DAILY MESSAGES                           

Series XVI

 

451)    Profundity for personal experience is common place for the communicable wisdom to the world.

             சொந்த ஞானோதயம் உலகம் ஆதியில் அறிந்த பழமொழி.

452)    Culture and courtesy temper law into dharma.

             பண்பும் நயமான பழக்கமும் சட்டத்தைத் தர்மமாக்கும்.

453)    Law is not the right of man that is exercised freely, but it is the concession of  Authority that usurped the throne that is extended as its own prerogative.

             சட்டம் மனிதனின் உரிமையில்லை, அதிகாரம் அதன் பெருமையைக் கொண்டாடும் தர்மம்.

454)    Man knows the very best he can do which he is not doing now. Keeping his mind and action on that for one day, he will witness infinity in action.

             அதிகபட்சம் நாம் செய்யக் கூடியதில் செயல் ஒரு நாள் லயித் திருந்தால், ஆண்டவன் தரிசனம் உண்டு.

455)    If an unexpected good thing happens to you, know it was one of your earlier dreams now forgotten.

             அன்று கனவு கண்டு மறந்தவை இன்று மறந்ததால் பலிக்கும்.

456)    Greatness that is stiffly opposed or persecuted achieves more than greatness that is admired.

             போற்றுவதை விட தூற்றுவது உலகுக்குப் பலன் தரும்.

457)    The great of the Soul grate on the nerves of the crowd.

             பெரியதன் வாடை சிறியதற்கு வேம்பு.

458)    Energies that gather, not finding fresh outlets, crave for expression. That craving is known as boredom.

             ஓட்டம் தடைப்பட்டால் வாட்டம் எழும்.

459)    The skill of a negotiator depends upon his knowledge of the unseen resources on both sides and the readiness of his mental action that brings those resources to bear upon the proceedings.

             நிகழ்ச்சி, நினைவு, செயல், வாழ்வு, உணர்வு என அலைகள் பரவுவதை அறிபவன், அறிந்து அமைதியாகச் செயல்படுபவன் இருதரத்திற்கும் ஏற்ற இடைப்பட்ட நண்பன்.

460)    Genius has abundant humour. If not seen on the surface, it will be in the writings or acts.

             மேதாவிலாசம் வெளிப்படாமலிருக்காது. குறும்பாகவும், குதூகல மாகவும் வெளிப்படும்.

461)    Capacity to see the other man as a fool and the further capacity to know its value for your personality wins the FOOL forever in your favour.

             பிறர் அறியாமையை தன் அறிவுக்குரிய பூஷணமாக அறிவது அவனை தம் கட்சியில் சேர்க்கும் திறனாகும்.

462)    The school begins, the family completes.

             குடும்பமே சிறந்த பள்ளி.

             School took over the duty of the family. Now family must complete what the school initiates.

463)    ‘The Kingdom of God is within you .’ Man reaches the Supermind when that kingdom extends outside him.

You are the king of the inner and outer domain.

             இறைவனை இதயத்தில் காண்பது இகம் பரமாவது.

464)    All great catastrophes of history are because of the insistent irrationality of the leaders or the population as a whole. It is true of the individual.

             மடமையின் மகத்துவத்திற்கு மகுடம் வைத்ததாலேயே உலகம் சீரழிந்தது. மனிதன் அதை மட்டும் செய்யத் தவறுவதில்லை.

          Catastrophe is insistent irrationality.

465)    A phrase becomes expressive when each ingredient of the idea is described as 'the tumultuous insurgence of ferocity' where Churchill tries to describe the revenge of the Germans. He does so by describing its organisation by tumult, its emergence by insurgence and the nature of energy as ferocious.

             செயலைக் குறிக்கும் சொல் சிறப்புற அதன் அம்சங்கள் அழகாக விளக்கப்பட வேண்டும். 'பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப' என்ற தொடர் விளக்கு என்பதில் மகளிர் கடமையை பைந்தொடி மூலம் குறிப்பதால் சொல் மூலம் செயல் சிறக்கின்றது.

466)    Paramountcy of selfishness makes parading meanness shamelessly perfect.

             தான் முக்கியம் என நினைத்த பின் வெட்கமின்றிக் கேவலமாகப் பேசுவதை திறமை என மனம் நினைக்கும்.

467)    When you appeal to the mind, the substance of the body responds.

             மனம் கேட்டதை - காதால் கேட்டதை - உடல் செயலால் ஏற்க முயல்வது விபத்து.

