில் நின்று அவர்களைப் பதவியில் அமர்த்தினார். உலகின் போக்கை எதிர்க்க முடியாது.

528)    Terrorism is the KNOWLEDGE of the passionate body threatened in its survival.

            உடலுக்கு வேகம் வந்து, அறிவு வருமுன் செயல்படுவது பயங்கரவாதம்.  

            In aiming at the destruction of the enemy, terrorism destroys itself practically.

529)    Great men by exercising their human choice converted a catastrophe into human triumph. The power has so far been successful with events. Men are the next field of action.

            மனம் மாறி ஆபத்தை அதிர்ஷ்டமாக்கிய நிகழ்ச்சிகள் ஏராளம், பயந்தாங் கொள்ளியை இனி அதுபோல் வீரனாக்க வேண்டும்.

530)    Heroes are geniuses of action. Sages are heroes of Spirit. The world is trying to create heroes of geniuses who by their knowledge of transforming tragedies into triumphs will make Spirit express in action through knowledge.

            வீரர்கள் செயலில் மேதாவிலாசம் பெற்றவர். மேதைகள் எண்ணத்தின் வீரர்கள். ஆன்மாவின் வீரம் பாதாளத்தின் செயலை வாழ்வில் பரமனின் அற்புதமாக்கும். அவர்கள் செயலின் ஆன்மாவின் மேதைகள்.

531)    முழுத் தகுதி பெற்ற பின் முழுப்பலன் தானே வர இடைவெளி ஏராளம்.

         Full capacity of desert and full benefits are separated by a very long period.

         ஜீவன்முக்தன் முக்தி பெற ஒரு முழு ஜென்மமாகும்.

532)    Ripe mature capacity and its full reward being in Time, the gap is endless. But it is also a gap that permits the Touch of the Timeless.

            தகுதியும் பலனும் காலத்தின் நிகழ்ச்சிகள். இறைவனின் ஸ்பர்சம் காலத்தைக் கடந்து அவற்றைச் சேர்க்கும்.

533)    The alternative of surrender is there for any act or method.

            எதற்கும் மாற்று சரணாகதியாகும்.

534)    எந்த நேரமும் அன்னையை அழைக்கலாம்.

         Any moment is a ripe moment to call Mother.

535)    Any act in Force becomes an act of the infinite emerging when the Being surfaces.

            சக்தியின் நேரம் ஜீவனுக்கு இறைவன் வரும் தருணம்.

536)    பொய் சொல்பவனால், அன்பரிடம் பொய் சொல்ல முடியாதது ஆன்மீக வலிமை.

         Spiritual strength disarms a liar.

            A liar and fraud working against a spiritually true person finds life goes against him at every turn.

537)    He is a wise man who understands the lasting nature of resistance of the defeated party. In cases where the last WORD is with the defeated party to see how slowly it is forced out of its unwilling mouth, is the very best experience of true wisdom.

            தோற்றவன் கையில் உள்ள கடைசி அதிகாரம் இடம் மாறும் வகை எதிரி வாயால் நல்லவன் என்ற சொல் எழுவதாகும்.

538)    The extent to which one is able to recognise the other man's goodness is determined by his own goodness.

            நல்லதை நல்லதே அறியும்.

539)    Any act is the act, is the token act.

            எல்லா செயலும் இறைவன் வெளிப்படும் செயல்களே.

540)    பிறரைப் பற்றிய ஒரு குறை கூற, அதே குறை நம் வாழ்விலி ருப்பதைக் கூறியவனுக்கு உரிமையுண்டு.  

            Before expressing others' defects, speak out your own.

541)    Britain that ruled the world paid, in the war, for saving the world.

            பொறுப்பும் கடமையும் பிரியா.

542)    Chamberlain died during the war, Gandhiji after Independence, each for a different reason, but both based on the same principle:

            Both paid with their lives for the successful illusions they nourished.

            இல்லாததை இருப்பதாக வெற்றிகரமாக நிலை நாட்டினால், அதற்கு உயிர் கொடுப்பது அவசியம்.

543)    Undeniably corruption corrupts. But in a nation where life itself is at the moral level of corruption and that habit is spreading to public life, does the nation really lower itself?

            கரித்துணி அழுக்காக முடியுமா?

544)    Spiritually action means a movement of Truth through many movements of Falsehood.

            சத்தியம் பொய்யை ஊடுருவி ஜெயிப்பதே செயல்.

545)    Buoyant equilibrium of life that moves life up always is the only truism of life which can be written in a thousand ways.

            அழியாத நிதானம் வாழ்வின் சத்தியம். ஆயிரமாயிரம் வகையாகச் சொன்னாலும் அது மட்டுமே சத்தியம்.

546)    Increase in Quantity changes Quality is true in Spirit too.

            அளவு அதிகரித்தால் தரம் உயரும் என்பது ஆன்மீகத்திலும் உண்மை.

547)    Impatience emerges as reaction.

            அவசரம் எரிச்சலாகும்.

548)    The mind communicates what the Soul realises inversely.

            ஆத்மா அறிந்ததை மனம் தலைகீழே விளக்கும்.

549)    Silence that wipes off thoughts will mature to wipe off initiatives. It is Silence behind Silence.

            மௌனம் எண்ணத்தை அழிக்கும்.

         மௌனத்தின் பின்னுள்ள மௌனம் செயலுக்குரிய உந்துதலை அழிக்கும்.

550)    Even to consider rational arrangements with vital people shows he is not rational in work.

            உணர்ச்சி வயப்பட்ட சுயநலமி நியாயத்திற்குக் கட்டுப்படுவான் என எதிர்பார்ப்பது அறிவுடமையாகாது.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000