DAILY MESSAGES                           

Series XVI

 

351)    Luck is the genius of action.

            அதிர்ஷ்டம் உடலின் மேதாவிலாசம்.

352)    All details are essentials to the genius.

            சிறியதெல்லாம் பெரியதானால் மனிதன் மேதையாவான்.

353)    Abolish time limits, because Time limits.

            நேரத்திற்குக் கட்டுப்பட்டால் நேரம் வளரும்.

354)    Desire to cross Time is the capacity to enter substance crossing consciousness.

            காலத்தைக் கடக்கக் கருதும் நினைவு ஜீவியத்தைக் கடந்து புருஷனை எட்டுவது.

355)    Capacity to wait for the world to come to one without trying to reach it is a capacity to overcome space.

            தேடிப் போவது நாடி வருவது காலம் இடத்தைக் கடந்த பண்பு.

356)    அழிக்கும் எண்ணம் அழிந்தால் அகந்தை அழியும்.

         Ego dies when the desire for destruction dies.

357)    The security in smallness changes into expansive joy in the infinitudes.

            பத்திரமான பாதுகாப்புணர்வு பவித்திரமான பரவும் வேகமாகும்.

358)    Those who are expected to have all the answers in the academic field do not even have the complete question that is a virile quest.

            பதிலுக்குரியவர்கட்கு கேள்வியும் எழவில்லை.

359)    A creative writer has as many creative ideas as there are objects on earth, as each such object is an occasion of creativity.

            நேரமும் காலமும் எழுத்தானால் எழுத்திற்கு முடிவில்லை.

360)    Earlier experience is interest.

            பரிச்சியம் ஆர்வம் தரும்.

361)    Disregard for tradition, convention, procedure, codes moral or social is a qualification for greatness.

            உயர்ந்தவற்றை உதாசீனம் செய்வது உச்ச கட்டத்தைக் கடக்கும் உயர்ந்தோர்க்குரியது.

362)    Age is no bar, caste is no constriction, race does not offend nor Time exclude itself from the fields of wisdom.

            விவேகத்திற்கு எல்லைகளில்லை.

363)    Thoroughness is one essential characteristic of drshti.

            கருத்திற்குத் தப்பாதது கண்ணுக்குத் தப்பாது.

364)    Destruction of evil is always self-destruction. It always begins on its own initiative.

            தீமை தன்னைத்தானே அழித்துக் கொள்வது. அழிவை ஆரம் பிப்பதும் அதுவே.

365)    Courtesy to the conventional makes the unconventional adventure false to itself. Often it results in silly stupidity.

            பயந்தாங் கொள்ளியைத் திருப்திப் படுத்த முனையும் வீரன் பைத்தியக்காரனைப் போல் அவமானப்படுவான்.

366)    Rules of infinite Patience of the Spirit look like inertia of the ignorant. Sometimes in the scheme of things, it becomes so.

            ஆன்மாவுக்குத் தேவைப்படும் பொறுமை அர்த்தமற்றவனுக்கு அறிவற்றதாகத் தோன்றும். சில சமயங்களில் அது உண்மையு மாகும்.

367)    The victory is inside, its field is inside that is sparkling. Why try to go outside where you will look grey or become black?

            வெற்றியும், வீரமும், சக்தியும், ஜோதியும் அகத்திற்குரியவை. அவற்றைப் பெற்ற பின் ஏன் புறத்தை நாட வேண்டும். புறம் இருளானது. உன்னை கருமையாக்கும்.

368)    One sure mark of humility is the willingness to learn from inferiors, and it reaches its acme when the emotions consent to learn from those whom you taught. The best of spiritual humilities is learning from adverse circum- stances.

            அர்த்தமற்றவனிடம் அர்த்தம் கேட்பது ஆன்மீக அடக்கத்தின் அர்த்த புஷ்டி.

369)    Adventures become more attractive with increasing dangers.

            ஆபத்து அதிகரிக்கும் பொழுது ஆனந்தம் வளர்வது தைரியம்.

370)    Demands of good manners in circumstances where people are treacherous or depraved creates insincerity in deeper existence and becomes poison of personality.

            நன்மையின் உயர்வை அறியாதவரிடம் நல்லெண்ணம் செயல்பட்டால் நாத்தழுக்கப் பொய் எழுந்து மெய்யென பவனி வரும்.

371)    The soul seeks another soul, never knows its name. Man identifies other souls by caste, place, country, race.

            ஆத்மாவுக்கு பெயர் தெரியாது. மனிதனுக்கு ஊர், ஜாதி, நாடு, நிறம் தெரியும்.

372)    The self-generating heat of insularity, in the social atmosphere of friendly politeness towards rivals and enemies, cools down to make exchanges possible.

            தனிமையின் சூடு, குழுவின் குளுமை.

            Protective heat becomes protective coolness.

373)    The future welfare of men that is the future of the nation occurs to a future leader.

            எதிர்காலத்தை நினைப்பவன் காலத்தைக் கடந்த தலைவன்.

374)    To think of the future of others is to think from the other man's point of view.