468)    The most satisfactory enjoyment issues out of the physical expression of energy.

             எண் சாண் உடம்பிற்கு உடலே பிரதானம்.

469)    Accidents are greed of Matter.

             விபத்து ஜடத்தின் பேராசை.

470)    Hospitality was one essential condition of existence in early times.

             ஆதிநாளில் அடுத்தவர் உதவியின்றி வாழ முடியாது என்பதால் உபசாரம் எழுந்தது.

471)    Man the individual has not yet become human.

             மனிதத் தன்மை மனிதன் மனத்தில் இன்னும் பிறக்கவில்லை.

472)    The greatest ally of any revolution, any movement is the smug ignorance of the other side and their blindness to the gathering momentum of their destruction.

             இருவரில் ஒருவர் உலகை விட்டுப் போக வேண்டும் என அன்னையிடம் கூறிய பகவான் அன்னையை அதை மறக்கச் செய்தார்.

473)    Absolute majorities won by Hitler and Stalin in their election closely resemble the majority vote given by superstitious masses to their adored leader.

             எதேச்சாதிகாரமும், மூடநம்பிக்கையும் முடிவாக சாதிப்பது ஒன்றே.

          மூடர்கள் நம்பிக்கையால் தலைவனை எதேச்சாதிகாரனாக்கு கிறார்கள்.

474)    To take the surrender from words and attitudes to motives and force is to complete it in oneself.

             சொல்லும் உணர்வும் ஜீவனின் இலட்சியமாகி சக்தியை நம்முள் அனுமதிப்பது சரணாகதி பூர்த்தியாவதாகும்.

475)    In the subtle plane the very thought of an enemy for good or ill will instantaneously turn into his material support.

             சூட்சுமம் எதிரிக்கு இருவகையிலும் சாதகம்.

476)    காரண லோகத்தில் அன்னையைக் கருதுவது மோட்சம். நினைப்பது நிறைவானால் நெஞ்சு நிறையுமுன்  செயல் பூர்த்தியாகும்.

        To think of Her in the causal plane of Supermind is to precipitate in the physical material plane of life.

        நினைவே நிகழ்ச்சி.

477)    Knowledge of one plane is ignorance of a lower plane.

             பள்ளிப்படிப்பை இழித்துப் பழிப்போர் தம்மைத் தாமே வியந்து மகிழ்பவர்.

478)    The course of science should include a study of astrology for them to be cured of superstition.

                ஜோஸ்யம் விஞ்ஞானத்தை விட சிறந்த அறிவு விளக்கம் தர வல்லது.

479)    The concepts the scientist must master theoretically and in practice are Time, Space, Infinity and Eternity.

             காலம், அனந்தம் தெளிவானால், நடைமுறையில் தெளிவு பட்டால், அறிவு விளக்கம் பெறும்.          

480)    A proud discovery of man is his own folly is the most admirable intelligence.

             சொந்த மடமையை அறிவென உணர்ந்து ஆர்வமாகப் போற்றும் தனிப்பெரும் சிறப்புடையவன் மனிதன்.

481)    Dreams that interest all should one day become a field of systematic study.

             கனவு ஒரு சாஸ்த்திரமானால் உளநூல் உயர்வு பெறும்.

482)    Events of silly folly, mean perversities, stick to the mind as occasions of magnificent acts. They are frontier posts to a progressive study which when finished, will see their disappearance.

             அறிவில்லாதவன், குதர்க்கமானவன், பெருந்தன்மையான வனுடைய செயல்கள் நினைவிலிருப்பது எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் முன்னேறலாம் எனக் காட்டும்.

483)    Blindness, especially at the hour of peril is the prerogative of mankind. Ostrich is not the exception, but the rule.

             கண்மூடி செயல்படுவதில் பெருமைப் படுவது உலகம். பூனையை மிஞ்சுவதே இலட்சியம்.

484)    To decide the truth by a majority is to announce to oneself the height of folly to which he can raise himself.

             உலகம் ஏற்பதாலோ, மறுப்பதாலோ, உள்ளது மாறப் போவ தில்லை.

485)    The prerogative of ignorance is to prevent knowledge from succeeding before the time arrives.

             நேரம் வருமுன் ஞானம் ஜெயிப்பதைத் தடுப்பதே அஞ்ஞா னத்தின் பரிணாமக் கடமை.

486)    What the world believes and loves to believe is not what it sees, but what it likes.

             மனிதன் கண்ணை நம்பமாட்டான், மனக் கண்ணைப் போற்றிப் பாராட்டி நம்புவான்.

487)    மடையனுக்காக எழுதிய கதைகளையும், பழமொழிகளையும் மனதார ஏற்பவன் அறிஞன்.

          What is written of the FOOL and for the fool is the apt advice to the most wise.

             தன் மடமையை அறிபவன் அறிஞன்.

488)    சொல் வளம் மனவளம்.

          The richness of thought enriches the speech.

489)    One expression of entrenched ignorance is man who rose above the multitude expects their applause.

             தலை நிமிர்ந்து நடக்கும் தலைவன் வாயின் பெருமையை அறிவான்.

490)    Resolution of disputes is the way of man moving from the physical to the mental.

             அடிதடி சண்டையை மத்தியஸ்தம் செய்வது மனிதன் நாகரீகம் பெறுவது.

          முரண்பாடு உடன்பாடாவது மனிதன் அன்பனாவது.

491)    Maybe Sri Aurobindo gave each one who accepted Him at least ONCE all the spiritual power and Jnana to become Sri Aurobindo Himself.

             தன்னை தரிசித்த அனைவருக்கும் பகவான் ஒரு முறை தானேயாகும் ஆத்ம சக்தியை அளித்தார்.

492)    To SEE Mother once in HER Supramental splendour is the awakening of the psychic on the surface. To cling to that memory is aspiration. To realise it in the life of the earth, the psychic in the body should see it.

             சூட்சும தரிசனம் சூர்யப் பிரகாசத்தைக் கடந்தது. காண்பது சைத்திய புருஷன் மேலே வருவது நிலைப்பது சைத்திய புருஷன் ஆழ்மனத்திலிருந்து பார்ப்பது.

493)    For one to bring about a change outside -- e.g., from cruelty to love -- it is not enough all one's cruelty has changed into love, but he must have the power and process of that change.

             அறிவு தெளிவாக இருப்பதால் ஆசிரியராக முடியாது. பிறர் அறியாமையை அறிவாக்கும் திறமை வேண்டும்.

494)    By actively remembering a thing, we give life to it. That is why we want to forget the unpleasant experience. That is equally why our greatest spiritual experiences are forgotten. Constant remembrance is constant nourishment.

             நினைவு உயிரூட்டும். நினைப்பது நெருங்கி வரும்.

495)    Man possesses in potential the genius of greatness as well as the brute primate.

             தன் முழுமையை மனிதன் அறிந்தால் இரு முனைகளையும் அறிவான். மேதையும், பேதையும் அவனுள் உள்ளன.

496)    The idea of Surrender is a formula.

             The energy of  Surrender is an attitude.

             The power of Surrender is a motive.

             The instrument of Surrender is the evolutionary urge.

             The field of Surrender is Becoming.

             The Being of Surrender is the Being of the Becoming.

             The consciousness of Surrender is The Mother.

          சரணாகதியை எண்ணமாகவும், சக்தியாகவும், கருவியாகவும், அரங்கமாகவும், ஜீவனாகவும், ஜீவியமாகவும் அறிவது ஞானத்தைப் பூர்த்தி செய்யும்.

          முடிவாக அன்னை தனக்குத் தானே சரணடைய மனித ஜீவனை அரங்கமாக்குகிறார்.

          The final transformation is when She, the Becoming, surrenders Herself to Herself, the Being, making man's life a field for that action.

497)    One sees HER splendour after having the vision of the Marvel.

             அன்னையின் ஆதி சொரூபத்தைக் காண உலகை அற்புதமாகக் காண வேண்டும்.

498)    Men are aware of events when they happen. Leaders apprehend problems. Pioneers and builders anticipate opportunities. Avatars create those opportunities.

             வருமுன் காப்பவன் தலைவன். வந்தபின் விழித்துக் கொள்பவன் மனிதன். முன்னோடிக்கு பிரச்சினை எழுமுன் வாய்ப்புத் தெரியும். அவதாரம் வாய்ப்பை உற்பத்தி செய்யும்.

499)    முரண்பாடு உடன்பாடாக இரு முனைகளும் திரும்பு முனை களாக வேண்டும். திரும்புமுன் தீண்டினால் தீராத நஷ்டம் எழும்.

          Contradictions will become complements if there is a turnaround at both ends. Before that, any urge will let the cow catcher catch him.

500)    கண்ணை மூடி உள்ளே எழுப்பும் குரல் கடல் கடந்து கேட்கும்.

         The voice that rises inside when the eyes are SHUT will be heard across the seas.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000