            பிறர் எதிர்காலத்தை நினைப்பவன் மனத்தைக் கடந்தவன்.

375)    The subconscious never fails.

            ஆழ்மனம் தோல்வியறியாதது.

376)    There are those who continually meet death and escape. One type of such persons offers their own security to those around; the other type draws their own security from others, endangering their lives.

            ஆபத்தைக் கடந்தவன் பிறரையும் அதிலிருந்து விலக்குவான்.

377)    Occupation is taste of ignorance.

            அறியாமையை ரசிப்பவன் அதனால் ஆட்கொள்ளப்படுவான்.

378)    Mind that escapes occupation for a split second is capable of total salvation if consecrated at that moment.

            மனம் க்ஷணம் வெளிவரும் பொழுது அதை சமர்ப்பணம் செய்தால், அறியாமை அடியோடு நீங்கும்.

379)    கடுமையைக் கரைக்கும் காலம் அதைத் திருவுருமாற்றவும் முடியும்.

         Time that heals can also transform.

380)    He who brings a news is the creator of it in the subtle plane.

            நல்லெண்ணத்தால் நல்லதை உற்பத்தி செய்பவர் அச்செய்தியைக் கொண்டு வரும் கருவியாகவுமிருப்பார்.

381)    What we do not know is what we want to forget actively.

            மறக்க விரும்புவது மறந்து போகும்.

382)    நினைவே இல்லாதவன் உயர்ந்த வாழ்வை விரும்பாதவன்.

         Memory itself is not there as an active faculty when the being loves to be low.

383)    Permanent arrangements offer permanence to the higher consciousness won.

            வாழ்வின் அஸ்திவாரம் மனவளம் பெருக உதவும்.

384)    Fruits from a spiritual centre are fruits of inner growth.

            மரம் தரும் பழம் ஆன்மீகப் பலன்.

385)    We dislike those characters in a film who remind us of our inmost inefficiency.

            ஆழத்தின் குறையை நினைவுபடுத்தும் பாத்திரங்கள் நமக்குப் பிடிக்காது.

386)    Time lost in life is TIME gained inside.

            புறத்தில் இழந்த காலம், அகத்தில் சேர்ந்த பொக்கிஷம்.

387)    மனத்திற்குப் பிடிக்காதது புரியாது. அது புரியவில்லை எனப் பொருள்.

         Mind refuses comprehension of those ideas it dislikes.

388)    The later the success postpones itself, the greater is the amplitude of evolutionary growth, as success puts an end to questions that stimulate growth.

            தாமதமான வெற்றி தங்கு தடையின்றி பெருகும் சக்தி.

389)    Doubts that assail us in a crisis rise from inside the questions we were incapable of till then.

            நெருக்கடி எழுப்பும் சந்தேகம் நெறியை வளர்க்கும் நேரம்.

390)    Smaller personalities meet with early success.

            சிறிய ஆத்மா இளமையில் சாதிக்கும்.

391)    Inner richness that grows to fullness crossing the consciousness into the substance indicates the evolving spirit awakening.

            அக நிறைவு கனத்துப் பழுத்து ஆழத்தைத் தொட முயலும் ஜோதி ஆன்மா உள்ளே விழிப்பதைக் காட்டும்.

392)    The practical organisation of USA has done for the society what idealistic far-sighted individual visionaries in other countries had been doing.

            ஊர் விழித்துக் கொண்டால் ஒரு தலைவன் செய்வதை ஊரே எடுத்துக் கட்டிக் கொண்டு செய்யும்.

         சமூகம் இலட்சியவாதியாவது முன்னேற்றம்.

393)    A determined conscious effort to get away from the surface has a chance of permanent entry into the depths.

            அறியாமையிலிருந்து முயன்று விலகினால் அறிவு நிலையாக ஆழத்தில் கிடைக்கும்.

394)    The instruments through which the Force may choose to work later, do not know that they were all along prepared for the final mission.

            கருவி காலத்திற்கும் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தது.

395)    Patience is the vesture of Surrender. One cannot hasten the process unless that process is that of having lost all impatience.

            பொறுமை சரணாகதியின் பொக்கிஷம்.

396)    ஆனந்தத்தை நாடும் பாதை அனந்தம்.

         At the end of an infinite travel one meets with Delight.

397)    Always the divine Force at work meets with a valid intelligent opposition of strength at work. The opposition makes a human choice and the Force makes a divine choice.

            நியாயமான எதிர்ப்பை ஏற்பது அவசியமில்லை.

398)    No instrument appears of a sudden unless it has been preparing as an opposite.

            திடீரென எழுவது முரண்பாடு மாறுவதாகும்.

399)    Empirical it must be, not necessarily in the beginning. An insight must have an empirical validity.

            நிரூபணம் அவசியம், முதலிலிருக்க வேண்டும் என்பதல்ல, முடிவில் அவசியம் வேண்டும்.

400)    Energy becomes urge when the idea is integral.

            எண்ணம் பூரணமானால் உடல் செயல்படாமலிருக்க முடியாது.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000